1 ஆக., 2012

புலிகள்...


புலிகள் சிநேகமானவை 

பசியற்று இருக்கும்போது 
கொல்லாமை தத்துவம் 
கொள்பவை..

எப்போதும் 
பதுங்கித்தான் பாயும் 
ஆக்ரோசமான  தாக்குதலாக இருக்கும் 
ஒரே அடி 
மரணம் நிச்சயம் ..

குழுவாகத்தான் வாழும் 
குட்டிகளுக்கு 
பிறந்த நாள் முதலாய் 
வேட்டையாடப் பயிற்சியும் ..

சில சமயம் 
தனியாய்ப் போகும் புலியை 
கூட்டமாக வந்து 
கழுதைப் புலிகள் 
கொல்வதுண்டு..

சிங்கம் அரசாளலாம்,
புலிகளின் காட்டில் நுழைய 
பயம் கொள்ளும் சிங்கம்..

சிங்கம் கிடைத்தவற்றை உண்டு 
வாழ்வை தக்க வைப்பவை, 
பசித்து செத்தாலும்
கொள்கை மாறாதவை 
புலிகள்.. 

ராசராசன் 
ராசேந்திரன் 
பிரபாகரன் 
புலிகளே வரலாறு ...

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

arumai

பெயரில்லா சொன்னது…

புலிக்குட்டிகளை காக்க கழுதைப்புலிகள் மாநாடு போடும் காலமன்றோ கண்ணம்மா!! இந்த கொடுமைய கேட்டு எந்த செவுத்துல போய் முட்டிக்க சொல்லம்மா!!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

புலி பதுங்கி பாயும் காலம் விரைவில் வரும்....

ஹேமா சொன்னது…

குணம் மாறாப் புலிகள்...வாழ்த்துவோம் !

Hai சொன்னது…

இதுதான் வேதனை

//புலிக்குட்டிகளை காக்க கழுதைப்புலிகள் மாநாடு போடும் காலமன்றோ கண்ணம்மா!! //