2 ஆக., 2012

நாட்டு நடப்பு 02/08/2012...


சுஜாதாவின் நகரம் கதையைப் போல்தான் இப்போதும் பெருநகரங்களும் அவற்றில் வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். கூட்டம் கூடிப்போய் நெரிசலில் பிதுங்கும் சென்னை போன்ற நகரங்கள் மோசமான நம் அரசியல் தலைவர்களின் ஒழுங்கற்ற திட்டமிடல்களால் நாளுக்கு நாள் இன்னும் மோசமாகி வருகிறது. எல்லோரும் அதிகாலை கழிவறை அவசரத்தோடுதான் எப்போதும் எரிச்சலாய் இருக்கிறோம். தற்போதைய சென்னை குடிசை வாசிகள் பெரும்பாலோரை தீவிபத்தை திட்டமிட்டு கிரேட்டர் சென்னையின் விளிம்புக்கு தள்ளிவிட்டார்கள். இரண்டு பெரிய கட்சிகளின் ஓட்டு வங்கியாகவும், சகல வேலைகளுக்கும் அதாவது ஆளை தூக்குவது முதல் அடிமை வேலைவரை இவர்கள்தான் பார்க்கிறார்கள் எனத்தான் எல்லோரும் கற்பனைக்கு ரெக்கை கட்டியிருந்தோம், நிஜமாக ஆளைத் தூக்குவது என்பது அவர்களுக்கு உள்ளாகவே மட்டும் நடக்கும் ஒரு விசயம் மட்டுமே. கூலிக்காய் செய்ய ஆங்காங்கே தனிப்படை இருக்கு. இது போலீசின் தனிப்படையைப் போல் நேர்த்தியானது. வடசென்னையைப் பற்றிய நரேன் எழுதிய இரண்டு கட்டுரைகளில் தெளிவாகவே இதனை எழுதியிருப்பார். இவர்களில் பெண்கள் வீட்டு வேலைக்கும், ஆண்கள் சாக்கடை சுத்தம் செய்வது முதலான அருவருப்பான வேலைகளுக்கும்தான். இன்னும் சொல்வதெனில் பிராட்வே பகுதிகளில் சேட்டுகளின் தொழிலை குறைந்த கூலிக்கு அமோகமாய் வளர்த்ததுமே. 

சமீபத்தில் எரிந்த அசோக் நகர் குடிசைகளுடன் இன்னும் மீதமிருக்கும் கூவக்கரையையும் உலக வங்கியின் ஏதோ ஒரு அதிகாரி லீ மெரிடியன் ஹோட்டலில் புளு லேபில் குடித்துக்கொண்டே கட்டம் கட்டியிருப்பார். ஆய் கழுவவே அக்வா பினா பயண்படுத்தும் நாட்டுக்கோட்டை சிதம்பரம் மாதிரியான நிதி திட்டங்களை கொண்டோர்களால் இதுவெல்லாம் நடக்காமல் போனால்தான் அதிசயம். யாரையாவது எப்பாடுபட்டாவது கவிழ்த்து கார் வாங்க நினைக்கும் எம்.எல்.எம் ஆட்களாய் சகலரும் மாறிவிட்டோம். பணத்தை எப்படி சம்பாதித்தால் என்ன திருக்குவளையில் இருந்து கருணாநிதி என்ன கொண்டுவந்தார்?. சசிகலா ஒரு வீடியோ கடையால் இத்தனை சம்பாதித்து இருக்க முடியுமா?. தமிழினக் காவலர் ராமதாசுக்கு வன்னியரை சுரண்டவே நேரம் இல்லை. திருமாவளவனுக்கு சோனியாவே சொக்கத் தங்கம். விஜயகாந்த் போன்ற காமெடியன் என தமிழ்நாட்டு அரசியலால் கொஞ்சம் நஞ்சம் ரோஷத்தையும் டாஸ்மாக்கில் தொலைத்து நிற்கிறோம். பில்லா ஓடுமா?, துப்பாக்கி சுடுமா?, விஸ்வரூபம் வெற்றி பெருமா? என தன் கனவு நாயகர்களின் மகத்தான வாழ்வுக்காய் ஃபேஸ்புக், ட்விட்டர், பதிவுலகம் என சரமாரியாக புள்ளிவிவரங்களை எடுத்து விடும் புள்ளி ராஜாக்கள்தான் இங்கு மொத்த பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் அம்பானிகளாக மாறிவிட்டார்கள்.

பள்ளிகளின் பேரூந்து விபத்துக்கள், சமீபத்திய ரயில் விபத்து என ஏழைகளின் உயிர் இரங்கல் அறிக்கைகளுக்காக படைக்கப்பட்டவைகளாகி விட்டன. இது  போன்ற மோசமான நிர்வாக கட்டமைப்புகளை நாம் எப்போது ஒழுங்கமைக்கப் போகிறோமோ?..

