இயற்பெயர் : அது சொன்னாதான் பிச்சை போடுவீங்களா?
தலைவர்
சங்கம் இருப்பதால் பணக்கார பிச்சைகாரர்கள் ..: நன்றி கேபிள் சங்கர்
துணை தலைவர்கள் :ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முதலாளி
மேலும்
துணைத் தலைவர்கள் : கடத்தி வந்து விற்பவர்கள், வாடகைக்கு விடுபவர்கள்
வயது : வயது ஒரு கேடு
தொழில் : பிச்சை எடுப்பதுதான்
பலம்
பலவீனம் : குழந்தையை காட்டி பிச்சை எடுப்பது
நீண்ட கால சாதனைகள் : கடவுளை கேலிப் பொருளாக்கியது
சமீபத்திய சாதனைகள் : நான் கடவுள், ஸ்லாம் டாக் மில்லியனர்
நீண்ட கால எரிச்சல் : எங்களிடமும் மாமூல்
சமீபத்திய எரிச்சல் : அரசின் கைதானை
மக்கள்
சொத்து மதிப்பு : வட்டிக்கு விடும் அளவிற்கு
நண்பர்கள் : சக பிச்சைகாரர்கள்
எதிரிகள்
ஆசை : தினமும் போதை
நிராசை : மழை வந்தால் வருமானம் இல்லை
பாராட்டுக்குரியது : என்னை ஏன்யா பாராட்டுறீங்க
பயம் : நலவாழ்வு இல்லங்கள்
கோபம் : படைத்தவன் மீது (கடவுள் அல்ல )
காணமல் போனவை : காணாமல் போனவர்கள்
புதியவை
கருத்து : ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு என்னால் நான்கு நாட்கள் தூங்க முடியவில்லை..
டிஸ்கி : இவர்களில் பெரும்பாலோர் இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்கிறார்கள்.., தவறான ஆள்பவர்களை தேர்ந்தெடுத்ததால் இந்தியா பிச்சைகாரர்கள் தேசமாக விரைவில் மாறும்..
35 கருத்துகள்:
நீண்ட கால எரிச்சல் எங்களிடமும் மாமுல்... அதுதான் கொடுமையே... பாவிங்க அவுங்களையும் விடமாட்டானுங்க...
அந்த படமே இன்னும் மனதை விட்டு அகலவில்லை..
படிக்க மனசு சங்கடப்படுது.
நீங்கள் இறுதியாக முத்தாய்ப்பாக முடித்த வரிகள் தினந்தோறும் பத்திரிக்கைகளை படித்து முடிக்கும் போது பயத்தை தந்து கொண்டுருக்கிறது.
நீதிபதி சமீபத்தில் சொன்னது.
காலையில் எழுந்தவுடன் முதல் இரண்டு மணி நேரம் எந்த பத்திரிக்கையையும் படிக்காமல் இருந்தாலே அன்றைய தினம் சிறப்பாக இருக்கும்.
தலைவரே.. பிச்சைக்காரர்களுக்கு சங்கமில்லை என்று யார் சொன்னது..?
பயோடேட்டாவை பற்றி என்னத்த சொல்றது... ஆனாலும் அந்த படம் எல்லாத்தையும் சொல்லிருச்சி..
அண்ணே உங்கள் பதிவுகளுடன் அந்த படங்களும் அருமையோ அருமை. எங்க பிடிக்கிறீங்க?
இவர்களில் பெரும்பாலோர் இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்கிறார்கள்.., தவறான ஆள்பவர்களை தேர்ந்தெடுத்ததால் இந்தியா பிச்சைகாரர்கள் தேசமாக விரைவில் மாறும்..
உண்மைதான்.
டிஸ்கியில் சொல்வது உண்மை...
நீண்ட கால எரிச்சல் : எங்களிடமும் மாமூல்
எப்படி இப்படி கலக்குறிங்க சூப்பர்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
அண்ணே உங்கள் பதிவுகளுடன் அந்த படங்களும் அருமையோ அருமை. எங்க பிடிக்கிறீங்க?//
@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அது அண்ணன் எடுக்கும் போட்டோ
No Comments...
நாட்டை ஆளும் அரசும், சுற்றியிருக்கிற அரசியல்வாதிகளும், சமூக கட்டமைப்பும், மக்களும்தான் இந்த பிச்சைகாரர்கள் உருவாவதற்கு காரணம்.
பயோடேட்டா படிக்க ரசனையாவும், நெஞ்சில் வலியாகவும் பதிகிறது........
வறுமையில் மக்களை வைக்கும் அரசும், இலவசங்களைக்கண்டு பல் இழித்து வாழ்க! ஒழிக கோசம் போடும் மக்களும்....மனிதனேயமற்ற பணமுதலைகளும் இருக்கும் வரை....
பிச்சைக்காரர்கள் நமது தேசத்தின் அடையாள மனிதர்களாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று....
ஒட்டிய வயிற்றில்..
ஒடுங்கிப் போய் கிடக்கிறது
சமத்துவம்....!
