27 ஏப்., 2012

வேறொருத்தன் கடுதாசி...


நான்
ஒன்பதாம் வகுப்பு 'ஏ' பிரிவு
அதே வகுப்பில் 'சி' பிரிவில்
பிரியா..
பார்க்க வசீகரமாக இருப்பாள்
பிரியா!


எல்லோருக்கும் அவள்மேல்
ஒரு கண்..
எனக்கு ஒரு படி மேலேறி
காதல்..


பத்தாம் வகுப்பில்
என் பிரிவில் வந்தாள்
பிரியா..
என்னுடன் படிக்கும்
ராஜாராமனுக்கும் அவளுக்கும்தான்
படிப்பில் போட்டி
முதல் இடத்துக்கு
முட்டிக்கொள்வார்கள் இருவருமே..


நான் படிப்பில் சாதாரணன்
விளையாட்டில் மெடல்கள்
குவிப்பவன்.


அவள் ஆண்டுவிழாக்களின்
கதாநாயகி...
பாரதமாதா வேஷத்தில்
பார்த்த கண்ணும் பூத்துப் போகும்


ராஜாராமனுக்கும்
அவள் மேல் காதல் வர
கடிதம் தந்து
தூதனுப்பினான் என்னை..


படிக்காமலே
கிழித்தெறிந்து அறைந்து போனள்
பிரியா...
காலங்கள் சென்றும்
கரையாமல் கண்ணுக்குள்...


ஆடிமாசத்து அம்மன்கொடைக்கு
பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்...


குசலம் விசாரிக்கத்தான்
அவள் வீட்டுக்கு நான்...
தேநீர், பிஸ்கட்டுக்குப் பின்


"ஏன் பிரியா அன்னிக்கு அறைஞ்சே?"


அக்கம்பக்கம் பார்த்து
அருகில் வந்தவள்
முன்னுச்சி மயிர் கலைத்து
மெதுவாய்ச் சொன்னாள்


"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?"

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

அவ்வ்வ்! அறையுமிடத்திலேயே யூகிக்க முடிகிறது! :-)

Thava சொன்னது…

"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?" @@

கலக்கிட்டிங்க சார், இயல்பான எழுத்து நடை, அசையாமல் ரசித்தேன்.மிக்க நன்றி.

Cast Away (2000) - திரைப்பார்வை

கோவை நேரம் சொன்னது…

நச்..

MARI The Great சொன்னது…

அவ்வ.., வடை போச்சே ..?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையாக உள்ளது. அடடா, கிடைத்த வாய்ப்பைத் அநியாயமாக இப்படித் தவற விட்டுள்ளீர்களே!

இதைப் படித்த எனக்கே ஒரே வருத்தமாக உள்ளது. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

பெண்களைப் புரிந்து கொள்வது கஷ்டம் தான். ஆழம் அதிகம் அவர்கள் மனதிலும்.

ஹேமா சொன்னது…

எத்தனை காதல்கள் இப்படிக் கதையும் கவிதையுமாகி !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஏன் அடிச்ச ன்னு அன்னிக்கே கேட்டிருக்கலாம் இல்ல?