கருணாநிதி சரியில்லை என ஜெயலலிதாவைக் கொண்டுவந்தால் அவர் தன்னை இன்னொரு அழிக்கும் கடவுளாக கற்பனை செய்துகொண்டு கருணாநிதி கொண்டுவந்தார் என்கிற ஒரே காரனத்துக்காக அவரின் சிறப்பான திட்டங்களை குப்பைகளாக்கி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கேளிக்கை கூடமாக மாற்றும் அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. சோ போன்ற தமிழனின் எதிரிகளால் ஆலோசனை பெறப்படும் முதல்வரிடமிருந்து இதைதவிர  வேறென்ன எதிர்பார்க்க முடியும். இதுல கொடுமை என்னன்னா சென்னையில் அப்படி ஒரு நூலகம் இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களுக்கு என்ன பயன் என இணைய அறிவு ஜீவிக்கூட்டம் கேள்விகள் எழுப்புகிறது. அட வெண்ணைகளா கூகுள்காரன் காசு கேட்டிருந்தா இப்படி பொங்குவீங்களா?

சென்னை கொஞ்சம் கொஞ்சமாக தனது தனித்தன்மையை இழந்து விட்டது. இதற்கு முக்கிய காரனமே தற்போதைய ஆட்சியாளர்கள்தான் சென்றமுறை முன்னாள் மேயர் மா.சு தனிதன்மையுடன் இயங்கினார். ஆனால் தி.மு.க வின் மொத்த கவுன்சிலரும் குட்டி அரசர்களாக வலம் வந்து சென்னையை தி.மு.க விடமிருந்து விரட்டினர். ஆனாலும் இப்போது மிகவும் நியாயமானவராக இருப்பார் என ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயர் துரைசாமி பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை. ஜெயலலிதாவை மீறி அவரால் எதுவும் செய்யமுடியாது என சிலர் பேசுவது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. செயல்படாத மேயர், செயல்படவிடாத முதல்வர். ஆட்சியாளர் பிடியில் சிக்கிய மந்தை ஆடுகளாக மக்கள். நாட்டிற்கு சிறந்த நிர்வாகிகளை தந்த துரைசாமி போன்றோர்களால் சுதந்திரமாக் செயல்பட முடியவில்லை என்றால் அவ்ர் பதவி விலகியிருக்கவேண்டும். தனிப்பட்ட வாழ்வில் நேர்மையான மனிதரான அவரின் நிலமை இவ்வளவு கவலைக்கிடமாக மாறிப்போனது சென்னை நகர மக்களின் துரதிர்ஷ்டமே. முதல்வர் கவுன்சிலர்களை கண்டித்ததாக வரும் பத்திரிக்கை செய்திகளால் மட்டும் மக்கள் திருப்தியாகிவிடுவார்கள் என ஜெயலலிதா நினைக்கிறார் போல.

டெசோவால் காங்கிரசை மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்த டமிலின தலிவரால் அதே விசயத்தை வைத்து காங்கிரசால் மிரட்டப்பட்டு இப்போது வருகிற ஆகஸ்ட் 12 அன்று தீர்மானம் போடப்பட்ட அடுத்த நாளே தனி ஈழம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை இலங்கை தமிழர்களில் ஒருவர் பிரதமராக அறிவிக்கப்பட்டு அனைத்து தமிழர்களுக்கும் சம உரிமை கருணாநிதி உத்தரவால் சென்னை நகர் முழுவதும் போஸ்டர்களில் உ.பி க்கள் அறிவித்துவிடுவார்கள். 

இப்படியாக பார்த்து பார்த்து, உ.பிக்கள் சொல்வதுபோல நீ ஏதோ ஒரு திருட்டுக்கும்பலில் இருக்கனும் இல்லைன்னா நட்ட நடு செண்டராக உன்னை கேலி பேசுவோம் எனும் மிரட்டல் பவர் ஸ்டார்களுக்குப் பயந்து நாமும் அடிமைகளின் தலைவர்கள் அல்லது அஜீத்தோ, விஜயோ, குஷ்பூவோ நம்மை கண்டிப்பாக உய்விப்பார்கள் என தன் தினசரி மலச்சிக்கலோடு தூங்கும் தமிழனாய் மாறிவிடலாமோ எனத் தோன்றுகிறது. 

