25 அக்., 2010

தி.மு.க வின் தேர்தல் வியூகம்...

சமீபத்தில் மு.க.ஸ்டாலின் திருவண்ணமலைக்கு சென்றிருந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டம் மட்டும் தி.மு.க வின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சீனா போய்விட்டு வந்தபின் ஸ்டாலின் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது. இங்கு மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இது தி.மு.க வின் பழைய சிஸ்டம் என்றாலும். வாரிசுகளை இப்போதே தயார்படுத்துவது மற்ற கட்சிகளுக்கும் ஒரு முன்னுதாரணமான விசயம் ( இப்படி சொல்றதுக்கு என்னை திட்டக்கூடாது). 

திருவண்ணாமலை கூட்டம் முடிந்தபின் எ.வ.வேலுவின் கல்லூரியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வரும் தேர்தலில் தேர்தலை எப்படி சந்திப்பது என அலசப்பட்டது. அப்போது எ.வ.வேலு தயாரித்து வைத்திருந்த மாதிரி திட்டம் எல்லோரிடமும் காட்டப்பட்டது. ஸ்டாலினால் அங்கீகரிக்கப்பட்ட அந்த திட்டம்தான் நாடு முழுதும் பயன்படுத்தப்படும் என பத்திரிகை நிருபர்களிடம் ஸ்டாலின் அறிக்கையாக தந்திருக்கிறார். இது ஏற்கனவே திருவண்ணாமலை எம்.பி யாக இருக்கும் வேணுகோபால் ஜெயிக்க வைத்த அதுவும் முன்னணி ஓட்டுகளில் ஜெயிக்க வைத்த திட்டம். அப்போது பா.ம.க வுக்கு குருவை ஜெயிக்க வைப்பது கவுரவ பிரச்சினையாக இருந்தது. இதற்காக ராமதாஸ் மற்றும் அன்புமணி தனிக்கவனம் எடுத்து பிரச்சாரம் செய்தனர். பணமும் அதிக அளவில் பா.ம.க செலவு செய்த தொகுதியும் இதுதான். வன்னியர் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி மிக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வேணுகோபால் ஜெயித்தார்.

அப்படி என்னதான் அந்த திட்டத்தில் இருக்கிறது என மேனேஜ்மென்ட் ஆளான எனக்கு அதனை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கி விசாரித்தால் என்னை மிகவும் ஆச்சர்யப்படவைத்த திட்டமாக அது  இருந்தது. அந்த திட்டத்தின் ஒரு மாதிரியை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தி.மு.க வின் ஒவ்வொரு தொண்டனையும் தனித்தனியாக பிரித்து அவர்களில் செல்வாக்கு மிக்கவர்களை தெரு வாரியாக தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு தெருவிலும் தேர்வு செய்யப்பட்ட  தொண்டரை அழைத்து ஒரு படிவம் வழங்கப்படும்,  அந்த படிவத்தில் அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டுரிமை உள்ளவர்களின் கணக்கை குறிக்க வேண்டும், அதில் எந்தந்த கட்சிகாரர்கள் இருக்கிறார்கள் என தனியாக குறிப்பிடவேண்டும். அது எதிர்கட்சியோ, கூட்டணிக் கட்சியோ விவரங்கள் தனித்தனியாக குறிப்பெடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கப்பட்ட குறிப்பினை அவர்களுக்கு மேலுள்ள நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிடும் தி.மு.க வுக்கு அந்த தெருவில் எத்தனை ஓட்டுகள் இருக்கிறது என. ஆனால் விசயம் அத்தோடு முடியவில்லை. மீண்டும் குறிப்பெடுத்தவரை அழைத்து தாங்கள் கட்சிகாரர்கள், கூட்டணி கட்சிகாரர்கள் மற்றும் எதிர்கட்சிகாரர்கள் என பட்டியலில் உள்ளவர்களில் மாற்றி ஓட்டு போடுவார்கள் என சந்தேகப்படுகிறவர்கள் மற்றும் உறுதியாக தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஓட்டு போடுகிறவர்கள் என பிரித்து அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்து அதனை தி.மு.க வின் ஓட்டாக மாற்றும் வேலை நடக்கும். இவ்வாறு பணிக்கப்பட்ட தொண்டருக்கு தேர்தல் முடியும் வரைக்கும் இதுதான் வேலையாக இருக்கும். அவர் கட்சி கூட்டங்களுக்கோ, பிரசாரங்களுக்கோ வர வேண்டியதில்லை. அவரின் வேலையே ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளுக்கு சென்று தி.மு.க. வின் சாதனைகளை நட்பாக சொல்லி மனதை மாற்ற  வேண்டும் என்பதே பிரதான வேலை. இதில் முக்கியமான கட்டளையே தேர்தல் வரைக்கும் அவர் தண்ணியடிக்க கூடாது. எதிர்கட்சிகாரர்கள் திட்டினாலோ, கிண்டல் செய்தாலோ பதிலுக்கு எதுவுமே செய்யக்கூடாது.

