15 மார்., 2011

சூன்யமாய்ச் சுற்றும் எல்லாம்...

யாவும்
ஒரு புள்ளியில் துவங்கின
வெவ்வேறு வடிவங்கள் எடுத்து
பின்
யாவும் ஒரு புள்ளியாய்
மறைந்தன..

நேர்க் கோட்டில் துவங்கிய
நம் பயணம்
ஒரு கருத்தின் எதிரெதிர்
பார்வையால் மாறிப்போனது
பின் எதிரெதிராய்
நாம் சந்திக்க நேர்ந்தபோது
மற்றுமொரு நேர்க் கோட்டில் 
இருந்தோம்..

மனிதர்கள்
கடவுளர்களை பிரசவித்து
அலுத்துப் பின்
கடவுளாக
மாறுகின்றனர்..

தப்புத் தப்பாக
யோசிக்கிறாய் என்ற
நண்பன்
சரியாகத் தப்பு செய்ய
கற்றுக்கொடுத்தான்..

நானும், நீயும் மட்டுமே
அங்கிருந்தோம்
பின்
நானும், நீயும்
அங்கில்லை என்றான் ஒருவன்..

ஏதுமற்ற பெருவெளியில்
ஏது இருக்கிறது
ஏது இல்லை?..

21 கருத்துகள்:

க ரா சொன்னது…

Good one...

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு தோழா, நம்பமுடியவில்லை. நீங்களா இந்த எழுத்துக்கு சொந்தக்காரர்... அற்புதம். நல்லா எழுதற நீங்க ஏன் இடையில் வெவ்வேறு விதமாய் எழுதி... உங்களின் எழுத்தின் திறமையை மறைத்துக் கொள்கிறீர்கள். தொடர்ந்து இது போன்ற நடையில் எழுத உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

நல்ல நடை.. நல்ல எழுத்து.

இரசித்தேன்.

vinthaimanithan சொன்னது…

இதுக்குத்தான் நேசமித்திரன்கூட எல்லாம் பழகாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா! :))))

Unknown சொன்னது…

இல்லை என்றாலும் இருப்பதாக நினைத்து நகருகிறேன்.
இல்லை என்றால் ஒன்றுமில்லை
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமல்லவா?
இருக்கு ஆனா இல்லை,
இருந்தவை இல்லை என்பது புரிந்தவுடன்
எல்லாம் தெளிந்தது,
இருப்பதெல்லாம் நிலைக்குமென்றால்
நிலைப்பதெல்லாம் இருக்கட்டுமே...

எங்களுக்கு கிறுகிறுப்பாய் வருமில்லை...
எழுதுவோமில்ல...

Unknown சொன்னது…

ஐய்யோ ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு சார்பியலில் பின்னுறீங்களே...

settaikkaran சொன்னது…

//பின் எதிரெதிராய்
நாம் சந்திக்க நேர்ந்தபோது
மற்றுமொரு நேர்க் கோட்டில்
இருந்தோம்..//

அழகு! :-)

//ஏதுமற்ற பெருவெளியில்
ஏது இருக்கிறது
ஏது இல்லை?.//

த்வைதம், அத்வைதமோ? :-))

நன்றாக இருக்கிறது!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இந்தக்கவிதையில் ஏதும் இல்லை போலத்தோன்றினாலும் எல்லாம் இருப்பது போலவும் தோன்றுகிறது, சூன்யமாய்ச் சுற்றுவதாலோ.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

வெட்டவெளி கொட்டிக்கிடக்குது...சந்தோசம்.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

வெட்டவெளி கொட்டிக்கிடக்குது...சந்தோசம்.

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு செந்தில்.

பாரதசாரி சொன்னது…

அருமையான வாசிப்பு அனுபவம் நன்றி

raja சொன்னது…

நண்பரே.....நமது இனத்தை அழித்த கருங்காலிகள் தொகுதிகளை அறிவித்துவிட்டார்கள் ... சே குவரா படத்தை போட்டுவிட்டு இந்த நேரத்தில் நமக்கு கவிதை தேவையா... காச நோய் வந்து அவதிபட்டபோதும் சே காட்டில் இந்த கருங்காலிகளை கொல்வதற்கான துப்பாக்கியை கையிலேயே வைத்திருப்பார். நீங்கள் எழுத்தை அல்லவா வைத்திருக்கிறீர்கள்.

வினோ சொன்னது…

/ தப்புத் தப்பாக
யோசிக்கிறாய் என்ற
நண்பன்
சரியாகத் தப்பு செய்ய
கற்றுக்கொடுத்தான்.. /

:) அண்ணா.... :)

Unknown சொன்னது…

இருக்கு ஆனா இல்ல....

சசிகுமார் சொன்னது…

//எதிரெதிராய்
நாம் சந்திக்க நேர்ந்தபோது
மற்றுமொரு நேர்க் கோட்டில்//

தூள் சார்

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல நடை.. நல்ல எழுத்து.

Unknown சொன்னது…

நல்ல எழுத்து..

பாட்டு ரசிகன் சொன்னது…

விச்சியசமான கோணம்..
வாழ்த்துக்கள்..

பாட்டு ரசிகன் சொன்னது…

//////
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////

என்ன இது..


http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

நல்ல கவிதை அல்ல
நல்ல விதை
உங்கள் மனசுக்குள் இருந்து
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

ஹேமா சொன்னது…

மிக மிக அருமை !