10 ஜூன், 2010

புரட்சி என்பது...

ஒன்றுபடு, 
போராடு., 
வெற்றிபெறுவோம்..,
புரட்சியின் விதி வரையறுக்கப் 
படாதவை..

எல்லா இடங்களிலும் 
நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி 
பின் 
நசுக்கப் படும் புரட்சி ..

மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி 
புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு 
பிடிக்காத வார்த்தை புரட்சி.. 

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும் 
பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..

கடவுள், பக்தன் 
முதலாளி, தொழிலாளி 
அரசு, மக்கள் 
எப்போதும் லாபம் 
தரகர்களுக்கு மட்டும் ..

உன் குடும்பத்தின் 
பட்டினி போக்கிப் 
பின் 
வீதிக்கு வா..
போராடு...
சிறை செல் ..
மரித்துப் போ ..
சுவரொட்டியில் சிரி..

சே.
மாவோ.. 
லெனின் ...
மார்க்ஸ் ....
பெரியார் ...
கொள்கைகளை வீதியில் முழங்கு 
குல தெய்வத்துக்கு 
கெடா வெட்டு ..

இனி 
ஆயுதம் துணை வராது 
அரசாயுதம் அழிக்கும் உன்னை ,
அறிவுப் புரட்சி செய் 
அனுதினமும் தொழில் செய் 
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது மாற்றத்தைக்  கொண்டு வர 
முதலில் நீ மாறு...

28 கருத்துகள்:

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

புரட்சி வெடிக்கும் நண்பா

Karthick Chidambaram சொன்னது…

அருமையான கவிதை.

//எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும்
பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..//

அருமையான வரிகள்

சௌந்தர் சொன்னது…

புரட்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு...

இந்த வரி சூப்பர்

Asiya Omar சொன்னது…

கவிதைப்புரட்சி...அருமை.

Syed Vaisul Karne சொன்னது…

It's really awesome.

Chitra சொன்னது…

இனி
ஆயுதம் துணை வராது
அரசாயுதம் அழிக்கும் உன்னை ,
அறிவுப் புரட்சி செய்
அனுதினமும் தொழில் செய்
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு...



....... APPLAUSE! :-)

தமிழ் உதயம் சொன்னது…

மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி
புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு
பிடிக்காத வார்த்தை புரட்சி..

இது தான் யதார்த்தம்.

AkashSankar சொன்னது…

நச்..இன்று ஒரு கவிதை...

நேசமித்ரன் சொன்னது…

புரட்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு...


மாற்றம் தனி மனிதனில் இருந்து துவங்குகிறது என்பதை சொல்லும் வரிகள்
-----------------------------
இங்கிருந்து தான் துவஙுகியது எல்லாம்
மாற்றமும் துவங்கட்டும் இங்கிருந்தே

vasan சொன்னது…

'இந்தி எதிர்ப்பு மாண‌வ‌ப் போராட்ட‌ம்',
இல்லையினில், க‌ழ‌க‌ம் அர‌சுக்க‌ட்டில் க‌ண்டிருக்காது.
அவ‌ர்க‌ள் அறிந்த‌தால் தான், முத்துக்குமார் எரிந்த‌வுட‌ன்,
சாத்த‌ப்ப‌ட்ட‌து ப‌ல்க‌லை க‌ழ‌க‌ வாச‌ல்.
மாண‌வ‌ன் நினைத்தால் எதையும் மாற்றி விட‌லாமென்ப‌தால்,
ப‌த்துமாத‌த்திற்கெருமுறை வ‌ரும் ப‌ரிட்சையை,
ஐந்துமாத‌திற்கெருமுறை வ‌ருமாறு செம‌ஸ்டாக்கினார்க‌ள்.

மிக‌ச்ச‌ரியாய் சொன்னீர்க‌ள் செந்தில்
"புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு
பிடிக்காத வார்த்தை புரட்சி.."

