திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருக்கிறார். எனக்கு தனிப்பட்ட முறையில் திருமாவின்மேல் ஒரு மரியாதை எப்போதும் உண்டு. ஆனால் இப்போது எல்லா அரசியல்வாதிகளைபோலத்தான் அவரும் என்று நினைக்க தோன்றுகிறது.
திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதை காங்கிரசார் விரும்பாத நிலையில் பலவந்தமாக நான் அந்த கூட்டணியில்தான் இருப்பேன் என சொல்வது நியாயமா திருமா? ஈழத்தமிழனுக்காக நீங்கள்தான் சுயநலம் பார்க்காமல் குரல் கொடுத்தவர் என பார்கிறவரிடத்தில் எல்லாம் பெருமையாக சொல்லிக்கொண்டுஇருந்தேன், இப்போது இன அழிப்பு போரை இந்தியாவே முன்னின்று நடத்துவதை தெளிவாக தெரிந்த நீங்கள் எப்படி மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வருவதை விரும்புகிறீர்கள்.
நாளை தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்களும் காங்கிரசாரும் எப்படி ஒரேமேடையில் நின்று பேசுவீர்கள். உங்கள் மனசாட்சி உங்களை சுட்டெரிக்காதா?
கலைஞர் தமிழின் காவலன் என்ற காலம் போயேபோச்சு என்பது உங்களுக்கு தெரியாதா? எதிரிகளை கூட மன்னிக்கலாம், கலைஞர் மாதிரி துரோகிகளை எப்படி மன்னிப்பது.
தன் குடும்பத்தின் சுயநலத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட கருணாநிதியும், தினம் தினம் நம் இனத்தை அழிக்கும் செயலை திறம்பட செய்யும் இத்தாலி பொம்பளைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.
இதற்குமேல் உங்களை பற்றி திட்டி எழுதக்கூட என்னால் முடியவில்லை. காலம் கடந்து விடவில்லை. சீக்கிரம் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் இவ்வளவு நாள் நீங்கள் முன்வைத்த போராட்டமும், நம் சகோதரர்களின் மரணமும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.
உங்கள் பெயர் நம் நீண்ட தமிழ் சரித்திரத்தின் கருப்பு பக்கங்களில் இடம்பெறாமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்,
அன்புடன்.
உங்கள் மேல் ஆழ்ந்த பாசமும், மரியாதையும் கொண்ட,
ஒரு தமிழன்.....
11 கருத்துகள்:
நியாயத்திற்கு அடங்க மறு !
கொள்கைகள் கடைப் பிடிக்க முடியவில்லை என்றால் அத்து மீறு !!
பதவிச் சுகத்திற்காக கேவலமாக திமிரி எழு!!
யாராவது கேள்வி கேட்டால் திருப்பி கைகளால் அடி !!
வருகைக்கு நன்றி நண்பரே..
உங்கள் அர்த்தம் சரிதான்....
கே.ஆர்.பி.செந்தில்
என்ன பண்ணுவது அவரும் கட்சி நடத்த வேண்டும் ல. இந்த எலெக்சன்லயும் ஜெயிக்கலனா கட்சிய குலோஸ் பண்ணிட்டு அவர் வீட்டுக்கு தான் போகனும்.
என்ன்னை பொருத்த வரையில் அவரின் ஈழ நிலைப்பாடு உண்மையான ஒன்றுதான்.
சிலவற்றிக்காக சிலவற்றை இழக்கத் தான் நேரிடுகிறது.
அவரை நம்பி ஒரு கட்சி இருக்குங்க. 28 பேர் தேசிய பாதுகாப்பு சட்டதில இருக்காங்க எல்லாம் ஈழபிரச்சினை சம்மந்தமாக (கலைஞர் தான் கைது பண்ணார் என்பது வேறு விசயம் அவர் நினைச்சா தான் வெளியிலையும் வர முடியும்)
வருகைக்கு நன்றி நண்பரே ..
ஆனால் ஒரு போராளிக்கு வளைந்துகொடுக்க தெரியாது, அவன் மரணத்துக்கு முன் கூட நெஞ்சை நிமிர்த்தி காண்பிப்பான், திருமாவின் வாழ்வியலும் அப்படிதான் இருந்தது, பெரியாருக்கு பின் கம்யுனிஸ்ட் ஓரளவுக்கு தலித் முன்னேற்றத்துக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், சிறுத்தைகள் வந்தபின்னாடிதான் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் வந்தது, மேலும் ஈழத்தை பொறுத்தவரை நெடுமாறனும், திருமாவும் மட்டுமே முழு மூச்சாக போராடி வருகின்றனர்.
