15 ஏப்., 2013

பிசாசுகள் உலவும் நகரம்..

Photo : KRP Senthil
கிராமக்கதைகளில்
நள்ளிரவுக்கு மேல் வரும்
பிசாசுகள் 
நகரங்களில்
பகலெங்கும் உலவுகிறது,
கிடைத்த இடைவெளிகளில்
பேரூந்துகளிலும் 
அலுவலக
மதிய உணவு
நேரங்களிலும்
நெருக்கடி மிகுந்த
ரங்கநாதன் தெருவிலும்
எப்போதாவது
எதிர்ப்படும் பிசாசுகளில் 
பால் பேதங்கள் இருப்பதில்லை,
சிறிய டீக்கடை
அல்லது
கொஞ்சம் நீண்ட
மதுச்சாலை சந்திப்புகளின்
தவற விடப்பட்ட
சொற்களின் குரூரம் 
நள்ளிரவுகளில் 
இமைகளை திறந்து
இம்சிக்க,
அதிகாலை 
தன்
கோரப்பற்களை
காட்டி முறைத்தது 
நான்
நன்கறிந்த
ஒரு மாயப்பிசாசு
நிலைக் கண்ணாடியில் ...

3 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

சென்னையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்படியான பிசாசுகள் நடமாடதான் செய்கின்றன

சீனு சொன்னது…

அட.. ஏன் இப்படி?

இனி நிலைகண்ணாடியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்... என்னை மாயப் பிசாசாக எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது :-)

அகலிக‌ன் சொன்னது…

ப்ரியாவின் வண்ணத்துப்பூச்சியும் அதற்குமுந்தையா வண்னத்துப்பூச்சியும் இப்போதைய பிசாசுகள் உலவும் நகரமும் என தங்கள் கவிதைகளின் ஆழம் வியப்பளிக்கிறது.