21 ஏப்., 2010

தண்டோரா(மணிஜி...) அண்ணாச்சிக்கு..

அண்ணே டோண்டு பற்றிய பதிவுகளுக்கு வருத்தம் தெரிவித்து இருந்தீர்கள்.. அது ஒரு சாதாரண பதிவுதான், அது பெரிதாக ஒன்றையும் சாதிக்காதுதான், ஆனால் நீங்கள் சொல்வதைபோல் அவரும் கருணாதியையோ, ஜெயாவையோ, சங்கராசாரிகளையோ, தேவநாதன் மற்றும் நித்தியையோ கண்டித்து எழுதிவிட்டு, இதையும் எழுதி இருந்தால் இப்படி பதிவுகள் வந்திருக்காது.


நீங்கள் கலைஞரை பற்றி எழுதினால் நிறையபேர் பின்னூட்டம் இடவே தயங்குகிறார்கள் என எழுதி உள்ளீர்கள். இதை நானும் ஒப்புகொள்கிறேன். அடிப்படையில் எல்லோருக்கும் ஆட்டோ பயம். சமீபத்தில் நான் போட்ட பதிவுக்கு( பயோடேட்டா ) ஆட்டோ அனுப்புற அளவுக்கு நீ ஒர்த் இல்லை தம்பி என கருணாநிதியே சொல்லிவிட்டார்.
 
ஆனால் பார்வதி அம்மாள் விசயம் மிகவும் பரிதாபகரமானது, நீங்கள் என்னிடம் சொன்னதுபோல் பெரிசிடம் முன்பே பேசியிருந்தால் நிச்சயம் அது அனுமதி வாங்கி கொடுத்திருக்கும், எனவே அது திட்டமிட்ட அரசியல்தான். ஆனால் விசா கொடுத்துவிட்டு விமான நிலையம் வரை வந்தவரை, வயதின் காரணமாக அனுமதி அளித்திருக்கலாம், அதை ஏன் அவர்கள் செய்யவில்லை?.காரணம் என்னை கேட்கவில்லை அதனால் திருப்பி அனுப்பிவிடு என்பதுதான். எப்படி பார்வதி அம்மாள் வந்த விசயம் வைகோவிற்கும், நெடுமாறனுக்கும், மத்திய அரசிற்கும் தெரிந்ததோ அதைபோல் பெருசுக்கும் தெரிந்திருக்கும். இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கூற்றுப்படி பிரபாகரனே இல்லை என்றாகிவிட்டது, அப்புறம் இந்த கிழவியை வைத்து எப்படி அரசியல் செய்ய முடியும்.
 
டோண்டு இந்த விவகாரத்தை வெறும் அரசியல் நோக்கில் நெடுமாறனையோ, வைகோவையோ கிழித்திருந்தால் அது நியாயம், ஆனால் அப்படி ஒரு போர்வையில் அவர் செய்த நக்கல் எம்போன்றோருக்கு ஏற்றுகொள்வதாக இல்லை. கட்டற்ற இணைய சுதந்தரத்தில் தனி மனித அந்தரங்க விசயங்களையும் சேர்த்து இழுப்பது  நாகரீகம் இல்லைதான். ஒரு புதிய பதிவர் இதனை எழுதி இருந்தால் அது  இந்த அளவிற்கு வந்திருக்காது. ஆனால் பதிவர் டோண்டு மூத்த பதிவர், அவருடைய நிறைய கருத்துகளில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் அனைவராலும் படிக்கப்படுபவர். பதிவுலகை பொறுத்தவரை  ஒரு கலைஞர் அளவிற்கு புகழ் கொண்டவர்தான் அவர் .
 
அவர் எழுதிய கட்டுரை அவரது சுதந்திரம், ஆனால் பார்வதி அம்மாள் பிரபாகரனின் அம்மா மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழனின் முகவரியின் தாய். அந்த கிழவியைபற்றி கலைஞரே இப்படி எழுதி இருந்தாலும் கிழித்து தொங்க விடபட்டிருப்பார் ( ஏன் நீங்கள் கிழிகாததா).
 
டோண்டுவை யாரும் ஒதுக்கிவிடப்போவதில்லை, பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவரை படிக்கும் கூட்டம் நாங்கள், எப்படி பாராட்டுகிறபோது இனிக்கிறதோ... அதைபோல் குட்டுகிறபோது அவர் வருத்தம் தெரிவித்து இருந்தால் ஆட்டம் எப்போதோ முடிந்திருக்கும்.  
 