என்னைபொறுத்தவரை கலைஞரிடம் போவதைவிட ஜெயலலிதாவிடம் போயிருக்கலாம்... அங்கும் தேவையான பணம் கிடைக்கும், என்றாலும் நீங்கள் சொல்வது மாதிரி கலைஞர் காங்கிரஸ் எவ்வளவோ நிர்பந்தங்களை கொடுத்தபோதும் திருமாவை கைது செய்யவில்லை...
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
திருமாவளவன் தனித்து தான் போட்டியிடுவர்,தேர்தல் நெருங்கும்போது அந்த அறிவிப்பு வரும்.அவர் நிச்சியமாக ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரமாட்டார்
சில காரணங்களுக்காகத்தான் தற்காலிகமாக கருணாநிதியோடு கூட்டணி.நிச்சியமாக அவர் திமிரி எழுவார்,திருப்பியடிப்பர்.இந்தியாவில் காங்கிரஸ் சம்மட்டி அடி வாங்கும்போது ஈழத்தில் தநிஈழத்திற்கான வோட்டெடுப்பு துவங்கிஇருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி தம்பி...
நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்..
இப்போதிருக்கும் தலைவர்களில் நெடுமாறன், திருமா, வைகோ
தவிர மற்ற யாரும் ஈழ பிரச்னை பற்றி கவலைபடாதவர்கள்..
எனவேதான் திருமாவின் கூட்டணி முடிவு அவர்மேல் எனக்கு ஆழ்ந்த
வருத்தத்தை அளித்தது...
மதிப்புக்குரிய nTamil நிர்வாகிக்கு
என் வலைப்பக்கத்தை தங்கள் வலைப்பூவில் இணைத்தமைக்கு நன்றி..
இனி தொடர்ந்து உங்களுக்கும் என் படைப்புகளை அனுப்புகிறேன்..
திருமாவளவன் அவர்கள் எடுத்திருக்கும் முடிவுதான் சரியானது இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் இருபெரும் காட்சிகளில் எது ஆதரவாக இருக்கிறது என்று பார்த்தால் அது திராவிட முன்னேற்ற கழகம்தான். திருமா வளவனின் கருத்தை ஒட்டிய சிந்தனை உள்ளகட்சியாக பார்த்தால் திமுக தான் முன்னணியில் இருக்கிறது.தன்னுடைய சிந்தனைக்கு சிறிதும் ஒத்து போகாத அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தான் முரண்பாடாக தெரியும்.போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம்தான் என்று அறிக்கை வெளியிட்ட கட்சியுடன் திருமாவளவன் சேந்திருந்தால் அதுதான் அவர் செய்த மிகப்பெரிய பிழை.தனித்து நின்று வெற்றிபெற்றாலும் மக்களவையில் யாருடனாவது கூட்டணி அமைத்துத்தான் ஆகவேண்டும் அப்போது இந்தியாவில் இருபெரும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பிஜெபி. இந்த இரண்டு காட்சிகளில் எதாவது ஒன்றுடன் சேர்த்து மக்களவை அமைக்க உதவவேண்டும். . தனித்து நின்று வெற்றிபெற்று காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்தால் மக்களை ஏமாற்றியது போல் ஆகிவிடும் எனவேதான் மக்களவை அமைப்பதற்கு எந்தக்கட்சிக்கு ஆதரவு என்று சொல்லி உங்களிடம் வாக்கு கேட்கிறார். எதற்கோ பயந்து எதையாவது அட்சியில் அமர்த்தி விட்டு குத்துதே குடையுதே என்று சொல்லவதை விட இருப்பதை சரியனபாதைக்கு திருப்புவதே மேல்.
வருகைக்கு நன்றி கிருஷ்ணலீலை
தங்கள் சொல்வதைபோல் பார்த்தல் ஒரே ஒரு சீட்டுக்காக திருமா இந்த நிலையை எடுக்க வேண்டியதில்லை. என்னை பொறுத்தவரை ஜெயலலிதா எதிரி, ஆனால் கருணாநிதி துரோகி,
துரோகியைவிட எதிரி மேல் ...
உண்மை
கருத்துரையிடுக