இந்த திட்டம்தான் வரும் தேர்தலில் தமிழகம் முழுக்க பயன்படுத்தப்பட இருக்கிறது. இது நான் அறிந்த விசயத்தில் ஒரு பகுதி மட்டும்தான். தாங்கள் நிறைய சாதனைகளை செய்திருந்தாலும். கூட்டணிக்கட்சிகள் பலமாக இருப்பதாலும் மட்டும் ஜெயித்து விடுவோம் என்று நம்பி விடாமல். தி.மு.க வகுக்கும் இந்த வியூகம் அவர்கள் கண்டிப்பாக அடுத்த முறையும் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதற்கு சாட்சி என்று நினைக்கிறேன். 

இதனைப்பற்றிய உங்கள் அனைவரின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன..

31 கருத்துகள்:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

திட்டம் நல்லாத்தான் இருக்கு. எல்லாத் தொகுதியிலும் இதை செயல்படுத்த முடியுமா?

அன்பரசன் சொன்னது…

என்னதான் தொண்டர்கள் போயி நல்ல விதமா சொன்னாலும் மக்கள் மனசுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும்ங்க?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

இது பழைய ஸ்டைல் தோழா .
இதை விட பல நல்ல வியூகங்கள் இருக்கும் பொழுது இது வேஸ்டுனு தோனுது.

Unknown சொன்னது…

இந்த தேர்தல் வியூகத்தின் ரகசிய திட்டங்களை நான் எழுதவில்லை. அது ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட வேண்டியவை என்பதால். தேர்தலுக்குப்பின் எழுத முயற்சிக்கிறேன்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இந்த வாட்டி தி .மு .க வுக்கு கொஞ்சம் சவாலான போட்டியாக தான் இருக்கும் .
1 .கூட்டணி மாறும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர் .இது மாறும் பட்சத்தில் அடுத்து
2 .வைட்டமின் -ப கொட்க்க வேண்டும் அதாவது பணம் ........இந்த ரெண்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் ....

சௌந்தர் சொன்னது…

வேலையே ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளுக்கு சென்று தி.மு.க. வின் சாதனைகளை நட்பாக சொல்லி மனதை மாற்ற வேண்டும் என்பதே பிரதான வேலை. இதில் முக்கியமான கட்டளையே தேர்தல் வரைக்கும் அவர் தண்ணியடிக்க கூடாது. எதிர்கட்சிகாரர்கள் திட்டினாலோ, கிண்டல் செய்தாலோ பதிலுக்கு எதுவுமே செய்யக்கூடாது////

இது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு திமுக தொண்டர்கள் எப்போம் கட்சி சொல்வதை கேட்பார்கள்....தண்ணி.. இதில் கொஞ்சம் சந்தேகம் தான்...நிச்சயம் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும்...

இனியா சொன்னது…

Good one! I hope DMK gets absolute majority this time

ராஜ நடராஜன் சொன்னது…

பரிட்சைக்கு முன்னாடியே வினாத்தாள் ரிலிசாயிடுச்சே:)

இதை எல்லோரும் காப்பியடிச்சா அப்ப என்ன செய்வாங்க?

Unknown சொன்னது…

அஞ்சா நெஞ்சர் இதோ போன்ற திட்டத்தைத் தான் மதுரையிலே பயன்படுத்தியதாகப் படித்திருக்கிறேன். இதன் மேலாண்மை நுட்பங்கள் நிசமாகவே அதிசயந்தான்.