அப்புறம் போராட்டமா? .... சங்கத்தையே ஒத்துகாதவைங்க நம்ம ஆளுங்க... இதுக்கெலாம் வருவார்களா?? .. 

9 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

டோண்டுவைப் பொருட்படுத்தி எழுத வேண்டாம் என்றிருந்தேன். முடியவில்லை. எங்கே பிராமணன் என்று தேடிக்கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் ’இங்கே பிராமணன்’ என்று நிரூபித்திருக்கிறார். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பாருங்கள். எங்கெல்லாம் பிராமணியத்தின் ஆணிவேரை அசைக்கும் சக்திகள் வெடித்துக்கிளம்புகின்றனவோ, அங்கே கிழியும் பிராமணர்களின் நீதி,நேர்மை என்கிற பொய்த்திரை. ‘மஹாத்மா(!) முதல் குல்லுகப்பட்டர் வரை... இப்போது டோண்டு... இனி அவரைத்தாண்டியும் நீளும். பிராமணியத்தின் எதிர்க்குறியீடான தமிழ்த்தேசியத்தின் ஏக அடையாளம் பிரபாகரன். பிரபாகரன் இறந்தே போயிருந்தாலும் அவரது நிழல்கூட இந்தக்கூட்டத்தை உறங்கவிடாமல் அச்சப்படுத்தும். கழுகின் நிழல் மேலே விழுந்தாலும் பாம்பு அஞ்சி நடுங்கி உடலைச்சுருக்கிக்கொள்ளுமே அது போல. டோண்டுவின் வரிகள் அதைத்தாம் தெளிவாகச்சுட்டுகின்றன. தனிப்பதிவாகப்போட வேண்டியதை பின்னூட்டமாக போட்டுவிட்டேன். தனிப்பதிவை எதிர்பாருங்கள் அண்ணா. என் மனக்குமுறல்களை வார்த்தைகளாக்கும் சக்தியின்றி நான்கு நாட்களாகத் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

Unknown சொன்னது…

நன்றி தம்பி.. நேற்று அண்ணனுடன் சரியாக பேசமுடியவில்லை,

அவரே பதிவாக போட்டபிறகு, பதில் போடுவதுதான் சரி,அப்புறம் கொஞ்சம் டீசண்டா எழுத (உங்கள் பதிவில்) முயற்சி செய்யவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

Unknown சொன்னது…

நன்றி பட்டாபட்டியாரே ...

ராஜ நடராஜன் சொன்னது…

//ஆனால் பதிவர் டோண்டு மூத்த பதிவர், அவருடைய நிறைய கருத்துகளில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் அனைவராலும் படிக்கப்படுபவர். பதிவுலகை பொறுத்தவரை ஒரு கலைஞர் அளவிற்கு புகழ் கொண்டவர்தான் //

உங்கள் இடுகைகளின் இன்றைய தொடர் வாசிப்பில் இருக்கிறேன்.

அடைப்பான் சிரிப்பை வரவழைக்கிறது:)

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி நடராஜன்

Unknown சொன்னது…

//டோண்டுவை யாரும் ஒதுக்கிவிடப்போவதில்லை, பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவரை படிக்கும் கூட்டம் நாங்கள்//

படிப்பது மட்டும் அல்ல, கிழித்து தொங்கப்போடும் கூட்டமும் நாங்கள்தான். இந்த வந்தேறிகள் கூட்டம்
நம்மால் பிழைப்பு நடத்திக்கொண்டு முடிந்தால் நம்மையே கேவலப்ப்டுத்தும்.

இந்த ஆளின் திமிரின் உச்சகட்டம் அந்த பதிவு.
இவர்களுக்கெல்லாம் அவாள் பாஷையிலேயே பதில் சொன்னால்தான் கொஞ்சமாவது உரைக்கும்

Unknown சொன்னது…

நன்றி... பரிதி நிலவன்

ஜோதிஜி சொன்னது…

சொல்லத்தான் நினைக்கின்றேன்.
உள்ளத்தால் தவிக்கின்றேன்.
வாய் இருந்தும்
வார்த்தைகள்.........

ராஜநடராஜன் முதன் முதலாக இது போல ஒரு பின்னூட்டம் கொடுத்துள்ளார் என்றால்?