செம்மொழியான தமிழ்மொழி
செந்நிற கைகளால் புகழ் மொழி
செம்மறியான தமிழன்...
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்
கவிமாலை புகழ்மாலை
நீதான் தமிழ்
குஷ்பூவின் தமிழ்..
எல்லோருக்கும் உண்டு விடுமுறை
சொந்த தொலைகாட்சியில்
காசு வாங்கிக் கொண்டு அலப்பறை
சிங்கம்
பெண் சிங்கம்
புலிகள் இல்லவே இல்லை.
அவசரத்துக்கு
சிறுநீர் போக
எங்கேயும் இல்லை
கழிப்பறைகள் .,
சுவரில் இருக்கும்
சித்திரங்கள்
சிறுநீரால் கழுவப்
படும்.
சினிமாவுக்கு வரிவிலக்கு
டாஸ்மாக்கில் இல்லை ரசீது
நோ பார்கிங்
அபராதம் கட்டு.
தமிழில் பெயர்ப் பலகை
வை..
தமிழே..
கலைஞரே..
கலைஞர் தொலைகாட்சியில்
தமிழே..?
இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை..
36 கருத்துகள்:
கொஞ்ச பேராவது இருக்கோமே...கொஞ்சம் உணர்வோட சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்...
இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை.
அருமை வரிகள்....
கூடவே இந்த வரிகளையும் சேர்த்து கொள்ளுங்கள்:
லச்சுமி ராய், த்ரிஷா, சாதனா சர்கம் உடன்
இணைந்து குத்து ஆட்டம் இட்டு
யாப்பு அணி இலக்கணம் வளர்ப்போம்.
//இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை..//
நான் மிகவும் ரசித்த வரிகள்..
செம்மொழிந்தவர்கள் ...
//கொஞ்ச பேராவது இருக்கோமே...கொஞ்சம் உணர்வோட சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்...//
எல்லோருக்கும் இருக்கு வெளிப் படுத்த தயக்கம்.. நன்றி ராசராசசோழன்..
//அருமை வரிகள்....//
நன்றி சௌந்தர் ..
//லச்சுமி ராய், த்ரிஷா, சாதனா சர்கம் உடன்
இணைந்து குத்து ஆட்டம் இட்டு
யாப்பு அணி இலக்கணம் வளர்ப்போம்.//
இதுவும் உண்டுன்னு கேள்விப் பட்டேன்.. நன்றி ராம்ஜி _யாஹூ ...
//நான் மிகவும் ரசித்த வரிகள்..//
நன்றி சயேத் ...
நல்ல கவிதை என்று மட்டும் சொல்லிப் போகமுடியாத ரௌத்ரம் கிளர்த்தும் கவிதைகள்
தொடர்க செந்தில் சார்
சவுக்கடி.
//
இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை..//
உண்மையெல்லாம் வெளில சொல்லக்கூடாது பிரதர்.
நச்சுன்னு இருக்கு கவிதை..!!
அவசரத்துக்கு
சிறுநீர் போக
எங்கேயும் இல்லை
கழிப்பறைகள் .,
சுவரில் இருக்கும்
சித்திரங்கள்
சிறுநீரால் கழுவப்
படும்.]]
சரியே..
கவிதை, படம் இரண்டுமே எங்களின் வலி சொல்கிறது. ஈழத்துப் பிணங்களை தோண்டியெடுத்து நீதி வழங்கினால், பிறகு தமிழ் தன்னில் செழிக்கும்.
//உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை..//
உண்மையான வார்த்தைகள் .
//நீதான் தமிழ்
குஷ்பூவின் தமிழ்..//
ஹா ஹா ஹா
ஜூப்பர் ஷாட்...
இப்படித்தான் மாப்ள உங்களைப்போன்ற கவிஞர்களிடமிருந்து சமூகத்தை சாடுறமாதியான கவிதைகள் அவசியம் ...
சபாஷ்...
படம் எடுத்தவர்களுக்கு ஒரு பாராட்டு.அற்புதம்.
கையிலிருப்பதைப் கொடுத்துவிடக்கூடாதென்ற பாதுகாப்பும் பரபரப்புமாய் பதட்டத்தோடு...
