1990- களில் பரவலக எல்லா ஊர்களிலும்
கேபிள் மூலம் வி.சி.ஆர் எனும் வீடியோ கேசட் பிளேயர்களை உபயோகித்து எல்லா
வீடுகளுக்கும் தினசரி காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்கு மூன்று படங்கள் என
இத்தொழில் ஆரம்பித்தது. இதற்கு முன் தூர்தர்ஷன் மூலம் வெள்ளியன்று
“ஒளியும்,ஒலியும்” மற்றும் ஞயிறு அன்று பழைய திரைப்படம் ஒன்றும் பார்த்து
வந்த மக்களுக்கு தினமும் மூன்று படம் அதுவும் இரவு நேரங்களில் புத்தம்
புதிய படங்கள் பார்க்கலாம் எனும்போது அப்போதே மாதம் நூறு ரூபாய் என்பது
பெரிதாகத் தெரியவில்லை. இந்தியாவில் மும்பையில் இத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட
போதே, கேபிள் சங்கர் சென்னையில் தான் வசிக்கும் அதே பகுதியில் இத்தொழிலை
ஆரம்பித்ததன் மூலம் இத்தொழிலின் அரிச்சுவடி முதல், இன்று மிகபிரமாண்டமாக
வளர்ந்து சென்னையில் டிஜிட்டல் மூலம் ஒலிபரப்பாக வேண்டிய காலத்தில் அரசியல்
காரணங்களால் இத்தொழில் செய்வோர்களும், மக்களும் என்ன விதமான பாதிப்பை
எதிர்கொள்ள நேரிடுகிறது என தனது நேரடியான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது வரை
கேபிள் தொழிலில் இப்போது வரைக்கும் அதே தொழிலில் இருக்கும் பதிவுலக No.1
எழுத்தாளர் கேபிள் சங்கரின் ஏழாவது புத்தகமாக இன்று வெளிவரப்போகிறது
“கேபிளின் கதை”
தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஏன்? இந்திய சினிமா வரலாற்றிலேயே அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றி இருக்கும் ஒரே புத்தகம் கேபிள் சங்கர் எழுதிய ”சினிமா வியாபாரம்” புத்தகம் மட்டுமே. சினிமா உலகில் இப்போது இவர் ஒரு முக்கியமான ஆள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என வெளிவரும் அத்தனை படங்களையும் பார்க்கும் ஒரே ஆள் கேபிள் சங்கர் மட்டும்தான். பார்ப்பதோடு மட்டுமல்லாமல். விருப்பு வெறுப்பின்றி அத்திரைப்படங்களை விமர்சித்து எழுதும் இவரின் விமர்சனங்கள் தமிழ்த் திரை உலகில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இனி வரப்போகும் படங்களையும் பெரிய நடிகர்களின் சில படங்கள் மற்றும் சிறிய படங்கள் அனைத்தையும் இவருக்கு போட்டுக் காட்டி திருத்தங்கள் செய்கிறார்கள். தான் எது செய்தாலும் அதனை மிகவும் தெளிவாகவும் தொலை நோக்குடனும் செய்யவேண்டும் என நினைப்பவர் இவர்.
இவர் எழுதியிருக்கும் “கேபிளின் கதை” புத்தகம் இந்திய மொழிகளில் கேபிள் தொழில் பற்றி இருக்கும் ஒரே புத்தகமும் இதுதான். அமெரிக்காவில் எப்படி கேபிள் தொழில் நுட்பம் துவங்கியது என்பது முதல் பின்னாளில் அது படிப்படியாக விஸ்வரூபம் எடுத்து தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தான் வரை எப்படி இத்தனை சேனல்கள் பார்க்க முடிகிறது என்பது வரை தெளிவாகவும், விரிவாகவும் எழுதியிருக்கிறார். இன்றுவரைக்கும் அரசு இத் தொழிலுக்கான தெளிவான சட்டங்களையும், வழிமுறைகளையும் இயற்றவில்லை என்பது பெருநகரங்களின் தெருக்களில் எக்கச்சக்கமாக செல்லும் கேபிள்களே சாட்சியாக இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? E.S.P.N எனும் ஸ்போர்ட் சேனல் கேபிள் உலகில் செய்த அரசியல் என்ன? என்பதையும் துனிச்சலாகவும், விரிவாகவும் எழுதியிருக்கிறார்.
