21 ஜூன், 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் (இறுதி பாகம் )

                      ஏர்போர்ட் வந்தவுடன் எல்லோருக்கும் போர்டிங் செய்தவர்கள் என்னை மட்டும் காத்திருக்க சொன்னார்கள். போர்டிங் முடியப் போகும் நேரம் நான் மறுபடியும் அவர்களை ஏன் காத்திருக்க சொல்கிறீர்கள் என்றேன். அதைப் பற்றி இமிக்ரேசனில் விசாரியுங்கள், உங்கள் பாஸ்போர்ட் இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை என்றனர்.

                            நான் இமிக்ரேசன் அதிகாரியிடம் சென்று கேட்டேன், அவரோ இன்னைக்கு விமானம் தாமதமாக  புறப்படும் எனவே காத்திருங்கள் உங்களுக்கு அப்புறம்தான் பாஸ்போர்ட் தருவோம் என்றனர். நானோ மற்ற அனைவரும் போர்டிங் போடும்போது என்னை மட்டும் ஏன் தாமதப் படுத்துகிறீர்கள் என்றேன். அவரோ பாஸ்போர்ட் இப்ப கொடுத்த நீ ஓடிப் போயிட்டா என்ன பண்றது என்றாரே பார்க்கலாம். எனக்கு கோபம் மூக்குக்கு வந்தது.

                                        யோவ் என்ன நெனக்கிறீங்க என்னைப் பத்தி, ஊருக்கு போகனுன்னு வந்திருக்கேன், ஓடிடுவேன்னு சொன்னா எப்புடி, எனக்கு இப்ப போர்டிங் போட முடியுமா? இல்லையா என்றேன். அவரோ உன் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருக்கிறார்கள் அது ஏன்னு தெரியல அதனால்தான் கடைசி நேரத்தில் உனக்கு கொடுப்போம். நீ எங்களின் மேலதிகாரியுடன் பேசிக்கொள் என்று மேலதிகாரியை அழைக்கப் போய்விட்டார். என் சிம் கார்டில்தான் என் பாஸ்போர்ட் வாங்கி வைத்த அதிகாரியின் தொலைபேசி என் இருந்தது நினைவுக்கு வந்தவுடன், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், ஹோட்டலில் அவர்கள் சிம்  கார்டை பயன்படுத்தவில்லை.

                           மேலதிகாரி வந்து ஏர்லைன்ஸ் நபர்களுடன் பேசினார், பின் என்னைபார்த்து அனேகமாக இன்னைக்கு விமானம் கிடையாது நீ ஹோட்டலில் சென்று தங்கிவிட்டு நாளைக்கு வா என்றார். நானோ என்னால் திரும்பிப் போக முடியாது, நீங்கள்தான் அதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும் என்று கூறினேன். அவர்களோ போர்டிங் போட்டால் மட்டுமே எங்கள் பொறுப்பு இப்போது உனக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றனர்.

                                      நான் அதிகாரியிடம் என்னால் திரும்பிப் போக இயலாது, என் பாஸ்போர்ட் இப்போதே வேண்டும், அதனை எதற்காக அவர்களே வைத்திருந்தார்கள் எனக் கேட்டுவிட்டு கொடுங்கள் என்று சத்தம் போட அவர்கள் பாஸ்போர்ட் கொண்டு வந்து கொடுத்துவிட்டனர். ஆனால் ஏர்லைன்ஸ் ஆட்கள் போர்டிங் கிடையாது விமானம் நாளைக்குதான் என சொன்னார்கள். எனக்கு வந்ததே கடுப்பு மிகக் கோபமாக எல்லோரையும் கத்தினேன். ஒரு அதிகாரி சமாதானம் செய்து போர்டிங் போடசொன்னார். உள்ளே வந்து இமிக்ரேசன் கிளியரன்ஸ் முடிந்து மீண்டும் மோரிசியசுக்குள் வர புதிய விசா தந்தனர். 

                                         அங்கிருக்கும் பயணிகள் அனைவருக்கும் ஏற்கனவே உணவு வழங்கப்பட்டு விட்டன. எனக்கான உணவை சென்று கேட்டதும் , ஏற்கனவே என் மீது பிணக்காக இருந்த ஏர்லைன்ஸ் ஆள். இப்போது முடியாது நீ பிரச்சினை செய்துகொண்டே இருக்கிறாய் இதுக்கு மேல் உன் மீது  இங்கு புகார் கொடுக்க வேண்டிவரும் என எச்சரிக்க. நான் அதைக் கேட்டவுடன் சத்தமாக சிரித்தேன். அவர் என் சிரிக்கிறாய் என்றார். அதற்கான விடை விரைவில் உங்களுக்கு தெரியும் என்றேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக் கொள் என்றார். அப்போது என் அருகில் இருந்த ஒரு பெண்மணிக்கு வலிப்பு வந்து என் மேல் சாய்ந்து விட்டார், நாங்கள் இருவருமே தடுமாறி கீழே விழ அப்புறம் டாக்டர் வந்து பரிசோதித்து எங்களை ஹோட்டலுக்கு அனுப்ப தாமதமாகிவிட்டது.

