2 ஜூன், 2010

வீதியில் ஆடும் சாதிப்பேய்கள்

எழுத்துக் கத்தியை 
பழுக்க காய்ச்சி 
மழிக்க பழகுகிறோம் 

வன்மங்களை சேர்த்து வை 
வாய்ப்பு கிடைக்கும்  
காத்திரு - கிடைத்தபின் 
கிளர்ந்தெழு....

எனக்கும் உனக்கும் 
எவருக்கும் இருக்கும் சாதி 
வையவும் வாழ்த்தவும் 

நீ அழகெனில் 
நான் உன்னிலும் அழகு 
நீ அசிங்கம் எனில் 
நான் உன்னிலும்  அசிங்கம் 

இந்தப் பக்கம் 
அந்தப் பக்கம் 
நடுநிலை
வேடிக்கை வாடிக்கை 

அம்மணமாகவே இருக்க 
ஆசைப்படுகிறோம் 
குழந்தைப் பருவம் 
கடந்தும்....

33 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

நச்!

shortfilmindia.com சொன்னது…

இதுல கருத்து கந்தசாமி யாரு..:)

அன்புடன் நான் சொன்னது…

மிக வலிமையான கவிதை...
பாராட்டுக்கள்.

எல் கே சொன்னது…

nacch

Unknown சொன்னது…

//மிக வலிமையான கவிதை...
பாராட்டுக்கள்//

வருத்தமான கவிதையும்..

நன்றி அண்ணே ...

Unknown சொன்னது…

//இதுல கருத்து கந்தசாமி யாரு..:)//

யாரு..? ..

நன்றி கேபிள் சார் ..

Unknown சொன்னது…

நன்றி..

LK...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நான் அழுதுடுவேன், சத்தியமா எனக்கு புரியலை.

vinthaimanithan சொன்னது…

//இந்தப் பக்கம்
அந்தப் பக்கம்
நடுநிலை
வேடிக்கை வாடிக்கை//

”நீங்கள் யார் பக்கம்? நீங்கள் எங்களோடு இல்லையென்றால் பயங்கரவாதத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய?

Ahamed irshad சொன்னது…

Super...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல கவிதை

ஹேமா சொன்னது…

செந்தில் படமே பயமுறுத்துது.

//அம்மணமாகவே இருக்க
ஆசைப்படுகிறோம்
குழந்தைப் பருவம்
கடந்தும்....//

ஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்கிறாங்கபோல !

சொல்லுங்க சொல்லுங்க.
காதில விழட்டும்.

vasan சொன்னது…

நிர்வாண‌வான‌ உண்மை, நித‌ர்ச‌ன்மாய்,
பழுத்த‌பின் 'மா'நிற‌மாகி ச‌தை இனித்தாலும்
கொட்டைக‌ளில் என்றும் உறைந்திருக்கிற‌து
சாதியெனும் காய் வேம்பாய்.
இன்னும் அழுத்த‌மாய் இருக்கிற‌து, செந்தில்.

VELU.G சொன்னது…

அற்புதம் செந்தில்

பெயரில்லா சொன்னது…

பார்ப்பனீயத்தை எதிர்த்து களம் புகுந்திருக்கும் 'சிவராம அய்யர்வாள் மற்றும் ம.க.இ.க' கூட்டனியின் மகத்துவத்தை சொல்லும் பதிவு. அனைவரும் படிக்கவும்.

'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்?'.
http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html

பெயரில்லா சொன்னது…

பெண்குறியை படம் எடுத்துப் போட்ட தமிழச்சியை ஆதரிக்கும் வினவு லீனாவை பெண்குறியை எழுதியதற்காக கேங்க் ரேப் செய்து விட்டு இப்போது நர்சிம் சந்தன்முல்லையை வண்புணர்ந்ததாக எழுதுகிறது

சாரு தன் வளர்ப்பு மகளை வன்புணர்ந்ததாக எழுதிய சிவராமன் இன்று சந்தனமுல்லையின் நட்புக்காக நர்சிமுக்கு துரோகம் செய்து விட்டு வினவை ஆதரிக்க சொல்லுகிறார்

என்ன மனுஷங்கைய்யா :(

Unknown சொன்னது…

//”நீங்கள் யார் பக்கம்? நீங்கள் எங்களோடு இல்லையென்றால் பயங்கரவாதத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய?/



விந்தை மனிதா... நான் மனித நேயம் காக்க சொல்கிறேன்... இங்கு இரண்டு தரப்பினர் தங்கள் முன்னாள் வன்மங்களை கடை விரிக்கிறார்கள்... இரண்டு தரப்பினருமே தனி மனித தாக்குதலில் கரை காண்கின்றனர்...