நம் ஓவ்வொருவர் வீட்டிற்கும் கேபிள் இணைப்போ, டி.டி.ஹெச் எனப்படும் நேரடி சாட்டிலைட் இணைப்போ இருக்கிறது. ஓவ்வொரு கேபிள் ஆபரேட்டரும் அல்லது டி.டி,ஹெச் சர்வீஸ் ப்ரவைடரும் தரும் சேனல்கள் எப்படி எந்தக் கட்டண அடிப்படையில் நமக்குத் தருகிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. கேபிள் ஆபரேட்டர் என்றால் சென்னையில் ரூ.110 ம் (செட் அப் பாக்ஸ் கட்டணம் மாறும்). வெளியூர்களில் ரூ.100 ம் வசூலிக்கிறார்கள். ஆனால் இவர்கள் வசூலிக்கும் தொகையில் கிட்டதட்ட 35% யாருக்குப் போகிறது என நமக்குத் தெரியாது. நாமெல்லாம் கேபிள் ஆபரேட்டர்கள் ஒருமுறை முதலீடு போட்டுவிட்டு அநியாயத்துக்கு சம்பாதிக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் ஒரு கேபிள் ஆபரேட்டராக லோக்கல் போலிஸ் முதல் அரசியல்வாதிகள், ரவுடிகள், சேனல்கள் என தினசரி எதாவது ஒரு பிரச்சினைகளை சந்தித்தே இத்தொழிலை நடத்த வேண்டிய அவலத்தை சொல்லும்போதும். அதனை ஒரு கேபிள் ஆபரேட்டராக இவர் எதிர்கொண்ட விதமும் ஒரு சீரியஸ்சான க்ரைம் த்ரில்லர் படம் பார்ப்பது போன்றவை.
இப் புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் ஆகும். ஒரு பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்த தொழிலை செய்யும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் மேலும் தான் செய்யும் தொழிலில் ஆதி முதல் அந்தம் வரை என்ன நடக்கிறது. கேபிள் தொழில் எப்படி ஆரம்பித்தது அது எப்படி உலகெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்தது. எத்தனை தொலைக்காட்சிகள் கானாமல் போனார்கள். அதன் பின்னனியில் இருப்பவர்கள் யார்?. எதற்காக அரசியல் இதில் விளையாடுகிறது என்பதுவரை ஏகப்பட்ட விசயங்களை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் புத்தக உலகில் மிக முக்கியமான புத்தகம் ”கேபிளின் கதை”.
நாகரத்னா பதிப்பகம் தன் முதல் புத்தகத்தை கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தில் இருந்து துவங்கியது. இப்போது தனது பதிப்பக உலகில் அடுத்த கட்டத்தை எட்டும்போது ”கேபிளின் கதை” புத்தகத்தை வெளியீடுகிறது. இன்று மாலை வெளியிடப்படவிருக்கும் “கேபிளின் கதை” புத்தகத்தோடு மேலும் ஐந்து புத்தகங்களையும் நாகரத்னா பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அதன் விபரங்கள் இந்த இணைப்பில் உள்ளன.
கேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக
புத்தகம் : கேபிளின் கதை
ஆசிரியர் : கேபிள் சங்கர்
பதிப்பகம்: நாகரத்னா பதிப்பகம்
அட்டை வரைகலை : சுகுமார் சுவாமிநாதன்
பக்கங்கள்: 160
விலை : ரூ.100
கிடைக்குமிடங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் நாகரத்னா பதிப்பகம்
தொடர்பு எண்: கேபிள் சங்கர் : 9840332666, குகன் : 9940448599

2 கருத்துகள்:
நன்றி தலைவரே..
நன்றி தலைவரே..
கருத்துரையிடுக