வரும் நாடாளுமன்றத்தேர்தலை மனதில் வைத்து ஈழ அரசியலில் சமீபமாக ஆர்வம்
காட்டி டெஷோவை உலக அளவில் கொண்டு சென்று சேனல் 4 காரனே பாராட்டு பத்திரம்
அளித்த காட்சிகளை நாம் வேடிக்கை பார்க்கும்போதே, ஈழப்பிரச்சினையில்
தொடர்ந்து தீவிரமாக செயல்படும் நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி போன்றோரை
பின்னுக்குத்தள்ளி வெறும் 3 மணி நேர உண்ணாவிரதத்தில் போரை
நிறுத்திக்காட்டிய டெஷோ தலிவரின் அடிபொடிகள் போட்ட வேஷத்தை ஜெயா சாதுர்யமாக
சமாளிக்க யோசித்து காய்நகர்த்த யோசித்துக்கொண்டிருக்கும்போதே (இடையில்
தஞ்சை விவசாயிகள் தற்காலிக அரசவைக் கவிஞர்களாக மாறி மேடத்தை மேகமாக மாற்றி
பொன்னியின் செல்வியாக்கிய மாபெரும் நிகழ்வு இருந்ததால்) லயோலா மாணவர்கள் 8
பேர் காந்திய வழியில் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவிட்டனர். டெஷோ
தலிவர் ஐயகோ! என்னடா மாபெரும் பந்து ஒன்னுக்கு சொல்லி வச்சிருந்தோமே அதனை
இந்த எட்டு பேர் ஒதைச்சு காலி பண்ணிடானுங்களேன்னு முத்துக்குமார் இறுதி
ஊர்வலத்தை திசைதிருப்பி நீர்த்துபோகச்செய்த திருமாவை அனுப்பி செல்லமாக
வாபஸ் வாங்குங்கள் என சொல்லிப்பார்த்தார். இதற்கிடையில் தங்கபாலு போயி
ஒற்றைக்காலணி மட்டும் தந்ததற்காக தன் அல்லக்கைகளுடன் ஒரு குட்டி போராட்டம்
நடத்தினார்.
தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களுமே மன்னாராட்சியே நடத்துகிறார்கள். அதிகார போதையில் அப்பாவி காவல்துறையை(பாவம்தான் இவர்கள்) ஏவி எல்லாப்போரட்டங்களையும் நசுக்குகிறார்கள். முத்துக்குமார் இறந்தபோது ஒரு மாபெரும் மாணவர் போராட்டம் ஏற்பட்டிருக்கும். அதனால் அப்போதே ஈழமக்களுக்கான ஒரு தீர்வை இந்திய அரசாங்கத்தால் முன்னெடுத்துச்செல்ல வைத்திருக்க முடியும். ஆனால் அப்போதைய முதல்வரும் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்த கருணாநிதி அவர்கள் எல்லா பள்ளி, கல்லூரிகளையும் காலவரையின்றி மூடி ஈழம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே கைது செய்து தன் ஆட்சியை பறிகொடுத்து எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட நேற்று வந்த விஜயாகாந்திடம் பறிகொடுத்துவிட்டு இப்போது டெஷோவை தூசி தட்டியிருக்கிறார். தில்லுதொர நெஜமான அக்கறை இருந்தா மொதல்ல காங்கிரஸ் கூட்டணில இருந்து வெளில வரவேண்டியதுதானே.
ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் தவறால்தான் தனக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது எனப் புரிந்துகொண்ட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலே இலங்கைக்கு எதிரான தீர்மானம், கட்சத்தீவு மீட்புக்கான வழக்கு, அகதிகளுக்கு வீடு, ரேஷன் பொருட்கள், மேற்படிப்புக்கான அனுமதி என தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் என்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார். அவரால் மீனவர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்த முடியாவிட்டாலும், கூடங்குளம் பிரச்சினையில் தொடர்ந்து அம்மக்கள் அமைதி வழியில் போராடுவதை அனுமதிப்பதில் மக்களின் மீதான அனுகுமுறையில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டவராகவே கானப்பட்டார். ஆனால் அமைதி வழியில் போராடிய லயோலா மாணவர்களை கைது செய்துவிட்டார்கள் என கேட்டபோது இவரும் முன்னவர் போலத்தானோ என எரிச்சல்தான் ஏற்பட்டது. ஆனால் போரட்ட களத்தில் மாணவர்களுக்கு உதவியாக இருந்த தமிழுணர்வாளர்களை தடுப்புக்காவலில் வைத்திருந்தாலும் காலையில் விடுவித்ததும்( இதுவே கருணாநிதியாக இருந்தால் சீமானுக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்) நாளை 12.03.2012 நடக்கவிருக்கும் டெஷோ பந்தை காற்றுப்போக வைக்கும் ஒரு உத்தியாகவே தெரிகிறது. இவர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடாத வரைக்கும்தான் இந்த நம்பிக்கையும். மேலும் தமிழகம் எங்கும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் மாணவர்களை காவல் துறையை வைத்து மிரட்டாமல் மத்திய அரசுக்கு ஒரு பெரிய அழுத்தத்தை தந்தால். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மின்சார, விலைவாசி பிரச்சனைகளையும் தாண்டி மக்கள் யேடியெம்கேவுக்கே ஓட்டளிக்க வாய்ப்பிருக்கிறது.
மாணவர்கள் போரட்டத்தை மட்டுமல்லாது ஈழப்பிரச்சினையில் தொடர்ந்து எப்போதும் தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் வைகோ, நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி, ராமதாஸ், தமிழருவி மணியன் போன்றோரை இணையத்தில் இயங்கும் நாலு புளியங்கொட்டைகள் கிண்டலடித்து வருகிறார்கள். தம்பிகளா ஒட்டு மொத்தமாக டி.யெம்,கேவை பின்னுக்கு கொண்டுபோகும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு போடாத பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நீங்கள் உங்கள் வாரிசுகளையாவது தன்மானத்துடன் வாழவிடுங்கள். ஏனெனில், பிரபாகரன் எனும் ஒப்பற்ற தலைவன் இனத்துக்காக களத்தில் தன்னையும், குடும்பத்தையும் பலிகொடுத்தார். உமது தலைவன் குடும்பத்துக்காக இனத்தையே பலிகொடுத்தவர்.
காலம் கடந்திருந்தாலும் சரியான சமயத்தில் போரட்டத்தை கையிலெடுத்திருக்கும் மாணவர் சமுதாயத்துக்கு எனது வணக்கங்கள்...