26 அக்., 2010

ஆங்கில மோகம் ( English Mania) ...

இன்றைக்கு உலகம் முழுதும் ஏதோ ஒரு வடிவில் ஆங்கிலம் நுழைந்து விட்டது. தமிழில் ஆங்கில கலப்பின்றி யாருமே பேசுவது இல்லை.. ஆங்கில வார்த்தைகளையே தமிழில் எழுதினால்தான் புரியவைக்கமுடியும் என்கிற நிலைமைக்கு தமிழும் வந்துவிட்டது. இன்றைக்கு இருக்கிற ஊடகங்கள் இதனை செவ்வனே செய்து வருகின்றன. நான்தான் தமிழ்.. தமிழ்தான் நான் என திரும்ப திரும்ப சொல்லிவரும் கலைஞரும் அவரின் சொந்த ஊடகத்தில் தமிழ் படும் பாட்டை பார்ப்பதில்லை போல. 

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரைக்கும் எனக்கு ஆங்கிலம் ஆமனக்குதான், அதனை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இன்றைக்கு வீட்டா என்று அழைக்கப்படும் விவேகானந்தா கல்வி நிறுவனத்துக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்பினேன். அவர்கள் கேட்ட கட்டணம் அப்போதைய சூழலில் மிக அதிகம் என்பதால் நான் பணம் கட்டவில்லை. ஆனால் அவர்களோ கொஞ்சம் கொஞ்சமாக விலையை குறைத்து கடைசியில் புத்தகங்களுக்கு மட்டும் பணத்தை கட்டுங்கள் போதும் என சொல்லவே, அதற்கான பணத்தை நான் என் தந்தையிடம் கேட்டு வைக்க. ஆனால் அதற்க்கான காரணத்தை எனக்கு தெரியாமல் அவர் என் வகுப்பு ஆசிரியரிடம் ( என் சித்தப்பா) சொல்ல, அன்றைக்கு பார்த்து நான் வகுப்புக்கு செல்லவில்லை. அவரோ மற்ற மாணவர்களிடம் இங்கு பள்ளியில் ஏதாவது கட்டணம் கேட்டார்களா எனக்கேட்டு, நண்பர்கள் அப்படி ஏதும் இல்லை என்றதும் அன்றைய வகுப்பு அந்த பணத்தை வாங்க நான் ஏன் பொய் சொல்கிறேன் என்ற காரணத்தை ஆராய்வதுடன் முடிவடைந்திருக்கிறது. அதன்பிறகு என் சித்தப்பா ( வகுப்பு ஆசிரியர்) இறக்கும் வரைக்கும் என்னுடன் பேசவில்லை. காரணம் மறுநாள் தனியறையில் வைத்து அவரை நான் பேசிய பேச்சுதான். அதனை வேறு யாரிடமும் பகிர முடியாத விசயம் அது.

ஒரு வழியாக புத்தகம் வந்து சேர்ந்தது, ஆனால் முதல்வாரம் மிக ஆர்வமாக படித்த நான் அதற்கடுத்த நாட்களில் அதனை பிரித்து பார்ப்பது கூட கிடையாது. நண்பர்கள் ஆர்வப்பட்டு வாங்கிச் சென்றனர், அவர்களும் படிக்கவில்லை. இப்படியாக பின்தங்கிவிட்டது என் ஆங்கில ஆர்வம். நான் (1992) முதலில் சிங்கப்பூர் போனபோது ஒரு நாள் அங்கு ரயிலில் நண்பனை சந்திக்க செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பைய்யன் மின் படிகளில் அவசரமாக மேலேறி வந்தான். அவன் செல்லவேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அதனை கீழேயிருந்து மேலேறி வரும் தன் குடும்பத்தாரிடம் இப்படித்தான் சொன்னான். "Train go back ready" அதனைக் கேட்ட எனக்கு சட்டென ஒரு சந்தேகம் வந்தது. சிங்கப்பூரில் பள்ளிகளில் ஆங்கிலம்தான் முதல் மொழி. அப்படி படிக்கும் ஒரு பைய்யன் தப்பாக ஆங்கிலம் பேசுகிறானே. ஒரு வேலை இதுதான் சரியான ஆங்கிலமோ என குழப்பம் வந்தது. பொதுவாகவே தமிழர்களான நமக்கு ஆங்கிலம் பேசுவது பெருமைக்குரிய விசயம் அதிலும் யாராவது ஆங்கிலத்தை தப்பாக பேசினால் அவ்வளவுதான், கேலி செய்தே கொன்றுவிடும் ஆட்கள் நாம். காலம் காலமாக வெள்ளைகாரனுக்கு அடிமைப்பட்டு ஆங்கில மோகத்தில் அம்மொழியை மிக உயர்வாக பார்க்கும் ஆட்கள் இன்றுவரைக்கும் இங்கு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருந்து போன எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது என்றாலும் அதனை சிங்கப்பூரை சேர்ந்த ஒருவன் தப்பாக பேசுகிறான் என்பது ஆச்சர்யம் அளித்ததில் வியப்பில்லை. 

