8 ஜூன், 2010

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

நேற்று மக்களவை உறுப்பினருக்கான வேட்பு மனுவை காங்கிரஸ்காரரான சுதர்சன நாச்சியப்பன் தாக்கல் செய்தார். அவருக்கான வேட்பு மனுவை கலைஞர், ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினருடன் சில காங்கிரஸ் ( நாச்சியப்பன் கோஷ்டி மட்டும்) ஆட்களும் சேர்ந்து தாக்கல் செய்தனர். அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.

வேட்பு மனு தாக்கலின்போது சுதர்சன நாச்சியப்பன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார் அதில் தமிழ்பேசும் அனைத்து மக்களுக்காகவும், தமிழ் நாட்டின் வளங்களுக்காகவும்,  தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அன்னை சோனியாவின் அறிவுரையின்பேரில் மக்களவையில் பேசுவேன் என்றார். என்ன ஒரு நேர்மை, 

நாச்சியப்பன் அண்ணே முதல்ல தி.மு.க காரங்க உங்க பின்னால அணிவகுத்து நின்னப்பவே தெரியும் எப்படிப்பட்ட ஜால்ரா நீங்கன்னு.. அடுத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்படும் வாய்ப்பு உங்களுக்கு இப்போதே வந்துவிட்டது. அப்படியே போய் உங்க அன்னைகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு ராஜபக்சேயிடம் வாழ்த்து பெற்றுக் கொண்டு தமிழர்களுக்கான உரிமைகளை மக்களவையில் ஓங்கி குரலெழுப்புங்கள்..

உங்க அரசியல் குரு சிதம்பரம் ஏற்கனவே அன்னையின் அறிவுரையின்படிதான் நக்சல்களின் பிரச்சனைகளை பேசுகிறார், மன்மொஹன்ஜியும் ராகுலுக்கு கதவு திறந்து விடுகிறார். அவர்களின் நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு.

தமிழ்நாட்டில் உங்க அண்ணன் நடத்தும் செம்மொழி மாநாட்டில் வந்தும் அன்னை சோனியாவின் அறிவுரையின்படி தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு ஆய்வு கட்டுரை கொடுத்தால் நன்றாக இருக்கும். என்ன உங்கள் கட்டுரையில் எல்லா தலைவர்களையும் அவர்கள் தமிழுக்கு, தமிழனுக்கு செய்த சாதனைகளை நல்ல கற்பனையுடன் கூறிவிட்டு அவர்கள் அனைவரின் அறிவுரையுடன் முடிக்கும் உங்கள் ஆய்வுக் கட்டுரை அனைத்து நூலகங்களிலும் நிச்சயம் கிடைக்கும்.

நேர்மைகளின் உருவங்களே.. தமிழக காங்கிரஸ் சிங்கங்களே ... தி.மு.க வினரின் கொள்கைப்படி நடந்துகொள்ளும் நீங்கள் சீக்கரம் தமிழகத்தில் ஜெயலலிதாவோடு அல்லது விஜயகாந்தோடு சேர்ந்து காமராஜர் ஆட்சி அமைக்க வாழ்த்துகிறேன்..

28 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//காமராஜர் ஆட்சி அமைக்க வாழ்த்துகிறேன்..//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

அன்புடன் நான் சொன்னது…

//காமராஜர் ஆட்சி அமைக்க வாழ்த்துகிறேன்..//

நானும் அவ்வண்ணமே!!!

Karthick Chidambaram சொன்னது…

நான் ரமேஷை வழிமொழிகிறேன்

Unknown சொன்னது…

அதரவுக்கு நன்றி ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

T.V.ராதாகிருஷ்ணன்

சி. கருணாகரசு

Karthick Chidambaram

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

நேர்மை எனக்கும் பிடிச்சிருக்கு

AkashSankar சொன்னது…

பொறுக்க தான் முடியல என்ன செய்ய...

Unknown சொன்னது…

அதரவுக்கு நன்றி ...

வெண்ணிற இரவுகள்....!

ராசராசசோழன்

Chitra சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Chitra சொன்னது…

வேட்பு மனு தாக்கலின்போது சுதர்சன நாச்சியப்பன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார் அதில் தமிழ்பேசும் அனைத்து மக்களுக்காகவும், தமிழ் நாட்டின் வளங்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அன்னை சோனியாவின் அறிவுரையின்பேரில் மக்களவையில் பேசுவேன் என்றார். என்ன ஒரு நேர்மை,


....ha,ha,ha,ha,ha....

சௌந்தர் சொன்னது…

ஜெயலலிதாவோடு அல்லது விஜயகாந்தோடு சேர்ந்து காமராஜர் ஆட்சி அமைக்க வாழ்த்துகிறேன்.

ஹா ஹா ஹா புதிய கூட்டணி....

அண்ணாமலை..!! சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!
வாங்க பாஸ்!:)

dheva சொன்னது…

இவுங்களுக்கு எல்லாம் சுதந்திர போராட்ட தியாகின்னு நினைப்பு..... என்ன பண்றது பாஸ் ...? நம்ம தலையெழுத்து....!

