17 அக்., 2010

பதின்மக் காதல்...

புரிந்தும் புரியாமலும் நமக்கிருந்த 
நேசத்தின் பரிசாக  
என் வீட்டின் மாடி வளைவில்
நீ 
எனக்களித்த முதல் முத்தமும் ..

சிகிரெட்டு புடிச்சா கொன்னுருவேன்னு மிரட்டிட்டு 
சில்லறைகளை தந்து 
சிரித்தபடி நகர்ந்த தருணங்களும் ..

ஆற்றில் குளிக்க வரும் நீ 
உன் வீட்டு துணிகளோடு சேர்த்து 
ரகசியமாய் என் துணிகளையும் 
ரசித்து துவைத்த அழகுமென..
 
நாம் பகிர்ந்து கொள்ள எத்தனையோ 
மிச்சமிருக்க 
நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில் 
பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ 
விசும்புகிற போது அறிந்தேன்
ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை..


28 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்றாக இருந்தது நண்பரே..... இந்த படத்தை நீங்களே வரைந்தீர்களா

எல் கே சொன்னது…

செந்தில் அருமை. அனுபவக் கவிதையோ ??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

mm

dheva சொன்னது…

ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல்லோருக்குமே ஒரே மாதிரிதானா.....!!!!!)

பெயரில்லா சொன்னது…

அண்ணா... ம்.ம்..அழகு!

க ரா சொன்னது…

dheva சொன்னது…

ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல்லோருக்குமே ஒரே மாதிரிதானா.....!!!!!)
--
கரக்டுதான்.. ஆனா முத்தம்லாம் எல்லாருக்கும் கிடைச்சிருக்காது :)

ஜானகிராமன் சொன்னது…

ஏக்கம் தரும் கவிதை.

சிவராம்குமார் சொன்னது…

\\ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல்லோருக்குமே ஒரே மாதிரிதானா.....!!!!!)
--
கரக்டுதான்.. ஆனா முத்தம்லாம் எல்லாருக்கும் கிடைச்சிருக்காது :)//

விட்ட பேரு மூச்சில சூடு தாங்கலை!!! ;-)

vasu balaji சொன்னது…

absolute beauty

லெமூரியன்... சொன்னது…

அட்டகாசமா இருக்கு செந்தில்..!
கலக்றீங்க போங்க....!

vinthaimanithan சொன்னது…

காதலைக் கைகழுவிவிட்டுப் போவதில் பெரும்பான்மை ஆண்களா, பெண்களான்னு ஒரு சர்வே எடுக்கணும்ணா!

கருடன் சொன்னது…

//நீ
எனக்களித்த முதல் முத்தமும் ..//

நமக்கு இல்லை!! நமக்கு இல்லை!! :))

மோகன்ஜி சொன்னது…

காதலுக்கு மரணமில்லை நண்பரே!அது சிரஞ்சீவியாய் நினைவுகளின் ஆழத்தில், இதயத்தின் ஓரத்தில்,கண்ணீரின் வெம்மையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

erodethangadurai சொன்னது…

அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

//நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில்
பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ
விசும்புகிற போது அறிந்தேன்
//

தலைவரே,

இந்த வரிகள் ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது..!

வினோ சொன்னது…

/ பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ
விசும்புகிற போது அறிந்தேன்
ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை.. /

இது ரொம்ப பிடிச்சிருக்கு...

rajasundararajan சொன்னது…

கவிதை நல்லாத்தான் இருக்கு.

//நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில்
பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ
விசும்புகிற போது அறிந்தேன்
ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை..//

இதுல என்னவோ குறை தெரியுது. அது ego-ஆ அல்லது வேறேயா என்று விளக்க எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி, 'நிலவு' மனம் என்றும் 'பூமி' நிதர்சனம் என்றும் வாசிக்கும் குறியீட்டுமொழி வழக்கம் உடையவன்தான் நானும்.

நிலாமதி சொன்னது…

விசும்புகின்ற பொது அறிந்தேன்.இன்று வரை மறக்காமல் பகிர வைக்கிறது உண்மைக் காதல்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

Feelings....feelings...feeling!

சசிகுமார் சொன்னது…

எப்பவுமே உங்க பதிவு டாப் தான், மிகுந்த உழைப்பிற்கு கிடைக்கும் வெற்றி இது வாழ்த்துக்கள்.

க.பாலாசி சொன்னது…

சேம் ப்ளட்...

ரொம்ப நல்லாயிருக்குங்க...

ஜெயந்தி சொன்னது…

நம்ம நாட்டோட சாபக்கேடு.

Chitra சொன்னது…

பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ
விசும்புகிற போது அறிந்தேன்
ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை..


.....எவ்வளவு நல்லா உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதி இருக்கீங்க.... simply superb!

அருண் பிரசாத் சொன்னது…

தொடக்கமும் சரி முடிவும் சரி அருமை

செல்வா சொன்னது…

//சிகிரெட்டு புடிச்சா கொன்னுருவேன்னு மிரட்டிட்டு
சில்லறைகளை தந்து
சிரித்தபடி நகர்ந்த தருணங்களும் ..
//

வாய்ப்பே இல்லைனா ., உண்மையா படிச்சு முடிக்கும் போது எனக்கு ஒரு சிலிர்ப்பு வருது. கடைசி வரிகள் கலக்கல் ..!! அருமை அண்ணா ..

Ravichandran Somu சொன்னது…

Excellent....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமை..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங் மாம்ஸ் இந்த கவிதையில!