10 மார்., 2012

போர்க்குற்றம்.. இந்தியா... தமிழர்கள்...


இலங்கையில் நடந்த இன அழிப்பின்போது தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பை வகித்த கருணாநிதி அப்போது நடந்த அத்தனை போராட்டங்களையும் ஒடுக்கி காங்கிரஸ் தலைமைக்கு தன் விசுவாசத்தையும், புலிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன் நடுவிரலை உயர்த்திக் காட்டினார். போர் குற்றம் தொடர்பாக அப்போது ராஜபக்‌ஷேவிற்கு உதவிய அத்தனை நாடுகளையும், குறிப்பாக இந்தியாவையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும். முக்கால் மணி நேர உண்ணாவிரதத்தால் ஈழ மக்களை கருணாநிதி காப்பாற்றி விட்டதாக அப்போது உடண்பிறப்புகள் தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டியது இன்னொரு காலக்கொடுமை. அதே துரோகி இப்போது அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இந்த ஆள் அப்போதும் அப்படித்தான் வீடியோகளை பார்த்துவிட்டு சொன்னார். இப்போதும் அப்படித்தான் சொல்கிறார். இருந்தாலும் கூடங்குளம் விவகாரத்தில் இவர் வெளிப்படையாக தன் கருத்தை சொல்லியதுபொல் சும்மாவாச்சும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க சொல்வதற்காக நன்றி சொல்லி வைப்போம்.

இந்தியாவை பொருத்தவரை இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிக்கிறது. வடக்கே ஒடிஷா, மணிப்பூர் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இதேபோல் இந்தியாவின் நிலமையும் கேள்வி கேட்கப்படும் என்பதாலும் சோனியாவின் பழிவாங்கும் வெறி இன்னும் அடங்காததால் ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவு தரும் முடிவிலும் மாற்றம் இருக்காது. சோனியாவின் புதல்வன், புதல்வி, மருமகன், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட அனைவரும் தொண்டை கிழிய கத்தியும் எந்த பலனலிக்காத வட இந்திய தேர்தல் தோல்வியாலும். இனி அடுத்த மத்திய அரசை காங்கிரசால் கைப்பற்றமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்ததாலும் மலையாளிகள் தீர்மானிக்கும் காங்கிரஸ் அரசு தமிழனுக்கு கொள்ளிவைக்கத்தான் ஆசைப்படும்.

தமிழக காங்கிரஸ்காரன் எல்லாம் தன் அன்னை சோனியா பாதம் தொட்டு வணங்கிவிட்டுத்தான் பேட்டியே கொடுப்பார்கள் போல. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்கானலுக்கு வரும் அத்தனை காங்கிரஸ்காரனும் இலங்கையில் எல்லோரும் மிக மகிழ்சியாக வாழ்வதாக வாய்கூசாமல் சவடால் அடிக்கின்றனர். இன்னமும் உம்மன் சாண்டி புதிய அணை கட்டியே தீருவேன் என முல்லை பெரியாறு விசயத்தில் கூவிக்கொண்டிருக்கும்போதும் கூடங்குளம் திறக்க தனக்கு ஆகவே ஆகாத பி.ஜே.பி காரன் கூட இணைந்து போராட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறவர்கள். ஈழப் பிரச்சினையில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க சொல்லி ஒரு பயலும் வாயை திறக்கவில்லை. தன் இனம் பற்றியும் இந்திய தேசம் பற்றியும் எந்த அக்கறையும் இல்லாமல் இத்தாலியை பூர்விகமாக கொண்ட ஒரு பெண்மணியை தலைவியாக ஏற்றுக்கொண்டவர்களிடம் நாம் மனித நேயத்தை எதிர்பார்க்கக் கூடாதுதான்.

அடுத்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பு கூட இல்லாத பி.ஜெ.பி இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசை அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவைக்க தமிழக பி.ஜே.பி காரர்கள் இன்னும் மவுனம் காப்பது வெட்கக்கேடு. இல.கனேசன். எச். ராசாவெல்லாம் எங்கண்ணே இருக்கீங்க??

