சமீப காலமாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பேசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் இப்படி தலைவிரித்து ஆடும் அளவுக்கு காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் என்பது தெளிவு. இதற்க்கு முன்பாக எல்லாத் துறைகளிலும் கமிசன் மட்டுமே பார்த்து வந்த அமைச்சர் பெருமக்கள் இப்போதுதான் கோடிகளை ஆயிரக்கணக்கில் குவிக்க ஆரம்பித்து அது புகைய ஆரம்பித்து பெருநெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு முறையற்ற அரசு இப்படி தொடர்ந்துகொண்டு இருப்பது இம்முறை வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் என்கிற கட்சியை ஒட்டு மொத்தமாக காலி செய்யப்போகிறது என்பது திண்ணம் என்றாலும், மாற்றாக நினைக்கக்கூடிய பி.ஜே.பி காரர்கள் எந்த அளவுக்கு சரியாக இருக்கப்போகிறார்கள் என்பதும் சந்தேகமே!.
வட இந்தியாவில் ஒரிசா, அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற பகுதிகளில் இன்னும் சுதந்திரத்துக்கு முந்தைய சூழல்தான் நிலவுகிறது. இந்திய ரானுவத்தாரின் அடக்கு முறையால் அங்கு ஒரு எமெர்ஜென்சி சூழலைத்தான் மக்கள் அனுபவித்துவருகிறார்கள் அதற்க்கான தீர்வை இதுவரைக்கும் யாருமே முன்வைக்கவில்லை. அங்கு சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் மக்களுக்கான போராட்டத்தை இதுவரை அவர்கள் மண்ணைத்தாண்டிய எந்த சுதந்தர போராட்ட தியாகியும், சாமியாரும் முன்னெடுக்கவில்லை. ஏன் பேசுவதுகூட இல்லை.
மக்களின் அடிப்படை உணவுக்கான விவசாய உற்பத்தி இப்போது நவீன ரக விவசாயம் என்கிற போர்வையில் அமெரிக்க கைக்கூலி தனியார் பண முதலைகள் வசம் மாறிக்கொண்டிருக்கின்றன மெல்ல நம் விவசாயத்தின் பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு மலட்டு விதைகள் பரப்படுகின்றன. என்டோசல்பான் பற்றிய மத்திய அரசாங்கத்தின் மவுனம் நாம் யார் ஆளுகையில் வாழ்கிறோம் என்கிற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகின்றன.
கல்வி இங்கு பணம் வாங்கிக்கொண்டாவது முறையாக தரப்படுகிறதா? என்றால் இல்லை என்பது நம் அனைவருக்குமே நன்றாகத் தெரிந்த விசயம். நூற்றுக்கு தொண்ணூற்றி ஐந்து கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த மற்றும் எஞ்சினியரிங் முடித்த மாணவர்கள் அதுபற்றிய போதிய அறிவில்லாமல் வெளியே வந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலைக்குப் போகிறார்கள். அல்லது அதன்பிறகு தனியார் பயிற்சி நிறுவனங்களில் படித்து அதற்கும் ஆயிரக்கணக்கில் அழுதுதான் வேலைக்குப் போகிறார்கள். சமச்சீர் கல்வி பட்ட பாட்டை நாம் அறியவில்லையா என்ன? .
நல்ல சாலைவசதி இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த நமக்கு அருமையான சாலைவசதிகள் கிடைக்கபெற்றன ஆனால் அதற்காக வசூலிக்கப்படும் சுங்க வரிகள் அநியாயக் கட்டணம் வைத்து இருக்கிறார்கள். இப்பணம் எந்த நிறுவனத்துக்கு போகிறது. எந்த அடிப்படையில் அவர்களுக்கு வசூலிக்கும் உரிமத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து இன்னும் மின்சாரப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. இதனை நிவர்த்தி செய்ய எந்த அரசும் முழுமையான திட்டங்களை வகுக்கவில்லை.
மாநில அரசாங்கங்கள் ஒரு பாதையிலும், மத்திய அரசாங்கம் ஒரு பாதையிலும் சென்றுகொண்டிருக்கிறது. எப்போதும் ஒரு நாடு தழுவிய விசயங்களை இணைந்து யாருமே செய்வது இல்லை. ஒருவேளை முந்தைய தமிழக அரசைப்போல் இணைந்திருந்தாலும் எப்படி கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் குறியாக இருந்தார்களே ஒழிய மக்களுக்கான அரசாக ஒருபோதும் இருப்பதில்லை. தெலுங்கானா மற்றும் கேரளா, கர்நாடாக அரசுகள் உடனான நமது நதிநீர்ப் பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும் என்பதே யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ்காரனுக்கு சோனியாவும், ராகுலும் நன்றாக வாழ்ந்தால் போதும். அவங்களுக்கு மாநிலப் பிரச்சினைகள் மேல் எந்த அக்கறையும் கிடையாது. ஆனாலும் தொடர்ந்து தனித்து ஆட்சியைப் பிடிப்போம் என்று சவால்விடும் அப்பாடக்கர்கள் அவர்கள்.