அதன்பிறகுதான் தெரிந்தது பழைய சிங்கப்பூர் ஆட்களுக்கு சரியாக ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவர்கள் அதனைப்பற்றி கவலைபடுவதில்லை. தாங்கள் விரும்பிய மாதிரி அவர்கள் அம்மொழியை கையாள்கிறார்கள் என்பது. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்பது ஒரு தொடர்பு மொழி அவ்வளவுதான். அதனை இலக்கண சுத்தமாக பேசவேண்டும் எனற அவசியமில்லை. இப்படித்தான் நானும் மெல்ல மெல்ல ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். இன்றைய சிங்கப்பூர் இளைய தலைமுறையினர் மிக நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனாலும் அவர்களிடம் சில ஆங்கில வார்த்தைகள் இன்னும் பழைய முறையில்தான் பேச்சுவாக்கில் பயன்படுத்தபடுகிறது. அவற்றை முடிந்தவரைக்கும் நண்பர் வசந்த் தொகுத்திருக்கிறார். அதனை கீழே தந்துள்ளேன். 
can la
ok la
no good aa
very good aa
very nice...aa
quite nice aa
lousy ya
no matter what...
this side aa
other side aa
over there
never mind
thank you ya
in these case la
no money to eat
dont be so angry ma
you no understand me
next time aa
no wonder
i tell you sir









this one aa
you want this one aa?
dont want this one aa?
better la
take away aa
having here aa?
this is what?
little bit  
pretty one la!
finished already ya?
trying to funny ! is it?
go further down
all the way down
one more
paid already aa
you blur aa
seriously
stop talking nonsense
trust me
so unlucky







Hi sir
The other day
cheaper la
come or not
can or cannot
dont worry ya
may be
you are
silly
about what
can not be
no choice la
like what aa
like that aa
i think so la
also can la
can also la
can can
i am serious
eat already
throw away already







crazy ya
this is my view la
seriously
ok ok already
dont be silly
go away
i think so la 
no more la
together
go back already ya?
other way around aa?
precisely la
very rude aa? 
singapore only
no need aa
correct or not
so simple ma
i call police
no pork at all
where are you la
i guess so
hungry la i











இதில் laa என்பவை மலாய் மொழியில் சாதரணமாக அடிக்கடி பயன்படுத்தபடும் லா என்கிற வார்த்தை. aa என்பது ஆ வின் ஆச்சர்ய வடிவம். already இந்த வார்த்தை உச்சரிக்கும்போது ready என்றுதான் காதில் விழும்.  வேறு வார்த்தைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இதைபோலவே மொரிசியசில் நான் ஒருவரை சந்தித்தேன். அவர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆனால் தமிழ் சுத்தமாக தெரியாது. அவர் என் ஆங்கிலத்தை கேட்டுவிட்டு நான் அதனை தப்பாக பேசுகிறேன் என்றார். ஆனால் நானோ உங்களுக்கு உங்கள் தாய்மொழியே தெரியவில்லை, ஆனால் இன்னொரு மொழியை தப்பாக பேசுவதுபற்றி கவலைப்படுவது வருத்தமளிக்கவில்லையா என்றபோது தலையைக்குனிந்து கொண்டார். பொதுவாகவே உலகின் அதிக மக்கள் பேசக்கூடிய மொழியைகொண்ட நாடு சீனா. அதன் தேசிய மொழியான மேண்டரின் தான் அவர்களுக்கு தெரியும். மேலும் கிட்டத்தட்ட 52 மொழிகள் கொண்ட நாடு அது. ஆனால் அங்கு மிக பெரும்பாலோருக்கு அதன் தேசிய மொழியான மேண்டரின் தெரியும். சீனா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் தெரியாது. ஆனால் இன்றைய சீனா எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஆங்கிலம் படிக்க அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இணைப்பாக கொடுத்துள்ளேன். அதில் இருக்கும் ஆங்கில SUBTITLE Option தெரிவு செய்து பாருங்கள்.  