வார்டுக்கு மூன்று குரூப் தொண்டர்கள்; பொதுமக்களை (1) வோட்டு போடாதவர்கள், (2) வோட்டுப் போடக் கூடியவர்கள்/சந்தேகக் கேஸ்; (3) வோட்டு போடுபவர்கள் - இப்படி வகையாகப் பிரித்து, இதில் கட்சித் தொண்டர்களுக்கு, முதல் இரண்டு வகையான பொதுமக்களிடம் போய்ப் பேசி 'ஆவன செய்யும்' கடமை. இது தான் படித்த நினைவு. ஆனால் தேர்தல் முடியும் வரை, கட்சித் தொண்டர்கள் 'மாலை போடாத‌ சாமி'களாக இருக்கணும்னு படிக்கலை! சாமியே சரணம்!

இதையே, ஒரு கஸ்டமர் சர்வீஸ் நிறுவனத்திலேயோ, ஸேல்ஸ் குரூப்பிலேயோ செயலாக்கினால் (சேல்ஸ் கோல் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் கோல்), அதுவும் அரசு நிறுவனங்களில்ன்னு நினைச்சுப் பார்த்தா, நாட்டுக்கு எவ்வளவு நல்லது? ஆனால், நாட்டுக்கும் 'வீட்டு'க்கும் தான் வித்தியாசம் அவ்வளவு இல்லையே!

pichaikaaran சொன்னது…

கடைசியில கூட்டணிதான் முடிவை நிர்ணயிக்கும்னு தோணுது

வினோ சொன்னது…

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

Unknown சொன்னது…

நிச்சியமாக களப்பணியில் தி.மு.க மற்ற எல்லா கட்சிகளைவிடவும் முன்னணியில் இருக்கிறது.அதுவே அவர்களுக்கு வெற்றியை தேடி தரும்.

GSV சொன்னது…

i read this long back some where....We will see the result...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

இந்த வாட்டி தி .மு .க வுக்கு கொஞ்சம் சவாலான போட்டியாக தான் இருக்கும்

தமிழ் உதயம் சொன்னது…

கடைசி நேரத்தில் பார்க்கலாம்.

erodethangadurai சொன்னது…

எப்படியெல்லாம் திட்டம் போட்டாலும் ஓட்டு போடப்போவது நாம் தானே ... ? மக்களுக்கு உழைப்பவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சுலபம் இல்லைதான் , இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ளுவோம் ... நண்பரே ... !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

No politics please

தேவா சொன்னது…

தி.மு.க வுக்கு ஓட்டுப்போடாதவர்களை தனியாக கவனிப்பார்களா?
அண்ணா அப்படியாச்சும் மக்கள்கிட்ட இருந்து சுருட்டினது மக்கள்கிட்டயே போய்ச்சேரட்டும்

The Kid சொன்னது…

இந்த வியுகம் நல்லா தான் இருக்கு. எனக்கு ரொம்ப நாலா ஒரு சந்தேகம். தமிழ் நாட்டில என் எந்த கட்சியுமே internet-ல பிரச்சாரம் செய்ய மாடரங்க?

இதற்க்கு வாட்டமா zeole.com/chennai இர்ருகும்னு நினைக்கறேன்.

ஆமாங்க, zeole.com என்னோட ஒரு முயற்சி தான் ... அதுல ஒவ்வொரு country/city ஆக தனித்தனியாக arrange செய்து இருக்கோம்.

zeole.com/chennai ல , ஒரு 100 readers வருவாங்க . நீங்க எழுதினா பல சென்னை வாசகர்கள் பார்க்க வைப்பு உள்ளது.

பெயரில்லா சொன்னது…

பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா!

