29 மே, 2012

பெட்ரோல் விலங்குகள்...


நகரத்தின் சாலைகளில் 
வரிசை கட்டுகிறோம்
தேர்ந்த எறும்புகளை 
படிக்காத ஞானம்
வரிசை பிசகி 
அவசரத்தை காரனமாய் கற்பிக்க 
நிரம்பி வழியா
மினரல் பாட்டில்கள்
தண்ணீருக்கானது மட்டுமல்ல
நாம் ஓட்டு போட்டோம்
அவர்கள் ஆள்கிறார்கள்
அல்லக்கை அதிகாரிகள்
சதுர, செவ்வக பெட்டிகளின் வழியே
இயலாமை நடிப்பை 
திறம்பட நடிக்க
மாநில முதலாளி
மத்திய முதலாளியை கைகாட்ட
மதியத்தின்
தார் சாலைகளாய் கொதிக்கும்
மனங்கள்
தொடர் சாபங்களை வீச
தண்ணீர் போச்சு
பால் 
பாக்கெட்டாச்சு..
மின்சாரம் காலி
விவசாயம் செத்துப்போச்சு
இப்படித்தான் 
இனிமேன்னா
தமிழனுக்கு,
IPL பாத்தா போதும்
தலைவனை
தலைவியை
கட் அவுட்டில் உயர்த்தி வை
மனுசங்களாடா நீங்க
விலங்கினும் கீழாய் வைத்தீர்
வெந்ததை தின்னு
விதியால் சாகும்
சீரியல் பஞ்சாயத்து
இல்லத்து சிங்காரிகள்
டாஸ்மாக் இருக்க 
ஒனக்கென்ன கவலை
குவட்டர போடு 
குப்புறடிச்சு படு
நகரத்து சீமான்கள்
நாங்கள்டா...
நாங்கள்டா...
பேய்கள் அரசாண்டால்
பினந்தின்னும் சாத்திரங்கள்...

24 மே, 2012

அதிலிருந்து...


இந்த
இரவு முடிந்துகொண்டிருக்கிறது
ஒற்றை நிலா மட்டும் என்னுடன் 
பிடிவாதமாக தொடர
ஆயிரமாயிரமாய் நட்சத்திரங்கள் 
சிரிக்க 
வாழ்வின் தீரா பக்கங்களில்
நீ இருக்கிறாய்
ஒரு தற்கொலை
ஒரு கொலை
அல்லது 
சித்தனாய் காசி நோக்கும் முடிவு
அரை நெப்பொலியன் உதவாத
இந்த நெடிய இரவு
ஒரு காதலை
ஒரு துரோகத்தை
ஒரு மன்னிப்பை
ஒரு மனிதனின் 
ஒவ்வொரு மனிதனின் 
தீரா தேடலை
என்னிலும் பற்றவைத்து
யோனியில்
பிரகாசமாய் தெரிகிறது
லிங்க தரிசனம்
கடவுள்
கடந்தேன்
கடவுளாய்...

18 மே, 2012

மே - 18 :((((


மே 20: மெரினா நினைவேந்தல் உங்கள் நண்பர்களுக்கு அலைபேசி ஊடாக இக்குறுஞ்செய்தியினை அனுப்பிடுங்கள்.

"Uphold Humanity & Justice. Light a Candle on May 20th, 5pm @ Kannaki Statue Marina 2 remember the Victims of Eelam Genocide & Urge UN Referendum"


அன்பான தோழர்களே!,

கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதாக செய்தியை உண்டாக்கியது. இது இலங்கையில் அரச மாற்றத்தை மட்டுமே உண்டாக்கும் என்றோம், கடந்த வருடம்..... தற்போது அதை நோக்கியே நகர்வுகள் இருக்கின்றன. ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வை வைப்பார்கள் என்று 2011 மே மாதம் சொன்னதைப் போலவே தற்போது நடக்கிறது. இதை உடைக்கவேண்டும். 

