16 மார்., 2011

காங்கிரசை ஒழித்துக் காட்டுவோம்...


சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க கூட்டணியில் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் பின்னோக்கி நகர்த்திச் சென்று சாதனை புரிந்த ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். அதிலும் 'தலப்பா' சமீபத்துல ஒரு காமெடி அறிக்கை வுட்டாரு. அதாகப்பட்டது பத்திரிகை காரனுங்க சொல்ற அளவுக்கு நான் தப்பு பண்ணலை அப்படின்னு. இப்புடி ஒரு பிரதமர் நமக்குத்தேவையா?. அடுத்து ராகுல் கத்துக்குட்டி, இதுக்கு நாப்பது வயசாம், இது பிரதமர் 'ஆயி' தான் நாட்டை திருத்தப் போவுதாம். அந்தக்குடும்பமே இந்தியாவை காப்பத்துன லட்சனம் நமக்கு நல்லாவே தெரியும். இந்த ராகுல் பைய்யன் சமூக சேவையோ, மிக்சரோ செய்யணுன்னா அது பிரதமரா இருந்தாத்தான் செய்ய முடியுமா என்ன?

தமிழ் நாட்டு மீனவன் சுடப்பட்டபோது டெல்லில இருக்கிற காங்கிரஸ்காரந்தான் கேட்கலை. இங்க இருக்கிற காங்கிரஸ்காரன் எவனாவது பேசுனானா? கொஞ்சமே  கொஞ்சம் கூட சூடு, சொரணை, மானம் இதெல்லாம் இல்லாமே இருந்தானுங்க. யாராவது சிங்களவனுக்கு எதிரா பேசுனானா? எல்லாப்பயலும் முன்னாடியும் பின்னாடியும் மூடிட்டு இருந்தானுங்க. இவனுங்க எதைவச்சு தமிழ் நாட்டுல ஓட்டு கேப்பானுங்க. மக்களே இந்த தடவை கூட நாம இவனுங்கள ஒழிச்சு கட்டலேன்னா அப்புறம் அடுத்த வாய்ப்புக்கு அஞ்சு வருஷம் புடிக்கும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் சுவிசில் இருக்காம். அதை பத்தி யாருமே பேசக்கூடாதுன்னு பிரணாப் சொல்றார். அப்ப நீ எவ்வளவுய்யா போட்டுருக்கே. ராசாவே புடிச்சு செயில்ல போடுற வேகத்துல நூத்துல ஒரு பங்காவது கல்மாடி மேல காட்டுனாங்களா? யூனியன் கார்பைடு விவகாரத்துல இவங்க நடந்துகிட்டதுதான் நாளைக்கு கல்பாக்கத்துல நடந்தாலும் இந்த அரசு பண்ணும். நாம ஒன்னும் ஜப்பான்ல இல்ல. இது இந்தியா! எனவே நாமதான் நம்மளை ஆளுற யோக்கிய ராசாக்களை முடிவு பண்ணனும். தயவு செஞ்சு தப்பித்தவறி கூட வெறுப்புல "கை" சின்னதுல குத்திராதீங்க மக்களே.

ஓட்டு மொத்த இந்தியாவிலும் நிறைய மாநிலங்களில் தன் செல்வாக்கினை தொலைத்த காங்கிரஸ், தமிழகத்தில் மீண்டும் வேரூன்றப்பார்க்கிறது. இப்ப எங்க ஊர எடுத்துகிட்டா கிட்டத்தட்ட எட்டாயிரம் ஓட்டு இருக்குதுங்க. அதுல நூறு ஓட்டு கூட காங்கிரஸ்காரனுது இல்லீங்க. எங்க ஊரே இப்புடின்னா! மத்த ஊருல அவனுங்க லட்ச்சனம் எப்புடி இருக்குன்னு ஒங்களுக்கே தெரியும். எங்க வீடே பரம்பரை காங்கிரஸ் காரர்கள்தான். நானும் சின்ன வயசில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசியவன்தான். அதெல்லாம் இந்திராகாந்தி இருந்த வரைக்கும்தான். 

நாம உப்பு போட்டு சாப்பிடுற ஆளுங்களா இருந்தா கண்டிப்பா "கை" சின்னத்துக்கு ஓட்டுபோட மாட்டோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் அத்தனை தொகுதிகளிலும் மண்ணைக்கவ்வி டெபாசிட் தொகையை பறிகொடுக்க வேண்டும். உண்மையான உணர்வுள்ள. தன்மானம் மிகுந்த தி.மு.க தொண்டர்களே இது உங்களுக்கான வேண்டுகோளும்தான். தாத்தா எடுத்த முடிவில் உங்கள் யாருக்குமே உடன்பாடு இல்லை என்பது என்னைப் போன்று அடிமட்டத் தொண்டர்களுடன் பழகும் ஆட்களுக்குத் தெரியும். ஆகவே கூட்டணியில் இருந்தாலும் தன்மான உணர்வு கொண்ட நீங்கள் கண்டிப்பாக "கை" சின்னத்தை புறக்கணித்து காங்கிரஸ்காரன் கோவணத்தை உருவுவீர்கள் என நம்புகிறேன்.

