மொரிசியஸ் தமிழர்கள் வசிக்கும் நாடுகளுள் ஒன்று. அங்கு எங்களுக்கு ஒரு அலுவலகம் இருந்தது அதை எம் பங்குதாரர்களில் ஒருவரான ராஜாராமன் பார்த்துக் கொண்டதால் எனக்கு அங்கு வேலையில்லை, ஒருமுறை வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டி அங்கு என்னென்ன செய்யலாம் என ஆராய அங்கு சென்றேன். ராஜாராமன் ஊருக்கு வந்துவிட்டதால் அங்கு இருந்த ஆக்லூ எனும் கிரியோல் காரர் எனக்கு உதவுவார் எனச்சொன்னார்.
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜாராமன் நண்பர் தன் ஆட்கள் ஐந்து பேர் மொரிசியஸ் செல்வதாகவும் அவர்களை நான் அழைத்துசென்று ஒரு ஹோட்டலில் தங்கவைத்தால் போதும் அதன்பிறகு இன்னொரு நபர் அவர்களை வந்து அழைத்து செல்வார், அவர்கள் அனைவரும் மொரிசியஸ்க்கு வேலை தேடி செல்வதாகவும் சொன்னார். நானும் அதில் எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை அழைத்துப் போகிறேன் என சொன்னேன். ராஜாராமன் அவர்கள் அனைவரும் சும்மாதானே போகிறார்கள் நம்மகிட்ட ஏற்றுமதிக்கு உள்ள சுடிதார்களை மட்டும் அவர்கள் பேரில் லக்கேஜ் போட்டுக்கொள்கிறேன் என்றார்.
சென்னை விமான நிலையத்தில்தான் அவர்களை சந்தித்தேன். அப்போது வந்த ராஜாராமன் ஹோட்டல் புக்கிங் இல்லாமல் அங்கு இறக்க மாட்டார்கள், நான் ஒரு ஹோட்டலுக்கு பேசிவிட்டேன் என அந்த ஹோட்டலின் முகவரி தந்தார். விமானத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டபோதுதான் அவர்கள் மொரிசியசுக்கு வேலைக்கு போகவில்லை.. அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு அங்கிருத்து பிரான்ஸ் செல்லப் போகிறார்கள் என்று.
சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டோமே எனக் குழப்பமாக இருந்தது, அவர்களிடம் நான்தான் அவர்களின் கைடு என்றும் அவர்கள் தமிழகத்தில் இறால் பண்ணை வைத்திருக்கிறார்கள் என்றும், வருடத்திற்கு ஒருமுறை சுற்றிப்பார்க்கப் போவோம், இந்தமுறை மொரிசியஸ் அப்படியே ஏற்றுமதி வாய்ப்புகளையும் பாப்போம் என்று சொல்லச் சொன்னேன்.இதைதவிர அங்கு யார் என்ன கேட்டாலும் மாற்றி சொல்லக் கூடாது எனவும் சொன்னேன்.
மொரிசியஸ் விமான நிலையத்தில் எங்கள் ஹோட்டல் புக்கிங் கேட்டபோது, ஹோட்டலின் விசிட்டிங் கார்ட் கொடுத்தேன், அவர்கள் ஹோட்டலை விசாரித்தபோது போன் மட்டும் செய்தார்கள் புக்கிங் செய்யவில்லை என சொல்லி விட்டார்கள். அவ்வளவுதான் என்னைத் தனியாகவும் அவர்கள் ஐந்து பேரைத் தனியாகவும் அழைத்து சென்றனர்.
என்னை விசாரித்தவர் என்னை உட்கார சொல்லவில்லை, நானாகவே அங்குள்ள இருக்கையில் அமர்ந்ததும் அவர் உன்னை நான் உட்கார சொல்லவில்லை என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் மிகக் கடுமையாக என்னைக் குற்றவாளிபோல் நடத்தினால் நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றேன். அதற்கு நான் இன்டர்போல் போலிஸ் நான் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார். நீங்க மொரிசியஸ் பிரதமர் என்றாலும் எனக்குப் பயம் இல்லை. நான் ஒரு இந்தியன் இங்கு சுற்றுலா வந்திருக்கிறேன், முதலில் என்ன காரணத்திற்கு என்னை அழைத்து வந்தீர்கள் என சொல்லவில்லை, மேலும் எனக்குத் தெரியும் நான் குற்றம் எதுவும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றேன்.