நாம் ஆதரிக்க மறுக்கவேண்டிய இந்த வருடத்திய ஐ. நா தீர்மானத்தை நம் மீது உலகம் திணித்து , ஏற்றுக்கொள்கிறாயா என்றபோது ஏற்கவேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற விவாதம் வந்தது. அதற்கு, ‘ நாங்கள் வேண்டுவது இதுவல்ல, இது எங்களுக்கானதல்ல, எங்கள் கோரிக்கை ‘தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பும், சுதந்திர சர்வதேச விசாரணயும் ” என்று உரத்துச் சொல்வதற்காக மார்ச் 18ஆம் தேதி சென்னை மெரினாவில் கூடினோம். ஊடகங்கள் மக்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை கொண்டு சென்றன. திருத்தங்களை இலங்கைக்கு ஆதரவாக கொண்டு வந்து பிறகு, ”இந்தியாவின் ஆதரவை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம்” என்று காங்கிரஸும், அதன் அடிபொடிகளும் தோள் தட்ட இயலாமல், தமிழர்கள் நாம், செய்தோம். இன்று இந்த கோரிக்கைகள் தமிழகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றம் தமிழர்களின் பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும், கட்சிகளும், தலைவர்களும், அறிஞர்களும், உணர்வாளர்களும் பல்வேறு வேறுபாடுகளை கடந்து , பொது மக்கள் சமூகம் அறியக்கூடிய வகையில் பொது இடத்தில் திரண்டதால் சாத்தியமாயிற்று. கருணாநிதியே ,” ஐ. நா வாக்கெடுப்பு” என்று பேசவேண்டியதாயிற்று. தற்போது மக்களிடத்தில் பொது விவாதத்திற்கு இந்த “ஐ. நா வாக்கெடுப்பு” வந்தாயிற்று. ஆனால் இது சாத்தியமாக வேண்டுமென்றால் இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பு நடந்ததாக அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சுதந்திர விசாரணைஅறிவிக்கப்பட்டாக வேண்டும்.

ஐ. நாவில் தீர்மானம் வருவது மட்டுமே தீர்வை கொணராது, சர்வதேச மக்கள் சமூகம் தமிழீழ விடுதலையின் நியாயத்தை அறியும் போது நமது போராட்டம் பல அடிகள் முன்னகரும். 

இதே வகையில் நமது கோரிக்கைகள் மேலும் உரத்து கேட்க இந்த வருடம் மே 20 ஆம் தேதி சென்னை மெரினாவில், நீதி கேட்ட கண்ணகி சிலையினருகில், மாலையில் பெரும் திரளாய் ஒன்று கூடுவோம்.... பெண்களும், குழந்தைகளும், ஏனைய மக்களும் சென்ற வருடம் திரண்டார்கள் , அரசியல் படுத்தப்பட்டார்கள், கோரிக்கைகளை கூர்மையாக கவனித்தார்கள்... நாமும் அவர்களும் சந்திக்கும் அந்த நிகழ்வை மீண்டும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை இது மேலும் முன்னகர்த்தும். நாம் திரள்வோம். 


மே பதினேழு இயக்கம் 

காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்



சென்ற வருடம் ஜுன் 26 நினைவேந்தல் நடத்தியது போல் இந்த வருடம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் நினைவு கூறும் விதமாக வருகிற மே 20ம் நாள் நடத்தவிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்களை மெரினாவில் கூட்டும் விதமாக பணிகளை செய்து வருகிறோம். இந்த பணிகளுக்கு உண்டான பொருட் செலவுகளுக்கு எப்பொழுதும் போல் தங்களுடைய உதவிகளை கோருகிறோம். பின்வரும் வங்கி கணக்கில் தங்களது நன்கொடைகளை தந்து உதவவும்..தங்களது உதவி, பரப்புரை, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களாகவும் அமையலாம் . 

பெயர் - P .A . PRAVEEN KUMAR

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

கணக்கு எண் 129601000017929 , Savings Account,

வேளச்சேரி கிளை. சென்னை. IFC Code : ioba0001296
உதவி பற்றிய விவரங்களை தவறாமல் contact.may17@gmail.com
---Ph- 9600781111, 90948 17952


குறிப்பாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்துமறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்படதீர்மானித்து இருக்கிறோம்.

M176.jpg  
m17.jpg 
m171.jpg 
m172.jpg 
M173.jpg

M174.jpg 


m.jpg

M178.jpg
M177.jpg



E1.jpg


  
Genocide1.jpg

நன்றி - திரு.முத்தமிழ்வேந்தன்...

17 மே, 2012

இசைக்குறிப்புகள் தேவைப்படாத வாத்தியங்கள்...


நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? என்கிற சந்தானத்தின் கிண்டலில் கலந்துவிட்ட தமிழகத்தின் தவிர்க்க இயலா ரசிக குணத்தில் நானும் ஐக்கியமாக முடியாமல் இருக்கும் குறைந்தபட்ச நகைச்சுவை வறட்சி என்னிடம் ஏன் இல்லை என சீரியசாகவும், நகைச்சுவையாகவும் ஆராய்ந்துகொண்டிருந்தேன். நம் மக்கள் இப்போது தமது லவ்கீக வாழ்விற்காக நித்யானந்தாவை அகற்றிவிட்டு தங்களின் புனிதத்தை காப்பாற்ற போராடும் அதே வேளையில் தங்கள் வாழ்வின் மீது சாமாதி கட்டிய அரசை எதிர்த்து அமைதியாய் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்கள் கடந்த எட்டு மாதங்களாக போராடுகின்றனர். தமது ஒராண்டுகால ஆட்சியின் சாதனைகளை தமது அடிபொடிகளின் ( மன்னிக்கவும் அமைச்சர்களின்) வாயால் பாராட்டாகவும், பாட்டாகவும் கேட்டு உள்ம் மகிழும் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அதே ஒராண்டின் வேதனைகளை நமது இணைய உ.பி க்கள் பட்டியலிடுவார்கள் என எதிர்பார்த்தேன். அவர்களுக்கு தங்கள் ’தகத்தாய சூரியனின்’ விடுதலையை கொண்டாடி மகிழவே நேரம் போதவில்லை போலும் எனவே வழக்கம் போலவே நானே இதனை எழுதவேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளாக்கப்பட்டேன்..

ஓராண்டின் வேதனைகள்..

1. கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் செலவழித்து கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம் வாஸ்து சரியில்லை அல்லது கருணாநிதியால் கட்டப்பட்டது 
  என்கிற ஒரே காரனத்துக்காக ஓரம் கட்டப்பட்டது.

2. பழைய சட்டமன்ற கட்டிடத்தில் இயங்கிவந்த செம்மொழி ஆய்வு இப்போது என்ன ஆனது என்றே தெரியாமல் போனது.

3. சமச்சீர் கல்வியில் செய்த எண்ணற்ற குளறுபடிகள்.

4. மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது.

5. சென்னையில் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அத்தனை பேரையும் கிரிமினல்கள் போல நினைத்த இடத்தில் நிறுத்தி விசாரிப்பது.

6. அவர்கள் குற்றவாளிகளா என நிரூபிக்கப்படாமலேயே ஐந்து பேரை சுட்டுக்கொன்றது.

7. பரமக்குடி கலவரத்தில், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் காவல்துறை சொந்த மக்களையே போட்டுத்தாக்கியது.

8. அண்ணா நூற்றாண்டு நூலத்தை இடம் மாற்றுவதாக அறிவித்தது.

9. மின்சாரம், பால், பேரூந்து கட்டணத்தை உயர்த்தியது.

10. அறிவிக்கப்படாத பத்து மணி நேரத்துக்கும் மேலான மின்வெட்டு.

11. இப்படியாக இன்னும் பலப்பல வேதனைகள் தந்துவிட்டு சாதனைகளாக அப்துல்கலாம் அடித்த 2020 ஜல்லியை 2023 என அடிப்பது.

இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக போராடும் இந்து மத காவலர்கள் முதலில் அனைத்து சாதியினரையும் கருவரைக்குள் அழைத்துப் போகட்டும் அதன் பின்னர் புனிதக் காப்பாளர் பட்டம் போட்டுக்கொள்ளலாம். எப்போதும் தனி நபர் வழிபாடு அரசியலாகட்டும், மதமாகட்டும், சினிமாவாகட்டும் இந்தியர்கள் மாதிரி அல்லக்கைகள் உலகில் வேறு எங்கும் கிடைக்க மாட்டார்கள்.

IPL ல் சூதாட்டம் நடந்ததாக சொல்கிறார்கள். IPL லே சூதாட்டம்தான். ஆனால் இது மொதலாளிகளுக்கு தெரியாமல் நடந்த சூதாட்டம் என்பதால் பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக விழ ஆரம்பித்து இருக்கிறது. பேசாமல் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயை 100 என அறிவித்து விடலாம். கூடிய விரைவில் பெட்ரோலில் கைவைப்பார்கள். இதற்கெல்லாம் காரனம் தமிழகத்தில் ஜெயா ஆட்சிதான் என ஃபேஸ்புக்கில் உ.பி க்கள் கூவுவார்கள்.

