கடவுள் ஓய்வெடுக்க நினைத்த கணத்தில்
சாத்தான் தன் வேலையைத் துவங்கினான்
முதலில் மதங்களை படைக்க எண்ணினான்
ஒவ்வொரு மதமாக
ஒவ்வொரு விதமாக
மதங்கள்
தூதர்கள்
கடவுள்கள்
என
சாத்தான் தன் வேலையை திறம்பட
முடித்திருந்தபோது
கடவுள் கண் விழித்தார்
உலகம் நொடியில் மாறியிருக்க
சாத்தான் அழிக்க இயலாத அளவுக்கு
பல்கி பெருகியிருப்பதை உணர்ந்தார்
பூகம்பம்
சுனாமி
பெரும்போர்
எல்லாம் தொடர்ந்தது
மனிதனே கடவுளாக அவதாரம் எடுத்தான்
இனி தன்னால் எதுவும் முடியாதென
பெருங்குரலெடுத்து அழுத நேரத்தில்
கோடானுகோடி சந்ததிகளில்
ஒன்று
தன்னை நித்யானந்தா என அறிவித்தது..
4 கருத்துகள்:
ஆகா....!
ஹா ஹா ஹா...!
சரியான தமாஷ்தான்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
யோவ் எப்பவுமே கவிதைதானா?
ஒரு நல்ல கட்டுரைப் பதிவைப் படித்து எத்தனை நாளாச்சு தெரியுமா?
கருத்துரையிடுக