24 மார்., 2012

ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்...


ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல் 
எப்போதும் 
நடந்து கொள்கிறார்கள் 
அரசியல்வாதிகள்..

அடிவருடிகள் 
அடிமைகள் 
அல்லக்கைகள் 
தமிழுக்கு சோறுபோடும் பிச்சைக்காரர்கள் 
பிறந்தது முதலே தமிழ்ப்புடுங்கிகள் 
என மூளை மழுங்கிய கூட்டம் சூழ 
தலைவன் கடவுளாக 
தலைவனின் பெரிய வீடு 
சின்ன 'வூ'டு உபகடவுளாக 
பிள்ளைகள் 
பேரப்பிள்ளைகள் 
மற்றும் 
மாவட்டம் 
வட்டம் 
பகுதிக்கடவுளாக..
 
தலைவிக்கு வேறு வடிவம் 
காக்கும் காளிக்கு 
அன்னை மேரிக்கு 
தைரிய லட்சுமிக்கு 
சகலமும் ப்ளெக்ஸ் மயம்..
 
பெரியார் 
அண்ணா 
காமராஜர் 
பகுத்தறிவு 
வெங்காயம்..

ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல் 
எப்போதும் 
நடந்து கொள்கிறார்கள் 
அரசியல்வாதிகள் 
நேற்று அவர்களுடன் 
இன்று இவர்களுடன் 
நாளையும் தலைவர் விருப்பம்தான் 
கொள்ளைதான் 
கொள்கை என்றானபின் 
கூவிக் கூவி
தலைவனை புகழும்  
அடிமைகள்தான் பாவம் ..

8 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

அறிவாளியான தொண்டர்களால் வேறு எண்ணதான் செய்ய முடியும்

கிராமத்து காக்கை சொன்னது…

அறிவாளியான தொண்டர்களால் வேறு எண்ணதான் செய்ய முடியும்

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பி,

மக்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கும் போது தலைவர்கள் பைத்தியக்காரர்களாக இருப்பதில் வியப்பில்லை :-))

bandhu சொன்னது…

'தலைவர்கள்' கொள்ளை அடிப்பதற்காக இருக்கிறார்கள் என்றால் அவர்களின் பல அடிமைகள் கீழே விழுவதை பொறுக்கி தின்பதற்காக இருக்கிறார்கள். பாவம், சில அடிமைகள் தான். வாய் ஜாலப்பேச்சில் மயங்கி உண்மையாக அடிமையாகி கிடப்பவர்கள்..

ஹேமா சொன்னது…

இன்றைய அரசியல் நிலைமை இதேதான் !

பெயரில்லா சொன்னது…

நம் பாவத்திற்கு விமோச்சனம் கிடைக்கும் வண்ணம் 2042 ஆம் ஆண்டுக்குள் 'இளவரசர்' ஸ்டாலின் மன்னர் ஆவார் என மெய் மெய்யப்பன் கூறி உள்ளார். (ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்). டமாசு தொண்டர்கள் இருக்குற வரை நமக்கு நல்லாத்தான் போகுது......பொழுது!!

பெயரில்லா சொன்னது…

//தலைவனின் பெரிய வீடு
சின்ன 'வூ'டு உபகடவுளாக
பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள்
மற்றும்
மாவட்டம்
வட்டம்
பகுதிக்கடவுளாக..//

"எல்லாம் நம்ம ஆளுகதான்..லாரி பின்னால நிக்குது. எலேய்..நம்மூரு காரர் கடை வச்சிருக்காரு. அங்க என்ன வெட்டிப்பேச்சு. இட்லியை நல்லா பெனஞ்சி அடிங்கடா...நீயும் வந்து சாப்புடு அப்பே"

Unknown சொன்னது…

"அட போங்கப்பா" என்ற மனநிலையை உருவாக்கி விட்டு, நல்ல கொள்கைகளை நீர்த்துப்போக செய்வதில் தான் அரசியல்வாதிகளின் வெற்றியே இருக்கிறது.
நாமும் அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை என்று நினைப்பதும் கூட அவர்கள் மீண்டும் மீண்டும் குதிரையேற உதவியாக இருக்கிறது.