30 செப்., 2010

தேசிய அடையாள அட்டை திட்டம் - இன்னொரு சொதப்பலா...?


தேசிய அடையாள அட்டை பத்தி பேசுறதுக்கு முன்னாடி அதுக்கு முன்னோடி திட்டமான வாக்காளர் அடையாள அட்டை பத்திய என் அனுபவத்த பாப்போம்..

வாக்காளர் அடையாள அட்டை பற்றி எல்லோருக்கும் தெரியும். விஷயம் என்னன்னா எல்லா விஷயத்துக்கும் ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுற தேர்தல் கமிசன், இந்த அடையாள அட்டை விசயத்தில் செய்யும் சொதப்பல் இந்தியாவே அறியும்,.

1990 என்று நினைக்கிறேன் அப்போதுதான் முதல்முதலில் புகைப்படம் எடுத்தார்கள், ஆனால் அப்போது எனக்கு மட்டும் அட்டை வரவில்லை, போய் தாலுக்கா ஆபிசுல கேளுன்னு பத்திவிட்டாங்க, அங்க போய் எவன கேக்குறது, போங்கடா எனக்கு வேற வேலை இல்லையா என பேசாம இருந்திட்டேன் ( அப்பல்லாம் எனக்கு இவ்வளவுதான் விழிப்புணர்வுதான் இருந்துச்சு). அப்புறம் வந்த எலக்சன்ல ஒட்டர் லிஸ்டுல பேரு இருந்தா போதும்னு குத்த அனுமதிச்சாங்க, நானும் சந்தோசம் தாமரைக்கு ஒரு குத்து குத்தினேன்,.

அப்புறம் சிங்கப்பூர் போய்ட்டதால மத்த எலக்சன்ல குத்த முடியல, ஒரு வழியா 2004 ஆம் ஆண்டு ஊருக்கு வந்த பின்னாடி சென்னையில செட்டிலாயிட்டேன், என்னோட மனைவியோ ஒரு ரேசன் கார்டு வாங்கிடுங்க, இங்க சினிமா தியேட்டர தவிர எங்க போனாலும் அத கேக்குறாங்க என்றாள், நானும் உடனே எனக்கு இருந்த செல்வாக்கை வச்சு ரேசன் கார்டு வாங்கிட்டேன். அந்த அப்ளிகேசன்ல கேஸ் இருக்கா? ன்னு கேட்ட இடத்துல, இருக்கு, அடிசனல் கூட இருக்குன்னு எழுதி தொலைச்சுட்டேன், ரேசன் கார்டு வந்த பின்னாடி, நம்மகிட்டே ஒரு சிலிண்டர்தாங்க இருக்கு, இன்னொன்னு அம்மாவோடது இனிமே அடிசனல் அப்ளை பன்ன முடியாதே என்றாள். அப்புறம் தம்பி குமார் இன்னொன்னு கொடுத்தார்,.

இந்த நேரத்துல வாக்காளர் அடையாள அட்டைக்கு போட்டோ எடுத்தாங்க, நாங்களும் கால் கடுக்க நின்னு போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு வந்தோம், மறுநாள் போனா எங்களுது மட்டும் இல்லை. என்னையா இப்படி பண்றீங்கன்னு சத்தம் போட்டேன், சார் இன்னொரு வாட்டி எடுத்துருவோம்ன்னு சொல்லி மறுபடியும் எடுத்தாங்க, ஆனால் மறுநாள் அந்த எடத்துக்கு போய் வாங்க போனாக்க         அங்கன யாருமே  இல்லை, எங்கதான் போய் இருப்பாங்கன்னு விசாரிச்சா நீங்க போய் கலெக்டர் ஆபிசுல வாங்கிக்கோன்னு அனுப்பிட்டாங்க, அங்க போய் யாரு வாங்குறது அதனால போங்கடா வெண்ணைகளா நான் ஓட்டே போடலேன்னு விட்டுட்டேன், அதக்கப்புறம் வந்த எலக்சன்ல பான் கார்ட கொடுத்து சூரியனுக்கு ஒரு ஓட்ட குத்தினேன்.