Kumar சொன்னது…

//தமிழ்பேசும் அனைத்து மக்களுக்காகவும், தமிழ் நாட்டின் வளங்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அன்னை சோனியாவின் அறிவுரையின்பேரில் மக்களவையில் பேசுவேன் என்றார்//

Ethellaam oru pozhapu....

ஜெட்லி... சொன்னது…

ஹி..ஹி...

Unknown சொன்னது…

அதரவுக்கு நன்றி ...

Chitra

soundar

அண்ணாமலை..!!

dheva

Kumar

ஜெட்லி

Unknown சொன்னது…

//வினவுமீது அவ்வளவு பயமா?சந்தனமுல்லை என்ற சக பதிவருக்காகத் திரண்ட பதிவுலகம் லீனா விசயத்தில் மவுனிகளாக இருப்பதின் தருக்கம் என்ன?//

நண்பரே பதிவு பற்றிய உங்கள் பின்னூட்டத்தை மட்டும் உங்கள் அறிமுகத்துடன் எதிர்பார்க்கிறேன்..

தயவு செய்து மட்டமான வார்த்தை பிரயோகங்களை பொது வெளியில் உபயோகப் படுத்த வேண்டாம்.. எனக்கு அதில் உடன்பாடு இல்லை..
எப்போதும் தனி மனித தாக்குதலை நான் ஆதரிப்பதில்லை.. அது வினவாக இருந்தாலும் சரி.. மற்ற பதிவர்களாக இருந்தாலும் சரி..
அது சாக்கடைக்குள் உழலும் செயல்..

நான் வினவின் பெரும்பான்மையான பதிவுகளுக்கு ஆதரவான ஒருவன்தான்.. ஆனால் சங்கரராமன் என்ற சாதாரண ஒரு அப்பாவியின் வீட்டில் சென்று தாக்கியபோதும், லீனாவின் கவிதைக்கு விளம்பரம் செய்த போதும், சந்தன முல்லை விவாகரத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு வெறுத்துப் போனேன்,..

பதிவுலகம் என்பது சுய சொறிதளுக்கான தற்காலிக இடம் என சுஜாதா ஒருமுறை சொன்னார்.. அது உண்மையாகி வருகிறது..

உங்களால் அனானி கமெண்ட் இடுவதை என் வலைப் பக்கத்தில் இருந்து தூக்கி விட்டேன்..

vasan சொன்னது…

இவுங்க‌ (பேட்டி)அறிக்கையை, யார் ப‌டிக்கிறாங்க‌?
ப‌டிச்சாலும், யார் ந‌ம்புறாங்க‌?
எதுக்கு இந்த‌ தாளுக்கும், மைக்கும்,
ம‌க்க‌ளுக்கும் பிடிச்ச‌ கோடா?
இதைப் போய் பெரிசா பேசிக்கிட்டு,
எழுதிக்கிட்டு, ப‌டிச்சிக்கிட்டு!
அறிக்கை விட்ட‌ சுத‌ர்ன‌த்திற்கே தெரியும்,
இது ஒரு காமெடின்னு.

vasan சொன்னது…

உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் எப்ப‌டி?
இத்த‌கைய‌ பின்னோட்ட‌ம்!!

('கவிஞர்.தணிகை')

Prasanna சொன்னது…

//தமிழ் நாட்டின் வளங்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அன்னை சோனியாவின் அறிவுரையின்பேரில் மக்களவையில் பேசுவேன் என்றார். என்ன ஒரு நேர்மை//

:)))))))))))))))))))

Unknown சொன்னது…

அதரவுக்கு நன்றி ...

vasan

பிரசன்னா

Unknown சொன்னது…

//vasan சொன்னது…
உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் எப்ப‌டி?
இத்த‌கைய‌ பின்னோட்ட‌ம்!!//

வருத்தமாக இருக்கிறது .. அதனால் அனானி கருத்துக்கள் இனி இடம்பெறாது.

ஜெய்லானி சொன்னது…

//காமராஜர் ஆட்சி அமைக்க வாழ்த்துகிறேன்..//

யாருங்க அது காமராஜர் எனக்கு மறந்து போச்சே!!

ஜெய்லானி சொன்னது…

//வருத்தமாக இருக்கிறது .. அதனால் அனானி கருத்துக்கள் இனி இடம்பெறாது.//

செந்திலன்னே!! முதல்ல அந்த கமெண்ட தூக்குங்க படிக்கவே அசிங்கமா இருக்கு...

ரோஸ்விக் சொன்னது…

அவங்க பண்ணுகிற காமெடியை, இன்னும் நீங்க காமெடியா எழுதி இருக்கீங்க... சிரிப்பு சிரிப்பா வருது.

Bibiliobibuli சொன்னது…

அண்ணே இவிக (ஈழத்)தமிழனுக்கோசரம் பேசுரதிலும், பேசாமையே மேலுண்ணே. அதிலையும் அன்னையின் ஆசியோட....... கதிகலங்குதுண்ணே!!

செ.சரவணக்குமார் சொன்னது…

செம்ம காமெடி பாஸ்.

Unknown சொன்னது…

அதரவுக்கு நன்றி ...

ஜெய்லானி

ரோஸ்விக்

Rathi

செ.சரவணக்குமார்

Siraj சொன்னது…

மாநிலங்கள் அவை என்று மாத்தி வாசி