யாவரும் அறியும் வண்ணம்
நான் யோக்கியனாகவே இருக்கிறேன்
நான் யோக்கியனாகவே இருக்கிறேன்
அப்படித்தான்
நீயும்
அவனும்
அவர்களும் இருக்கிறார்கள்..
ஒரு பேருந்து பயணத்தில்
அது முடிவதற்குள்ளாக
என்னுடன் பயணித்த முகம் அறியாத
ஒருத்தியை
நான் மனதினுள் புணர்ந்ததை
இன்றுவரை யாரிடமும் சொன்னதில்லை..
அவள் மட்டுமல்ல
இன்னும் நிறைய பேரையும்
சூழல்கள்தான் மாறியிருக்கும்..
என் நெருங்கிய நண்பனின்
வெற்றியை வெளிப்படையாக
கொண்டாடி
உள்ளுக்குள் புழுங்கியிருக்கிறேன்
வெற்றிகளும் நண்பர்களும்
மாறினாலும்
நான்
இன்னும் அப்படியேதான்
இருக்கிறேன்..
இப்படியாக
தெரிந்தவன் அறிந்தவன்
பக்கத்து வீட்டுக்காரன்
சக ஊழியன்
பிரபலங்கள் என
எந்தப் பாகுபாடும் இன்றி
எரிச்சலில் மிதந்திருக்கிறேன்..
எல்லோருக்கும் நல்லவனாக
நடிக்கிறோம்
நடிப்பின் உன்னதம் தெரிந்தும்
பாராட்டப்பட்டிருக்கிறேன்..
சக கலைஞர்கள்
இன்னொரு சகாவை
பாராட்டுவதைப்போல்..
7 கருத்துகள்:
100% pure
நல்லவனாக நடிக்கிறோம் நடிப்பின் உன்னதம் தெரிந்தும் பாராட்டப்பட்டிருக்கிறேன்..
சக கலைஞர்கள் இன்னொரு சகாவை பாராட்டுவதைப்போல்..
மிக மிக அருமை
எளிமையான சொற்களில்
யதார்த்தமான உண்மை
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
என்னண்ணே அதுக்குள்ள ஒடச்சிப்புட்டீங்க?
அது எப்படி கடைசி லைன்ல வெச்சீங்க ஒரு சூப்பர் பஞ்ச்.. நைஸ்
"சக கலைஞர்கள்
இன்னொரு சகாவை
பாராட்டுவதைப்போல்.."
அசத்திட்டீங்க...உண்மைதான்.
தண்ணிரீல் தளும்பும் போது
தெளிவின் முன்
தெரியும் அவனவன் பிம்பம்.
very true and candid .. nice
கருத்துரையிடுக