17 ஏப்., 2013

தீராக்காதல்...

அதே நிலா
அதே குளம்
அதே முன்னிரவு 
நீ அமர்ந்திருந்த
அதே கல்..

எறியும்
ஒவ்வொரு கல்லும்
வட்ட வட்டமாக 
நீரை நகர்த்த முயல்கிறது
குளத்தில்,
நீ விலக்கிய
நம் காதலைப்போல்..

என்னைப்போலவே 
ஒரு 
கரும்பச்சை தவளையும் 
வெகு நேரம்
பாடிக்கொண்டிருக்கிறது
தன் துயரத்தை,
பாம்புக்கு 
இரையாகியிருக்கலாம்
அதன் துணை..

கடைசி சொட்டு
மதுவும் தீர்ந்தபின்
குளத்தில் தள்ளாடும்
நிலாவென
மீதமிருக்கும் என் வாழ்வு
தேடியலைகிறது
தன்
கடைசி விடியலை..

7 கருத்துகள்:

rajasundararajan சொன்னது…

//குளத்தில் தள்ளாடும் நிலா// அருமை!

rajasundararajan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

அழகன் கவிதை ஐயா

நாடி கவிதை

spr.velu சொன்னது…

எறியும்
ஒவ்வொரு கல்லும்
வட்ட வட்டமாக
நீரை நகர்த்த முயல்கிறது
குளத்தில்,
நீ விலக்கிய
நம் காதலைப்போல்

ரமேஷ் வீரா சொன்னது…

அருமை.....

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா இருக்கு அண்ணா....

Unknown சொன்னது…

உவமைகள் அருமை! உளத்தில் நிற்பவை குளத்தில் நடப்பவை!