உன் துயரப்பாடலில் வழியும்
கண்ணீரைக் கொண்டு
அணைக்க முயல்கிறேன்...
நீ ஒருமுறை வெறுக்கிறேன் என்றாய்
அது ஒவ்வொரு முறையும்
இதயத்தை அறுக்கிறது...
நினைவுக்கு மீள வராத
நள்ளிரவுக் கனவைப்போல்
மீளவே இல்லை நம் காதல்...
நகரத்தில் புதிதாக நுழைபவனின்
பையில் இருந்து தவறிய
முகவரித் தாள்..
காற்றால் விலாசம் மாறிய
வீடுகளுக்கு சென்று சேர்வதுபோல்
நீ படிக்காத இக்கவிதையும்...
எங்கோ..
உப்புக் குறைவான சாம்பாருக்கு
வசவு வாங்கும் நீ
அறியமாட்டாய் என் காதலையும் ..
இக்கவிதையையும்....
35 கருத்துகள்:
உப்புக் குறைவான சாம்பாருக்கு
வசவு வாங்கும் நீ
அறியமாட்டாய் என் காதலையும் ..
இக்கவிதையையும்....///
நிறைவேறாத காதலே சாகாவரம் பெறும்.
முள்ளங்கி சாம்பாரா வெண்டைக்கா சாம்பாரா?
காதல் அழிஞ்சாலும் காதல் மட்டும் அழியறதே இல்ல
//எங்கோ..
உப்புக் குறைவான சாம்பாருக்கு
வசவு வாங்கும் நீ
அறியமாட்டாய் என் காதலையும் ..
இக்கவிதையையும்....//
கவிதை வரிகள் எவ்வளவு எளிமையா எழுதிட்டீங்க அண்ணே! அருமை...
-----------------------------------
நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.
என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com
நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
வேதனையின் வரிகள் அருமை அண்ணா!
அருமையான வரிகளைக் கொண்ட கவிதை..
கவிதை வரிகள் அருமை...
Superb!
Superb!
எங்கோ..
உப்புக் குறைவான சாம்பாருக்கு
வசவு வாங்கும் நீ
அறியமாட்டாய் என் காதலையும் ..
இக்கவிதையையும்....
...... simply superb!
அப்போ சாம்பார் வைக்க தெரிந்த காதலி எல்லம் இப்படித்தான் ஓடி போவாங்களா பாஸ் ??
அருமை...
அருமையான வரிகளைக் கொண்ட கவிதை..
/ எங்கோ..
உப்புக் குறைவான சாம்பாருக்கு
வசவு வாங்கும் நீ
அறியமாட்டாய் என் காதலையும் ..
இக்கவிதையையும்.... /
அருமையான வரிகள் அண்ணா..
really nice
சாம்பார் வாசம் தூக்கல்...!
வரிகள் அருமை ..
வார்த்தைகளின் ஆழத்தைப் பார்த்தா சொந்த அனுபவமோன்னு ஒரு டௌட் வருது!
நல்லா கமகமன்னு இருக்கு :))
இதுக்குதாங்க கல்யானத்துக்கு பிறகு காதலிக்கனும்கிறது :)
வார்த்தைகள் மனசை அறுக்குது.... காலையில இருந்து திரும்பத் திரும்பப் படிச்சிட்டு இருக்கேன்...
ஆமா.. என்ன இது இன்னிக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரியான டாபிக்கைத் தொட்டிருக்கோம்?!
யதார்த்தம்......சூப்பர்.....வாழ்த்துக்கள்.
வேதனையின் மிச்சங்கள்
அருமை
//என் மனக்காடுகளில் எரியும் தீ... மீளவராத நள்ளிரவுக் கனவு...நகரத்தில் புதிதாக நுழைபவனின் பையில் இருந்து தவறிய முகவரித்தாள்...உப்புக் குறைவான சாம்பாருக்கு வசவு...//
இதுதான் கவிதை; காதலும் இதுதான்.
ஆ, என்னா எளிமை! வாழ்க!
சாம்பார் வாசனை சூப்பர் தல
//நினைவுக்கு மீள வராத
நள்ளிரவுக் கனவைப்போல்
மீளவே இல்லை நம் காதல்.//
இதுக்கு தான் தூங்கவே கூடாதுங்கிறது!
கனவும் வராது, காதலும் தொலையாது!
கவிதை நல்லா இருக்கு அண்ணே..
//எங்கோ..
உப்புக் குறைவான சாம்பாருக்கு
வசவு வாங்கும் நீ
அறியமாட்டாய் என் காதலையும் ..
இக்கவிதையையும்....//
ரொம்ப நல்லாயிருக்கு காதல் வரிகள்.
கலக்கல் கவிதை செந்தில்.
சாம்பார் நல்லாருக்கு..
அருமையான உவமைகள்!
என்னா சிந்தனை............
என்னா சிந்தனை............
சார் நல்லா இருக்கு சார்
//நகரத்தில் புதிதாக நுழைபவனின்
பையில் இருந்து தவறிய
முகவரித் தாள்..
காற்றால் விலாசம் மாறிய
வீடுகளுக்கு சென்று சேர்வதுபோல்
நீ படிக்காத இக்கவிதையும்...//
கவிதை அருமை. இந்த வரிகள் இன்னும் அருமை.
கருத்துரையிடுக