உ.பிக்கள் சிலர் நடுநிலையாக இருக்கும் எம்போன்றோரை தொடர்ந்து வசைபாடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் இசைக்குறிப்புகள் தேவைப்படாத வாத்தியங்கள். அதிரும் பறை குலசாமிக்கும், கடைசி யாத்திரைக்கும் ஒரே மாதிரிதான் அதிரும். நாங்களும் அப்படித்தான். அல்லக்கைகளாக வாழ்வதை பெருமையாக நினைக்கும் நீங்கள் உமிழும் உங்கள் இணைய வார்த்தைகளால் எத்தனை உ.பி க்கள் (ஒரிஜினல்ஸ்) எரிச்சலாகின்றனர் என உங்களுக்குத் தெரியுமா?. 

5 மே, 2012

நீ கடந்துபோன என் வாழ்வின் மிச்சம்...


அறியாமல்
தேனியின் கூட்டுக்குள்
கைவிடுவது மாதிரி 
என்னைக் 
காதலில் தள்ளியது
உன் புன்னகை
கொட்டும் வரை பயம்
என்றாலும் சுகமான 
வலி
வலி
வலி
காதல் வலி
வலியது விதி என்பதால்
வீட்டுக்கு தெரிய வர
அவர்கள்
ஆசைப்படும் வரைக்கும்
அல்லது 
கோபம் தீரும் வரைக்கும்
அடித்து தீர்த்தார்கள்
நீ மன்னிப்பு கோரினாய்
ஆனாலும் 
காதலை மறுத்தாய்
உனக்கு தயாராக இருந்தான்
மாமன் மகன்
நான் அப்படியே
அதே காதலுடன்
வருடங்கள் விரைந்தோட
ஆல் போல் தழைத்தது
உன் குடும்பம்
நான்
ஒரு நைந்த துனியைப்போல்
கோவில் வாசலில் கிடக்க 
கடந்து போன நீ
கருனையோடு வீசிப்போன
ஒற்றை ரூபாய்
நெற்றியில் இருந்தது 
மறுநாள்..

4 மே, 2012

பயோடேட்டா - டெசோ(TESO) ...

பெயர்                                  : டெசோ
இயற்பெயர்                        : 
 தமிழ் ஈழ ஆதரவாளர் கழகம் 
தலைவர்                            : கருணாநிதி
துணை தலைவர்கள்       : சுபவீ, வீரமணி, அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன்
மேலும் 
துணைத் தலைவர்கள்    : திருமா மற்றும் இணைய உ.பிக்கள் மட்டும்
வயது                                : 29 வருடங்கள்

தொழில்                         : அரசியல் விளையாட்டு
பலம்                                 : தி.மு.க வின் தலைவர்
பலவீனம்                          : சுயநலமும், குடும்பநலமும்
நீண்ட கால சாதனைகள் : தமிழர்களின் தலைவன் என்று நம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள்   : சகோதர யுத்தம் ( சொந்த வீட்டில்)
நீண்ட கால எரிச்சல்         : புலிகள், எம்.ஜி.ஆர்
சமீபத்திய எரிச்சல்          : ஒரு பயலும் நம்பாதது
மக்கள்                                : தன்னை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்
சொத்து மதிப்பு                : வெற்று அறிக்கைகள்

நண்பர்கள்                          : காங்கிரஸ் அல்ல
எதிரிகள்                            : வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் ஈழ ஆதரவாளர்கள்
ஆசை                                : ஜனாதிபதி ஆக 
நிராசை                              : காலம் கடந்துவிட்டது

பாராட்டுக்குரியது            : துவங்கப்பட்ட காலத்தில் இருந்த உண்மையான அக்கறை
பயம்                                 : 2G வழக்குகள்
கோபம்                             : பிரபாகரன் 

காணாமல் போனவை  : இன உணர்வு
புதியவை                        :  வீரமணியின் அறிக்கைகள்
கருத்து                             : தான் சொல்வது மட்டும்
டிஸ்கி                              : முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களை ராஜபக்சே அரசாங்கம்
                                            கொன்று குவித்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது 
                                            நீலிக்கண்ணீர் வடிப்பது # ஒலகமகா நடிப்பு
                                            
இணைப்பு :

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?

2 மே, 2012

இந்தியா இன்று - 02.05.2012...


