நள்ளிரவில் பின்தொடரும்
பேய்க் கதைகளாய்
நான் தொலைத்த நீயும்
கவிகளில் வழிகிற காதலும்..
சிறு தூறல்
மண்வாசமென
மனப் பிம்பங்களின் நேசமிகுதி
உன்னைப் போலவே பார்க்கும்
உருவங்களில் தெரிகிறது
தேவதைகளாகவும், பிசாசுகளாகவும்..
மது ராத்திரிகளின் விடியும் நேரங்களில்
மறக்காமல் வந்து விடுகிறாய்
துரோக மிச்சமாய்..
அறியப்படாத நபர்களின் மரணம்போல்
உன் திருமண நாள் எனக்கு
கரி நாள்..
உன் கணவனுக்கும் இருக்கலாம்
என்னைப்போல் ஒரு கதை
பிசாசுகளின் கதை ..
நினைவின் ஓட்டைகள் வழியே
வழியும் மதுவை குடிக்கும்
சிறகை இரவல் கொடுத்த பறவை
போதையின் உச்சத்தில் எழுதிகொண்டிருக்கும்
பிசாசுகளின் கவிதை ..
18 கருத்துகள்:
வந்துட்டேன்....ஹையா இன்னைக்கு எனக்குத்தான் வடை,போண்டா பஜ்ஜி எல்லாம்
>>அறியப்படாத நபர்களின் மரணம்போல்
உன் திருமண நாள் எனக்கு
கரி நாள்..
உங்கள் மனது மெல்லியது என்பதை வெளிப்படுத்தும் நுட்பமான வரிகள் அண்ணே
நீ எனக்கு முதல் பெண்ணும் அல்ல கவிதையின் தொடர்ச்சி மாதிரி இருக்கு ............]
எல்லாருமே டேமேஜ் ஆனவங்க தான் .................................
//உன் திருமண நாள் எனக்கு
கரி நாள்..//
ஆஹா, சோகத்தின் உச்சம்.
//உன் கணவனுக்கும் இருக்கலாம்
என்னைப்போல் ஒரு கதை
பிசாசுகளின் கதை ..//
மனசை கனக்க வச்சிட்டீங்களே மக்கா...
great,....
ஒரே நாள்ல ஃபார்ம் ஆயிட்டீங்க போல தெரியுதே:)
எங்களுக்கெல்லாம் மழைவிட்டும் தூவானம் விடவில்லை மனநிலைதான் இன்னும்.
நாம் எதை எதற்காக சொல்கிறோம் என்ற புரிதல் இல்லா கழக கண்மணிகளுக்கு காங்கிரசின் நேரம் பார்த்து அம்பு எறியும் புதிய கணை...
http://www.ndtv.com/article/india/confessions-of-a-rajas-former-secretary-98010
தொலைத்த பின்பும் எழும் ஏக்கங்கள் வாழ்கையில் தவிர்க்கமுடியாதவை.
ப்ளஸ்ஸாயும்,மைனஸாயும் ஆகிபோகற நினைவுகளே சமயங்களில் நண்பனாயும்,எதிரியாயும்...../
கடைசிப் பந்தி அருமையா வந்திருக்கு !
கலக்கிட்டீங்கண்ணே!
நள்ளிரவில் பின்தொடரும்
பேய்க் கதைகளாய்
நான் தொலைத்த நீயும்
கவிகளில் வழிகிற காதலும்.//
வணக்கம், சகோ,
நள்ளிரவில் பின் தொடரும் பேய்க் கதைகளுக்கு, கவிதையில் உள்ள காதலையும், அவளில் தொலைந்து போன உங்களையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள்.
அறியப்படாத நபர்களின் மரணம்போல்
உன் திருமண நாள் எனக்கு
கரி நாள்..//
இவ் இடத்தில்....
அறியப்படாத நபர்களின் மரணம் போல
உன் திருமண நாள் எனக்கு... என்பதுடன் குறீயிட்டுப் பதத்தினை வாசகர் தெரிவிற்கு விட்டிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
அறியப்படாத நபர்களின் மரணம்போல்
உன் திருமண நாள் எனக்கு
கரி நாள்..//
இவ் இடத்தில்....
அறியப்படாத நபர்களின் மரணம் போல
உன் திருமண நாள் எனக்கு... என்பதுடன் குறீயிட்டுப் பதத்தினை வாசகர் தெரிவிற்கு விட்டிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
நானே நானா... ஒரு மனிதனின் இதயத்து உணர்வுகளைப் பிசாசுகளின் கதை எனும் குறியீட்டின் மூலம் பெண்ணுக்கு அல்லது அவனை வஞ்சித்த உள்ளத்திற்கு உணர்த்துவதாய் அமைந்திருக்கிறது.
தம்பி வரி வரியாய் நினைவின் இனிப்பையும் கசப்பையும் கூடவே யதார்த்தத்தையும் எழுதிச்செல்கிறீர்கள்.
’ அறியப்படாத ‘ சரணம், ஆஹா சரணம் சரணம் தம்பி.
தேவதைகளின் தேவதை இன்று டிராகுலாவா??
கவிதை நல்லா இருக்குங்க...
சோகத்தைச் சுமக்கும் வரிகள்.
கலக்கல்+ நறுக்குனு குட்டு வைத்தது போல இருக்கு.
கருத்துரையிடுக