12 ஏப்., 2009

"ஈழமும், தமிழ் எழுத்தாளர்களும்"

பற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.

இதில் ஹிந்து, தினமலர், துக்ளக் போன்றவை இன அழிப்புக்கு துணைபோகின்றன, தினகரனோ புலிகள் செத்தால் எழுதுகிறது, தமிழன் செத்தால் எழுதுவதில்லை. ஊடகங்களில் சன் நெட்வொர்க்கும் , கலைஞர் நெட்வொர்க்கும் பெயருக்கு தகவல்கள் வெளியிடுகிறார்கள், மக்கள் தொலைகாட்சி மட்டும் தொடர்ந்து செய்திகளிலும், தொடராகவும் ஒளிபரப்புகிறார்கள்.

ஆனால் தமிழை வாழவைப்பேன் என்ற வைரமுத்துவோ எந்திரனுக்கு பாட்டெழுத போய்விட்டதால் ஒன்றிரெண்டு முறை பேசியதோடு சரி கலைஞரின் ஓட்டுக்கு வசனம் எழுத போய்விட்டார். மற்றபடி வாலி, அப்துல் ரகுமான் போன்ற துதிபாடிகள் பொற்கிழி( கலைஞர் பத்து ரூபாய்தான் தருவார்) வாங்கிக்கொண்டு கவியரங்கத்தில் புகழ் பாடுகின்றனர். ஏதோ தாமரை மட்டும் முழு அளவில் போராடுகிறார், அப்புறம் இளம் கவிஞர்கள் முத்துகுமார், கபிலன், பா.விஜய் போன்றவர்கள் கைதுக்கு பயந்து வாய்மூடி மௌனமாகிவிட்டார்கள்.

அப்புறம் தமிழில் எத்தனை எழுத்தாளர்கள்...., யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை, தனிப்பட்ட முறையில் புலிகளை பற்றியும் பிரபாகரனை பற்றியும் எழுதி காசு பார்கிறார்களே தவிர, இந்த உக்கிர கொடுமை பற்றி இவர்கள் யாரும் எழுதாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது, இந்த அளவுக்கா சொரணை கெட்டு போயிருப்பார்கள் சாருவோ ஒருபடி மேலேபோய் நான் எழுதினால் என் வீட்டில் குண்டு போடுவார்கள் என்கிறார், யாரைப்பற்றி எழுதுவீர்கள்?, உங்கள் வீட்டில் குண்டு போடுமளவிற்கு அதில் என்ன எழுதபோகிறீர்கள்?..

கலைஞர் ஒருமுறை நெடுமாறன் அய்யாவை காகிதப்புலி என்றார், உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள்தான் காகிதப்புலிகள், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. ஈழ ஆதரவு என்பது புலிகளின் ஆதரவாக ஏன் பார்க்கிறீர்கள், இன்றுவரை சிங்கள ராணுவத்தை தவிர அப்பாவி சிங்கள மக்களை அவர்கள் தாக்குவதில்லை, ஆனால் சிங்கள ராணுவமோ தமிழன் ஒவ்வொருவனையும் புலிகளாக நினைத்து சுட்டுகொல்லுகிறதே, அதிலும் குழந்தைகள் என்னய்யா பாவம் செய்தார்கள், தமிழனுக்கு பிறந்தது பாவமா? அந்த அப்பாவி பிஞ்சுகளின் மரண காணொளிகள் இணையம் முழுவதும் கொட்டிகிடக்குதே அதனை நீங்கள் காணுவதில்லையா?...

உலகில் வேறு எந்த இனமக்களும் சந்திக்காத பேரவலம் முப்பத்திமூன்று ஆண்டுகளாக தமிழினம் சந்திக்கிறதே, அதற்க்கு நாம் மௌனமாக இருக்கிறோமே உங்களுக்கு உறுத்தவில்லையா, தினசரி அதனை படித்துவிட்டு உங்களால் எப்படி ரஜினிக்கும், விஜய்க்கும் பாட்டெழுத முடிகிறது?, எப்படி உங்களால் கட்டுரைகள், கதைகள் எழுத முடிகிறது?.

இந்நேரம் பாரதியும், பெரியாரும் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? பணம் என்னும் மாயப்பேய் உங்களை இப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது, நாளையே ஈழம் மலர்ந்தால் நீங்கள் அங்கும் போய் பேசுவீர்கள்.. கல் தோன்றி மண்தோன்றா.. என அடுக்குமொழியில் பொழிவீர்கள் அவர்களும் தமிழன்தானே எல்லாவற்றையும் வாய்பிளந்து கேட்பான், ஏனென்றால் இன்றைக்கு தமிழ் சினிமா இத்தனை பிரபலம் ஆனதற்கு புலம் பெயர்ந்த அவர்கள்தானே காரணம்.

ஆனால் அப்போது நீங்கள் அமரபோவது தமிழர்களின் கல்லறைகளின்மேல் என்பதை மறந்துவிடுவீர்கள், நேற்று கேப்டன் சர்வமத பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், சாவு வீட்டில் ஒட்டு வாங்க நினைக்காதீர்கள் கேப்டன்... இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டியதுதான்...

ஈழமக்களை சிங்களனிடமிருந்து காப்பாற்றுகிறாயோ இல்லையோ...
கடவுளே..... தயவுசெய்து தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.....

6 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

"உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ...."


இணைத்துவிட்டேன்....

தமிழ் நாடன் சொன்னது…

என்ன செய்வது செந்தில்,

தமிழனின் பிணத்தின் மீது அரசியல் செய்யும் பிணந்திண்ணி கழுகுகள் இவர்கள். இவர்களிடம் மாட்டி அல்லலுறுவது நம் தமிழினம்தான்.

கண்ணா.. சொன்னது…

இது குறித்த எனது பதிவு....

http://venkatesh-kanna.blogspot.com/2009/04/blog-post_11.html

என்ன காரணத்தினாலோ தமிலிஷ்ல் இதை நீக்கி விட்டார்கள்..

ஏனென்று புரியவில்லை.....

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி தமிழ்நாடன்...

தன் தலைவனை சினிமாவில் தேடுகிறான் தமிழன்,
எத்தனை பேருக்கு சுதந்திர போராட்ட வரலாறு தெரிந்திருக்கும்.....?
நம்மால் வேதனைப்பட மட்டுமே முடியும்

கே.ஆர்.பி.செந்தில்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கண்ணா அவர்களுக்கு,
தங்கள் பதிவை பார்த்தேன், மிக கொடூரமான படங்களை உள்ளடக்கியது,
அதனை பார்த்தபோது நான் மனநிலை பாதித்தேன்...
அதனை தமிளிஸ் நீக்கியிருக்ககூடாது....

கே.ஆர்.பி.செந்தில்