பிரேதேச இருப்பில்
துப்பாக்கிகள் பேசின
நடுங்கும் இதயம் கொண்ட
திராணியற்ற தலைவன்
யாவும் நானென்றான்
அப்படியே ஆகுக
வழிமொழிந்த பேய்கள்
எப்போதும் வழிமறிக்கும்
கன்னியர் விலக்கான நாளில்
சாபமிட்ட முனிவர்கள்
சிரம் கொய்தன..
ரத்தம் சிதறிய நாளிதழ்கள்
காதலை வகைப்படுத்தின
கொலைகளை விவரித்தன
செவ்வகப் பெட்டிக்குள்
வாழ்வை தொலைத்த பெண்கள்
உஷ்ண மூச்சுகளால்
மின்சாரம் சாடினர்..
போலிச் சாமியாடி
கருத்த திரேகத்தில்
அறியாத் தழும்புகளோடு
புதிர் அவிழ்க்கும்போது
நிலநடுக்க நேரம்
பத்தே வினாடிகள்
சகலமும் ஆடி
சமம் மீண்டன..
2 கருத்துகள்:
அறியாதழும்புகளுடன் புதிர் அவிழ்க்கிற போலிச்சாமியாடிகளையும்.துப்பாகிகளையும்,பேகளையும்,கொலைகளை வகைப்படுத்தும் நாளிதல்களையும் செவ்வகப்பெட்டிக்குள் வாழ்வைதொலைத்த பெண்களையும் நமது சமூகம் பாதுகாத்து வைத்திருக்கிறது பத்திரமாக/நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.
லேபிளில் சமூகம் என்றிருப்பதால் ஓரளவு புரிந்துகொண்டேன் !
கருத்துரையிடுக