மன ஆழங்களில் புதையுண்டு
மறைந்தே போனவள்
நேற்றிரவு கனவில் வந்தாள்
மறக்கவே முடியாது என்றுதான்
நானவளை நினைத்திருந்தேன்..
எப்போதும் போலவே
உதடு சுழித்தும்
உள்ளங்கை பொருத்தியும்
விளையாட்டு காட்டினாள்..
நொடிக்கொரு முறை
"நேரமாச்சு வீட்டுக்குப் போவணும்"
என்றாள்..
"எந்த பிரச்சினை வந்தாலும்
எதிர்த்து நின்னு
கட்டிப்பியா?"
என்று
கட்டிக் கொண்டாள்..
எப்போதும் போலவே
அவளே
பேசிக்கொண்டிருந்தாள்
நேரில் மட்டுமல்ல
கனவில்கூட
கட்டபட்டிருந்தது என் வாய்..
கனவைக் கொன்று
அலறியது அலைபேசி
உடைந்த குரலில்
உதிர்ந்த வார்த்தைகள்
ஒரு துக்க செய்தியைப் பகிர்ந்தன
ஒற்றைக் கண்ணீர்த்துளியை
முற்றுப்புள்ளியாக்கி..
'இனி கனவில் மட்டும்தான்
அவளை'...
18 கருத்துகள்:
தலைவரே வலித்த கவிதை!
அய்யய்யோ... இன்னிக்கு பின்னூட்டத்துல ஒரே 'செண்டி' ஆறா ஓடப்போவுதே! ராசாராமா, அப்பீட் ஆயிக்கடா...! :))))
அண்ணே கவிதை களைகட்டுது
>>"நேரமாச்சு வீட்டுக்குப் போவணும்"
அண்ணே.. விடுங்க.. இந்த காதலிங்களே.இப்படித்தான்.. பறப்பாங்க..
அருமை சார் :-)
// மறக்கவே முடியாது என்றுதான்
நானவளை நினைத்திருந்தேன்..//;
//ஒற்றைக் கண்ணீர்த்துளியை முற்றுப்புள்ளியாக்கி.//
இந்த இரண்டு கூற்றுகளுக்கு இடையில் ஒரு கனவு வைக்கப் படுகிறது.
நம்மில் சமநிலையை நிறுத்துதற்கு, உருவாகி நிகழ்வது கனவு: //உதடு சுழித்தும் உள்ளங்கை பொருத்தியும் ... "எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நின்னு கட்டிப்பியா?" என்று கட்டிக் கொண்டாள்.. //
இவ்வுலகோடு இயைந்தது என்று உறுதிபடத் தோன்றினாலும் அது (கனவு) வேறோர் உலகம் - உள்ளிருத்தி ஊட்டும் கருவறை புரைய.
(சாவை நோக்கிய வளர்சிதைவு ஆகையால்) நம் சமநிலையைக் குலைப்பதற்கே உருவாகி இயல்வது நனவு: //கனவைக் கொன்று அலறியது அலைபேசி//
'காதல்', 'பிரிவு' குறித்த ஆனால் அசட்டு உணர்ச்சிகளுக்குள் வீழாத ஒரு நல்ல கவிதை இது. ('அவள்' என்பது ஒரு பெண்ணாக வேண்டும் என்பதில்லை; ஆசைப்பொருள் அல்லது ஒரு லட்சியமாகக் கூட உருவகிக்கலாம்).
'ஒரு துக்கச் செய்தி' என்பதும் இறப்பாக வேண்டியதில்லை; பிரிவாக இருக்கலாம்.
//"நேரமாச்சு வீட்டுக்குப் போவணும்"// இது //"..கட்டிப்பியா?"//வுக்குப் பிறகு வந்திருந்தால் இன்னும் பொருந்தக் கூடும்.
//'இனி கனவில் மட்டும்தான் அவளை...'// நல்ல தீர்வுதான். வேறென்ன செய்ய, நனவால் தேய்கையில் மனிதன்?
நல்லா இருக்குங்க
இது இந்த ஆண்களுக்கே அடிக்கடி தோன்றும் அதிசயக்கனவுகள். மிகவும் ரசித்தேன். ’அவள் பறந்து போனாளே’ என்று இல்லாமல், அடுத்தடுத்து இதுபோல காதல் ரசம் சொட்டும் கவிதைகளை வெளியிடுங்கள். கடும் வெய்யிலில், அதுவும் தேர்தல் நேரத்தில், மண்டை காயவைக்கும் தங்களின் பதிவுகளுக்கு நடுவில், நல்ல சுவையான இளநீர் சாப்பிட்டதுபோல இருந்தது இந்தக்கவிதை. பாராட்டுக்கள்
உணர்வுகள் அழகாகவும், ஆழமாகவும் வெளிப்படுகின்றன.
மனதின் வலிகளை படம் பிடிக்கிறது கவிதை.
மறந்து விட நினைக்கும் தருணத்தில்...
மறுபடி மறுபடி.... கனவில்...
எப்படி மறக்க..?
அனுபவத்தை தந்து போகும் கவிதை.
ச்சே மனசை கலங்க வச்சிட்டீங்களே செந்தில்....
தேர்தல் களைப்போடு நல்ல கவிதை செந்தில் !
//ஒற்றைக் கண்ணீர்த்துளியை
முற்றுப்புள்ளியாக்கி..
'இனி கனவில் மட்டும்தான்
அவளை'...// ஏக்கத்தை ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க...
எளிமையா ரொம்ப அழகா இருக்கு...
நினைவுகளை தூண்டும் கவிதை.....
//நேரில் மட்டுமல்ல
கனவில்கூட
கட்டபட்டிருந்தது என் வாய்..//
கலக்கிட்டீங்க போங்க...
இனி கனவில் மட்டும் மாட்டும்..அவ்வோவியம். அனல் காற்று வீசுகையில் ஒரு துளி நீர் உதட்டோரத்தில் விழுவது போல.
'விந்தை' பல புரியும் 'மனிதர்கள்' ஊடே.. மந்தை எனப்பெண்ணினம் வாழ்தலும் கேடே.
// அய்யய்யோ... இன்னிக்கு பின்னூட்டத்துல ஒரே 'செண்டி' ஆறா ஓடப்போவுதே! ராசாராமா, அப்பீட் ஆயிக்கடா...! :)))) //
அதுக்குத்தான் கவிதை பக்கமே போறதில்லை...
// இனி கனவில் மட்டும் மாட்டும்..அவ்வோவியம். அனல் காற்று வீசுகையில் ஒரு துளி நீர் உதட்டோரத்தில் விழுவது போல.
'விந்தை' பல புரியும் 'மனிதர்கள்' ஊடே.. மந்தை எனப்பெண்ணினம் வாழ்தலும் கேடே. //
மேடமுக்கு மப்பு ஓவராயிடுச்சு...
ஃஃஃஃநேரில் மட்டுமல்ல
கனவில்கூட
கட்டபட்டிருந்தது என் வாய்..ஃஃஃஃ
கவிதையில் கூட உறுத்தும் கடிவாய் கவளத்தை குலைக்கிறதே... அருமைங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
// நொடிக்கொரு முறை
"நேரமாச்சு வீட்டுக்குப் போவணும்"
என்றாள்..//
:-))
கருத்துரையிடுக