21 அக்., 2010

ஒரு பறவையின் அலகில் துடிக்கும் காதல்...

மீன் கொத்தி பறவையென 
என் கண்களை கொத்திக்கொண்டு 
போகிற உன் நேர்ப்பார்வையில் 
கிடந்தது துடிக்கிறது மனசு ..

ஒரு சிகெரெட்டை முழுவதுமாக 
அனுபவித்து பழகுவது போல் 
இந்த காதலை சொல்ல முடிவதில்லை ...

ஆயிரம் வழிகள் பரிசீலிக்கப்பட்டு பின் 
நிராகரிக்கப்பட்டு
நண்பர்களின் வழிமுறைகள் 
ஏற்கப்பட்டு 
சொல்ல வேண்டிய தருணத்தில்
சொல்ல முடியாமல் போய்விடுகிறது..

எப்படியோ ஏற்றுக்கொண்ட காதல் 
காற்றில் இருவர் வீட்டிலும் பரவி 
பற்றிக்கொண்ட பெரு நெருப்பு இருவரையும்   
விலக வைக்க ..

நிகோடின் படிந்த நெஞ்சம் கைவிட 
மறுக்கும் சிகிரெட்டின் நேசம்போல் 
மனசின் எல்லா திக்குகளிலும் நீ..

ஒரு பயணியைப்போல் 
என் நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போக முடியவில்லை..

வழிதவறிப்போகிறாய்
என்கிற எச்சரிக்கைகளையும் தாண்டி 
ஒரு முடிவை நோக்கி பயணிக்கிறது என் காதல் 
மீன்கொத்திகளுக்காக படைக்கப்பட்ட 
மீனென..

35 கருத்துகள்:

மொக்கராசா சொன்னது…

போட்டா மிக அருமை, எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி கிடைக்கிறது.

சசிகுமார் சொன்னது…

அருமை

செல்வா சொன்னது…

//ஆயிரம் வழிகள் பரிசீலிக்கப்பட்டு பின்
நிராகரிக்கப்பட்டு
நண்பர்களின் வழிமுறைகள்
ஏற்கப்பட்டு
சொல்ல வேண்டிய தருணத்தில்
சொல்ல முடியாமல் போய்விடுகிறது..
//

இந்த வரிகள் உண்மைலேயே கலக்கலா இருக்கு அண்ணா .!!
எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல ..!!

NaSo சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு!!

வினோ சொன்னது…

/ நண்பர்களின் வழிமுறைகள்
ஏற்கப்பட்டு
சொல்ல வேண்டிய தருணத்தில்
சொல்ல முடியாமல் போய்விடுகிறது.. /

பல நேரம் இப்படி தான் ஆகுது...

Ahamed irshad சொன்னது…

நல்ல கவிதை...

Paleo God சொன்னது…

கவித ..
கவித ..

Paleo God சொன்னது…

கவித ..
கவித ..

பெயரில்லா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு அண்ணே..
ஆனா உங்களோட டச் இந்த கவிதைல ரொம்பக் கம்மியா இருக்குண்ணே...

vinthaimanithan சொன்னது…

சரிதான்...!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

போட்டா மிக அருமை

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

சரளமான வார்த்தைபிரயோகம், நல்லா இருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு!!

இளங்கோ சொன்னது…

Nice.

புதிய மனிதா. சொன்னது…

அருமை,...

அருண் பிரசாத் சொன்னது…

சூப்பர்ண்ணா

அன்பரசன் சொன்னது…

//வழிதவறிப்போகிறாய்
என்கிற எச்சரிக்கைகளையும் தாண்டி
ஒரு முடிவை நோக்கி பயணிக்கிறது என் காதல்
மீன்கொத்திகளுக்காக படைக்கப்பட்ட
மீனென..//

Nice.

தமிழ் உதயம் சொன்னது…

இப்படி தான் உள்ளது பல காதல்.

அன்புடன் அருணா சொன்னது…

அட!

பனித்துளி சங்கர் சொன்னது…

புதுமையாக இருக்கிறது இந்தக் கவிதை.
புகையுடன் கசிகிறது காதலின் வலி நல்ல இருக்கு நண்பரே . பகிர்வுக்கு நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

உங்களுக்குப் படங்கள் எங்கே மாட்டுதுன்னு சொல்லுங்க முதலில்,அப்புறம் நான் பின்னூட்டம் போடுறேன்.

Chitra சொன்னது…

அசத்தல்!

Bibiliobibuli சொன்னது…

நிகோடின் படிந்த நெஞ்சம்=காதல். நல்ல உவமை.

புண்பட்ட நெஞ்சை புகையை விட்டு ஆத்துறாகளோ!!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

//நிகோடின் படிந்த நெஞ்சம் கைவிட
மறுக்கும் சிகிரெட்டின் நேசம்போல்
மனசின் எல்லா திக்குகளிலும் நீ..//


ரொம்ப நல்லா இருக்கு.

போட்டா அருமை.

மோகன்ஜி சொன்னது…

கவித எல்லாம் அப்புறம்.. முதல்ல 'தம்ம' நிறுத்து என் தம்பி!

க ரா சொன்னது…

சிகரெட் காதல் ஒப்பீடு.. நெசமா முடியல... கலக்குங்க :)

vasan சொன்னது…

கண்க‌ளை கொத்திப் போன‌ ம‌ர‌ங்கொத்தி ப‌ற‌வைக்கு தன்னையே மீனாக்கும் ந‌வீன சிபியானது குருட்டுக் காதல்!

vasu balaji சொன்னது…

ஃபோட்டோ போதைங்குது. கவிதை காதலுங்குது. அசத்தல் போங்க:)

லெமூரியன்... சொன்னது…

கவிதை அருமையா இருக்கு செந்தில்..!
:) :) :)
அதுநூடே பயணித்த ஒரு திருப்தி இறுதியில்..
:) :) :)
ஒரு வேளை நிக்கோட்டின், கவிதையில் கலந்திருப்பதாலா???
:) :)

Philosophy Prabhakaran சொன்னது…

பின் நவீனத்துவ கவிதை என்பது இதுதானா...

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க...

RVS சொன்னது…

//மீன்கொத்திகளுக்காக படைக்கப்பட்ட
மீனென//
செந்தில்... தைக்குது மனசில்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

சிகரெட்டும் காதலும் ஒண்ணுதான்!

:(

AKM சொன்னது…

சிகரெட்டையும் காதலையும் சேர்த்து பார்த்ததை கடுமையாய் கண்டிக்கிறேன்..பலரது வாழ்வில் காதலும் காதலியும் இரக்கமே இல்லாமல் சில பல வாழ்வியல் கணக்குகளில்(சேபர்சைடு!!)விடை பெற்றிருக்கலாம்.. என்றாவது சிகரெட் நம்மை தவிர்த்திருக்கிறதா.. ஒரு நண்பனைப்போல் என்றும் தொடரும் விரல் நேசம்.. ( என்ன பயபுள்ள கேன்சர், இருமல், பசியின்மைன்னு சில விளைவுகள்..)அட போங்க சார்.. வாழ்கையில எதிலதான் பிரச்சின இல்ல..வாழ்த்துக்கள்
அன்புடன்
ஏகேஎம்

Unknown சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க..