அப்புறம்  தி.நகர்ல குடிவந்த பிறகு ஒரு சென்ரல் எலெக்சன் வந்தது. அப்ப அடையாள அட்டை கொடுக்க வீடு வீடா வருவோனாங்க, ஆனா  யாரும் வரல, சரி நாமாவது பக்கத்துல இருக்கிற அலுவலகத்துக்கு போவோம்னு போனா, அங்க பெரும்பாலும் ஆளே இருக்கிறது இல்ல, அந்த  தடவ காங்கிரஸ் கூட்டணிய புறக்கணித்ததால், ஒட்டு போட வேண்டான்னு முடிவு பண்ணிட்டேன்,.

கிட்டத்தட்ட இருவது வருடமா அடையாள அட்டை குடுக்குது தேர்தல் கமிசன், அந்த போட்டவ பாத்திங்கன்னா, செத்தவன எடுத்தமாதிரி எடுத்திருப்பாங்க, உங்க அட்டையில நீங்க குடுத்த விபரம் எல்லாம் சரியா இருக்காது, இந்த ஒரு விசயத்த கூட ஒழுங்கா செய்யாத தேர்தல் கமிசன், இத்தன கண்டிசன் போடுறதா பாத்தா சிரிப்பாணியா வருது, போன  எலக்சன்ல ஈழ பிரச்சினை பத்தி நோட்டிசு அடிக்க கூடாதுன்னு கண்டிசன் போட்டிருக்கு, கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு, அதனை கட்டுப்படுத்த கமிசனுக்கு யாரு அதிகாரம் கொடுத்தான்னு தெரியல, 

எனக்கு தெரிஞ்சு நெறைய பேரு ஒட்டர் ஐடியே வச்சுகுறது கிடையாது, அய்யா தேர்தல் கமிசன் கணவான்களே முதல்ல இத சரிபண்ணுங்க அப்புறம் தேர்தல் நடத்தலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மல்டி பர்பஸ் கார்டுன்னு ஒன்னு கொண்டு வந்தார், சமிபத்திய இடைகால பட்ஜெட்டுலகூட அதுக்கு அறுநூறு கோடி ஒதுக்கினாங்க, அத கொடுத்தா போதும் அப்புறம் 90 சதவீதம் அக்கபோரே பண்ண முடியாது. ஆனா நேத்தைக்கு நம்ம மம்மோகன்ஜி சொல்றாரு நூறு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கேன்னு. இது 2010 பிப்ரவரிலேயே தொடங்கப்பட்ட திட்டம், ஆனால் இப்பதான் முறைப்படி அறிவிச்சிருக்காங்க..


நந்தன் நிகிலேணி - திட்டக்குழு தலைவர்
சமீபத்தில் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் என் குடியிருப்பை மறந்துட்டாங்க, கீழ் வீட்டில் குடியிருப்பவர் அது எப்புடி நம்மல கணக்கெடுக்காம போவலான்னு என்கிட்டே சண்டை போட்டாரு, நீ தி.மு.க ஆளுதானே அங்க போயி கேளுய்யான்னே, போயிட்டு கொஞ்சம் அப்ளிகேசன் கொண்டு வந்து கொடுத்தாரு. ஆன அத கொண்டுபோய் கொடுத்தப்புறம் இன்னும் அக்னாலெட்ஜ்மென்ட் வரல, அத வச்சுதான் இந்த தேசிய அடையாள அட்டையே கொடுப்பாங்களாம், இப்ப நான் இந்தியா சிட்டிசனான்னு தெரியல, நான் மட்டும் இல்ல. ரொம்ப பேரு அப்பிடித்தான் இருக்கோம். ஒரு காமன்வெல்த் போட்டிய கூட ஒழுங்கா நடத்த தெரியாத வெண்ணைங்க இந்த நூறு கோடில நூறு கோடி மக்களுக்கு எப்புடி ஐடி கார்டு தந்து அத ஒருங்கிணைக்க போறானுங்கன்னு தெரியல.

யாரவது அறிவாளிக வந்து விளக்கமா சொல்லுங்கப்பு..... 

தொடர்புடைய சுட்டிகள் ....



33 கருத்துகள்:

செல்வா சொன்னது…

//முன்னோடி திட்டமான வாக்காளர் அடையாள அட்டை பத்திய என் அனுபவத்த பாப்போம்..
//

ஐயோ இந்த கொடுமை சொல்லி மாளாது .!!
எங்க ஊர்ல இருக்குற ரேசன் கார்டு அட்ரஸ் தப்பு தாப்பா இருக்குது ..
அந்த அட்ரஸ் வச்சு ஒண்ணும் பண்ண முடியறதில்லை..

