12 ஜூலை, 2011

வா! உரையாடலாம்...

அறிமுகமற்ற முகங்களுடன் 
தொடங்கியது நம் நட்பு 
நலம் விசாரித்தல் 
கொடுக்கல் வாங்கலென
விரிவான பின்னும் 
முகங்கள் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தன..

குடும்பத்தின் அதீத சுமைகளை
தோள் மாற்றி சுமந்த கணங்களில்
நாம் ஒருவருள் ஒருவர் இடமாறினோம் 
வாரம்
மாதம் 
வருடமென 
வாய்ப்பளிக்காத
நாட்கள் கடந்தன..

இத்தனை எளிய 
இணைய உலகில் 
உன் முகம் காட்ட 
நீ விரும்பவில்லை 
அல்லது 
துணியவில்லை..

நேற்று முன்னிரவில் 
என் செல்பேசிவழி வந்தாய் நீ 
சென்னைக்கு வந்திருக்கிறேன் 
ரோகினி லாட்ஜ் 
அறை எண் 305
என்றாய்..

ரோகிணியின் 
305
கதவை தட்டியதும் 
திறந்த நீ சொன்னாய் 

உன் காலணிகளையும் 
முகத்தையும் 
கழட்டி வைத்துவிட்டு 
வா! உரையாடலாம்..

9 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

Romba nalla irukku... vazhththukkal.

சசிகுமார் சொன்னது…

nallaa irukku

நண்பனுக்காக(ரமேஷ்வீரா ) சொன்னது…

miga alagana kavithai annaa.......... valthugal...............

ராக்கெட் ராஜா சொன்னது…

நல்ல கவிதை நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ராக்கெட் ராஜா சொன்னது…

நல்ல பதிவு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

hussain5000 சொன்னது…

nowaday why u not write new blogs what happen to you? we expecting new articles fron youside

hussain5000 சொன்னது…

we expect new articles from your side

பாரத்... பாரதி... சொன்னது…

சந்திப்பின் அடுத்த நிமிடங்கள் பதிவாகததன் மர்மம் என்னவோ?

பாரத்... பாரதி... சொன்னது…

முகமூடிகளை அணிந்து கொண்டே திரிவதால், என் நிஜ முகம் எனக்கே கூட மறந்து விட்டது ... இப்போதைய முகமூடி மறைக்க பிரிதொன்றை தானே சூடிக்கொள்கிறது முகம்..