ஜெயலலிதாவை பொருத்தவரை இம்முறை பதவிக்கு வந்தது முதல் ஈழப் பிரச்சினையில் தமிழர்களின் நலன் சார்ந்தே செயல்படுவது தமிழர்கள் அனைவருக்கும் ஆறுதலான விசயம். தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக அவர் இருப்பதும். கூடங்குளம் விவகாரத்தில் மக்களின் போராட்டத்தை மதித்து இவ்வளவு காலமும் பொறுமையாக இருப்பதும் பாரட்டக்கூடிய விசயம். தமிழகம் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூடங்குளம் விவாகரத்தில் மக்களின் போரட்டத்தை தடுக்காமல் இருப்பதும். இந்த விசயத்தில் அவசரப்படாமல் யோசிப்பதும் அவரின் பக்குவத்தை காட்டுகிறது. கச்சத்தீவு விவகாரம் முதல், இலங்கைக்கான பொருளாதாரத் தடை, அகதி முகாம்களுக்கு அதிக சலுகை என தமிழக மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறார்.

எதிர்கட்சியாக இருக்கும் விஜயகாந்த் “கேப்டன் பிரபாகரன்” என்ற படத்தின் மூலம் தன்னை கேப்டன் என்று அழைக்கும்படி சொன்ன அவர். ஈழம் மலரும்வரை தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என அறிவித்த அவர். தன் மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்த அவர். காங்கிரஸ் மீது கொண்ட தனிப்பட்ட பாசத்தால் எப்போதும் பெயருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு தன் தமிழ் பாசத்தை காட்டிக்கொள்வதோடு கடமையை முடித்துக்கொள்கிறார். மக்கள் இப்போதாவது இவரை புரிந்துகொண்டால் தமிழும், தமிழகமும் தப்பிக்கும்.

ஊடகங்களை பொருத்தவரை “புதிய தலைமுறை” தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. “தினத் தந்தியும், விகடனும்” தவிர மற்ற பத்திரிக்கைகள் இந்த விசயத்தில் தொடர்ந்து மோசமாகவே நடந்துகொள்கின்றன. தமிழக மக்கள் எல்லோரும் தொடர்ந்து ஈழமக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் சில சுயநல அரசியல்வாதிகளைப் போல இலங்கையில் இருக்கும் சிலரும், புலம்பெயர்ந்த சிலரும் தொடர்ந்து த்மிழக இன உணவாளர்களை கேலி பேசுவதும் வருத்தமாக இருக்கிறது. 

எது எப்படியோ விடுதலைப்புலிகளை காட்டி தமிழ் மக்களை புறக்கணித்த உலகம். விடுதலைப்புலிகள் இல்லாமல் ஆன பிறகும் தன் அரசியல் நிலைப்பாட்டை நடுநிலமையோடு எடுக்கும் என்று நம்புவோம். தொடர்ந்து முன்னெடுப்புகளையும், கவன ஈர்ப்புகளையும், போராட்டங்களையும் நடத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்..

”தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!!

9 கருத்துகள்:

அருள் சொன்னது…

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

http://www.tvrk.blogspot.com/2012/03/blog-post_08.html

மதுரை சரவணன் சொன்னது…

//கச்சத்தீவு விவகாரம் முதல், இலங்கைக்கான பொருளாதாரத் தடை, அகதி முகாம்களுக்கு அதிக சலுகை என தமிழக மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறார்.//

nanri thalivare... captain parri mulumaiyaaka purinthu vaiththulleerkal... pakirvukku nanri..

Marc சொன்னது…

எல்லோரும் முன் வந்து தங்கள் கருத்தை சொன்னாலே போதும்.அதன் வேகம் கூடிவிடும்.

கூடல் பாலா சொன்னது…

\\\இல.கனேசன். எச். ராசாவெல்லாம் எங்கண்ணே இருக்கீங்க??\\\ இவுங்கல்லாம் யாரு ? எப்பவோ கேள்விப் பட்ட பெயர் மாதிரி இருக்கே !