நம் நாட்டின் மீனவர்களை தொடர்ந்து ஒரு சிறிய நாட்டின் ராணுவம் விரட்டி அடிக்கிறது. அதற்க்கான ஒரு தீர்வை இன்னும் நாம் எட்டவே இல்லை. ஆனால் அன்னா அசாரே முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஏராளமான படித்த மேல்தட்டு வர்க்கம் முழக்கம் செய்கிறது. இன்னும் சில நாட்களில் அல்லது வாரங்களில் இது அடங்கிப்போகும் ஆனால் எப்போதும் ஒருவேளை உணவுக்காக கையேந்துபவர்கள் நம் நாட்டில் தொடர்ந்து இருக்கவே செய்வார்கள்.
நமக்கும் இருக்கவே இருக்கிறது இந்தியத் தொலைக்காட்சிகள் அதன் இடைவிடாத கேளிக்கைகளில் மூழ்கிவிடுவோம். வாழ்க ஜன நாயகம்! வாழ்க மக்களின் விழிப்புணர்ச்சி!!
14 கருத்துகள்:
இப்போதுள்ள சூழ்நிலைக்கேற்ற பதிவு அண்ணே.................
Your statement is very true
Tamilmanam connect akamatduthu
இந்திய நாட்டோட அனைத்து பிரச்சினைக்கும் மூல காரணம் ஊழல்.
இந்த ஊழல அழிட்சிட்டா, முடியலைன, கொஞ்சம் குறைச்சா, நீங்க சொல்ற அத்தன பிரச்சினையும் சரியாயிடும்.
அதனால தயவு செய்து, ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் பண்ணாம ஓற்றுமையா ஊழல ஒழிக்க பாடுபடுவோம்.
இந்த சூழலில் மிகவும் அத்தியாவசியமான இடுகை! தற்போது சுதந்திரமான நீதிமன்றங்கள், தணிக்கை ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம் ஆகிய அமைப்புகளாலும், முப்பெரும் ஊழல்களை வெளிக்கொணரக் காரணமாயிருந்த தகவல் உரிமைச் சட்டம் போன்றவற்றாலும், ஊழல் செய்பவர்களுக்குக் கடும் எச்சரிக்கைக் குறியீடுகள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு வழிவகை செய்யும் உணவுப்பாதுகாப்புச்சட்டம், காவல்துறை சீர்திருத்தச் சட்டம், கட்டாயக் கல்விச் சட்டம் போன்றவற்றையும், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சினைகளையும் முனைப்போடு அணுக வேண்டிய காலகட்டம் இது.
ஆட்சியாளர்களுக்கு,
மக்களை பற்றி பயம், எண்ணம் இல்லாமல் போய் விட்டது. அதனால் என்ன எல்லோரும் வந்த வரை லாபம் என்று சுரட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆட்சி போனால் மக்கள் மறந்து அடுத்து ஐந்து ஆண்டுகளில் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை.
மக்களுக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டது.
சரியான பதிவு.
என்ன இதுவரைக்கும் மைனஸ் ஓட்டே வரல... எதிர் கருது இருந்தா தானே அண்ணன் பிலாக் பார்க்க நல்லா இருக்கும்.
நாடு எங்கெங்கெல்லாம் பிந்தங்கியுள்ளது என்பதை தெளிவா தொகுத்து இருக்கிறீர்கள்.ஆனாலும் இவையெல்லாம் பின் தங்க காரணம் ஊழல் தான். நன்றி.
www.panangoor.blogspot.com
வாழ்க ஜன நாயகம்! வாழ்க மக்களின் விழிப்புணர்ச்சி!!
ஊழல்,ராணுவத்துக்கான கணிசமான செலவு என்ற இரு பெரும் பொருளாதார காரணங்கள் ஏனைய அனைத்துக்கும் பிரச்சினைகள் என்பது எனது பார்வை.
இந்தியாவின் தலையாய பிரச்சனை ஊழல் மட்டுமே அல்ல. ஆனால், இந்தியா பின் தங்கி இருப்பதன் முக்கிய காரணம் ஊழல் தான். நீங்கள் குறிப்பிட்டுள்ளவையும் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியவைதான். ஆனால், அவற்றை முதலில் தீர்த்துவிட்டு அல்லது அதற்கு தீர்வு கண்ட பின் தான் ஊழலை எதிர்க்க வேண்டும் என்று ஊறமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
மற்றபடி, நல்ல அலசல். வாழ்த்துக்கள் சகோ.
//உணவுப்பாதுகாப்புச்சட்டம், காவல்துறை சீர்திருத்தச் சட்டம், கட்டாயக் கல்விச் சட்டம் போன்றவற்றையும், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சினைகளையும் முனைப்போடு அணுக வேண்டிய காலகட்டம் இது.//
மேலே சேட்டைக்காரர் கூறிய இவையும் மிக முக்கியமானவை. அதிலும் கட்டாய கல்வி சட்டம் என்பதில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலுமாக அரசுடமையாக்கப் படுவது உடனடித் தேவை என்றே நினைக்கிறேன். அதே நேரம் ஊழல் ஒழிப்பு என்பதும் முக்கியம் என்பதே என் கருத்து.
நன்றி.
சரியான சந்தர்ப்பத்தில் வெளியான ஆக்கம் .
சிறப்பு.வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .......
பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடாது பாதுகாக்க வேண்டியவர்கள்தாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்
நல்லையா தயாபரன்
கருத்துரையிடுக