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

கஷ்டம் தான்.

கவி அழகன் சொன்னது…

(:::

செல்வா சொன்னது…

//போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு வந்தோம், மறுநாள் போனா எங்களுது மட்டும் இல்லை. //

இதே மாதிரி என் ஊர்லயும் ஒரு நண்பர் வீட்டுல அண்ணன் தம்பி
இரண்டு பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணம் செஞ்சாங்க .. ஆனா தம்பி பேருல இரண்டு வந்தது ., annanukku onnume varalai..!!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//வர வர.. நம்ம நாட்டோட அடையாளமே 'சொதப்புறது தான்'//

ஜோதிஜி சொன்னது…

இந்த நேரத்தில் தேவையான பதிவு செந்தில். சென்ற வருடத்தில் வேர்ட் ப்ரஸ் ல் இவர் இந்த பணியை ஏற்றுக் கொண்ட போது ஒரு விஜபி யின் அந்தரங்க ரகஸ்யங்கள் என்று தலைப்பில் எழுதினேன். காரணம் இந்த திட்டம் நிறைவேறினால் பெரும்பாலான அந்தரங்க விசயங்கள் கணினியில் வந்துவிடும்.

சூடான இடுகையில் போய் சிக்கிய அதற்கு ஒரே ஒரு நபர் விமர்சனம் கொடுத்து இருந்தார்.

ஏன்யா நல்லா ஏதோ ஒரு மேட்டரைப்பற்றி எழுதுவேன்னு நினைச்சா இது நமக்குத் தேவையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஹிஹி இன்னுமா அவங்களா நம்புறீங்க.உங்க பையனுக்கு வோட்டர் id வாங்குற வரைக்கும் தர மாட்டானுக

ப.கந்தசாமி சொன்னது…

என்னுடைய அனுபவத்தைச் சொல்லணும்னா, ஒரு தனிப்பதிவே வேண்டும் செந்தில். அதனால அது வேண்டாம். எப்படியும் இந்த திட்டம் உங்க பேரன் காலத்துல அமுலுக்கு வந்துடும்.

ராஜ நடராஜன் சொன்னது…

இந்த இடுகைக்கு இதுவரைக்கும் பின்னூட்டங்கள் எதிர்மாறாகவே இருக்கிறதே!

Is it a ground reality of the whole society or just an individual definition?

Beski சொன்னது…

எனது வாக்காளர் “அடையாள” அட்டையை ஒரு அடையாளத்துக்குக் கூட பயன்படுத்த முடியவில்லை. போட்டோ கர்ன கொடூரம்.
பேரு தப்பு.
முகவரி தப்பு.
முக்கியமா அது எதுக்குமே தேவப்படுறது இல்ல, லைசன்ஸ் போதும்ல.

ஆனா பாருங்க, இந்த லைசன்ஸ்ல பேரு, ஊரு எல்லாம் சரியா இருக்கு. ஆனா போட்டோல இருக்குறது யாருன்னே கண்டு பிடிக்க முடியாது. இதத்தான் எல்லாத்துக்கும் “போட்டோ” ஐடியா குடுத்துட்டு இருக்கேன். இது வரைக்கும் ஒருத்தர் கூட போட்டோ சரியா தெரியலன்னு ரிஜெக்ட் பண்ணது கிடையாது.
அதே மாதிரி சில தடவை போலீஸ் செக்கப்பில் கூட காட்டியிருக்கிறே, “இதுல போட்டோ சரியா தெரியலயே”ன்னு ஒருத்தர் கூட கேட்டது கிடையாது. அத யார் வச்சுக்கிட்டு காமிச்சாலும் செல்லும். அந்த நெலமைலதான் நாம இருக்கோம்.

இவனுக குடுத்ததுல பான் கார்டு மட்டும் ஓக்கே. ஏன்னா அது நாம எடுத்து அனுப்புன போட்டோ, அது கூட சின்னதாதான் இருக்கும்.

vinthaimanithan சொன்னது…

தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை யாரு செயல்படுத்துறதுன்னு இந்திய உள்துறை, வெளியுறவு அமைச்சகம், தேர்தல் கமிஷன் அவங்களுக்குள்ள பெரிய போட்டியே நடந்த சுவாரஸ்யம் யாருக்காவது தெரியுமா?!