வாழ்த்துக்கள் செந்தில்!
செந்தில் போட்டோ எடுத இடம் தி. நகர் பஸ் ஸ்டாண்ட்...கரெக்டா?
அந்த போட்டோ நெட்டில் சுட்டது தேவா.. என்ன சரியான போட்டோ கண்டெடுக்க நான்கு மணிநேரம் ஆனது..
அந்த பெரியவரின் பார்வையிலும் .. கை நீட்டலிலும் பொதிந்திருக்கும் ஆயிரம் கேள்விகள்..?
arumaiyaana pathivu
அந்தப் படம் மனசைக் கலக்குது செந்தில்.
உண்மைதான் சோம்பேறித்தனத்துக்கு இடம் கொடுத்துச் சிலர் இதை ஒரு தொழிலாக்கித்தான் வாழ்கிறார்கள்.
neenga pechaikararuku pechai potuvegala?
வயதானவர்களுக்கு மட்டும் பிச்சை போடுவேன் உமா.
என்ன சொல்றது...புரியல்ல.. அந்த போட்டோ அப்டியொரு குளோஸ் அப்
இயலாமையால் உண்மையாக இரந்துண்ணும் நிலையில் இருப்பவர்களைவிட சோம்பேறித்தனத்தால் கைநீட்டுபவர்களால்தான் எல்லாருக்குமே ஆப்பு வருகிறது. கையை இழுத்து, உடையை இழுத்து அரித்துக் கொண்டேயிருக்கும் சிலரால் பாளை பஸ் ஸ்டாண்டில் நிற்க முடியாது.
//கருத்து : ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு என்னால் நான்கு நாட்கள் தூங்க முடியவில்லை..//
Is it comedy or serious??
thought provoking last line...
nice
கடசி வரில என் இப்படி ஒரு சாபம்?
தவறான ஆள்பவர்களை தேர்ந்தெடுத்ததால் இந்தியா பிச்சைகாரர்கள் தேசமாக விரைவில் மாறும்.. //
முற்றிலும் உண்மை!
உங்களின் நிலைமையில் தான் நானும் இருந்தேன் . விமர்சனம் வெகு விரைவில்.
பிச்சிடீங்க!
நான் கடவுள் பார்த்த பிறகு பிச்சைக்காரர்களைப் பார்த்தால் பிச்சை போட யோசனையாக இருக்கிறது.
ஓட்டுக்காக , தொகுதி மக்கள் வாங்குவதுக்கு என்ன பேர் நண்பா...!!
நான் கடவுள் நிச்சயம் இவர்களுக்கொரு சாதனைதான். ஆனால் அதைவிடவும் வேதனைகள் அதிகம். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பிச்சையெடுக்கும் ஒரு பெண்ணை இரண்டு போலிசார் சீண்டிக்கொண்டிருந்தார்கள்!.
பாலியல் பிரட்சனைகளைப் பற்றி சொல்லவே இல்லையே!
- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
//////இவர்களில் பெரும்பாலோர் இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்கிறார்கள்./////////
யாரும் மறுக்க இயலாத உண்மைதான் . எல்லாம் இருந்தும் கையேந்தும் பலர். அவர்களில் எதுவும் இல்லாமல் கையேந்தும் இவர்களைப் போன்ற சிலர் .
ஈயென இரத்தல் இழிந்தன்று ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
புறநானூறு..
பிச்சை எடுக்க ஒருத்தரும் இல்லாம போய்ட்டாங்கன்னா, இந்த உலகம் என்பது மரத்தாலான பொம்மைகள் நடமாடும் இடமாகப் போய்விடும்.
பிச்சைக்கார தேசம் - இப்படி சொல்லித்தான் ஒரு படம் ஆஸ்கார் பரிசுகளை வென்றது.
அதில் நம்மில் பலர் பெருமையும் கொண்டோம்.
அந்த படம் பார்த்த பிறகு - இதயம் ரொம்ப கனக்கிறது.
//இப்படி சொல்லித்தான் ஒரு படம் ஆஸ்கார் பரிசுகளை வென்றது.
அதில் நம்மில் பலர் பெருமையும் கொண்டோம்.//
வழிமொழிகிறேன்...
இவர்கள் அனைவரும் (பிச்சைகாரர்கள்)என்ற பெயரில் இருகிறார்கள் அண்ணா , ஆனால் இதற்கு யாரயும் காரணம் சொல்ல முடியாது , பிச்சை எடுப்பதும் தவறு , பிச்சை போடுவதும் தவறு , இது மட்டும் நடக்குமாயின் நம் தேசம் அப்படி ஆகி விடாது ..............
ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டுஎன்னால் நான்கு நாட்கள் தூங்க முடியவில்லை.. உண்மைதான் அண்ணா ,அருமையான புத்தகம் அது ,நானும் படித்தேன் ...... இந்த புத்தகத்தின் பாதியை கூட பாலா அண்ணன்(நான்கடவுள் ) எடுக்கவில்லையே ...........................
கருத்துரையிடுக