என் இனம் அவன்.
கவிதை அழகு தமிழ் வார்த்தைகள்.பயம் வேண்டாம் செந்தில்.கசாப்புக் கடை ஆட்டைப்போல யாரும் தமிழனைக் கட்டி வைக்கவும் முடியாது.
தமிழன் ஆட்டு மந்தையும் அல்ல.
//இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை..
//
சரியாகச் சொன்னீர்கள் செந்தில்
அண்ணே, இதை யாராவது கொண்டு போய் செம்மொழி மாநாட்டுலே வாசிச்சிறப் போறாங்கண்ணே, எதுக்கும் ஒரு காப்பிரைட் பார்சல்! :-)
//அவசரத்துக்கு
சிறுநீர் போக
எங்கேயும் இல்லை
கழிப்பறைகள் .,//
Appadiye irunthalum, Rs 2 irukanum kaila
ராசராசசோழன் சொன்னது…
கொஞ்ச பேராவது இருக்கோமே...கொஞ்சம் உணர்வோட சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்...
செம்மொழியான தமிழ்மொழி
செந்நிற கைகளால் புகழ் மொழி
செம்மறியான தமிழன்...
இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை.. super annah, super varthigal
நண்பரே நச்சென்று குட்டியுள்ளீர். நன்றி.
வீரியமானக் கவிதை.
பாராட்டுக்கள்.
உக்கிரமான கவிதை.
கவிதையில் உங்களின் சமுதாய சிந்தனைக்கு பாராட்டுக்கள்.
இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும்
கசாப்புக் கடை ஆடென
தமிழன் வாழ்க்கை..
...... கவிதையில் ஒரு சவுக்கடி.
படித்தேன் தம்பி அருமை
செம்மொழிந்தவர்கள் ...
நேசமித்திரன்
முனைவர் குணசீலன்
ரமேஷ்
ஜெய்லானி
புன்னகை தேசம்
ரதி
நண்டு @நொரண்டு -ஈரோடு
வசந்த் மாப்ள
ஹேமா
வேலு
சேட்டைக்காரன்
குமார்
தமிழ் உதயம்
ரமேஷ் தம்பி
ஜெய்
கருனாகராசு
ஜெயந்தி
ஆசியா ஓமர்
சித்ரா
தியாகு அண்ணன்..
ஆதரவளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த வந்தனம்.. நன்றி.
ரொம்ப சூடா இருக்கு கவிதை.
வரிக்கு வரி - கோபம்! தார்மீக கோபம்!
senthil, I told priyamani, laksmi rai, saadhana sargam dance is there in Fetna tamil conference in USA with the support of eelath tamilarkal.
தழை போட்டு,
தாவிடுமோ?
தளை போட்டு,
தலை வெட்டும்
தலைமை.(வாரிசுகளுக்கான நேர்த்திக்கடன்.)
அதன் கயமை அறியா
ஆட்டு மந்தைகளாய் நாம்.
நூறு பககங்களில் சொல்வதை
நறுக்குன்னு எட்டு பாராவில்.
மரங்களை எல்லாம் வெட்டி பலி கொடுத்து ... இதெயும் சேர்த்துக்கோங்க
ரஹ்மான் இசையில் அந்த செமொழிப் பாடல் - அது தமிழாமே
அந்த பாட்டில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை சரியாக கண்டுபிடுத்துத் தருபவர்களுக்கு மாநாட்டில் முக்கிய பரிசு கூட வழங்கலாம்
உங்கள் தளம் முழுதும் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது . கவனிக்கவும்
உண்மை நண்பா ...ஈழம் பிணத்தில் கவிதை எழுதுகிறார் கலைஞர் , அடிமட்ட தொண்டன் இன்னும்
சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டிருக்க , குஷ்பு போன்ற சீமாட்டிகளின் கட்சி ஆனது தீ மூ கா
romba nalla irukku...
நல்ல கவிதை. கையோடு வினவு.காம் தளத்திற்கு சென்று தோழர் துரை சண்முகம் கவிதையையும் வாசித்து வந்துவிடுங்கள். வாழ்த்துக்கள்
சித்திரகுப்தன்
கருத்துரையிடுக