அக்னி - 5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தவுடன் நமது பிரதமதர் முதல் கடைக்கோடி டீக்கடை அரசியல்வாதி வரை நாம வல்லரசா மாறிட்ட்டோம் என் கூப்பாடு போடாத குறையா வெளம்பரம் பன்னாய்ங்க. ஆனா குண்டி கழுவத் தண்ணியக் கானோம், குளிக்க பன்னீரு கெடைக்குதாம்ல அப்ப்டீன்னு யோசிச்சேன். தொடர்ந்து நமது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருக்க வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பன்ற பகவான்களை தவிர்த்து மற்ற ஆளெல்லாம் மோவாய்ல கை வைச்சுகிட்டு வெட்டியா அரசியல் பேசிட்டு திரியுதுங்க. இங்க எல்லா மாநிலத்துலயும் ஒழுங்கா கரண்டக் கானும். முக்கால் ரூவா ரோடு ஒன்னெ போட்டுட்டு பத்து கிலோ மீட்டருக்கு ஒருக்கா சுங்கம் வசூலிக்கிறானுவ, இது எந்த அடிப்படையிலன்னு ஒரு வெவரமும் நமக்கு தெரியாது. பக்கத்து நாடான பாகிஸ்தான்ல கூட பெட்ரோலு அம்புட்டு வெல கெடையாது. இங்கன எக்கச்சக்கமா ஏத்திக்கிட்டே இருக்காங்க. இதுல இப்ப புதுசா டெண்டுலுகருக்கு எம்பி பதவி கொடுத்துட்டா கிரிக்கெட்டு பாக்குற அம்மாம் பேரும் ஒட்டு போட்டுருவானுக கூமுட்டைகன்னு யாரோ ஒருத்தன் ராகுலு தம்பிகிட்ட சொல்லிருப்பான் போல ஒடனே அவர ராஜ்யசபா எம்பி ஆக்கி ஒரு நாளைக்கு ரெண்டு வேளை சாப்பாடு கூட இல்லாத டெண்டுல்கருக்கு சம்பளம் கொடுப்பாங்க. அந்த வீரனும் அப்படியே பொம்பளை கொரலில் இது நாட்டுக்கு கெடச்ச பெருமைன்னு சொல்லிட்டு போய்டும். அடுத்தாப்ல பாரத ரத்னா கொடுத்தே தீரனுன்னு ஒரு கும்பல் கொடி புடிக்குது, வெளங்கிடும்!.

இப்ப தமிழ்நாட்டுல ஒரு பெரிசு டெசோன்னு ஒன்னிய தூசு தட்டிருக்கு. அதுக்கு அவருகூட நாலு பேர சேத்துகிட்டு கூடிய சீக்கிரமே தமிலீலம் தரலைன்னா “யேய் ராஜபக்குசே அப்புறம் தமிலுநாட்டுல ஒடம்பிறம்புங்க அல்லாரும் ஒனக்கு எதிரா கோசம் போடுவோன்னு” சவால் விட்டாரு. இப்ப பாருங்க இந்த ராஜபக்சே பயந்து போயி நாளே நாளுக்குள்ள ஈலம் கொடுத்துட்டுதான் மறுவேலை பாப்பான்னு பேஸ்புக்குல ஒடம்பொறப்புங்க எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுதுங்க. இதுல ஒரு குஞ்சாமணி “எங்க தலிவரு புளியங்கொம்பு, நாங்கள்லாம் புளியங்கொட்டை, அல்லாரும் இனி புளியங்கொட்டை காப்பிதான் குடிக்கனுன்னு பதிவு எளுதுது. இன்னொரு புளியங்கொட்டை கொஞ்ச நாளுக்கு முன்னாடி வீரவணக்கம் அப்படின்னு பிரபாகரனுக்கு பதிவு போடுது. புலிக்கு புளி கரைச்சு ஊத்துனா சரியாயிடுமா? அண்ணனுகளா விடுதலைபுலிகளே வீரவணக்கம் சொல்லாதபோது ஒங்களுக்கு இன்னா அவசரம். ஒங்க ஒலகமகா தலிவனுக்கு பிரபாகரனை பிடிக்காது. போவட்டும் அவருக்கு தமிழனையே பிடிக்காது அப்புறம் எப்படி எங்கள் தலைவனை பிடிக்கும். ஆனா இவரு மட்டும் தனிப்பட்ட் மொறையில ஒரு வீடியோ பாத்தாராமாம் ஒடனே வீரவணக்கம் சொல்லிட்டாரு. இப்ப தலிவனுக்கு திடீரென ஈல பாசம் பொங்கி வழிஞ்சு நாலு ஜால்ராக்கள கூப்பிட்டு கூட்டம் போட்டாரு. மக்களே இன்னும் நாளே நாளு ஈலம் கெடக்குதா? இல்லையா? பாருங்க!!!!!!!!!!!!!!!!!!. அண்ணனுகளா உங்களுக்கு நெஜாமாவே தில்லுன்னு ஒன்னு இருந்தாக்க ஒங்க ஒலக மகா தலிவனை ஒய்வு எடுக்க சொல்லிப்பாருங்க. இதுல பாருங்க ஒங்க தலிவன் செஞ்ச துரோகத்துலயே பெரீ..ய துரோகம் எது தெரியுமா சொந்தப்புள்ள ஸ்டாலினுக்கு செஞ்சதுதான். அவருக்கு நியாயமா பாத்தா செயலலிதா செஞ்ச அளவு கூட உங்க தலிவன் செய்யல. படிச்ச பய புள்ளைக நீங்க கொஞ்சமாவது மனசாட்சியோடு இனியாவது இருக்கப் பாருங்க!. 