காமராஜ் சொன்னது…

அன்பான செந்தில் இப்படி ஒரு அனுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டு ஒரு கட்சி வெற்றிபெற்றால் அதற்கு முழுப்பொறுப்பும் மக்களின் அறியாமை மட்டும் தான். இந்த ஐந்தாண்டு திமுக வின் மிக முக்கியமான ஆதாரம் சலுகைகள்.பிறந்த குழந்தைக்கு ஆறாயிரம் தொடங்கி, ஆதரவற்ற முதியோர் வரை எக்கச்சகமான பண உதவிகள்.போதாக்குறைக்கு ஒரு ரூபாய் அரிசியும்,ஓசிக்கலர் டீவியும்.இந்த நன்றியுணர்ச்சியிலிருந்து தமிழகமக்கள் மீண்டு வருவது சிரமம்.அதற்கு எதிர்த்தட்டில் குடும்ப அரசியல் மலை மலையாய் குவிகிறது.நியயத்தராசு எந்தப்பக்கம் இழுக்கும் பார்க்கலாம்.ஓடுற ஓட்டத்துல 2011 வந்தே தீரும்.

ராஜன் சொன்னது…

எதிர் கட்சி பற்றி எந்த விமர்சனுமும் செய்யமால் , தி .மு க சாதனை மட்டும் சொன்னால் போதும் , என் என்றால் அடிகடி எதிர் கட்சி பற்றி விமர்சனம் செய்தால் அது பலம் பெற வாய்ப்பு அதிகம் .
தி .மு க வெற்றி உறுதி !

கவி அழகன் சொன்னது…

ம் ம் கலக்குங்க

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

திட்டம் நல்லாயிருக்கு..!பொறுத்திருந்து பார்ப்போம்..!

சசிகுமார் சொன்னது…

இதுல வோட் லிஸ்டில திமுகவுக்கு ஓட்டு போடாதவங்க ஓட்டுக்களை நீக்கும் தந்திரமும் ஒன்று.

RK நண்பன்.. சொன்னது…

நான் எந்த கட்சிக்காரனும் அல்ல....

சமீபத்தில் இலவசம் பற்றி ஒரு கட்டுரை படித்தேன், அதை நிச்சயம் பெரும்பாலோனோர் படிதிருப்பார்... அதில் உள்ளதே என் விருப்பமும்..

ஜெ‌ஜெ & முக இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார்கள்... இருந்தாலும் தற்போதய கட்டாய தேவை ஆட்சி மாற்றம்.... தொடர்ந்து ஒருவரே இருந்தால் ஆணவம் தலைவிரித்தாடும்.. எதிரி இருந்தால் தான் ஆல்பவன் ஒளுங்காக தான் பணியை செய்வான்..

அருண் பிரசாத் சொன்னது…

ஓட்டு வாங்க திட்டம் எல்லாம் போடும் இவர்கள்... மக்கள் நலத்திற்கும் இப்படி தெருவாறியாக திட்டம் போட்டால் நல்லாதான் இருக்கும்

அஹோரி சொன்னது…

திட்டம் நல்லாத்தான் இருக்கு .. தி மு க காரனுக்கு இந்த அளவுக்கு அறிவு எப்படி ? கொஸ்டின் பேப்பர் அவுட்டா ?

அஹோரி சொன்னது…

திட்டம் நல்லாத்தான் இருக்கு .. தி மு க காரனுக்கு இந்த அளவுக்கு அறிவு எப்படி ? கொஸ்டின் பேப்பர் அவுட்டா ?

தமிழ் உதயன் சொன்னது…

ஒரு பக்கம் பணத்திற்க்கு தன் ஓட்டை விற்க்கும் மக்கள். இன்னொரு பக்கம், கட்சி கட்சி என்று அலையும் தொண்டர்கள் (மக்கள்) இன்னும் ஒரு பக்கம் இது எதையும் கண்டறியாத படித்த ஓட்டு போட செல்லாத இந்தியவாதிகள்.

என்னை பொறுத்தவரை வியாபாரத்தில் இன்று புதிய டெக்னிக்கை பயன்படுத்துபவர் அதிக லாபம் அடைகிறார். திமுகவும் இதுபோலத்தான். மேலும் ஜனநாயகம் என்பதே ஒருவகையான போலி சுதந்திரம்தான். அதை உணராதவரை யார் ஆண்டாலும் எவனுக்கும் பெரிய நன்மை இல்லை

கதிர்கா சொன்னது…

இந்தளவு யோனய மக்கள் நலத்திட்டத்துலயும் காட்டலாம்ல? அப்படி காட்டுன்னா இந்த புது திட்டமெல்லாம் தேவேயே இல்ல.

நல்ல பதிவு!!