42 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை...........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போண்டா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பஜ்ஜி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெட்டு...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருவா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கோடாலி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

டீ.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காப்பி.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மூச்சி முட்டுது இருங்க போயி படிச்சிட்டு வாரேன்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//

தமிழ் நாட்டு மீனவன் சுடப்பட்டபோது டெல்லில இருக்கிற காங்கிரஸ்காரந்தான் கேட்கலை. இங்க இருக்கிற காங்கிரஸ்காரன் எவனாவது பேசுனானா? கொஞ்சமே கொஞ்சம் கூட சூடு, சொரணை, மானம் இதெல்லாம் இல்லாமே இருந்தானுங்க. யாராவது சிங்களவனுக்கு எதிரா பேசுனானா? எல்லாப்பயலும் முன்னாடியும் பின்னாடியும் மூடிட்டு இருந்தானுங்க. இவனுங்க எதைவச்சு தமிழ் நாட்டுல ஓட்டு கேப்பானுங்க. மக்களே இந்த தடவை கூட நாம இவனுங்கள ஒழிச்சு கட்டலேன்னா அப்புறம் அடுத்த வாய்ப்புக்கு அஞ்சு வருஷம் புடிக்கும்.//

சாட்டையடி கேள்விகள்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஆகவே கூட்டணியில் இருந்தாலும் தன்மான உணர்வு கொண்ட நீங்கள் கண்டிப்பாக "கை" சின்னத்தை புறக்கணித்து காங்கிரஸ்காரன் கோவணத்தை உருவுவீர்கள் என நம்புகிறேன்.//

இது கண்டிப்பா நடக்கத்தான் போகுது....

சக்தி கல்வி மையம் சொன்னது…

அனோ சார் இத கொஞ்சம் அதிகமா தெரியில... எல்லாம் நீங்களே வாங்கிட்டா நாங்க என்ன செய்ய?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கையை ஒருகை பார்ப்பதற்கு நீங்க எடுத்துள்ள முயற்சிக்கு பலர் கை கொடுத்து உதவுவார்கள் என்று தான் தோன்றுகிறது.

பாட்டு ரசிகன் சொன்னது…

என்னங்க நடக்குது இங்க..
வந்து பதிவை படிங்கப்பான்னா வடை வித்துக்கிட்டு இருக்காங்க..

பாட்டு ரசிகன் சொன்னது…

//////
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////

என்ன இது..


http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வேடந்தாங்கல் - கருன் சொன்னது…
அனோ சார் இத கொஞ்சம் அதிகமா தெரியில... எல்லாம் நீங்களே வாங்கிட்டா நாங்க என்ன செய்ய?//

யோவ் வாத்தி அது யாரய்யா "அனோ சார்" ஹா ஹா ஹா ஹா....பிச்சி புடுவேன் பிச்சி...:]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பாட்டு ரசிகன் கூறியது...
என்னங்க நடக்குது இங்க..
வந்து பதிவை படிங்கப்பான்னா வடை வித்துக்கிட்டு இருக்காங்க..//

இப்பிடி ஒரு சந்தர்ப்பம் பின்னே எப்பவும் கிடைக்காது மக்கா அதான் வச்சி கும்மிட்டேன் ஹே ஹே ஹே ஹே....

தறுதலை சொன்னது…

வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நச்சுன்னு சொல்லியிருக்கறீங்க...

Unknown சொன்னது…

இப்ப கல்லும் இருக்கு, நாயும் இருக்கு..

Unknown சொன்னது…

ஸ்பெக்ட்ரம்:ஆ.ராசா நண்பர் சாதிக் தற்கொலை! http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=11298

Unknown சொன்னது…

//வை.கோ காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். ///

Madhavan Srinivasagopalan சொன்னது…

அப்ப டி.எம்.கே வுக்கு ஒட்டு போடலாமுங்களா ?
(டவுட்டு)

Unknown சொன்னது…

63 "கை"ப்புள்ளைகளை எதிர்த்து வை.கோ., சீமான் தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்

settaikkaran சொன்னது…

படுசூடான இடுகை! முழுக்க முழுக்க உடன்படுகிறேன் நண்பரே!

