23 ஜன., 2010

பயணம்

நம்பிக்கைகளை
வர்ணமாய் மாற்றுகிற வித்தை
கைவரபெறாதவனுக்கு
எப்போதும் நிரம்பாது மனது...



உஸ்மான் ரோட்டின்
இந்தக்கோடியில் இருந்து அந்தக்கோடிவரை
தினமும் புரளும் கோடிகள்,
பிச்சைகாரன் முதல்
பெருவணிகன் வரை
பிழைக்கும் வாய்ப்புகள் நூறாயிரம்..,

ஐந்து வருடங்களாய்
அதன் அருகில் வாழும் எனக்கு
மிச்சம் இருப்பது
பெருந்தொகை கடன்..

தினம்
செத்து.. செத்து...
பிழைக்கும் வாழ்க்கை
செத்துவிடலாம்தான்..,

இன்னமும் என்னை நம்புகிற
சிலருக்கு
தவறான முன்மாதிரி
ஆகிவிடகூடாதென்பதே தடுக்கிறது.

சுத்தி
தீ வளர்க்கும் ஆசான்கள்
புத்தியின் மையத்தை
மொத்தமாய் ஆக்ரமிக்க
இன்னொரு வேள்விக்கு
காத்திருக்கிறேன் கடல் கடந்து..

வெற்றாகிப்போவேனோ..
முற்றாகி வாழ்வேனோ...
சொல்லிவிடு எம் குருவே..,

1 கருத்து:

கமலேஷ் சொன்னது…

///நம்பிக்கைகளை
வர்ணமாய் மாற்றுகிற வித்தை
கைவரபெறாதவனுக்கு
எப்போதும் நிரம்பாது மனது ///


இந்த வரி ரொம்ப நல்லா இருக்கு...

கவிதை நிறைய வெறுமை பேசுகிறது...

ஒரு கற்பனையான வரிகள் என்று உதறி போக முடியாமல் உணர்ந்து எழுதியதாகவே வலிக்கிறது...