45 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

ஆங்கில மோகத்தில் அடிமைப்பட்டு கிடைப்பதை தெள்ள தெளிவாக கூறி உள்ளீர்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சிங்கப்பூரில் 1992 ல் மட்டுமல்ல இன்றைய நிலையையும் அது தான்... அப்படியே ஆச்சு பிசகாமல் நீங்கள் கூறியது போன்றே இன்று வரை ஒரு மாற்றமமும் இல்லை..

பெயரில்லா சொன்னது…

// யாராவது ஆங்கிலத்தை தப்பாக பேசினால் அவ்வளவுதான், கேலி செய்தே கொன்றுவிடும் ஆட்கள் நாம்//
மிகச் சரியாய் சொன்னீர்கள் அண்ணா!
இங்கு ஆங்கிலம் ஒரு மொழியாக இல்லாமல் அறிவாகத்தானே பார்க்கப் படுகிறது :(

அன்பரசன் சொன்னது…

//உங்களுக்கு உங்கள் தாய்மொழியே தெரியவில்லை, ஆனால் இன்னொரு மொழியை தப்பாக பேசுவதுபற்றி கவலைப்படுவது வருத்தமளிக்கவில்லையா//

மிகச்சரியா சொன்னீங்க.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

மொழிக்கும் அறிவுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை...

ஆங்கிலம் ஒரு மொழி அவ்வளவே..

பெருமைப்பட பெரிதாய் ஒன்றுமில்லை என்றாலும் , பல விஷயங்கள் இன்னும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் சிறப்பும் உண்டு..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இங்கும் ஆங்கிலம் மறந்து போகுமளவுக்கு பேசினால் தான் " நீங்க நல்லா பேசுறீங்க " என பாராட்டு கிடைக்கும்..

Long time no see மாதிரி புரியுற ஆங்கிலம் பேசணும்...

ஜோதிஜி சொன்னது…

உங்களுக்கு உங்கள் தாய்மொழியே தெரியவில்லை,

ஆனால் இன்னொரு மொழியை தப்பாக பேசுவதுபற்றி கவலைப்படுவது வருத்தமளிக்க வில்லையா என்றபோது தலையைக்குனிந்து கொண்டார்.

இங்கு தலையை குனிந்து கொள்ள மாட்டார்கள். நம்மை தலையில்லாத முண்டமாக பார்ப்பார்கள்.

வானொலி தொலைக்காட்சிகளில் கூட சுருதி சுத்தமாக டயானா மகள் மகன் மாதிரி ஆங்கிலத்தை பேசி தங்களை மேன்மக்களாக காட்டிக் கொண்டுருப்பவர்கள் பேசும் ....................

கொலைகார பாவிகளை என்ன செய்யலாம் செந்தில்?

நடுவர்களாக உட்கார்ந்து இருப்பவர்கள் அதற்கு ஒத்து ஊதுவார்களோ?

ஆகா ............................ இந்த இடத்தில் சில வார்த்தைகளை நீங்களே உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஜோதிஜி சொன்னது…

சிங்கை தமிழர்கள் பேசும் ஆங்கிலத்தை விட அங்கு பணிபுரியும் பங்களாதேஷ் மக்கள் பேசும் ஆங்கிலம் அட அடா.....
தப்போ சரியோ விளாசுகிறார்கள்.