விழித்துக்கொள் சொன்னது…

thamizhagaththil yaar thamizhargal ena ketkka thodrugiruadhu thamizhaga arasiyalil uchchi mudhal irudhivarai vetru inavasigale aadhikkam seluththumbodhu thamizhargalukku eppadi kidaikkum needhi

ஹேமா சொன்னது…

தமிழர்களின் தாகம்...தமிழீழத் தாயகம்!

தமிழக உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றி செந்தில் !

ராஜ நடராஜன் சொன்னது…

செந்திலண்ணே@!நலமா?

ஈழப்பிரச்சினையை தலைகீழாக மாற்றியதில் கருணாநிதியின் சுயநலத்திற்கு மிகவும் பங்குண்டு.ஆட்சியில் இருந்திருந்தால் அவரது அறிக்கை எப்படியிருக்குமென்பதை யூகிக்க வேண்டிய அவசியமேயில்லை.அவர் மீதான கோபம் இன்னும் நீர்பூத்த நெருப்பாகவே தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் உள்ளது.

ஒட்டுமொத்த குரலாக தமிழக கட்சிகள் இல்லாவிட்டாலும் தனித்தனியாகவாவது குரல் கொடுப்பதை வரவேற்போம்.

வின் தொலைக்காட்சியில் அமெரிக்க தீர்மானம் குறித்து விவாதம் செய்த நிகழ்ச்சி பற்றி ஊடகம் மூலம் அறிந்தேன்.பிரச்சினையின் போக்கை மாற்றி அமைக்கும் வலிமை இல்லாமல் வெறுமனே விமர்சிப்பதில் அர்த்தமில்லை.தீர்வுகளைக் கூறுவதோடு அதனை செயலாக்கப்படுத்தும் தகுதியில்லாமல் அமெரிக்காவின் எதிர்ப்பு நிலையில் விமரசனத்தை நிறுத்துங்கள்.ஆழ்கடலில் தத்தளிப்பவனுக்கு சிறு மரத்துண்டு கிடைத்த மாதிரியான நிலையே அமெரிக்காவின் தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு.தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதியென்ற உணர்வில்லாமல் இந்தியா வெளியுறவு கொள்கைகள் வகுக்கிறது.இதை விட கொடுமை இந்தியாவுக்கு பெப்பே காட்டி விட்டு சீனாவை சார்ந்து நிற்கும் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலை என்றாவது ஒரு நாள் ஆபத்து என்பதை விட தற்போதைய ஹம்பன்கோட்டா துறைமுகம் வரை வந்து விட்ட சீனாவும்,இலஙிகையும் எல்லாவிதத்திலும் இந்தியாவின் கடல்,தென் பகுதி பாதுகாப்புக்கு ஆபத்தே எனப்தை இனியாவது உணர்வது நல்லது.

புவியியல் அரசியலில் அமெரிக்காவின் பங்கையும் தக்க வைத்துக்கொள்வது என்ற சுயநலம் இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்தியா,சீனா,ரஷ்யா,பாகிஸ்தான்,ஈரான்,பர்மா,கியூபா இன்னும் உலகின் பல மனித உரிமை முன்னிலை நாடுகள் ஈழத்தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதால் அமெரிக்காவை நம்புவதை தவிர மாற்று வழிகள் இல்லை.மேலும் தனது நலன்களை தக்க வைத்துக்கொள்வதோடு சுய முடிவுகளை எடுக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்பதால் அமெரிக்க தீர்மானத்தை தமிழர்கள் அனைவரும் வரவேற்போம்.

Your are with us or against us என்ற ஜூனியர் புஷ்சின் 21m நூற்றாண்டின் புதிய கோட்பாட்டின் படி...

We don’t have an alternative voice to hear Tamilian grievances there is no other way except to support America.

We are with you America.

கம்யூனிஸ தோழர்களின் ஆக்கபூர்வமான மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்கானலுக்கு வரும் அத்தனை காங்கிரஸ்காரனும் இலங்கையில் எல்லோரும் மிக மகிழ்சியாக வாழ்வதாக வாய்கூசாமல் சவடால் அடிக்கின்றனர்.//

எல்லா வாயிலயும் கடவாப்பல் வரைக்கும் கத்தியை விட்டு ஆட்டணும்.