ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலை அளித்துக்கொண்டிருக்கின்றன.. தொடர்ந்த படுகொலை செய்திகளால் நாம் ஒருமாதிரி மரத்துபோய் இருந்தாலும், தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் இலங்கையில் தமிழினத்தை இந்திய அரசே அழிக்கிறார்கள் என ஆதாரபூர்வமாக பிரான்ஸ் செய்தியாளர்கள் வெளியிடும்போது இந்திய அரசின் குறிப்பாக சோனியாவின் தனிப்பட்ட வெருப்பின்பால் நிகழும் இந்த படுகொலைகள், நம்மை இந்தியாவின் இறையாண்மை பற்றி மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
இங்கு தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அடிக்கும் கூத்துகள் நாளுக்குநாள் அதிகமாகிறது. இவர்கள் ஈழபிரச்சினை பற்றி ஒன்றுமே பேசாமல் கூட இருக்கலாம், ஆனால் போரை நிறுத்தசொல்லி போராடுவதாக இவர்கள் சொல்லுவது, சில சமயம் இவர்கள் கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பி வந்தவர்களோ என யோசிக்கவைக்கிறது.
ஐயா கலைஞர் அவர்களே நீங்க அங்கம் வகிக்கும் மத்திய அரசுதானே படைகளை அனுப்பி உள்ளது, பின் யாருக்காக போராடுகிறீர்கள், மேலும் எல்லோருக்கும் தந்தி அடிக்கிறீர்கள், ஏனையா மொபைல் ரீச் ஆகலியா? . நாங்கல்லாம் சொரணை கெட்டுபோய் ரொம்ப நாளாச்சு, இன்னமும் எங்களுக்கு இன உணர்வு இருக்குன்னு நம்புறீங்களா? .. பேசாம எலக்சன் வேலைய பாருங்க.. ரெண்டு ஓட்டாவது விழும்..
அண்ணன் திருமாவுக்கு.., எங்கண்ணே போச்சு உங்க வீரமெல்லாம், சும்மா போராட்டம் பண்ணிட்டு இருக்காதிங்க, அதுக்கு பதிலா சோனியா, தங்கபாலு கூட மேடையில ஒண்ணா நின்னு பேசும்போது அம்மா கட்சிகாரங்களுக்கு போட்டியா அன்னையை எப்படியெல்லாம் புகழலாம்ன்னு ரெடி பண்ணி வச்சிங்கன்னா உபயோகமா இருக்கும், அத விட்டுட்டு பிரபாகரனுக்கு ஆபத்துன்னு அறிக்கை விடுறீங்க, அவருக்கு என்ன ஆனா உங்களுக்கு என்னங்க, போய் அன்னையின் கரத்தையும், அண்ணனின் கரத்தையும் பலப்படுத்துங்க,,
தங்கபாலுவுக்கு.., என்ன ஆச்சு சார் திடீர்ன்னு நீங்களும் போராட்டத்தில் கலந்துக்குவோம்ன்னு சொல்லிட்டிங்க.. ஒட்டு வாங்கனுன்னா எதையாவது செய்றேன்னு அறிவிங்க... அதவிட்டுட்டு சின்னபுள்ளைதனம்மா இப்பிடியெல்லாம் அறிவிக்கலாமா? அங்க யாரு செத்தா உங்களுக்கு என்னங்க... அங்க உள்ள சிங்களவனுக்கு ஆயுதமும், ஆளும் கொடுக்கிறதும் உங்க அரசாங்கம்தானங்க அவங்கள நிறுத்த சொல்லவேண்டியாதுதானே.....
அய்யாக்களே வர்ற எலக்சன்ல உங்கள மட்டும் நாங்க செயிக்க வச்சுட்டோம்ன்னா நீங்க தாராளமா அங்க போய் குண்ட போடலாம், ஏன் தமிழ்நாட்டுலேயே ஈழம் பத்தி பேசுனா தேசிய பாதுகாப்பு சட்டத்துல போடலாம்... ஆனா இலங்கை அரசை நிர்பந்திக்க முடியாதுன்னு ஒரு தடவ அன்பழகன் சொன்னார், இப்ப அவரும்தானே போராட்டத்துக்கு வருவாரு?...
அப்புறம் மக்களே மறக்காம உங்க ஓட்ட இவர்களுக்கு குத்திடாம பாத்துகங்க...
