10 அக்., 2010

Tamil Culture V/S Blogger Culture

Tamil Culture is Overrated.. TASMAK is Underrated.....

1. என்ன சுத்தி எவ்வளவு கூட்டம் தெரியுமா?   X    எனக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ் 
                                                                                              தெரியுமா?

2. எனக்கு ரெண்டு, மூணு பிசினஸ் இருக்கு ..     X   எனக்கு ரெண்டு, மூணு பிளாக்
                                                                                              இருக்கு..
                                                                                                  
3. நான் பொய் சொன்னதே இல்லை ..           X       நான் அனானி பெயரில் பின்னூட்டம்
                                                                                       போடுவதில்லை..
                                                                                          
4. 51 வது வட்ட செயல் வீரர்கள் கூட்டம்..       X    சென்னை பதிவர் சந்திப்பு வரும் 
                                                                                          சனி மாலை ...
                                                                                                 
5.   .......................                                                      X      ஆறு ஓட்டுல தொங்குது.. ஒரு ஓட்டு
                                                                                           போடுங்களேன்.
                                                                                              
6. கண்ட நாய்ங்க கூட நான் பேசுறது இல்ல..   X         ...............................................

7.   .................................                                            X    அவன் பதிவு போட்ட உடனே எத்தன 
                                                                                           ஓட்டு பாரேன்..
                                                                                                
8. கொட்டாம்பட்டி செயலாளராக அண்ணன்,    X       ................................ 
    தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்..

9. ...........................                                                  X              18+ பதிவு போடுறப்ப மட்டும் 
                                                                                                     ஹிட்ஸ்  கூடுது...
                                                                                                                                                                                   
10. அவன் வீட்டு தேவை ஒன்னு விடாம,         X        ................................
      மொய் செஞ்சிருக்கேன்..

11. தலைய காட்டிட்டு வர்றேன்..                      X             டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்..

இது முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது... இடையில் சிலவற்றை நான் நிரப்பவில்லை, அதனை உங்களின் கருத்துகளுக்காக விட்டு வைத்திருக்கிறேன்., மேலும் உங்கள் சொந்த கருத்துகளையும் வரவேற்கிறேன்..                                                                          
    

28 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

சரவெடிய சளைக்காம கொளுத்துறியளே!

சௌந்தர் சொன்னது…

இது முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது... இடையில் சிலவற்றை நான் நிரப்பவில்லை, அதனை உங்களின் கருத்துகளுக்காக விட்டு வைத்திருக்கிறேன்., மேலும் உங்கள் சொந்த கருத்துகளையும் வரவேற்கிறேன்../////

பின்னூடம் போடும் எங்களையும் மாட்டி விடுங்க அண்ணா

சௌந்தர் சொன்னது…

10: ஒரு பதிவு விடமா ஓட்டு போட்டு இருக்கேன்

எஸ்.கே சொன்னது…

வி ஐ பி X பிரபல பதிவர்
--- இதை விட்டுடீங்களே!

ப.கந்தசாமி சொன்னது…

பதிவு போட என்னென்ன டாபிக் கெடைக்குது பாருங்க.

vinthaimanithan சொன்னது…

1) அண்ணன் நம்ம ஊட்டு விசேஷத்துக்கெல்லாம் (பதிவுக்கெல்லாம்) தவறாம வந்து மொய் (ஓட்டு, பின்னூட்டம்) செஞ்சிருக்காரு. அதுனால அவரு ஊட்டுல சின்ன காதுகுத்து நடந்தாலும் (சாதாரணமான பதிவு போட்ருந்தாலும்) நாமளும் மொய் செஞ்சிடணும்.

2)அண்ணனுக்கு ஒறவுக்காரங்க(ஃபாலோயர்ஸ்) நெறய இருக்குறதால அண்ணந்தான் ஊருல பெருந்தனக்காரரு(பெரபல பதிவரு!)

3)அப்புறம் அந்த ஏழாவது ஓட்டுக்காவ நாக்க தொங்க போட்டுட்டு அலையிற நாதாரிய எனக்கு நல்லா தெரியும். ஒழுங்கா ஊருக்கெல்லாம் போயி மொய் எழுதாம தான் ஊட்டு விசேஷத்துல மட்டும் பணம் குவியணும்னு நெனக்கிற பயலுக்கு எவ்ளோ கொழுப்பு!( சத்தியமா அது நானில்லீங்கோவ்!)

4)அதே நாதாரிப் பயதான் ஒரு 18+ போட்டுட்டு நாலுநாளு நிக்கவும் முடியாம, ஒக்காரவும் முடியாம, படுக்கவும் முடியாம நெலகொள்ளாம திரிஞ்சான். 1200 ஹிட்ஸ் தாண்டுனப்புறந்தான் தெரிஞ்சது பாதிப்பேரு 18+ பாத்துட்டு வந்தவங்கன்னு! (அந்த நாதாரியும் நானில்லீங்ணா!)