அதன்பிறகு அவர் சற்று இறங்கிவந்து அந்த ஐவரையும் எங்கு அழைத்து செல்கிறாய் என்றார். நான் குழப்பாதீர்கள் தெளிவாக சொல்லுங்கள் என்றேன். அவர் நீ அவர்களை கள்ளத்தனமாக வேறெங்கோ அழைத்து செல்லத்தான் மொரிசியஸ் அழைத்து வந்திருக்கிறாய் என்றார். கடுப்பான நான் மிஸ்டர் நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம், முடிந்தால் அனுமதியுங்கள் அல்லது திருப்பி அனுப்புங்கள் முட்டாள்தனமாக கேள்வி கேட்க வேண்டாம் என்றேன். அவரோ எனக்கு தெரியும் நீ அவர்களை எங்கேயோ அழைத்து செல்லத்தான் இங்கு கூட்டி வந்திருக்கிறாய் உணமையைச் சொல் என மிரட்டினார்.
எனக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அப்படியே நான் அழைத்துப் போனாலும் உங்கள் நாட்டுக்கு என்ன பிரச்சினை, நீங்கள் ஒன்றும் உலகப் போலிஸ் அல்ல, முடிந்தால் அனுமதியுங்கள் இல்லை திருப்பி அனுப்புங்கள் நான் இந்தியா சென்றதும் அங்கு உள்ள ஊடகங்களில் யாரும் மொரிசியஸ் செல்லவேண்டாம் அங்கு நமக்கு மரியாதை இல்லை என சொல்கிறேன். இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச விரும்பவில்லை என கத்தினேன். உடனே அவர் என்னை அங்கு அமரவைத்துவிட்டு சென்று விட்டார். எனக்கு கவலையே அந்த ஐவரும் மாற்றி சொல்லக் கூடாதே என்பதுதான்.
அதன் பிறகு நடந்தவற்றை நாளைய பதிவில் சொல்கிறேன் ..
25 கருத்துகள்:
சுவாரஸ்யம்!!! :))
todarungal
தைரியமானவர் தான் நீங்கள்...
சூப்பர் பாஸ் நீங்கள்.....
Sudden break...... Interesting!
then what happneed???? write soon
நல்ல அனுபவம் .
அனுபவத்தை சீக்கிரம் சொல்லுங்க...
ஐந்துபேரும் சரியா சொன்னாங்களா இல்லியா?
நடை மிகவும் அருமை....காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு.
//அதன் பிறகு நடந்தவற்றை நாளைய பதிவில் சொல்கிறேன் ../ /
பிளாக்கர் இந்த வாரம்,
மொரிசியஸ் போலீசிடம் குமுறக் குமுற அடிவாங்கினாரா செந்தில். செந்திலின் கண்ணீர் பேட்டி. மேலும் விவரங்களுக்கு www.krpsenthil.blogspot.com படியுங்கள்....
அனுபவம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.
ம்ம்ம்ம்...இப்பிடி எத்தனை அனுபவம் செந்தில்.
நினைச்சாலே பயமாயிருக்கு இப்போ !
நம் மீது தவறு இல்லை என்றால் -யாருக்கும் பயப்பட தேவை இல்லை -
நான் உங்கள் தயீரியத்தை-பாராடுகீறன்
-tsekar
HI FRIEND :)
VISIT MY BLOG AND FOLLOW MY PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
படிக்கிற எங்களுக்கே டென்சனாகுது...
அடுத்த இடுகைக்கு காத்திருக்கிறேன்
m appuram
cablesankar
சூப்பர்ர்ர்..அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..
நான் மொரீஷியஸ்இல் தான் வசிக்கிறேன். இங்கு அப்படி எதுவும் கடுமையில்லை என்பது என் அபிபிராயம். உங்கள் அடுத்த பதிவை பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன். தொடருங்கள் நண்பா!
vist my blog and follow pleasehttp://thenral2010.blogspot.com
அட,,,,, என்னாச்சு செந்தில்.....அப்புறம்...? சீக்கிரம் போடுங்க....சுவாரஸ்யத்தின் உச்சத்தில் இருக்கிறேன்....!
அனுபவம் ரசித்தவர்கள் ..
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
LK
ராசராசசோழன்
soundar
Chitra
பார்வையாளன்
நண்டு @நொரண்டு -ஈரோடு
நாடோடி
ப்ரியமுடன்...வசந்த்
முனியாண்டி
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ஜெயந்தி
ஹேமா
rouse
Pepe444
நிகழ்காலத்தில்...
shortfilmindia.com
Mrs.Menagasathia
அருண் பிரசாத்
tamil blog
dheva
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...
அருமையாக உள்ளது நண்பரே ! தொடருங்கள்.
suvaiyan thigil payana anubavam. naalai enna aavalaaga irukkiren-meerapriyan
பக்கென்று இருக்கு படிக்கும் போதே..
கருத்துரையிடுக