23 ஜூன், 2010

நான் - நீ - அவன் - அவள் ..


பிரியங்களை காற்றில் முத்தங்களாக 
ஊதித் தள்ளுகிறாய் ..
தள்ளாடும்  காற்று எங்கெல்லாம்  கொண்டு சேர்க்குமோ..

ரகசியமான சமிக்கைகளில் 
பரிமாறும் செய்திகள் காதல் வளர்த்தாலும் 
எப்படியோ தெரிந்துவிடுகிறது சிலருக்கேனும் ..

மேலவீதியின் இருள்கூடும் அந்தியில் 
காணக் கிடைக்கவில்லை நீ ..

மறுநாள் செய்தியில் ..
நிச்சயம் ஆகி விட்டது உனக்கு 
யாருடனோ ..

ஓடிப்போகலாம் 
சண்டைபோட்டு ஜெயிக்கலாம் 
சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் ..
ஆனால் 
அவனையே திருமணம் செய்துகொண்டாய் நீ ...

அதே நான் 
அதே காதலுடன் ..

எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..

அதுவரை காற்று பரப்பிய நம் கதைகளோடு 
வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன் ..
முத்தங்கள் தீர்ந்த கனவுகளோடு ..

29 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

me the firsttu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nallaa irukku

Cable Sankar சொன்னது…

//ஓடிப்போகலாம்
சண்டைபோட்டு ஜெயிக்கலாம்
சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் ..
ஆனால்
அவனையே திருமணம் செய்துகொண்டாய் நீ ...
//

ரெண்டும் ஒன்னூதான்.. :(

இராமசாமி கண்ணண் சொன்னது…

தப்பிச்சோம் வச்சுகுங்க செந்தில்.

ஹேமா சொன்னது…

வரிகள் முழுதும் ஏக்கம்.
நல்லதே நடக்கும் செந்தில்.

நேசமித்ரன் சொன்னது…

சண்டாளிகளுக்கு தேவதைகள் என்றொரு பெயரும் உண்டு
சாவைப் பிசைந்து தரும் முத்தங்களில் ஒட்டியிருக்கும்
பிசாசின் சாயல் விலகுவதே இல்லை எசமானிகள் மரித்தாலும் கொன்றாலும்

ராசராசசோழன் சொன்னது…

காதலில் கசிந்துருகி...உங்கள் கவிதை வரிகள்...

Chitra சொன்னது…

எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..

...... ஆகா.... சைக்கிள் கேப்ல ஆட்டோ விட்டாச்சு..... ம்ம்ம்ம்..... :-)

Karthick Chidambaram சொன்னது…

//எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது .. //

இது வலியா இல்லை வலியை துறக்கும் வழியா ?

ramesh kumar சொன்னது…

ஓடிப்போகலாம்
சண்டைபோட்டு ஜெயிக்கலாம்
சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் ..
ஆனால்
அவனையே திருமணம் செய்துகொண்டாய் நீ ...


அதே நான்
அதே காதலுடன் ..

எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..


அதுவரை காற்று பரப்பிய நம் கதைகளோடு
வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன் ..
முத்தங்கள் தீர்ந்த கனவுகளோடு ..


super varthigal, thangalin varthai penaipukalil sikki thavikum unmaiyana rasigan naan.................. super bro..........

காமராஜ் சொன்னது…

எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..

அதுவரை காற்று பரப்பிய நம் கதைகளோடு
வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன் ..
முத்தங்கள் தீர்ந்த கனவுகளோடு ..////

காதலை அதன் போதீவிரத்தோடும் அதேவளையில் நிஜத்தை அதன் வேதனையோடும் கடந்துசெல்கிற கவிதை. க்ளாஸ்.

காமராஜ் சொன்னது…

செந்தில் படம் என்னென்னமோ பண்ணுதய்யா.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

//எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது //
Super! :))

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

படம் கலங்க வைக்கிறது.கவிதை அதைவிட...இரண்டும் அருமையான பொருத்தம்

ஜெய்லானி சொன்னது…

கவிதைக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருக்குதே..!!

இருந்தும் கவிதை சூப்பர்..!!

LK சொன்னது…

arumaiii

அருண் பிரசாத் சொன்னது…

மிக அருமையான கவிதை, உணர முடிகிறது. ஆனால் படத்தில் பெண்ணை காட்டிவிட்டு, கவிதையில் ஆணின் காதலை சொல்லி இருக்கிறீர்கள். சற்று முரண்படுகிறது

நாடோடி சொன்னது…

வ‌லிக‌ளுக்கு வ‌ழி சொல்லும் க‌விதை... ந‌ல்லா இருக்கு..

தமிழ் வெங்கட் சொன்னது…

//எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..//

வாழ்கையின் நிஜம்..
அது சரி அந்தப்பொண்ணு ஏன் அப்படி.(படத்தில்)

தமிழ் வெங்கட் சொன்னது…

அட அதுக்குள்ளே..படத்தை மாத்திட்டீங்க...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ..
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி படத்தை மாற்றிவிட்டேன் ...

ரமேஷ்

கேபிள் சங்கர்

ராமாசாமி கண்ணன்

ஹேமா

நேசமித்திரன்

ராசராசசோழன்

சித்ரா

கார்த்திக்

ரமேஷ் தம்பி

காமராஜ்

சங்கர்

சதீஷ் குமார்

ஜெய்லானி

எல்.கே

அருண் பிரசாத்

நாடோடி

தமிழ் வெங்கட்

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி ..

நீக்கப்பட்ட படத்துக்கான கவிதை விரைவில் ...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//அட அதுக்குள்ளே..படத்தை மாத்திட்டீங்க...//

நண்பரகளின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றிவிட்டேன் வெங்கட் சார் ..

செந்தில்குமார் சொன்னது…

எல்லாம் இந்த
காதல் காதல் என்ன செந்தில் சரிதானே..

படம் சரியாக உள்ளது...

எங்க போயி வேண்டினாலும் தலையெழுத்தை யாரல மாத்த முடியிம்...

சௌந்தர் சொன்னது…

காதல் கவிதை நல்ல இருக்கு

rouse சொன்னது…

காதல் -மனித -வாழ்க்கையின் -உயிர் நாடி !!!-tsekar

vasan சொன்னது…

நான் என்றால் அது அவ‌ளும் நானும்,
அவ‌ள் என்றால் அது அவ‌ளும் அவ‌னும்.
காத‌ல் என்றால் அது..அது.. கோச‌ட் சிக்கிகிச்சு

VELU.G சொன்னது…

மிக அருமை செந்தில் பிரிவு மிகவும் துக்கமானது

Cable Sankar சொன்னது…

தமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை வரவேற்கிறது..

கேபிள் சங்கர்

ஜெயந்தி சொன்னது…

:)