Nagasubramanian சொன்னது…

அட போங்கப்பா எனக்கு வாக்காளர் அட்டையே தர மாட்டுக்குரானுங்க பக்கிப் பய புள்ளைங்க.

பொ.முருகன் சொன்னது…

மீனவனுக்காக,நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்பிங்க.அதுவும் ஓசிங்றதால,மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது.அவன் சுட்டுட்டான் என்பதற்காக நாமும் சுட முடியாது.ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.அப்படி ஒரு நேச நாடு நமக்கு தேவை இல்லை என்று நீங்கள் கருதலாம்.சிறிலங்கா எதிரி நாடகிப்போனால் நம்மால்,நிம்மதியாக உறங்க முடியாது.பாகிஸ்தான் அருகில் இருக்கும் காஷ்மீர் வாசிகளின் வாழ்கை முறை போல நமது வாழ்கை முறையும் பீரங்கிக்கு நடுவில் அமைந்துவிடும்.நமது எதிர்கால சந்ததிக்கு நாம் அமைதியான வாழ்கை யய் விட்டு செல்வோம்.முதலில் உயர்பதவி வகிக்கும் நபர்களை ஒருமைஇல் குறிப்பிடுவதை தவிரூங்கள்.

சசிகுமார் சொன்னது…

//நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்பிங்க.அதுவும் ஓசிங்றதால,//

விடுங்க சார் நீங்க இந்த விஷயத்திற்காக ஜெயிலுக்கெல்லாம் போய், உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் இவருக்கு எங்க தெரிய போகுது.

சசிகுமார் சொன்னது…

//மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது.அவன் சுட்டுட்டான் என்பதற்காக நாமும் சுட முடியாது//

அப்ப கடைசி வரை நீ சுட்டு கொண்டே இரு நான் காட்டி கொண்டே இருக்கேன் என்று கூற வேண்டுமா.

சசிகுமார் சொன்னது…

//ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.//

அப்பாடா பெரிய கண்டு பிடிப்பு. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன் பக்கத்துக்கு வீட்டில் உள்ளவன் தினமும் உன்னை ரோட்டில் இழுத்து போட்டு உதைத்தால் நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பாயா.

தமிழ் உதயம் சொன்னது…

தி.மு.காவை விட்டுடச் சொல்றிங்களா. இந்த விஷயத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இரண்டும் இரட்டைகுழல் துப்பாக்கியை போல் செயல்படலயா.

பெயரில்லா சொன்னது…

எங்கே செல்லும் இந்த பாதை ?

ராஜ நடராஜன் சொன்னது…

தலைப்பு ஜெயிடுச்சுன்னா உண்மைத்தமிழனுக்கு மொட்டை போடறதா வேண்டுதல் அண்ணே!

உங்களுக்கு விருப்பமானதையும் பூர்த்தி செய்துடலாம்ண்ணே:)

ரோஸ்விக் சொன்னது…

கருப்புக்கண்ணாடிக்காரரே ப்ளான் பண்ணித்தான் தொகுதி ஒதுக்கியிருக்கார். நாங்களும் சிவகங்கை, காரைக்குடியில் தோற்கடிக்க முழுமுயற்சி செய்கிறோம். :-)
செட்டியார் போனமுறையே வழக்கத்துக்கு மாறாக பணத்தை அள்ளி இறைத்தார். இந்தமுறை என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
காரைக்குடி தொகுதி வேட்பாளர் வல்லம்பர் இனத்தை சார்ந்தவர். அங்கு அவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையிலையே வென்று வருகிறார். இந்த முறை என்ன ஆகுது என்று பார்ப்போம்.

jothi சொன்னது…

க‌ண்டிப்பாக‌ காங்கிர‌ஸ் ஒரு சீட்டு கூட‌ ஜெயிக்க‌க்கூடாது,. எல்லாத்திலியும் டெப்பாசிட் போக‌ணும்

