23 நவ., 2012

ஜெகத்தினை அழிப்போம்...

பிரியும் முன்
கடைசி முத்தம்
உவப்பென இல்லை
நடுங்கும் கரங்களில்
மீதமிருக்கும் காதல்
உதிரத்தில்
சிவப்பணுக்களை குறைக்க
தழுவும் உடல்களில்
சரேலென அதிகரிக்கும்
வெப்பம்
இவ்வுலகை எரிக்கும்.

இனி
எப்போதும் நிகழா
எரிமலை வெடிப்பென
இமைகளில் உதிரும்
துளிகள்
சமுத்திரமாகி
இவ்வுலகை மூழ்கடிக்கும்.

பிரிவின் துயர்
இறப்பை நாட
காத்திருக்கும்
நச்சுக் குப்பியில்
இருவர் உயிர்
இன்னும்
சற்று நேரத்தில் கரைந்து
காற்றில் நுழையும்
எம்
கடைசி மூச்சு
புயலென
இவ்வுலகை அழிக்கும்.

காதல்
காதல்
காதல்
காதல் போயின்
சாதல்...

7 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

செந்தில்

நீங்க எழுதுவதற்கு இங்கு எத்தனையோ விசயங்கள் இருக்குது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரிவின் துயரம் இப்படித்தான்...!

semmalai akash சொன்னது…

பிரிவினை அழகான வார்த்தைகளால் ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்

அருமை!

semmalai akash சொன்னது…

இதோ! உங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா சொல்லியிருக்கீங்க....

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான காதல் வரிகள்! நன்றி!