நித்திரை தொலைத்து
நாட்கள் வாரங்களாகின
நீ தழுவிய நெடுந்தோள்
நெருப்பென தகிக்கிறது
சொற்களில் சொக்கட்டான்
ஆடுபவள் நீ
நாளை நாளை என்கிறாய்
ஒரு நாளைப்போல்
மறு நாள் இல்லை நீ
இக்கட்டான தருணத்தில்
உறவைக் கைவிட மறுத்து
தடுமாறுகிறாய்
தடம் மாறிவிடப்போகிறாய்
கவனமாயிரு
முடிவெடு
கிளம்பி வா!
உனக்கென ஊரே இருக்கலாம்
எனக்கென நீ மட்டுமே
ஒவ்வொரு இரவிலும்
மிகுதியாக பகலிலும்
நீ குடித்த என் உயிரை
மது குடித்துக்கொண்டிருக்கிறது
நிராகரிப்பின் உச்சத்தில்
நீ வராமலே
நடக்கலாம் என்
இறுதி யாத்திரை..
7 கருத்துகள்:
ஸ்ஸ்..யப்பா..ஏம்மா நீ எங்கதான் இருக்க? எங்களால முடியல....
எங்கிருந்தாலும் சீக்கிரம் ஓடி வாங்கம்மா ....
ஆத்தா, நல்லா இருப்ப தாயீ... நீ KRP யோட வந்து சேர்ந்திடு. இல்லாட்டி KRP கு இறுதி யாத்திரை நடக்குதோ இல்லையோ எங்களுக்கெல்லாம் நடந்திடும், அவரோட கவிதைய படிச்சு.
சகோ செந்தில்,
ஆனாலும் ஒரு விஷயம். கடந்த சிலப் பல மாதங்களா உங்களோட கவிதைகள படிச்சிகிட்டு வர்றேன். கமெண்ட் போடறவங்க எல்லாம், ஆகோ ஓகோனு புகழ்றாங்க. என்னால முடியல. ஏன்னா?? நிஜமாலுமே உங்க கவிதைகள் எனக்கு புரியல.
ஆனால் ஆச்சரியமாக இந்த கவிதை எனக்கு முழுதாக புரிந்தது. உங்களுக்கு நன்றி.
நல்ல கவிதை
அருமை ..!
மனதில் தடுமாறும் ஒரு பெண்கூட காதல் சரியாகுமா செந்தில்.சும்மா சாட்டுச் சொல்லாதீங்க தண்ணியடிக்கிறதுக்கு !
கருத்துரையிடுக