Prathap Kumar S. சொன்னது…

சசிகுமார் பின்னுட்டங்கள் அருமை..அதை அப்படியேவழிமொழிகிறேன்...:))

raja சொன்னது…

முருகன் அவர்களுக்கு நீங்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறீர்களா...அல்லது வேறு ஒரு பிரதேசத்திலா...? மரியாதை கொடுக்கும் பொருட்டு உங்கள் உயர் பதவிகள் பெரிதாக என்ன பிடுங்கியது.. கூத்தியார்களின் எண்ணிக்கையையும் ஊழல் சொத்துகளின் அளவையும் தாண்டி....? நீங்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவேண்டாம்... குறைந்தபட்சம் ஒரு நீச்சல் போட்டுவிட்டு வாருங்கள் அப்புறம் மீனவன் பிரச்சினையை பேசுவோம்.. நீங்கள் உங்கள் நட்பு பக்கத்து நாட்டுக்கு சென்று நீங்கள் உறவாடி பெண்கொடுத்து பெண் எடுங்கள்... எங்களை விட்டுவிடுங்கள்.... எங்கள் பிள்ளைக்கறி தின்றவர்கள் இன்னும் பல்குத்தி முடிக்கவில்லை...நாங்கள் உறவு கொள்ள ஒரு நாளும் முடியாது.தனி ஈழம் அடையாத வரை.. நீ என்ன செய்தாய் என்று கேட்காதீர்கள் நான் நன்கொடை ரசீது, எப்.ஐ.ஆர் பதிவுகளை கையில் வைத்துக்கொண்டு உங்களிடம் இனமானம் பேசமுடியாது. அது வணிகம். காங்கிரஸ் வேட்பாள நாய்களே தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு ஒட்டு பிச்சை கேட்க வாருங்கள். உங்களை எந்த மட்டமான பொருளில் அடித்துவிரட்டலாம் என்று தமிழ் இளைஞர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.. காங்கிரஸை தமிழ்நாட்டில் இருந்து அழித்தே தீருவோம்... கட்டுரை கனல் தெறிக்கிறது எழுத்தாளரே....மிக்க நன்றி.

Jegan சொன்னது…

தயவு செஞ்சு தப்பித்தவறி கூட வெறுப்புல "கை" சின்னதுல குத்திராதீங்க மக்களே.

:))))

பெயரில்லா சொன்னது…

கைக்கு ஓட்டுப் போட்டவன் எல்லாம் பீச்சாங்கையால சாப்பிடவனா நெனச்சுக்குவோம் .. சரிதானா ...

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

தேசம் என்றோர் எல்லைக்கோடு. உலகம் என்றோர் எல்லையில்லா நாடு. மௌனம் சாதிக்கும் மனிதர்களின் நிசப்தம்..உணர்வுத்தீயினை தூண்டும் உச்சகட்ட சப்தம்.

THE IRON MAN! சொன்னது…

//B.MURUGAN சொன்னது…
மீனவனுக்காக,நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்பிங்க.அதுவும் ஓசிங்றதால,மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது.அவன் சுட்டுட்டான் என்பதற்காக நாமும் சுட முடியாது.ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.அப்படி ஒரு நேச நாடு நமக்கு தேவை இல்லை என்று நீங்கள் கருதலாம்.சிறிலங்கா எதிரி நாடகிப்போனால் நம்மால்,நிம்மதியாக உறங்க முடியாது.பாகிஸ்தான் அருகில் இருக்கும் காஷ்மீர் வாசிகளின் வாழ்கை முறை போல நமது வாழ்கை முறையும் பீரங்கிக்கு நடுவில் அமைந்துவிடும்.நமது எதிர்கால சந்ததிக்கு நாம் அமைதியான வாழ்கை யய் விட்டு செல்வோம்.முதலில் உயர்பதவி வகிக்கும் நபர்களை ஒருமைஇல் குறிப்பிடுவதை தவிரூங்கள்.//

அய்யா உசிதமணி, கே.ஆர்.பி. மீனவர் பிரச்சனைக்கு என்ன பண்ணலைன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாம பேசாதீங்க. நேசநாடு....டூமாகோலி கமன்ட். இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க. உங்க வீட்ல ஈழத்தமிழனுக்கு நேர்ந்த நிலை அல்லது பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம் நடந்திருந்தா அப்ப தெரியும் அந்த வலி. அங்கிள் சிப்ஸ் சாப்டுட்டு கிரிக்கெட் பாருங்க. எவன் செத்தா உங்களுக்கென்ன. உயர்பதவி..ஒருமை..ரைட்டு. முதல்ல அதுல ஒரே ஒரு உத்தமர் பேரை சொல்லுங்க. அப்புறம் ஒருமைல அழைக்கிதா இல்ல எருமைன்னு அழைக்கிறதான்னு பாப்போம். காமராஜ், தோழர் ஜீவா, கக்கன்..அவங்கள மாதிரி ஆளுங்களுக்கு என்றும் மரியாதை உண்டு. உயர்பதவியை விட உயர்பண்புதான் முக்கியமானது. ஏதோ கமன்ட் போடனுமேன்னு போடாதீங்க.

Unknown சொன்னது…

விடுங்க தலைவரே நேரம் குறிசாச்சி உருவரதுக்கு ஹி ஹி!