17 மே, 2012

இசைக்குறிப்புகள் தேவைப்படாத வாத்தியங்கள்...


நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? என்கிற சந்தானத்தின் கிண்டலில் கலந்துவிட்ட தமிழகத்தின் தவிர்க்க இயலா ரசிக குணத்தில் நானும் ஐக்கியமாக முடியாமல் இருக்கும் குறைந்தபட்ச நகைச்சுவை வறட்சி என்னிடம் ஏன் இல்லை என சீரியசாகவும், நகைச்சுவையாகவும் ஆராய்ந்துகொண்டிருந்தேன். நம் மக்கள் இப்போது தமது லவ்கீக வாழ்விற்காக நித்யானந்தாவை அகற்றிவிட்டு தங்களின் புனிதத்தை காப்பாற்ற போராடும் அதே வேளையில் தங்கள் வாழ்வின் மீது சாமாதி கட்டிய அரசை எதிர்த்து அமைதியாய் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்கள் கடந்த எட்டு மாதங்களாக போராடுகின்றனர். தமது ஒராண்டுகால ஆட்சியின் சாதனைகளை தமது அடிபொடிகளின் ( மன்னிக்கவும் அமைச்சர்களின்) வாயால் பாராட்டாகவும், பாட்டாகவும் கேட்டு உள்ம் மகிழும் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அதே ஒராண்டின் வேதனைகளை நமது இணைய உ.பி க்கள் பட்டியலிடுவார்கள் என எதிர்பார்த்தேன். அவர்களுக்கு தங்கள் ’தகத்தாய சூரியனின்’ விடுதலையை கொண்டாடி மகிழவே நேரம் போதவில்லை போலும் எனவே வழக்கம் போலவே நானே இதனை எழுதவேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளாக்கப்பட்டேன்..

ஓராண்டின் வேதனைகள்..

1. கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் செலவழித்து கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம் வாஸ்து சரியில்லை அல்லது கருணாநிதியால் கட்டப்பட்டது 
  என்கிற ஒரே காரனத்துக்காக ஓரம் கட்டப்பட்டது.

2. பழைய சட்டமன்ற கட்டிடத்தில் இயங்கிவந்த செம்மொழி ஆய்வு இப்போது என்ன ஆனது என்றே தெரியாமல் போனது.

3. சமச்சீர் கல்வியில் செய்த எண்ணற்ற குளறுபடிகள்.

4. மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது.

5. சென்னையில் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அத்தனை பேரையும் கிரிமினல்கள் போல நினைத்த இடத்தில் நிறுத்தி விசாரிப்பது.

6. அவர்கள் குற்றவாளிகளா என நிரூபிக்கப்படாமலேயே ஐந்து பேரை சுட்டுக்கொன்றது.

7. பரமக்குடி கலவரத்தில், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் காவல்துறை சொந்த மக்களையே போட்டுத்தாக்கியது.

8. அண்ணா நூற்றாண்டு நூலத்தை இடம் மாற்றுவதாக அறிவித்தது.

9. மின்சாரம், பால், பேரூந்து கட்டணத்தை உயர்த்தியது.

10. அறிவிக்கப்படாத பத்து மணி நேரத்துக்கும் மேலான மின்வெட்டு.

11. இப்படியாக இன்னும் பலப்பல வேதனைகள் தந்துவிட்டு சாதனைகளாக அப்துல்கலாம் அடித்த 2020 ஜல்லியை 2023 என அடிப்பது.

இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக போராடும் இந்து மத காவலர்கள் முதலில் அனைத்து சாதியினரையும் கருவரைக்குள் அழைத்துப் போகட்டும் அதன் பின்னர் புனிதக் காப்பாளர் பட்டம் போட்டுக்கொள்ளலாம். எப்போதும் தனி நபர் வழிபாடு அரசியலாகட்டும், மதமாகட்டும், சினிமாவாகட்டும் இந்தியர்கள் மாதிரி அல்லக்கைகள் உலகில் வேறு எங்கும் கிடைக்க மாட்டார்கள்.

IPL ல் சூதாட்டம் நடந்ததாக சொல்கிறார்கள். IPL லே சூதாட்டம்தான். ஆனால் இது மொதலாளிகளுக்கு தெரியாமல் நடந்த சூதாட்டம் என்பதால் பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக விழ ஆரம்பித்து இருக்கிறது. பேசாமல் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயை 100 என அறிவித்து விடலாம். கூடிய விரைவில் பெட்ரோலில் கைவைப்பார்கள். இதற்கெல்லாம் காரனம் தமிழகத்தில் ஜெயா ஆட்சிதான் என ஃபேஸ்புக்கில் உ.பி க்கள் கூவுவார்கள்.

உ.பிக்கள் சிலர் நடுநிலையாக இருக்கும் எம்போன்றோரை தொடர்ந்து வசைபாடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் இசைக்குறிப்புகள் தேவைப்படாத வாத்தியங்கள். அதிரும் பறை குலசாமிக்கும், கடைசி யாத்திரைக்கும் ஒரே மாதிரிதான் அதிரும். நாங்களும் அப்படித்தான். அல்லக்கைகளாக வாழ்வதை பெருமையாக நினைக்கும் நீங்கள் உமிழும் உங்கள் இணைய வார்த்தைகளால் எத்தனை உ.பி க்கள் (ஒரிஜினல்ஸ்) எரிச்சலாகின்றனர் என உங்களுக்குத் தெரியுமா?. 

