தெருவில் கொட்டுகிறார்கள் சிலர்
அதிலிருந்து
வாழ்வை துவங்குகிறார்கள் சிலர்..
’மாமூலான’ வாழ்வை
லத்திகளால் சுழற்றும்
காவலர்கள்..
’மாமூலான’ வாழ்வை
லத்திகளால் சுழற்றும்
காவலர்கள்..
தெருவோரக் கடையொன்றின்
பரபரப்பான வியாபாரத்தை
பாதிக்காமல்
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை..
மந்திரிமார்களும், அதிகாரிகளும்
அடிபொடிகளும்
சாலையைக் கடந்தபின்பு
கூவிக்கொண்டிருந்தான் ஒருவன்
"எதை எடுத்தாலும் பத்து ரூவா!" ..
சப்தங்களாலும்
தூசிகளாலும்
நிரம்பியிருக்கும் இந்த நகரத்தில்
மனிதர்களோடு
சில பறவைகளும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..
விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக
சொல்லிக்கொள்கிறோம்
சபிக்கப்பட்டிருந்தாலும்!..
8 கருத்துகள்:
நம் இயலாமை வேடிக்கை பார்க்கவும் வருந்தவும் கடந்து செல்லவும் மட்டுமே..
மிகச் சரி
தங்கள் கருத்தும் பதிவும்
தமிழரசி அவர்களின் அருமையான பின்னூட்டமும்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
tha.ma 3
//குப்பைகளை
தெருவில் கொட்டுகிறார்கள் சிலர்
அதிலிருந்து
வாழ்வை துவங்குகிறார்கள் சிலர்.//
Neel Metal Fanalca...
எங்கள் நாடுகளில் மட்டும்தானே இந்தநிலை.ஏன் ?
சரியா சொன்னீங்க நண்பரே
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
உண்மையை சொல்லி உள்ளீர்கள்
so sad!!
கருத்துரையிடுக