5)அண்ணன் பெரபல பதிவருல்ல! அதனால ஒரு மொக்கைப் பதிவு விடாம போயி ஓட்டும், பின்னூட்டமும் தானம் பண்ணிட்டு வந்துடுவாரு! "ஊக்கு"விக்கிறாராமாம்!

6 )//கொட்டாம்பட்டி செயலாளராக அண்ணன்,தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்..//

ஆமாமா... செயலாளராவனும்னா நீங்களும் நல்லா 'ஊக்கு'வித்து பொளைக்கக் கத்துக்கணும். ஹிட்ஸ் வாங்கணும்னா 18+ என்ன, 80 + கூட போடலாம்!

7)கடேசியா ஒண்ணு ... ஊட்டுல ஒண்ணும் விசேஷம் இல்ல... ஆனா கையி அரிக்கிதுன்னு வெச்சிக்கோங்க.... கவலையே வேணாம்... அப்பத்தாவுக்கு காதுகுத்துன்னு பத்திரிக்க கொடுத்தும் கல்லா கட்டலாம்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

6. கண்ட நாய்ங்க கூட நான் பேசுறது இல்ல.. X ...............................................

//


முகம் காட்ட கூட தைரியமில்லாத அனானிங்க கூட நான் பேசுறதில்ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாஸ் கேள்வி ரொம்ப குச்டமா ச்சீ கஷ்டமா இருக்கு...

Unknown சொன்னது…

நாங்கள் வழக்கம்போல இந்த தொகுதியிலேயும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்.
X
//அவன் பதிவு போட்ட உடனே எத்தன
ஓட்டு பாரேன்..//

உண்மைத்தமிழன் சொன்னது…

ம்.. நடத்து. நடத்து..!

கவி அழகன் சொன்னது…

Supper supper

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

(:

ஜில்தண்ணி சொன்னது…

super thala :) kalakkal

rendu room pottu yosikkireegalae :)

ஜெயந்தி சொன்னது…

தலைய காட்டிட்டேன். உங்க வீட்டு விசேசத்துக்கு ஏறக்குறைய ஒன்னுவிடாம மொய் எழுதியிருக்கேன்.

ஹேமா சொன்னது…

தலையைக் காட்டிட்டு வர்றேன்....அதான் இந்த முறை என் கவிதைல ஒரு "ம்"மட்டும் இருந்திச்சு !

Asiya Omar சொன்னது…

7.நாம நெருக்கம்னு நினைக்கிறவங்க ஓட்டுபோட மாட்டாங்க.

உங்க பக்கம் வந்தா மொய் எழுதாம போறதில்லை.

cheena (சீனா) சொன்னது…

சூப்பர் செந்தில் நகைச்சுவை சூப்பர்

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

vasu balaji சொன்னது…

இது நல்லாருக்கு:))

பெயரில்லா சொன்னது…

அண்ணே.. ஆட்டத்த ஆரம்பிச்சிட்டீங்களே :)
கலக்குங்க!

a சொன்னது…

மேட்டர் நல்லா இருக்கு..........
(இது பதிவுல இருக்குற 11வது பாயீண்ட் இல்லீங்கோவ்.....)

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நடத்துங்க...உங்க காட்டில் அடைமழை....good post

Bibiliobibuli சொன்னது…

என்னைய திட்டாம விட்டதுக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன பாஸ் இப்பிடி அவுட் ஆப் சிலபஸ்ல இருந்து கேள்வி கேட்டுபுட்டீங்க? சரி இதுக்கும் பிட்டு தயார் பண்ணிக்கிட்டு வாரேன்!

பவள சங்கரி சொன்னது…

நல்ல இரசனைக்குரிய இடுகை....வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

//அவன் வீட்டு தேவை ஒன்னு விடாம, மொய் செஞ்சிருக்கேன்//

அவனுடைய எல்லா பதிவுக்கும் ஓட்டும் பின்னூட்டமும் இட்டு உள்ளேன்.

சசிகுமார் சொன்னது…

//கண்ட நாய்ங்க கூட நான் பேசுறது இல்ல..//

அனானிக்கெல்லாம் நான் பதில் சொல்றது கிடையாது.

செல்வா சொன்னது…

//டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்.//
இது கலக்கல் .. அப்புறம் நான் என்னோட கருத்துகளை சொல்லுறதா இல்லை ..ஹி ஹி ஹி

ஈரோடு கதிர் சொன்னது…

2,3,11...தூள்