இதில் வேடிக்கை பார்ப்பவன் நான்... நடத்துங்க நல்ல நாடகம் ....

திருந்தவே மாட்டீங்களா நீங்க..?

Unknown சொன்னது…

நன்றி...

அஹமது இர்ஷாத்

Starjan ( ஸ்டார்ஜன் )

VELU.G

Unknown சொன்னது…

//ஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்கிறாங்கபோல !//

தெருவில் நிர்வாணமாக ஓடினால் அதற்க்கு வேறு பெயர் ஹேமா ..

Unknown சொன்னது…

//நிர்வாண‌வான‌ உண்மை, நித‌ர்ச‌ன்மாய்,
பழுத்த‌பின் 'மா'நிற‌மாகி ச‌தை இனித்தாலும்
கொட்டைக‌ளில் என்றும் உறைந்திருக்கிற‌து
சாதியெனும் காய் வேம்பாய்.
இன்னும் அழுத்த‌மாய் இருக்கிற‌து, செந்தில்//


என்னத்த சொல்ல இவர்கள் அனைவரும் நிரம்ப படித்த, பண்பு நிறைந்தவர்கள்?

Unknown சொன்னது…

//'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்?'.
http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.ஹ்த்ம்ல்//

எல்லா திரைக் கதைகளும் அரங்கேறட்டும் .....

உங்கள் முகவரியுடன் வாருங்கள் நண்பா..

அண்ணாமலை..!! சொன்னது…

தழைக்கட்டும் மனிதம்!

Unknown சொன்னது…

நன்றி...

அண்ணாமலை..!!

பனித்துளி சங்கர் சொன்னது…

//////////அம்மணமாகவே இருக்க
ஆசைப்படுகிறோம்
குழந்தைப் பருவம்
கடந்தும்....///////

ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

//ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும் அருமை //

யாருக்கும் புரியலை.. மிக மோசமான மன நிலை உள்ள ஆட்கள் மத்தியில் இருப்பது கவலை அளிக்கிறது .

நன்றி சங்கர் ..

Riyas சொன்னது…

செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில் பார்வையிட்டேன்.. கவிதைகள் மிக அருமை,,

//நீ அழகெனில்
நான் உன்னிலும் அழகு
நீ அசிங்கம் எனில்
நான் உன்னிலும் அசிங்கம்// சூப்பர்..

உங்களை பிந்தொடர்ந்தும் விட்டேன்..

நேரம் கிடைத்தால் எனது தளத்திற்கும் வந்து பாருங்கள் riyasdreams.blogspot.com

Unknown சொன்னது…

//செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில் பார்வையிட்டேன்.. கவிதைகள் மிக அருமை,,//

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சவுக்கடி வரிகள்

Unknown சொன்னது…

நன்றி....பட்டாபட்டி..

ஜானகிராமன் சொன்னது…

சுடும் நிஜம் செந்தில்.

//அம்மணமாகவே இருக்க
ஆசைப்படுகிறோம்
குழந்தைப் பருவம்
கடந்தும்....//

நிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிகள். ஒளியை நேராக பார்க்கத் தயங்கும் போலி முகங்கள்.

நன்றி

Unknown சொன்னது…

//நிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிகள். ஒளியை நேராக பார்க்கத் தயங்கும் போலி முகங்கள்//

இந்த முகங்களைப் பார்த்து வேதனையா இருக்கு ...

நன்றி ஜானகிராமன்.

காஞ்சி முரளி சொன்னது…

மிருகத்திலிருந்து புனிதனனெனும் 'மனித'னாகிவிட்டான் என்பது பொய்....
ஒவோர் மனிதனின் ஆழ்மனதில்... இன்னும் மிருகம் உறங்கிகொண்டுதானிருக்கின்றன...

தங்கள் கவிதையில்...
///எனக்கும் உனக்கும்... எவருக்கும் இருக்கும் சாதி.... வையவும் வாழ்த்தவும்////
இந்த வரிகள் வலியின்... வேதனையின் வீரியம் மிகுந்த வரிகள்....

இறுதியாய்....
///அம்மணமாகவே இருக்க... ஆசைப்படுகிறோம்.... குழந்தைப் பருவம்... கடந்தும்....////
இந்த வரிகளை வடித்து நிஜங்களின் நிர்வாணத்தை... நிர்வாணமாய் காட்டிவிட்டீர்கள்....

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...

நட்புடன்..
காஞ்சி முரளி....

Sri சொன்னது…

Wow super.......u r very Great
உங்கள் வெளிப்படையான comments எல்லாம் அருமை.
உங்களை பின் தொடர்வது ரொம்ப பெருமையாக இருக்கின்றது.

ஜாதிகள் இல்லையடி பாப்பா.