                                               ஹோட்டலுக்கு வந்தவுடன் நான் எனக்கு உணவு வேண்டும் என்றேன். அவர்கள் உங்களுக்கு காலையில் இருந்துதான் கணக்கு, இப்போது தனியாக பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட அறைக்கு போனதும் முக்கியமானவர்களுக்கு யாருக்கேனும் விமானம் ரத்தானது பற்றி தெரிவிக்கலாம், உங்களுக்கு மூன்று நிமிட அழைப்பு இலவசம் என்றனர். 

                                                 அறைக்கு சென்றவுடன் மூன்று நிமிடம் வருமாறு பார்த்துக் கொண்டு எனக்கு தெரிந்த எல்லோருக்கும் சும்மா போன் செய்தேன். கிச்சனுக்கு கூப்பிட்டு எனக்கான உணவை ஆர்டர் செய்தேன். ரெண்டு லார்ஜும் வந்தது சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலை மற்றும் மதியம் இரண்டு வேலையும் அப்படியே குடிப்பது, கடலில் சென்று குளிப்பது கிச்சனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது இப்படியாக கழிந்தது, இடையில் ஒரு அல்லேலூய கோஷ்டியின் தொல்லை தனிகதை. அன்று மாலை விமான நிலையத்துக்கு செல்வதற்கு தயாராகும்படி போன் வந்தது, தயாராகி ரிசப்சன் சென்றதும் என் பெயரை மட்டும் தனியாக கூப்பிட்டு ஒரு பில்லை நீட்டினர் Rs.12500 க்கு பில் குடித்ததுக்கும், சாப்பிட்டதுக்கும். போன் பேசியதற்கும்.

                                                ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்றேன். இல்லை உங்கள் அனைவருக்கு தனியாக பபே இருந்தது நீ அங்கு வந்து சாப்பிட்டு இருக்கவேண்டும். அங்குதான் உங்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். மேலும் ஒரு மூன்று நிமிட அழைப்பு மட்டுமே இலவசம் மற்றதெல்லாம் காசு அப்புறம் நீ ஆர்டர் செய்த  உணவுக்கான கட்டணம் எல்லாம் நீதான் கொடுக்கவேண்டும் என்றனர். நான் சிரித்துக் கொண்டே நீங்கள் இந்த பில்லை யார் ரூம் புக் செய்தார்களோ அவர்களுக்கு அனுப்புங்கள் என்றேன். அவர்கள் குழம்பி ஏர்லைன்சை கூப்பிட அவர்களும் நீதான் கட்டவேண்டும் என்றனர். நான் என்னால் கட்டமுடியாது என்று போனை வைக்க எல்லோரும் என்னால் தாமதம் ஆக வேறு வழியின்றி ஏர்லைன்ஸ் தான் கட்டுவதாக ஒப்புக் கொண்டு விமான நிலையத்தில் என்னிடம் வசூலித்து கொள்வதாக சொன்னது.

                                                     விமான நிலையத்தில் போர்டிங் இமிக்ரேசன் கிளியரன்ஸ் முடிந்து என்னை தனியாக அழைத்தனர். அங்கு என்னை அலட்சியப்படுத்தி அதற்க்கு நான் சிரித்த அதே ஆள். அவன் முகத்தில் கோபம் பொங்கி வழிய காட்டிக் கொள்ளாது பணத்தை செட்டில் செய் என்றான். நான் ஒன்றுமே பேசாது என் இன்சுரன்ஸ் மற்றும் ட்ரவல்ஸ் விசிடிங் கார்ட் இரண்டையும் கொடுத்தேன். அப்போதுதான் அவனுக்கு புரிந்தது, நான் யார் என சாரி சார் நேற்று அப்படி பேசியிருக்க கூடாது, தயவு செய்து பிரச்சினை வேண்டாம் நீங்கள் நல்லவிதமாக ஊருக்குப் போங்கள் என்றான்.