8 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

இப்படியாக பார்த்து பார்த்து, உ.பிக்கள் சொல்வதுபோல நீ ஏதோ ஒரு திருட்டுக்கும்பலில் இருக்கனும் இல்லைன்னா நட்ட நடு செண்டராக உன்னை கேலி பேசுவோம் எனும் மிரட்டல் பவர் ஸ்டார்களுக்குப் பயந்து நாமும் அடிமைகளின் தலைவர்கள் அல்லது அஜீத்தோ, விஜயோ, குஷ்பூவோ நம்மை கண்டிப்பாக உய்விப்பார்கள் என தன் தினசரி மலச்சிக்கலோடு தூங்கும் தமிழனாய் மாறிவிடலாமோ எனத் தோன்றுகிறது.அப்படிப் பெரும்பாலோர் மாறி வெகு நாளாகிவிட்டது
அனைவருக்குள்ளும் எரியும்
விஷ்யத்தை
சூடு குறையாமல் பதிவு
செய்துள்ளமைக்கு நன்றி
சுருக்கென தைத்துப்போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

புதுகை.அப்துல்லா சொன்னது…

இதுக்கு நீங்க எப்பவும் போல பிளாக்கை மூடியே வச்சிருக்கலாம் # அடி கொஞ்சம் எனக்கும் ஜாஸ்தியா இருக்கு :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

நறுக்கென தைக்கும் சுருக்கான கட்டுரை...

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பிஜி,

நீங்க சொல்றது எல்லாம் நியாயம் தான் ஆனால் அரசியல்வாதிகள் ஏன் அதைப்பத்திலாம் கவலைப்படணும்,என்ன செஞ்சாலும் 5 ஆண்டுகளில் மறந்துட்டு ஓட்டுப்போட போற கூட்டம் தானே மக்கள் அப்புறம் நியாயம் தர்மம் எங்கே பத்திக்கவலைப்பட போறாங்க.

இதை எல்லாம் பதிவுல எழுத கருத்து சொதந்திரம் இருக்க நாட்டில நாம பொறந்து இருக்கோம் அது போறாதா.பதிவுலயே பிரபலமானவங்க செய்ற தப்பை சுட்டிக்காட்டிட்டா நமக்கு தாண்ணே முட்டாள் பட்டம் கிடைக்கும், அதுக்கு கை தட்ட நாளுப்பேரு இருக்காங்க ,அப்படி இருக்கும் போது எத்தனை கொலை,கற்பழிப்பு,நில அபகரிப்பு ,ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என "உழைத்து" அரசியலில் ஒரு இடம் பிடித்தவர்களை குறை சொன்னா சும்மா விடுவாங்களா, நட்ட நடு செண்டர், வெட்ட வெளி வெங்காயம்னு சொல்லத்தான் செய்வாங்க.

அவங்களை எல்லாம் கொறை சொல்ல தகுதி இருக்கான்னு நம்மையே கேட்டுப்பார்த்துக்கணும் சுத்தமா தகுதியே இல்லண்ணே , ஒரு அரை நாள் உண்னாவிரம் கூட இருக்காத நாம் எப்படிண்ணே அவங்களைப்பார்த்து கொறை சொல்லலாம்.

ஓய்வறிய சூரியனும், ஓய்வெடுக்கும் தங்கத்தாரகையும் அவங்களா பெரிய மனசு பண்ணி மிச்சம் மீதி இருந்தா நமக்கு கொடுப்பாங்க ,வாங்கிக்கலாம் , அதுவரைக்கும் டாச்மாக்கில் தாக சாந்தி செய்து இளைப்பாறலாம் :-))

2020 இல் வல்லரசு அத மைண்ட்ல வச்சுக்கிட்டு தீயா கனவு காணனும் :-))

இரா.கதிர்வேல் சொன்னது…

//சோ போன்ற தமிழனின் எதிரிகளால் ஆலோசனை பெறப்படும் முதல்வரிடமிருந்து இதைதவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.//
முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் ஒன்றுக்கூட திராவிட சிந்தனையின் கருத்தாக அமையவில்லை என்பதும் மிகபெரிய வருத்தம். திராவிடம் ஏன் என்றுக்கூட புரியாமல் பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார். முட்டைக்கண்ணன் சோ போன்ற மனநோயாளிகளின் அறிவுரையால் தமிழக மக்கள் அனைவருமே மனநோயாளியாகிவிட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

இரா.கதிர்வேல் சொன்னது…

அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை இந்தளவிற்கு சீரழித்துக்கொண்டிருப்பது... தேன் கூட்டில் கை வைக்கவில்லை. குளவிக் கூட்டில் கை வைத்ததற்குச் சமம். கடுமையான வலியுடன் கொட்டு வாங்காமல் செல்லமாட்டார்.

இரா.கதிர்வேல் சொன்னது…

நான் முதன் முதலாக கடந்தவாரம்தான் சென்னைக்கு வந்தேன். அனைத்தையுமே பார்த்து வியந்தேன். சாக்கடை வாடையினையே பேருந்தில் செல்லும் பொழுது பொறுத்துக்கொள்ள முடியாத நாம் எங்கே.... அந்த சாக்கடைக்கு அருகிலே குடிசையில் வாழும் அந்த மக்கள் எங்கே....

நொஞ்சு பொறுக்குதில்லையே...