அரசாங்க அலுவலகங்களுக்கு ஒரு வேலை விசயமாகப் போனால்
அங்கிருக்கும் அதிகாரிகள் நேர்மை பற்றி உங்களிடம் பேசினால் கனிசமாக
எதிர்பார்க்கிறார் என்பது பொருள்!. தொகை படிந்தவுடன் நேர்மையாக
எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து விடுவார்கள். ஒருவேளை நாம் பேரம் பேசத்
துவங்கினால் அந்த வேலையைச் செய்ய எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டும் என்று
ஆரம்பித்து பட்டியல் போட்டு தமக்கு அதில் கிடைக்கப்போகும் சொற்ப லாபத்தை
குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகளிடம் எதாவது வேலை விசயமாக சென்றால் இப்படி நிறைய
சுவாரஸ்யங்கள் கிடைக்கும். சமீபத்திய சுவரஸ்யம், பட்டா மாற்றம் ஒன்றிற்காக
விண்ணப்பித்தபோது நடந்தது. நான் கிராம் நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி
ஒருவரால் ஓரங்கட்டப்பட்டேன். முதலில் அவர் என்னைப்பற்றி விசாரித்தார். நான்
சென்னை வாசி என்றதும் ஊருக்கு வந்து போகும் செலவெல்லாம் இருக்கும்ல அதானல்
ரூ.3000 கொடுங்க முடிச்சு கொடுத்துடறேன் என்றார். யோசித்து சொல்கிறேன் என
வந்துவிட்டேன்.
..........................................................................................................
நாளிதழில் ஒரு விளம்பரம் பார்த்தேன்:
அதாவது டாஸ்மாக்கில் அதிகவிலை விற்றால் புகார் கொடுக்க ஒரு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லா டாஸ்மாக்கிலும் பியருக்கு ரூ.10-ம், குவாட்டருக்கு ரூ.5-ம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். போய் பிடிங்க ஆபிசருங்களா!
.....................................................................................
சமீபமாக முகநூல் பக்கம் பழியாய் கிடக்கிறேன். யார்? எதை எழுதினாலும்? படிக்கிறேனோ! இல்லையோ!! கண்டிப்பாக Like செய்துவிடுவேன். காரனம் தமிழ்மணம் ஓட்டு அரசியல் போல் அங்கும் மொய், முறைவாசல் என சரியாக செய்யவில்லை என்றால் நம்மையும் அவர்கள் சீண்டமாட்டார்கள்.
முகநூல் என்பது Social Network என்பதை விடவும், மிகப்பெரிய இலவச Business Marketing Space எனவே இதில் சிறு பொருள் வியாபாரிகள் முதல் மிகப்பெரிய Corporates வரைக்கும் கடை விரிக்கிறார்கள். அதே அளவு ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள்.
..............................................................................................................
கவிதை எபடியெல்லாம் எழுதலாம் என்கிற விதிமுறைகளை உடைத்தது புதுக்கவிதை வடிவங்கள்தான். சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் மூத்த கவிஞர்கள், புதுக்கவிதை என்பதே கிடையாது எல்லாம் உரைவீச்சுதான் என்பார்கள். முகநூல் பக்கம் போனால் அது உண்மைதான் என்பது தெரியும்.
சுமாரான கற்பனைகளை ஒரு பாரா எழுதி குத்து மதிப்பாக வார்த்தைகளின் முடிவில் ஒரு எண்டர் தட்டினால் கவிதை கிடைத்துவிடும்.
(உம்) : அன்பே எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பூக்களாய் நீ இருக்கிறாய்..
இதனை முதன் முதலாக காதல் செய்கிறவர்கள் அல்லது கவிதை எழுதுகிறவர்கள் எழுதினால்:
அன்பே
எத்தனைமுறை
பார்த்தாலும்
சலிக்காத
பூக்களாய்
நீ
இருக்கிறாய்..
கொஞ்சம் கவிதை புத்தகம் படிக்கிற அல்லது 25 வயசுக்கு மேல் காதல் வருகிறவர்கள் எழுதினால்:
அன்பே
எத்தனைமுறை பார்த்தாலும்
சலிக்காத பூக்களாய்
நீ இருக்கிறாய்..
ஆனால் முகநூலில் இப்படி ஒரு கவிதை வந்தால் பூக்களாய் என்று சொல்லிவிட்டு, பின் ஒருமையில் நீ என்று வருகிறதே என நான் உட்பட யாரும் கேள்வி கேட்காமல் Like செய்துவிடுவோம்.
.............................................................................................................
முகநூலில் காலை வணக்கம், இரவு வணக்கம் சொல்வதையெல்லாம் கடமை உணர்ச்சியுடன் செயல்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டில் தினசரி தேதிகள் கிழிக்கும் நாட்காட்டி இல்லை போல. ஏனென்றால் நிறைய பேர் அங்கிருந்துதான் தத்துவங்களை உருவி தான் பயன்பெற முடியாவிட்டாலும், உலகம் பயனுற வேண்டி டைப்புகின்றனர்.

6 கருத்துகள்:
உண்மைத
உண்மை
Typed with Panini Keypad
எனக்கு நீங்க லைக் கொடுக்கும்போதே நினைச்சேன்! சுவையான பகிர்வு! நன்றி!
முகநூல் குறித்து அருமையாக சொன்னீர்கள் அண்ணா...
அந்த நாளில் கவிதையின் வடிவம் என்பது, எழுதிய கவிஞனின் திட்டப்படியோ அல்லது எடுத்துக்கொண்ட யாப்பின் அடிப்படியிலோ அமைந்தது. இன்றோ, அதை வெளியிடுபவனது எண்ணத்தையும், வெளியிடப்படும் பத்திரிகை/ஊடகத்தின் இடவசதியைப் பொருத்தும் சில வரிகளில் இருந்து பலவரிகள் வரை வடிவமைக்கப்படுகிறது. பரிதாபமே!
நன்று. முகநூலில் வணக்கம் சொல்லக்கூடாதா என்ன? உங்கள் கருத்திலிருந்து முரண்படுகிறேன்.
முகநூல் மூலம் எத்தனையோ வெட்டி அரட்டைகள், வீண்பேச்சுகள், தேவையில்லாத தத்துவங்கள் இப்படி நிறைய உள்ளன.
அவற்றையெல்லாம் விட்டு, அன்றாடம் வணக்கம் சொல்பவர்களை குறைசொல்வது எந்த வகையில் நியாயம்.. ??
அதற்கும் நேரம் ஒதுக்கி, நண்பர்களுக்கு காலை, மாலை வணக்கம் சொல்பவர்களின் செயல்கள் ஒன்றும் தரக்குறைவானது கிடையாது.
கவிதை வடிவம் பற்றிய தங்களது கருத்து ஏற்கத்தக்கதுதான். வார்த்தைகளை பிரித்துப் போட்டாலே அவற்றை கவிதை என்று சொல்லும் மனப்பாங்கு தற்பொழுது அதிகரித்துவருகிறது.
பகிர்வினிற்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக