13 ஏப்., 2012

காதலாகி.. கசிந்துருகி.. கண்ணீர் மல்கி ...


காத்திருக்கும் யுகங்களை 
வந்து நிறைக்கும் 
பெருமழையென 
நீ கெஞ்சும் 
கொஞ்சல் நிமிடங்களுக்காய் 
யுகம் 
யுகமாய் 
காத்திருக்கலாம்..

அப்படியே 
அள்ளித் தின்னலாம் போல 
அவ்வளவு அழகு 
அவ்வளவு காதல் 
கோபத்தின் விளிம்பில் 
விடைக்கும் உனது மூக்கும் 
மன்னிக்க நினைக்கும் உனது கண்களும் 
மூச்சு வாங்கும் உன் மார்புகளும் 
மரபுகளை கடக்க துடிக்கும் மனதை 
காதலே ஆள்கிறது..

சமயங்களில் 
கவனிக்காமல் 
கடந்து போய்விடும் 
உன்னை 
என்னை 
இந்தக் காதல் 
வெகுவாய்த்தான் 
அலைகழிக்கிறது..

ஒரு முத்தம் 
இதயத்தை நிறுத்தி 
இன்னொன்று உயிர்ப்பிக்கும் 
அதிசயம் 
காதலால் மட்டுமே சாத்தியப்படுகிறது..

தனித்த 
இரவின் பயணங்களில் 
வழித்துணையாய் வரும் 
பிறை நிலாவென 
கூடவே வருகிறது 
உன் காதலும்..

எல்லாக் காதலும் 
கவிதையாய் ஆரம்பிக்கிறது 
பாடலை பரிசளிக்கிறது 
இலக்கியமாய் மாறி 
பின் 
இதிகாசமாகிறது
அது 
தோற்றாலும் 
ஜெயித்தாலும்.. 

11 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

//ஒரு முத்தம்
இதயத்தை நிறுத்தி
இன்னொன்று உயிர்ப்பிக்கும்
அதிசயம்
காதலால் மட்டுமே சாத்தியப்படுகிறது..
//
அருமையான வரிகள்

rajamelaiyur சொன்னது…

இன்று

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

Unknown சொன்னது…

சூப்பர்

இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

Unknown சொன்னது…

வாவ்....சூப்பர்...

ஹேமா சொன்னது…

இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் செந்தில்.காதாலால் கசிந்துருகிய கவிதை எப்பவும்போல...!

துரைடேனியல் சொன்னது…

ஒரு புள்ளியில் ஆரம்பித்து முடியும் அழகான கோலமாய் வண்ணமடிக்கிறது கவிதை. அழகு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான கவிதை !

ராஜ நடராஜன் சொன்னது…

காதலுக்கு மட்டும் ஆயிரம் கம்பன்கள்!

சிராஜ் சொன்னது…

ம்ம்.. நடக்கட்டும்.....

காமராஜ் சொன்னது…

//எல்லாக் காதலும்
கவிதையாய் ஆரம்பிக்கிறது
பாடலை பரிசளிக்கிறது
இலக்கியமாய் மாறி
பின்
இதிகாசமாகிறது
அது
தோற்றாலும்
ஜெயித்தாலும்..//

யப்பூ...என்னா நேர்த்தி.
சொக்கிப்போயாச்சு.
அழகு செந்தில்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அழகான கவிதை