வினோ சொன்னது…

நாம் மட்டும் தான் அதன் பின்னாடி போகிறோம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆங்கில மோகத்தில் அடிமைப்பட்டு கிடைப்பதை தெள்ள தெளிவாக கூறி உள்ளீர்கள். //

Yes. Correct. This is good article. Dont speak english

செல்வா சொன்னது…

நானும் தமிழ்வழிக் கல்விதான் கற்றேன் அண்ணா ,
ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.
இருந்தாலும் அவ்வளவு தெளிவாகத் தெரியாது ...
அதே போல அந்த லா சேர்த்து பேசு வது போல இங்கே sms மற்றும் சாட் களில் நாம் ah என்பதை சேர்த்து பேசுகிறோம்..!!

ஜெயந்தி சொன்னது…

எனக்கு பிடிக்காத ஒரு மொழின்னா அது ஆங்கிலம்தான்.

உங்க கோபம் இன்னும் குறையலையே.

சௌந்தர் சொன்னது…

அதான் வெள்ளகாரன் நம்ம நாட்டை விட்டு போய்ட்டான் அப்பறம் ஏன் இந்த இங்கிலீஷ் படி எழுது சொல்றிங்க...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மொழிக்கும் அறிவுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை

வால்பையன் சொன்னது…

அருமை வாத்தியாரே!

அருண் பிரசாத் சொன்னது…

உண்மை அண்ணே. இங்கு மொரீசியஸ்ல் பெயருக்குதான் தமிழ் ஆட்சிமொழி, ஒரு வெண்னை வெட்டிகளுக்கும் தமிழ் தெரியல... தமிழ் டிவி கிடையாது, தமிழ் FM கிடையாது, தமிழ் படம் வராது, தமிழ் படம் வந்தாலும் 10 பேர்தான் வருவாங்க (எந்திரன் பட நிலைமைய என் பதிவுல பாத்தீங்களே)

dheva சொன்னது…

இரு தமிழர்கள் சந்தித்துக் கொள்ளும் பொழுதில் ஏன் ஆங்கில பேச வேண்டும்....? தேவையில்லை..செந்தில் கூறியிருப்பது போல மொழி என்பது தொடர்பிற்கு அவ்வள்வே....! ஆனால் அதையும் தாண்டி இரு தமிழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது ஆங்கிலம் வந்து விழுந்தால்....

1) தொடர்ந்து பணிபுரியும் மிகைப்பட்ட நேரம் உபோயோகம் செய்த மொழியாய் ஆங்கிலம் இருந்தால்.... நமது சப் கான்ஸியஸ் மைண்ட்ல இருந்து...தானாகவே வந்து விழும்.....இது தவிர்க்க முடியாதது பழக்கத்தின் அடிப்படையிலானது. இதனை வைத்து ஒருவரின் மொழிபற்றினை தீர்மானிக்க முடியாது.

2) தமிழ் அறிந்த அதே நேரத்தில் ஆங்கிலம் கற்றல் தவறு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. தமிழ் நாடு தாண்டி இந்தியாவின் ஏனைய பாகங்களில் இந்தி பேசுகிறார்கள்.. அதை ஒரு உபரி மொழியாக கூட பயின்று கொள்ள சூழல் இல்லாது போன காரணத்தால் பெரும்பாலும் 1970 டூ 1985 களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தி என்றால் என்ன என்று கூட தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் ஆங்கிலம் தவறாமல் உதவி செய்து கொண்டுதானிருக்கிறது. (மீண்டும் எப்படியோ பேசி தொடர்பு கொள்ள முடிந்தால் சரி.. அதற்காக வெள்ளைக்காரன் போல பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை)

3) மொழி என்பது அறிவு அவ்வளவே.. அது தகுதியாகாது.

பகிர்வுக்கு நன்றிகள் செந்தில்

Bibiliobibuli சொன்னது…

செந்தில் உங்களைப்போலவே நானும் ஆங்கிலம் என்ற மொழியை கற்க நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன். எனக்கு மொழி என்பது என் விடயத்தில் வாழ்வாதாரம் என்றாகிவிட்டது. ஆங்கிலம் பேசத் தெரியாதபோது வருந்திய அளவிற்கு, அதை பேசவும் எழுதவும் ஓரளவிற்கு தெரிந்தபோது சந்தோசப்பட்டதும் கிடையாது. நான் கனடாவில் இருந்த எத்தனயோ வருடகாலத்தில் மிக அண்மையில் ஆங்கிலத்தில் பேசியதற்காக அழுது பாவமன்னிப்பு கேட்குமளவிற்கு என்னை நானே நொந்திருக்கிறேன்.

