14 ஏப்., 2009

"ஐ.நாவின் இரட்டைவேடம்"

சமிபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு மேற்க்கத்திய நாடுகளுடன் ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவை பொறுத்தவரை அது தன் சொந்த பாதுகாப்பு கருதியே சோதனை செய்வதாக சொல்கிறது. இதுவரை அது தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதே தவிர அதன்மேல் போர் தொடுக்கவில்லை, ஆனால் அமெரிக்கவோ அத்தனை நாடுகளுக்கும் தான் பெரியண்ணனாக நடக்க முயற்சிக்கிறது, அமெரிக்காவுக்கு ஈரானின் எண்ணெய் வயல்களின்மேல் ஒரு கண், அதன்மேல் போர் தொடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கிறது, அத்தனை ஆயுதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது.

இதில் ஐ.நாவோ வடகொரியாவின்மேல் பொருளாதார தடை செய்வதாக எச்சரிக்கிறது. என்ன ஒரு அக்கறை பாருங்கள்.. ஒரு நாடு வெறும் ஆயுத சோதனை செய்தாலே அதன்மீது பொருளாதார தடை விதிப்பதாக சொல்லும் ஐ.நா, முப்பத்துமூன்று வருடங்களாக இன அழிப்பு செய்து கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக ஏன் குரல் கொடுக்க முடியவில்லை?..

அதுவும் கடந்த ஒரு வருடமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவிக்கிறது, மூன்று இலச்சம் மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய உணவு வசதி, மருந்து வசதிகள் அளிக்க தடை செய்து பட்டினியால் சாகிறார்கள். செஞ்சிலுவை சங்கத்தினரை கூட அனுமதிக்காமல், ஊடகங்களையும் அனுமதிக்காமல் வெளிஉலகத்துக்கு தெரியாமல் மொத்த இனத்தையும் நாளுக்கு குறைந்து முன்னூறு பேர் வீதம் கொன்று குவிக்கிறது.

உலகம் பூராவும் இருக்கிற தமிழ் மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை தொடர்ந்து நடத்திகொண்டிருக்கிரன்றனர், ஆனால் இவை எதுவும் ஐ.நாவின் காதில் விழவில்லை.சிங்கள அரசான்கதிரர்கு வெறும் அறிக்கைகளை மட்டும் அனுப்பி கொண்டிருக்கிறது, அந்த காகித அறிக்கைகள் அனேகமாக "ங்கோத்தா பய ராசபக்சே" வின் டாய்லெட் பேப்பராக மாறியிருக்கும்.

இதில் நவநீதம்பிள்ளை இந்தியாவிற்கு இலங்கை பிரச்சினை பற்றி சிவசங்கர மேனனுடன் பேசுகிறார். பேசிவிட்டு இருதரப்பும் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என இன்னொரு டாய்லெட் பேப்பர் அனுப்புகிறார். ஐ.நாவே நீங்கள் யாருக்காக இருக்கிறீர்கள், உங்களுக்கே நீங்கள் செய்வது அபத்தமாக தெரியவில்லையா?..

வடகொரியாவின் மேல் இத்தனை நிர்பந்தங்களை அறிவிக்கும் நீங்கள் ஏன் சிங்கள அரசாங்கத்தை நிர்பந்திக்கவில்லை? ... இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இணைந்து சிங்கள அரசாங்கத்துடன் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. அதனை வெளிபடையாக அறிந்தும் மனிதாபிமான அடிப்படையிலாவது சம்பத்தப்பட்ட நாடுகளை கண்டிக்ககூடாதா?.

ஒரு இனத்தை முற்றிலும் அழித்துவிட சிங்கள அரசாங்கம் அதன் அடுத்த அஸ்திரமாக கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்த துவங்கியிருக்கிறது. குண்டு விழுகின்ற இடத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்று சொல்கிறார்கள், அதனை ஆதாரத்துடன் புலிகள் வெளியிட்ட பிறகும் ஐ.நா சிங்கள அரசின்மேல் பொருளாதார தடை விதிப்பதாக சொல்லவில்லை.

மேலும் ஐ.நாவின் எந்த கோரிக்கையையும் சிங்கள அரசாங்கம் இதுவரை ஏற்கவில்லை, ஆனாலும் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் சிங்கள அரசிற்கு தொடர்ந்து ஆயுத, மற்றும் பண உதவிகளை அளிக்கிறது, இந்தியா ஒருபடி மேலேபோய் ஆள் உதவியும் அளிக்கிறது, தன் இன விடுதலைக்காக போராடும் அமைப்பை எல்லா நாடுகளும் தடை செய்துவிட்டதால், அந்த போராட்டம் தீவிரவாத செயலாக பார்க்கப்படுகிறது, எல்லா போராட்டங்களையும் தீவிரவாத போராட்டமாக பார்க்கமுடியாது.

இப்போது ஈழதமிழர்கள் உலகத்தின் கரங்கள் தங்கள் கண்ணீரை துடைககாதா? ஏன் ஏங்குகிறார்கள்.அவர்கள் மொத்தமாக மடிவதற்குள் என்னசெய்யப்போகிறோம்? .......

1 கருத்து:

ers சொன்னது…

ஒரு முறை வாருங்கள். உங்களுக்கு பிடித்த புக்மார்க் தளம்
நெல்லைத்தமிழ்