Unknown சொன்னது…

புரட்சியாளர்களுக்கு நன்றி ..

//புரட்சி வெடிக்கும் நண்பா//

இல்லை நண்பா.. அதனை நீர்த்துப் போக செய்து விடுவார்கள்.. நன்றி வெண்ணிற இரவுகள் ...

//அருமையான கவிதை.//

நன்றி கார்த்திக்..

//இந்த வரி சூப்பர்//

நன்றி சௌந்தர்..

//கவிதைப்புரட்சி...அருமை.//

நன்றி ஆசியா ஓமர் ..

//It's really awesome.//

thanks Syed..

//....... APPLAUSE! :-)//

Thanks Chitra..

//இது தான் யதார்த்தம்.//



நன்றி தமிழ் உதயம்..



//நச்..இன்று ஒரு கவிதை..//



நன்றி இராசராச சோழன் ..



//மாற்றம் தனி மனிதனில் இருந்து துவங்குகிறது என்பதை சொல்லும் வரிகள்
-----------------------------
இங்கிருந்து தான் துவஙுகியது எல்லாம்
மாற்றமும் துவங்கட்டும் இங்கிருந்தே//

அதேதான்.. நன்றி நேசமித்திரன் சார் ..

என் முந்தைய பதிவின் உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் ..

//உங்களோட வாசிப்புக்கும் அனுபவத்துக்கும் வித்யாசப்படும் பார்வைக்கும் நிறைய விஷயங்களை ஆழமா அலசலாமே !//

எனக்கு மிக ஆழமாக பதிவு செய்ய ஆசைதான், ஆனால் நம்மை வாசிக்கும் வட்டாரம் குறுகிப் போய்விடும், மேலும் இப்போதைய சூழலில் பணம் தேடவே மிகுந்த நேரம் செலவிடும்போது ஆழமான இலக்கியம் படிக்க நிறைய நண்பர்களுக்கு பொறுமையும் இல்லை.



என்றாலும் உங்கள் வேண்டுகோளை மதித்து வாரம் ஒரு பதிவு இடுகிறேன் வரவேற்பை பொறுத்து அதிகப் படுத்தலாம்.


//இந்தி எதிர்ப்பு மாண‌வ‌ப் போராட்ட‌ம்',
இல்லையினில், க‌ழ‌க‌ம் அர‌சுக்க‌ட்டில் க‌ண்டிருக்காது.//

உண்மை சார்.. ஈழப் போராட்டம் முத்துக்குமாரின் தியாகத்தால் சரியான திசையில் துவங்கியபோது அதனை தடுத்து நிறுத்த இப்போதைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, நீலிக் கண்ணீர் வடித்தவர்கள் கூட பாடுபட்டனர் என்பதை இயக்குனர் ராமின் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புரிதலுக்கு வந்தனம் வாசன் சார் ...

வால்பையன் சொன்னது…

//மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி
புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு
பிடிக்காத வார்த்தை புரட்சி.. //


மிக சரியா சொன்னிங்க!
ஒரு காலத்தில் இந்தி எதிப்பிற்காக தண்டவாளத்தில் தலை வைத்த மஞ்சதுண்டு, இன்று வாரிசுக்கு சீட்டு வாங்க இந்திக்கு தலை வணங்கி கொண்டிருக்கிறார்!

Unknown சொன்னது…

புரட்சியாளர்களுக்கு நன்றி ...

//மிக சரியா சொன்னிங்க!
ஒரு காலத்தில் இந்தி எதிப்பிற்காக தண்டவாளத்தில் தலை வைத்த மஞ்சதுண்டு, இன்று வாரிசுக்கு சீட்டு வாங்க இந்திக்கு தலை வணங்கி கொண்டிருக்கிறார்!//



புரிதலுக்கு நன்றி தல (வால் பையன்)...

தோழி சொன்னது…

///புரட்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு... ///

நச்...