                                                அவன் அப்படி பெட்டிப் பாம்பாக ஏன் அடங்கினான் என சக பயணிகள் விசாரித்தனர். பொதுவாகவே விமானப் பயணத்திற்கு என தனிக் காப்பீடு உள்ளது. நாட்கணக்கில் அவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஒவொன்றுக்கும் தனித்தனி இழப்பீடு உண்டு. நமக்கான விசயங்களில் என்ன நடந்தாலும் அவர்கள்தான் சரி செய்வார்கள். நான் அதைக் காட்டியதும் அவர் அடங்கிப் போனதற்கு அதுதான் காரணம் என் மேல் ஏர்லைன்சுக்கு க்ளைம் இருந்தாலும் எனக்கு அதற்கான நோட்டிஸ் அனுப்பித்தான் பெற்றுக் கொள்ள முடியும். ஊருக்கு வந்தபின் தாமத பயணத்திற்கு காப்பீட்டு நிறுவனத்தில் நான் க்ளைம் போட்டு வாங்கிவிட்டேன். அப்போது கூட ஏர்லைன்ஸ் ஹோட்டல் பில் பற்றி எதுவும் சொல்லவில்லை.

                                               ஊருக்கு வந்து அந்த ஏஜெண்டை என் அலுவலகத்திற்கு வரவழைத்து சத்தம் போட்டேன், அவனோ தானும் ஏமாந்துவிட்டேன் என்றும் அவர்களின் பணத்தை ஊருக்கு வந்தவுடன் செட்டில் செய்கிறேன் என்று சொன்னான். அடுத்த வாரம் அவர்களை விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வந்து ஒருநாள் சென்னையில் தங்கவைத்து அனுப்பினேன், அவர்கள் அனைவரும் நான் அவர்களுக்கு செலவு செய்த தொகையை ஊருக்கு சென்று அனுப்பி வைப்பதாக சொன்னார்கள், நான் மறுத்துவிட்டு ஊருக்குப் போய் பணத்தை திருப்பி வாங்குங்கள் என்றேன். அதற்குபின் அடிக்கடி தொடர்பில் இருந்தார்கள். பாதிப்பணம் கூட செட்டில் ஆகவில்லை என வருத்தப் பட்டார்கள்.

                                              இன்றுவரை அதில் ஒருவர் மட்டும் தொடர்பில் இருக்கிறார். தற்சமயம் துபாயில் இருக்கிறார் அவர். இன்றுவரை நிறைய பேர் வெளிநாட்டு மோகத்தால் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். நானும் போனவருடம்  மூன்று பேருக்கு சிங்கபூருக்கு செல்ல என் நெருங்கிய நபர் பெயரை பரிந்துரைக்க அதில் பிரச்சினை ஆகி பணம் வராமல் நீதானே அவனை நல்லவன் என்று சொன்னே என மூவரும் தகராறு செய்ய நான் கையிலிருந்து காசு கொடுத்து அனுப்பினேன். 

பயணங்கள் தொடரும் ....

29 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நிறைஞ்ச தூணிச்சல்தான் உங்களுக்கு.
நல்ல அனுபவம்தான் செந்தில்.

ஜெய்லானி சொன்னது…

ஆஹா..தொடருமா..போடுங்க ..போடுங்க..

Chitra சொன்னது…

எப்படி எல்லாம் நாட்டில் மக்கள் நடந்து கொள்கிறார்கள்......!!! உங்கள் அனுபவம் ரொம்ப வித்தியாசமா இருக்குதுங்க.. பகிர்வுக்கு நன்றி! தொடர்ந்து சொல்லுங்க....

அன்புடன் நான் சொன்னது…

இது ஒரு தில்லான பயணம் தான்......
தொடருங்க தொடருங்க...

அன்புடன் நான் சொன்னது…

வலையமைப்பு அருமை... Facebook Badge ரொம்ம சின்னதா இருக்கு என்னன்னு பாருங்க...

க ரா சொன்னது…

நிரைய தில்லுதான் உங்களுக்கு.

எல் கே சொன்னது…

intha mathiri kalavaaninga niraya perunga irukknaga

Paleo God சொன்னது…

தொடருங்க..! :))

ஜானகிராமன் சொன்னது…

தேவையான பதிவு. இங்கிருப்பவர்களின் விழிப்புணர்விற்காகவாவது இது போன்ற அனுபவங்களை வெளியிடுங்கள். சுவாரசியமாகவும் இருந்தது. நன்றி.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அடி தூள் நண்பா ..
விடாகண்டனுக்கு கொடா கண்டனா இருக்கீங்க!! சூப்பர் !!

Asiya Omar சொன்னது…

ஒரு போர்ட்டில் இருந்து இன்னொரு போர்ட்டிற்கு போகும் பொழுது அதிகம் அதிகாரிகளிடம் அமைதியாக போய் விடுவது நல்லதுன்னு கேள்வி பட்டிருக்கேன்,நீங்க தைரியமாக பேசியது ஆச்சரியம்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

சான்ஸே இல்ல, அது எப்படி ஒவ்வொரு கட்டட்த்திலுக்ம் நீங்களே ஜெயித்துக்கொண்டே வந்தீர்கள்,

நல்லா நெளிவு சுளிவுகளை கற்று வைத்ததற்கு வாழ்த்துகள்

நாடோடி சொன்னது…

ப‌ய‌ண‌ங்க‌ள் ப‌ல‌வித‌ம்.... தொட‌ருங்க‌ள்...