இந்த ஐ பி எல்லுன்னு ஒன்னிய தொடங்கி வச்சு மக்கள்கிட்ட இருக்கிற காசையெல்லாம் கொல்லையடிச்சு துட்டு சேக்குது ஒரு கும்பல். ஒவ்வொரு வருசமும் தேர்வு தொடங்குற நேரமா பார்த்து ஆரம்பிக்குறானுவ, அத லீவு முடியுற வரைக்கும் டிவில போட்டு தாக்கி பசங்கள டிவி முன்னாடி குத்த வச்சு காலி பன்னுறாங்க, சின்ன பயகள்ள இருந்து பெரிசுங்க வரைக்கும் இந்தக் கும்பலால கெட்டுப் போகுதுங்க. நமக்கு கிரிக்கெட்டு தவிர வேறு வெளயாட்டுங்க இருக்குறது மறந்துரும் போல!.

இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுங்க மொதல்ல ஒரு எம்மெல்யேவ கடத்தி வச்சு ஏதோ ஒரு பேரம் படிஞ்சு விட்டுட்டாங்க. இப்ப மறுபடியும் கலெக்டர கடத்தி வச்சுகிட்டு பேரம் பேசுகிறார்கள். எனக்கென்னமோ வீரப்பனுக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கும் நேரும் என்று தோன்றுகிறது. மக்களுக்காக துவங்கப்பட்ட இயக்கம் எல்லாம் ஆட்கடத்தலில் ஈடுபடுவது நல்லவிசயமாக படவில்லை. ஆயுதம் ஒரு போதும் துனைவராது என்பதற்க்கு விடுதலைப்புலிகளின் அரசியல் முன்னெடுப்புகள் ஒரு நல்ல உதாரனம். மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை களைந்துவிட்டு அரசியலுக்கு வந்தால் தங்கள் பகுதியில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். விஜயகுமார் போன்ற திறமையான அதிகாரிகள் முன் காடு ரொம்ப நாளைக்கு பாதுகாப்பை தராது. அதேபோல் அரசாங்கமும் அங்குள்ள மக்களை மேம்படுத்த ஒன்றுமே செய்யவில்லை. அரசியல்வாதிகளின் சுயநலத்துக்கு பலியாவது அப்பாவி மக்களும், தங்கள் சம்பளத்திற்காக வேலை செய்யும் அடிப்படை காவலர்களும்தான். என்னதான் சம்பளத்திற்க்காக வேலை செய்தாலும் அவர்களுக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது. 

திடீரென மின்வெட்டு குறைந்து மக்களை ஆச்சர்யத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறார்கள். வளர்ந்த நாடு இந்தியா என பெருமை பேசித்திருகிறோம். ஆனால் மனதளவில் இன்னும் சிறுபிள்ளைதனமாகாவே இருக்கிறோம். ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் இனக்கமாக இருப்பது இல்லை. மின்சாரம், சாலை வசதி, குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் பரவலாக்கப்படவில்லை. கல்வி ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியாக பாடத்திட்டம் வைத்திருக்கிறது. இணைய வசதிகள் இன்னும் மேம்படவில்லை. மோசமாக நகர கட்டமைப்புகள், சுகாதாரம் என நாம் உலக அளவில் மிகவும் பினதங்கி இருக்கிறோம். இதற்க்கு காரனம் சினிமா என்கிற மட்டமான பொழுதுபோக்கு ஊடகத்திற்க்கு நாம் தரும் விலை. அதனால்தான் பண்டிகை காலமாகட்டும், சுதந்திர தினமாகட்டும், தற்போதைய மே தினமாகட்டும் சினிமாவே நம் வரவேற்பறையில் நிறைந்திருக்கிறது. ஊடக ராசாமார்களும் சம்பாதிக்க வேறு என்னதான் செய்வார்கள்?