அநேகமா நாளைக்கு என்னை தேடி ஆட்டோக்கள் வந்தா... இத நான் எழுதவே இல்லை என மறுப்பு அறிக்கை கொடுக்க வேண்டி வரும் அதனால இப்பவே சொல்லிர்றேன்...
இந்த கட்டுரையில் வரும் பெயர்கள் மற்றும் விபரங்கள் என் சொந்த கற்பனையே.. யாரையும் நிகழ்காலம், நடந்தகாலம் அல்லது எதிர்காலத்தில் குறிக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
அப்பாடா கேஸ் போட்டா சமாளிச்சுக்கலாம்....
13 கருத்துகள்:
இவனுங்க குடுத்த காயத்த ஆற விடாம அப்பப்போ சொறிஞ்சி வேற விடுறானுவ. மனுசப்பிறவிங்களா என்னன்னே தெரியல. எரிச்சல், அழுகை, இயலாமைன்னு பைத்தியமா அடிக்கறானுவ நம்மள. நல்ல எழுதுறீங்க. நன்றி
//இந்த கட்டுரையில் வரும் பெயர்கள் மற்றும் விபரங்கள் என் சொந்த கற்பனையே.. யாரையும் நிகழ்காலம், நடந்தகாலம் அல்லது எதிர்காலத்தில் குறிக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...//
ஏய்... சூப்பரப்பு...
போரை நிறுத்தவில்லை என்றால் எங்கள் எம்பிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று தேதியும் அறிவித்த தமிழின தலைவருக்கு ஞாபக மறதியா? இல்லை இந்த பாழாய்ப்போன தமிழனுக்கு ஞாபக மறதியா? TESO என்றார் அன்று , இன்று அது என்னவாகியது என்று அவருக்கே தெரியும்.
போரை நிறுத்த ஒரு கட்சி தலைவியிடம் வேண்டுகோள் விடுக்கிற ஒரு தமிழின தலைவர் (???), இதில் இவர் குழப்புகிறாரா ? இல்லை குழம்பி இருக்கிறாரா !, பாவம் தமிழினம் ! பரிதாபம் ஈழத்தமிழ் மக்கள்! ஒரு பாவப்பட்ட தமிழன் மத்திய கிழக்காசியாவிலிருந்து...
இந்த அரசியல்வாதிகள் இவனுகளுக்கு ஓட்டு வாங்க எப்படி வேண்டும்னாலும் பேசுவானுங்க....ஒருவேளை இவனுக அக்கா தங்கச்சிய கற்பழிச்சா கூட பேசிக்கிட்டே தான் இருப்பானுங்க போல...மக்களே தயவு செய்து காங்கிரஸ் கட்சி தோற்கணூம்....
//அங்க யாரு செத்தா உங்களுக்கு என்னங்க... அங்க உள்ள சிங்களவனுக்கு ஆயுதமும், ஆளும் கொடுக்கிறதும் உங்க அரசாங்கம்தானங்க அவங்கள நிறுத்த சொல்லவேண்டியாதுதானே.....//
வெட்டியான்களுக்கு யாருசெத்தா என்ன
அவர்கள் வாழ்க்கை நடத்த யாருவீட்லையாவது எழவுவிழுந்துக்கிட்டே இருக்கனும்
நன்றி பாலா, அங்க தினம் தினம் செத்துக்கிட்டுருக்காங்க இவங்க பேசாம இருந்தாலாவது பரவாயில்லை, நம்ம முட்டாள் ஆக்குறாங்க பாருங்க அதுதான் வேதனையே...
நன்றி அப்பாவி... கோர்ட்டு கேசு வந்தா அப்பிடித்தான் சமாளிக்கணும்
நன்றி மாரியப்பன், திருமா கூட இவர்களோட சேர்ந்ததுதான் வருத்தமே...
பெயரில்லா நண்பருக்கு நன்றி...
நான் என் ஆயுள் வரைக்கும் காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன் என சத்தியம் பூண்டிருக்கிறேன்
நன்றி நான் தகுதியானவனா? அவர்களே..
இப்ப ஈழ தமிழன் நாளைக்கு நம்மதான்...
இப்படி ஒரு ஈன அரசியலை எந்த இனமும் சந்தித்து இருக்காது....
super ...
//அநேகமா நாளைக்கு என்னை தேடி ஆட்டோக்கள் வந்தா.//
மாப்ளே, ஏண்டா பீதியக் கெளப்புறே? :)
வைகோவுக்கும், வருன் காந்திக்கும் ஆட்டோ வரும்போது எனக்கு வராதா மாப்புளே ...
கருத்துரையிடுக