சசிகுமார் சொன்னது…

இந்திய தேர்தல் ஆணையம் இருப்பதால் எந்த பயனும் இல்லை.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

என்ன கொடும சார் இது.

மார்கண்டேயன் சொன்னது…

செந்தில், நம் நாட்டில் லட்சக் கணக்கில் சாதிவாரி, மொழிவாரி சங்கங்கள் இருக்கின்றன . . .

அவர்களெல்லாம் குறைந்தது அவர்களின் சங்க உறுப்பினர்களின் தகவல்களை சீராக்கி அடையாள அட்டை செய்து அரசுக்கு உதவலாமே . . .

(அய்யா சாமி, மார்கண்டேயன் சாதி சங்கம் தான் அடையாள அட்டைக்கு தீர்வு என்கிறார்னு பதிவ போட்டுதாதீன்கப்பு, அதுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்ல . . . ஏதோ கெடைக்கிற கொஞ்ச நேரத்துல என் எண்ணத்த சொல்லுதேன்)

எதற்க்கெடுத்தாலும் அரசை குறை சொல்வதை விட, நம்மாலான சிறு வழி வகைகளை ஏற்படுத்தலாமே . . .

சரி நம்ம கட பக்கமெல்லாம் வந்த மாதிரி தெரியலியே . . . அப்பப்ப வாங்கப்பு . . .

தமிழ் உதயன் சொன்னது…

சரி அந்த கருமத்தை விடுங்க.. இலவச டிவி வாங்கியச்சா இல்லையா?
(என்னதான் புலம்பினாலும் நாங்க எங்க விஷயத்துல கண்ணும் கருத்தா இருப்பம் இல்ல)
http://tamiludhayan.blogspot.com/

Kousalya Raj சொன்னது…

இப்படி பலரையும் புலம்ப வைத்ததை தவிர இந்த ஒரு விசயத்தில் (வாக்காளர் அடையாள அட்டை ) வேற என்ன உருப்படியாக நடக்கிறது என்று தெரியவில்லை...!!

நல்ல பகிர்வு .

மார்கண்டேயன் சொன்னது…

அன்பின் செந்தில், அரசு இதற்கென்று ஒரு ஆணையம் ஏற்படுத்தி உள்ளது, கீழ் கண்ட வலைத்தளத்தில் தகவல் அறியலாம்,

http://uidai.gov.in/

மேலும், தன்னார்வ தொண்டு புரிவதற்கான வாய்ப்புகளையும் பின் வரும் வலைத்தொடர்பு மூலம் அறியலாம்,

http://uidai.gov.in/index.php?option=com_content&view=article&id=154&Itemid=15

இவ்வசதிகளை பயன் படுத்திக் கொண்டு, நம்மாலான உதவிகளைச் செய்தால் 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடைய வாய்ப்புள்ளது . . .

அல்லது, வழக்கம் போல குறை சொல்லிக்கொண்டு திரியலாம்.

உங்கள் பதிவில், இந்த வலைத் தள (http://uidai.gov.in/)முகவரியும் இணைக்கவும்.

என்னது நானு யாரா? சொன்னது…

நாடு பெரிசு! ஜனங்க எண்ணிக்கையோ பல கோடிப் பேரு. அமெரிக்காவைப் போல 4 மடங்கு ஜனத்தொகை.

அதனால பல குளறுபடிகள். தேசிய அடையாள அட்டை அந்த விதமான குளறுபடிகள் ஏதும் இருக்காது என்றே நம்புகின்றேன்.

மார்கண்டேயன் சொன்னதுப் போன்று தன்னார்வ தொண்டு புரிவதற்கான வாய்ப்புகளையும் ஆராயலாம்.

எப்போதுமே அரசையே குறைச் சொல்லிக் கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

வடுவூர் குமார் சொன்னது…

அரசாங்கத்தை குறை சொல்லக்கூடாது என்பது சிலரது வாதமாக இருக்கு....ஒரு வேலையை செய்ய இவ்வளவு ஆள் தேவைப்படும், அவ்வளவு ஆட்கள் உள்ளார்களா அதை எப்படி செயல்படுத்துவது என்பதெல்லாம் ஆராய்ந்து பார்த்து பிறகு திட்டமெல்லாம் வகுத்திருப்பார்கள் தானே?? பிறகும் சொதப்புகிறது என்றால்??
என்னுடைய பெயரும் வோட்டர் லிஸ்டில் இருக்கு ஆனால் அடையாள அட்டை எப்போது எங்கே வினியோகிப்பார்கள் என்று தெரியவில்லை.