ஆனால், ஆங்கிலம் இப்போதெல்லாம், யாராக இருந்தாலும், அவசியம். இயலுமானவரை, தெரிந்தவரை அதைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்வதே நல்லது என்பது என் கருத்து.

தமிழ் உதயம் சொன்னது…

தாங்கள் விரும்பிய மாதிரி அவர்கள் அம்மொழியை கையாள்கிறார்கள் என்பது. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்பது ஒரு தொடர்பு மொழி அவ்வளவுதான். அதனை இலக்கண சுத்தமாக பேசவேண்டும் எனற அவசியமில்லை. ///

இங்கே வட இந்தியர்கள் பேசும் தமிழ் அப்படி தானே உள்ளது. தெளிவாக பேசுவதை விட, என்ன சொல்கிறோம் என்று புரிந்தால் போதாதா.

ராஜ நடராஜன் சொன்னது…

இப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் நமக்கு அவசியம் தேவை.

இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.

தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.

ஆனால் நாம் எங்கே கோட்டை விட்டு விடுகிறோமென்றால் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதில்.சன்,கலைஞர் தொல்லைக்காட்சிகளனைத்தும் சமீபத்து மொழி வில்லன்கள் மட்டுமே.உண்மையான மொழி வில்லன்கள் அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.

மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன்.

Prathap Kumar S. சொன்னது…

வெள்ளக்காரன்னாலே ஏதோ வானத்துலேருந்த குதிச்சவனுங்க மாதிரி ஆ ன்னு வாயைப்பொளந்து பார்க்கறவங்க நம்மூர்காரங்க... ஆங்கிலத்தையும் ஏதோ தெய்வப்பிறவிகளின் மொழியா இன்னும் நினைச்சுட்ருக்கானுங்க... ஆங்கிலம் ஒரு பிசினஸ் லேங்குவேஜ் ஆக மாறிவிட்டதுதான் காரணம்.
மற்றப்படி ஆங்கில இலக்கியம் மாதிரி ஒரு கேடுகெட்ட இலக்கியம் எதுவும் கிடையாது... அது ஒரு நிலையற்ற மொழி... an unstable languge.

சிவராம்குமார் சொன்னது…

நாங்கல்லாம் ஒரு காலத்தில "டே! வெளிநாட்டுல பிச்சைக்காரன் கூட இங்கிலிஷ்ல தான் பேசுவானாம்:னு பீல் பன்னவங்க! அது ஒரு மொழி அவ்வளவே!

Anisha Yunus சொன்னது…

இதை படிச்சவுடன் எனக்கு என் கல்லூரி முதல்வரின் ஞாபகம் வந்து விட்டது. அவருக்கு ஆங்கிலம் நல்லா தெரிஞ்சாலும் எப்பவும் அரை குறை மாதிரிதான் பேசுவார். அதுல அவரின் ஃபேவரிட் ஒன்னு, (அதாவது எங்க‌ளுக்கு அவரிடம் பிடிச்சது!!!)

"watu?
you wantu failu, you takeu leaveu
you wantu passu no leaveu,
watu?
useless fellas and fellis"

பதிவிற்கு நன்றி. :)

vimalanperali சொன்னது…

பாருக்குள்ளே நல்ல நாடு.

தேவா சொன்னது…

இப்பவரக்குமே எனக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது அண்ணா. ஆனா என் வேலை என்கூட இருப்பவர்களால் தங்கிலிஷ் தானா வருது

தேவா அண்ணா சொன்னமாதிரி தங்கிலிஷ் தவிர்க்க முடியாத ஒண்ணுதான்

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

jothi சொன்னது…

இப்போது எல்லோரும் குழந்தைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கிறோம். இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு பத்து தலைமுறைகளில் தமிழில் படிப்பது என்பதே இருக்காது. எது எப்போது அவசியமில்லையோ அது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியப்படும்.
இன்றைய தகவலைப்பார்த்தீர்களா??? சோனி நிறுவனம் தன் புகழ்பெற்ற கேசட் வாக்மேன் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இது மொழிக்கு மட்டுமல்ல. உலகில் எதற்கு வேண்டுமானாலும் பொருந்தும்.

vasu balaji சொன்னது…

ராஜ நடராஜன் கூறியது..

//அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.

மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன்.//

சின்னதா ப்ளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் வச்சிட்டு பின்னூட்டத்துல சொல்ல முடியுமா. செந்தில் சார் பெர்மிஷன் குடுத்தா இந்த பின்னூட்டத்தை ஹைஜாக் பண்ணிட்டு போய் ஒரு இடுகை தேத்துறேன். சரியாண்ணே:))

நசரேயன் சொன்னது…

//மொழிக்கும் அறிவுக்கும் எவ்வித
சம்பந்தமுமில்லை...//

உண்மை

எஸ்.கே சொன்னது…

நானும் 12வரை தமிழ்வழிக்கல்விதான்! பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டே. இன்று வரை கற்று கொண்டிருக்கிறேன்!:-)
ஆனால் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கிலத்திலேயே பேசுபவர்களை பார்த்தால் காண்டாகத்தான் இருக்கிறது!

PB Raj சொன்னது…

செந்தில்
சிங்கபூரில் இன்னும் அந்த பழைய நிலைமை மாறவில்லை என நினைக்கிரேன்.

தமிழ் திரு சொன்னது…

சிங்கப்பூரில் ஆங்கிலத்தை அறிவாக யாரும் பார்ப்பது இல்லை ..அதனால் ஆங்கிலத்தை தப்பாக பேசினால் யாரும் கேவலமாக பார்ப்பது கிடையாது . இங்கு வேலை செய்யும் பிரெஞ்ச்காரர்கள் கூட ஆங்கிலத்தை தொடர்பு மொழியாகத்தான் பார்க்கிறார்கள்....!

ராஜன் சொன்னது…

Good article. u good share la

காமராஜ் சொன்னது…

உலகின் மிகசிறந்த கண்டுபிடிப்புகள் எல்லமே அதனதன் தாய் மொழியிலேயே நிகழ்ந்திருக்கிறது.
ஒரு இந்தியனாக நமக்கு எது தாய் மொழி என்பதில் பழ குழப்பங்கள் உண்டு.அது தேசிய இனங்களின் பிரச்சினை.ஒருவனுக்கு கனவு எந்த மொழியில் வரும்.தாலாட்டு எந்த மொழியில் வரும்.கேரளம் மே வங்கம் போன்ற மாநிலங்களில் கூட இவ்வளவு ஆங்கில மோகம் இல்லை.
சென்னை ஆங்கிலேயர்களுக்கு பிரிய பூமி.

Paleo God சொன்னது…

யெஸ்

யெஸ்

தாங்க்யூ! :)

Chitra சொன்னது…

கலக்கல் பதிவு.... நல்ல தொகுப்பு.

Unknown சொன்னது…

ஆங்கில மோகம்.. என்ன சொல்வது..

தாய்மொழியே பேசத்தெரியாத ஒருவர் ஆங்கிலம் சரியாக பேசவில்லை என குறைப்பட்டுக்கொள்வது கொஞ்சம் ஓவர்தான்.. சரியான பதிலடி கொடுத்திருக்கீங்க..

அருமையா எழுதியிருக்கீங்க..

Unknown சொன்னது…

மாப்ளே, பட்டியலில் காணப்படும் சில சொற்கள் சரியானவைதான். அவைகளை சிங்கப்பூரர்கள் உச்சரிக்கும் முறைதான் ஆச்சரியமாகவும், சிரிப்பூட்டும்படியும் (ஆங்கிலம் சரியாக நமக்குத் தெரியும் பட்சத்தில்!)

உ.ம்: over there (ஓவ தே), never mind (நெவ மைன்)

4+ வருசங்கள் இங்கு இருந்துவிட்டு சிங்லிஷ்-ல் ஊறிப் போய், அமெரிக்கா சென்றதும் ஆங்கிலம் தெரியாமல்(!) வரிசையாக 3 இன்டர்வியூக்கள் ஊத்திக் கொண்டது வரலாறு!!