ஜெயந்தி சொன்னது…

இப்படி இடங்களிலெல்லாம் தைரியமா இல்லாட்டி அவ்வளவுதான் போல.

சௌந்தர் சொன்னது…

நல்ல போகுது தொடருங்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நிரைய தில்லுதான் உங்களுக்கு. //

அப்ப செந்தில் அண்ணன் தில்லு துரைன்னு சொல்லுங்க..

மங்குனி அமைச்சர் சொன்னது…

எனக்கு வந்ததே கடுப்பு மிகக் கோபமாக எல்லோரையும் கத்தினேன். ஒரு அதிகாரி சமாதானம் செய்து போர்டிங் போடசொன்னார்.///


"அடி உதவுற மாதிரி அண்ணதம்பி கூட உதவ மாட்டான் " இந்த பழமொழி அங்கயும் வேலைசெய்தா ???

ஹுஸைனம்மா சொன்னது…

விமானக் கட்டணத்துடன் (உயிர்)காப்பீடு வழங்கப்படும் என்பது தெரியும். நீங்கள் எடுத்தது என்ன விதமான காப்பீடு என்பதை விளக்க முடியுமா?

Karthick Chidambaram சொன்னது…

Nice Post Senthil. Ithu maathiriyaana anupavangal veliyil pagirapadavendum.

Ungalayum ungal thairiathayum paarattiye aagavendum.

Vaalthukkal!

thanks,
Karthick

அமுதா கிருஷ்ணா சொன்னது…

படிக்க ரொம்ப நல்லாயிருக்கு.அனுபவங்கள் தான் எத்தனை விதம்.தொடரட்டும்..

Leo Suresh சொன்னது…

விமானக் கட்டணத்துடன் (உயிர்)காப்பீடு வழங்கப்படும் என்பது தெரியும். நீங்கள் எடுத்தது என்ன விதமான காப்பீடு என்பதை விளக்க முடியுமா? // தவறு ஹுசைனம்மா எந்த ஏர்லைன்ஸ் விமான கட்டணத்துடனும் காப்பீடு தருவதில்லை. அமீரகத்தில் AXA இன்சூரன்ஸ் சிறந்தது https://online.axa-gulf.com/travel/pdf/price_list.pdf


லியோ சுரேஷ்

ஹுஸைனம்மா சொன்னது…

/Leo Suresh கூறியது...
தவறு ஹுசைனம்மா எந்த ஏர்லைன்ஸ் விமான கட்டணத்துடனும் காப்பீடு தருவதில்லை. //

நன்றி லியோ. இது குறித்து எனக்கும் தெளிவான விடை கிட்டவில்லை. ஆனால், சமீபத்தில் மங்களூர் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்தார்களே? அவர்கள் தனிக்காப்பீடு எடுத்திருக்க மாட்டார்கள் என்பது என் அனுமானம்?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சக்கபோடு போட்டிருக்கீங்கபோல.. அசத்தல்.. உங்களுடைய துணிவு மதிக்கத்தக்கது.

பனித்துளி சங்கர் சொன்னது…

விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே . இது போன்று வெளிநாட்டு மோகத்தில் பணத்தைக் கட்டி வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம் . பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

super bro, continue, ennaku pedichathu ungaludaiya thunichal tha bro...............

பெயரில்லா சொன்னது…

//பொதுவாகவே விமானப் பயணத்திற்கு என தனிக் காப்பீடு உள்ளது. நாட்கணக்கில் அவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஒவொன்றுக்கும் தனித்தனி இழப்பீடு உண்டு. நமக்கான விசயங்களில் என்ன நடந்தாலும் அவர்கள்தான் சரி செய்வார்கள்//
அருமையான பதிவு.நிச்சயம் பல பேருக்கு பயன்படும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எப்பிடி நான் மிஸ் பண்ணேண்னு தெரியல, இப்பாத்தான் பார்க்கிறேன், எல்லாத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன்! ஏதோ துப்பறியும் நாவல் படிக்கற மாதிரி விறுவிறுப்பு! ரொம்ப நல்லாருக்கு சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நீங்கள் போட்டிருக்கும் போட்டோக்கள் அருமையா இருக்கே, நீங்களே எடுத்ததா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இக்கட்டான சூழ்நிலைகள நல்லாவே சமாளிச்சிருக்கீங்க! உங்ககிட்ட இருந்து கத்துக்கவேண்டியது நெறைய இருக்கு சார்!