11 கருத்துகள்:

Unknown சொன்னது…

அன்பு நண்பர் செந்தில் அவர்களே , தங்களின் கருத்துகள் வரவேற்க படவேண்டியது, ஆனால் தாங்கள் மதம் பற்றிகூறியது , தங்களின் கருத்துகளை விரும்பிப்படிக்கும் என்னால் ஏற்று கொள்ள முடியாது . கருவறைக்குள் செல்வத்திற்கு சில முறைகள் உள்ளது.இது எல்லா மதத்திற்கும் உரியது . தாங்கள் குறிப்பிட மதத்தை பற்றி கூறியுள்ளது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை . நன்றி

யுவகிருஷ்ணா சொன்னது…

அடடே! யாருக்குமே தெரியாத ஓராண்டு வேதனைகளை புலனாய்வு செய்து வெளிப்படுத்தியிருக்கிறீர்களே? நீங்கள் நெஜமாவே நடுசென்டர் ஆளுதான் தோழர் :-)

அப்புறம் எங்கேயோ கேள்விப்பட்ட பழைய ஃபாரின் தத்துவம் ஒன்று : முட்டாளாக இருப்பதைக் காட்டிலும் அடிமையாக இருப்பது ஆயிரம் மடங்கு மேல்...

அஞ்சா சிங்கம் சொன்னது…

நீங்க முட்டாளா? இல்ல அடிமையா.............?
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அடிமையாய் இருப்பதை விட சுதந்திர முட்டாளாய் இருப்பதே மேல் ...நீங்க யாருங்கண்ணே ..? சொல்லுங்கண்ணே சொல்லுங்க ...........................

ராவணன் சொன்னது…

////கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் செலவழித்து கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம் வாஸ்து சரியில்லை அல்லது கருணாநிதியால் கட்டப்பட்டது
என்கிற ஒரே காரனத்துக்காக ஓரம் கட்டப்பட்டது.////

கருணாநிதி என்ற நபர் கட்டிய அரைகுறையான ஒரு கட்டிடத்தைப் பயன்படுத்தவேண்டுமா? நானாக இருந்தால் இடித்திருத்துப்பேன்.1000 கோடியில் கருணாநிதி கும்பல் அடித்த கொள்ளை எவ்வளவு?

சட்டமன்றம் ஆண்டாண்டுகள் இருக்கப் போகும் ஒன்று. இதை எதிர்கட்சிகளை ஆலோசித்து கட்டியிருக்கலாம். தான்தோன்றித் தனமாக கருணாநிதி என்ற நபர் கட்டிய கட்டிடம் தேவையில்லை.

ராவணன் சொன்னது…

///சமச்சீர் கல்வியில் செய்த எண்ணற்ற குளறுபடிகள்.////

இதை குளறுபடியாக்கியது கருணாநிதி என்ற நபர்.

ராவணன் சொன்னது…

////மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது.////

எந்தத் தகுதியில் இவர்களுக்கு இந்த பணி கிடைத்தது?

கருணாநிதி என்ற நபரின் முட்டாள்தனமான செயலால் இவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

ராவணன் சொன்னது…

////அண்ணா நூற்றாண்டு நூலத்தை இடம் மாற்றுவதாக அறிவித்தது.////

அது கட்டப்பட்ட இடம் சரியில்லை.பழைய அரசியலைப் படியுங்கள். கருணாநிதியின் குள்ளநரித்தனம் முறியடிக்கப்பட்டது.

ராவணன் சொன்னது…

////மின்சாரம், பால், பேரூந்து கட்டணத்தை உயர்த்தியது.///


ஓ....இதுவெல்லாம் ஓசியில் வேண்டுமா?

கருணாநிதி என்ற நபர் பங்குகொண்டுள்ள இந்திய அரசு பெட்ரோல், டீசலை ஓசியில் கொடுத்தால் இதுவும் ஓசியில் கிடைக்கும்.

ராவணன் சொன்னது…

///அறிவிக்கப்படாத பத்து மணி நேரத்துக்கும் மேலான மின்வெட்டு.///

கருணாநிதி என்ற நபரைப் போன்று 10000 கோடி கடன் வாங்கி மின்சாரத்தைக் கொடுக்கலாம். நாளை இந்தக் கடனைக் கட்டுவது யாரு?

ராவணன் சொன்னது…

////யுவகிருஷ்ணா சொன்னது…

அடடே! யாருக்குமே தெரியாத ஓராண்டு வேதனைகளை புலனாய்வு செய்து வெளிப்படுத்தியிருக்கிறீர்களே? நீங்கள் நெஜமாவே நடுசென்டர் ஆளுதான் தோழர் :-)

அப்புறம் எங்கேயோ கேள்விப்பட்ட பழைய ஃபாரின் தத்துவம் ஒன்று : முட்டாளாக இருப்பதைக் காட்டிலும் அடிமையாக இருப்பது ஆயிரம் மடங்கு மேல்...////

வந்துட்டான் நம்பர் சொம்பு....
இந்த நாயுடு அம்பி என்னிடம் மாட்டவில்லை.

பெயரில்லா சொன்னது…

பொன்னர் சங்கர், இளைஞன் போன்ற அதி உன்னத காவியங்களை பார்க்காத உடன் பிறப்புக்களே, தற்காலிக டார்ச் லைட்களே....போதும். பருப்பு வேகல..