Sriakila சொன்னது…

ரேஷன் கார்டு இனிமேதான் நாங்களும் அப்ளை செய்யப்போறோம். இந்தப் பதிவப் பாத்தவுடனே அதை வாங்குறதுக்குள்ள படாதபாடு படணும் போல இருக்கேன்னு தோணுது.

மண்டை காயும் போல...பார்ப்போம்!

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...நாட்டு நடப்பு !

சௌந்தர் சொன்னது…

பான் கார்ட கொடுத்து சூரியனுக்கு ஒரு ஓட்ட குத்தினேன்.///

அண்ணா இந்த கார்ட் மட்டும் கொடுத்துட்டானுங்க இதுல மட்டும் உஷரா இருப்பாங்க

மார்கண்டேயன் சொன்னது…

செந்தில் மற்றும் அனைவருக்கும், இது விஷயமாக ஒரு பதிவிட்டிருக்கின்றேன், விவரம் கீழே:

http://markandaysureshkumar.blogspot.com/2010/09/blog-post_30.html

முடிந்தால் இதன் சுட்டியை உங்கள் பதிவில் இணைக்கவும்

தமிழ் உதயம் சொன்னது…

எந்த திட்டமாவது இங்க உருப்படியா செயலாற்றப்பட்டு இருக்கா.

அன்பரசன் சொன்னது…

வாக்காளர் அடையாள அட்டையே இன்னும் நிறைய பேருக்கு ஒழுங்கா கிடைக்கல.....
இதுல தேசியஅடையாளஅட்டை ஒண்ணுதான் கொரச்சல்?

vasu balaji சொன்னது…

ரொம்ப அவசியமா பண்ணவேண்டிய விஷயம். அல்லாட விடாம பண்ண நிறைய வழி இருக்கு. எதயும் சொதப்புறதுல நாம எக்ஸ்பர்ட் ஆச்சே:)).

மோகன்ஜி சொன்னது…

நீங்க அனுபவிச்ச அத்தனை குளறுபடிகளையும் பெரும்பாலானோர் சந்தித்தபடிதான் இருக்கிறோம். ஆனாலும் தேசிய அடையாளத் திட்டம் மிகவுமே இன்றியமையாதது."என்னது நானு யாரோ"வின் கருத்து ரொம்ப சரி. இங்கு ஹைதராபாத்தில் இந்த திட்டம் ஏதோ நல்லமுறையில் தொடங்கி நடந்து வருவதைப் பார்க்கிறேன்.. நம்புவோம்.. நல்லவைகள் நடக்கட்டும் செந்தில்! சுவாரஸ்யமான பதிவு!

smart சொன்னது…

தட்டையான சிந்தனை. நூறு கோடி மக்கள் கொண்ட பெரிய நாட்டில் திட்டம் தீட்டுவது பெரியவிஷயம் அதை கீழ் நிலை ஊழியர்கள் சொதப்பலால் மொத்தமாக திட்டத்தை குறை சொல்லமுடியாது.

வினோ சொன்னது…

நம்மால் முடிந்த விசயங்கள் செய்தால், வேலை கொஞ்சம் எளிமையா முடியும்ன்னு நினைக்கிறேன்...

like be prepared with correct docs and helping others on the same.

ரோஸ்விக் சொன்னது…

அண்ணே இது நான் எழுதி கிழிச்சது... ;-)

http://thisaikaati.blogspot.com/2009/08/blog-post_6367.html

பெயரில்லா சொன்னது…

எதற்காகவும் மக்களைக் காத்திருக்க விடாமல் எப்போதுதான் இந்த அரசு செயல்படுமோ தெரியவில்லை.

kavinsandron சொன்னது…

வாக்காளர் அடையாள அட்டையில் என்னை பக்கத்து விட்ல சேத்துடாங்கப்பு

Meerapriyan சொன்னது…

palarukkum ithuthaan anubavamaaka irukkum.vennai-enum sollai thavirthal arumaiyana pathivu-meerapriyan.blogspot.com