24 மே, 2012

அதிலிருந்து...


இந்த
இரவு முடிந்துகொண்டிருக்கிறது
ஒற்றை நிலா மட்டும் என்னுடன் 
பிடிவாதமாக தொடர
ஆயிரமாயிரமாய் நட்சத்திரங்கள் 
சிரிக்க 
வாழ்வின் தீரா பக்கங்களில்
நீ இருக்கிறாய்
ஒரு தற்கொலை
ஒரு கொலை
அல்லது 
சித்தனாய் காசி நோக்கும் முடிவு
அரை நெப்பொலியன் உதவாத
இந்த நெடிய இரவு
ஒரு காதலை
ஒரு துரோகத்தை
ஒரு மன்னிப்பை
ஒரு மனிதனின் 
ஒவ்வொரு மனிதனின் 
தீரா தேடலை
என்னிலும் பற்றவைத்து
யோனியில்
பிரகாசமாய் தெரிகிறது
லிங்க தரிசனம்
கடவுள்
கடந்தேன்
கடவுளாய்...

3 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

...வாழ்வின் தீரா பக்கங்களில்
நீ இருக்கிறாய்
ஒரு தற்கொலை
ஒரு கொலை
அல்லது
சித்தனாய் காசி நோக்கும் முடிவு
அரை நெப்பொலியன் உதவாத
இந்த நெடிய இரவு...

கவிதையோடு ஒன்றிப் பயனிக்க வைக்கும் வரிகள்...

அருமையான கவிதை அண்ணா.

ஹேமா சொன்னது…

செந்தில்...ஒரு பயணமாய்க் கடக்கிறது கவிதை !

மாலதி சொன்னது…

யோனியில் பிரகாசமாய் ரிதெகிறது லிங்க தரிசனம் கடவுள் கடந்தேன் கடவுளாய்...// மிகசிறந்த சொல்லாடல் இன்றைய அவலங்களை பதிவு செய்தீரோ யோனியில் தெரியும் லிங்க தரிசனத்தை துணிந்து சாடிய விதம் பாராட்டுதலுக்குரியது தொடர்க......