ஒரு ஓட்டுக்கு கருணாநிதி எவ்வளவு பணம் கொடுப்பார், ஜெயலலிதா எவ்வளவு பணம் கொடுப்பார் என்று ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்று மதியம் தான் சாப்பிடவேண்டிய மாத்திரைக்கான பணத்திற்கு வழியில்லையே என்று புழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பரிதாப ஜீவன்தான் மேலிருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்.
பெயர்: ராஜா முகம்மது.
வயது: 42
ஊர்: ஜெகதாப்பட்டிணம் (புதுக்கோட்டை மாவட்டம்)
தொழில்: இலங்கைக் கடற்படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு நேர்ந்து விடப்பட்ட தமிழக மீனவன்.
சுடப்பட்டிருந்தாலும் எப்படி இது போன்ற தீப்புண்கள் என்று தோன்றலாம். ஆனால், இவர் தாக்குண்டது பெட்ரோல் குண்டு வீச்சில். உடலில் பற்றிய தீயோடு கடலில் நீந்தி கரை சேர்ந்த அவரை ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழக மீனவர்களை வைத்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு ஒரு காட்சி கிடைத்ததாக குதூகலித்தார். பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனையும், கூடவே சன் டி.வி. கேமராமேனையும் அனுப்பி, ஐம்பதாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியதாகவும், ஆறுதல் கூறியதாகவும் ஒளிப்பதிவு செய்து, தங்கள் நாடகத்தின் காட்சியொன்றை தமிழகம் முழுக்க ஒளிபரப்பி தம்பட்டம் அடித்துக்கொண்டார். சாவுக்கு சலவை நோட்டு திட்டம்; காயத்திற்கு கரன்சி உதவி திட்டம் என்றெல்லாம் கூட அறிவிக்கலாம் அரசியல்வாதிகளும்; அவர்தம் நாடகங்களும்.
திமுகவினரின் அன்றைய நாடகக்காட்சி அவர்கள் அளவில் முடிவுற்றது. ஆனால், உடல் முழுக்க தீப்புண்களோடு மருத்துவமனையில் இருந்த ராஜா முகமதுவிற்கு அரசுப் பணம் யானைப் பசிக்கு சோளப் பொரியாகிப் போனது. உடல் தேறாமலே, கையில் பணமில்லாத நிலையில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டவர்இன்னும் படுக்கையில்தான் இருக்கின்றார்; தீக்காயங்களோடும், வைத்தியம் பார்க்க பணமில்லையே என்னும் மனக்காயங்களோடும்.
தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் கையிழந்து, காலிழந்து, தொழில் செய்ய வலுவிழந்து நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர். அந்நிய நாட்டுப் படையால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தன் நாட்டு குடிமகனைக் காக்க வக்கில்லாத அரசு, தன் குடும்ப வளத்தை பெருக்குவதில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகின்றது.
இதுபோன்ற தாக்குதல்களும் கொலைகளும் இனியும் நடைபெறக்கூடாது என்னும் நோக்கில் இணைய நண்பர்களால் முன்னெடுக்கப்பட்ட #tnfisherman போராட்டம், இணையம் கடந்து பல மட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு முகமாக பல்வேறு இணைய நண்பர்கள், நாகப்பட்டிணம் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான மீனவப் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.
இதுவரை நாம் மேற்கொண்ட செயல்களை பரிசீலிக்கவும் (Review), அடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை ஆலோசனை செய்யவும் வரும் ஞாயிறு அன்று #tnfisherman ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.
நாள்: 20/03/2011
நேரம்: மாலை 5 மணி.
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) மேற்கு KK நகர்.
அன்றைய கூட்டத்தின் திட்டம்:
1. முதல் ஆலோசனைக் கூட்ட முடிவுகளும், நடைமுறைப்படுத்தப்பட்டவையும் - அறிக்கை வாசிப்பு.
2. மீனவர்கள் வாழ்வில் - மீனவர் சங்கப் பிரதிநிதியின் உரை
3. மீனவர்கள் சந்திப்பு - பயணம் சென்ற நண்பர்களின் உரை.
4. மீனவர் ராஜா முகமது - நமது பங்களிப்பு என்ன?
5. ஆர்வலர்களின் கருத்துகளும், கலந்துரையாடலும்.
நம் சகோதரர்களுக்காக செயல்படும் நாம், அனைவரது கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடும் இக்கூட்டத்திற்கு #tnfisherman ஆர்வலர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.savetnfishermEn.org சார்பாக
5 கருத்துகள்:
இப்படியொரு ஒரு ஆறாத ரணங்களை வரும் சட்டசபை தேர்தலில் வரும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் வேட்பாள நாய்களுக்கும் தருவோம். இணைய எழுத்தாளர்கள் அனைவரும் இப்பிரச்சினையில் இணைந்து செயல்படுவோம்.
அண்ணே.. அப்படியே பத்திக்கிட்டு வருது....
கொஞ்சம் கூடக் கூசவில்லை இவர்களுக்கு.. பரம எழைகலாம்,இலவசங்களாம்.. மண்ணாங்கட்டி...
உங்கள் பொதுக் கூட்டத்துக்கு வாழ்த்துக்கள்..
பரம எழைகளாம்...
இலவசங்களாம்...
மண்ணாங்கட்டி...
உங்கள் கூட்டத்துக்கு வாழ்த்துக்கள்.
ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்
காங்கிரஸை தோற்கடிக்க அணி திரள்வோம் வாரீர்!
பின்வரும் சுட்டியை சுட்டி, இணைத்து கொள்ளுங்கள்
Defeat Congress
கருத்துரையிடுக