? சொன்னது…

pls read lot of books and then speak abt that very high matters

ஜெய்லானி சொன்னது…

கடைசி வரி சூப்பர்...!!

Unknown சொன்னது…

புரட்சியாளர்கள் ...

//nice//

என்ன மாவரைகிறதா இதுக்கு கமெண்ட் போடாம இருக்கலாம் ரமேஷ்..

//நச்...//

நன்றி தோழி.. நீங்கள் என்னோட 100 வது பாலோயர்..

//pls read lot of books and then speak abt that very high matters //

அது சரி.. இன்னைக்கு மக்கள் சீனமே முதலாளித்துவத்தில் முன்னணியில் நிற்கிறது, ரஷ்யா காணாது போய்விட்டது, இன அழிப்புக்கு ஆதரவு தருகிறார் பிடல் காஸ்ட்ரோ, இன்னமும் படிக்கணுமாம்.. போய் பொழப்ப பாருங்கப்பு...
நன்றி கேள்விக்குறி...

//கடைசி வரி சூப்பர்...!! //

நன்றி ஜெய்லானி...

Unknown சொன்னது…

எல்லா இடங்களிலும்
நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி
பின்
நசுக்கப் படும் புரட்சி ..

ரசித்தேன்

100 க்கு வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

தோழனே நான் மாறவேண்டும்.நாங்கள் ஒன்றுபட்டு மாறவேண்டும்.அருமையான படமும் வரிகளும்.

புழுங்கிப்போகாமல் புரட்சியோடு இன்னும் நிறைவாய் எழுத வாழ்த்துகள் தோழா.

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்ல சிந்தனை, நல்ல கருத்து

shanmugavel சொன்னது…

hi

Robin சொன்னது…

//புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு
பிடிக்காத வார்த்தை புரட்சி.. // தியான்மென் சதுக்கத்திலேயே கண்டுவிட்டோம்.

pichaikaaran சொன்னது…

"இனி
ஆயுதம் துணை வராது "

nice

Prasanna சொன்னது…

மொத்தமாக அருமை..

//உன் குடும்பத்தின்
பட்டினி போக்கிப்
பின்
வீதிக்கு வா.//

எனக்கு பிடித்த வரி :)

Unknown சொன்னது…

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும்
பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..


கடவுள், பக்தன்
முதலாளி, தொழிலாளி
அரசு, மக்கள்
எப்போதும் லாபம்
தரகர்களுக்கு மட்டும் ..


உன் குடும்பத்தின்
பட்டினி போக்கிப்
பின்
வீதிக்கு வா..
போராடு...
சிறை செல் ..
மரித்துப் போ ..
சுவரொட்டியில் சிரி.. ANNAH, thangalin varigal miga arumai

? சொன்னது…

முதலாளித்துவம் கூடத்தான் உலக அளவில் சப் பிரைம் மோசடில தோத்துது. அத வச்சு மக்கள் தலயில மொளகா அரைக்குது. அதுக்காக முதலாளித்துவ நகரத்த விட்டுட்டு பழைய நிலபிரபுத்துவ கிராம சமூகத்துக்கா மாறிட்டீங்க•.

Robin சொன்னது…

//முதலாளித்துவம் கூடத்தான் உலக அளவில் சப் பிரைம் மோசடில தோத்துது. அத வச்சு மக்கள் தலயில மொளகா அரைக்குது. // முதலாளித்துவம் தலையில் மிளகாய் மட்டுமே அரைக்கும், கம்யூனிசம் தலையையே எடுத்துவிடும்.
எந்த கம்யூனிச நாட்டிலும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடையாது.

? சொன்னது…

முதலாளித்துவம் தலையை மாத்திரமா நாடுகளையே காணாமல் பண்ணவும், ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க்வும், மொத்த மனித இனத்தையே தனது சந்தையில் ஈவிரக்கமின்றி கட்டிப் போடவும் எத்தனை உதாரணம் வேண்டும் ஐயா.