சிங்கப்பூரில் (இப்போதும்) பேசுவது ஆங்கிலமே அல்ல!!

vinthaimanithan சொன்னது…

உலகம் நவீனத் தகவல் தொடர்பு நுட்பங்களால் சுருங்கிவிட்ட வேளையில் நிச்சயம் ஆங்கிலம் மறுதலிக்கப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. அதே சமயம் ஒரு சமூகத்தில் வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகள் மிக நுட்பமாய் அதன் தாய்மொழியையே சார்ந்து இருக்கின்றன. மிகவும் விரிவாக பின்னூட்டமிட ஆசை. கூகிள் டிரான்சிலேட்டார் இன்னும் சரிவரப் பழகவில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

////அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.

மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன்.//

சின்னதா ப்ளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் வச்சிட்டு பின்னூட்டத்துல சொல்ல முடியுமா. செந்தில் சார் பெர்மிஷன் குடுத்தா இந்த பின்னூட்டத்தை ஹைஜாக் பண்ணிட்டு போய் ஒரு இடுகை தேத்துறேன். சரியாண்ணே:)) //

பாலாண்ணாவுக்கு பெர்மிஷன் கொடுக்குறதுதானே:)

YUVARAJ S சொன்னது…

பாஸ், இவரை பத்தி கொஞ்சம் முடிஞ்சா எழுதுங்கள்.

http://www.akshayatrust.org/online.php

CNN செய்தி நிறுவனத்தால் பத்து சிறந்த மனிதராக தெரிவு செய்யப்பட்ட மனிதர் திரு. கிருஷ்ணன்.

அந்த டாப் பத்தில் சிறந்த நபரை தெரிவு செய்ய CNN வாக்கெடுப்பு நடத்துகிறது. நம்ம ஊரில் இருக்கும் இணைய உபயோகிப்பாளர்கள் ஆளுக்கு ஒரு ஒட்டு போட்டாலே, இவர் தெரிவு செய்யப்படுவார்.

செய்வீர்களா?

வாக்களிக்க லிங்க் இதோ: http://heroes.cnn.com/vote.aspx

Unknown சொன்னது…

//பாலாண்ணாவுக்கு பெர்மிஷன் கொடுக்குறதுதானே:)//

ராஜா அண்ணே! இப்பத்தான் இணைய பக்கம் வந்தேன்.. வானம்பாடிகள் ஐயாவுக்கு இல்லாத உரிமையா? அவரின் தீவிர ரசிகனான எனக்கு அவர் பாணியிலான பதிவை எதிர்பார்க்கிறேன்...

Unknown சொன்னது…

//பாஸ், இவரை பத்தி கொஞ்சம் முடிஞ்சா எழுதுங்கள்.

http://www.akshayatrust.org/online.php //

நண்பரே இவரைப்பற்றி நம் பதிவர்கள் நிறைய பேர் எழுதிவிட்டார்கள்.. நான் ஓட்டு போட்டுவிட்டேன்..

பத்து பேருடைய தொண்டுகளையும் எழுதி.. கிருஷ்ணன் அவர்களுக்கு ஓட்டு போட சொல்லி கேட்கும் ஒரு பதிவை பாதி எழுதிவிட்டேன். ஆனால் நேரப் பற்றாக்குறை காரணமாக முடிக்கமுடியவில்லை.. விரைவில் எழுதுகிறேன்...

மங்குனி அமைச்சர் சொன்னது…

கரட் சார் , நானும் சென்னை வந்த புதிதில் ஆங்கிலம் கண்டு மிரண்டு போனேன் , ஆங்கிலம் எனபது ஒரு மொழி அது அறிவு இல்லை என்று புரிந்து கொண்டாலே போதும்

என்னது நானு யாரா? சொன்னது…

வியப்பாக இருந்தது! சிங்கப்பூரிலா இப்படி? அடக்கடவுளே! மொழிப் பற்றுப் போய் மொழி வெறியாக மாறாமல் இருந்தால் ரொம்ப நல்லது! தேவைக்கு எல்லா மொழியையும் சமமாகவே பாவித்து எல்லாவற்றையும் பயன்படுத்துவோமே!