அந்நிய மோகம் என்பது நம் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று, அதனால்தான் வியாபாரம் செய்ய வந்தவனை ஆளவிட்டு வேடிக்கைப் பார்த்தோம். வெளிநாட்டு வேலை என்பது இன்று நேற்றல்ல ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. அப்போது போனவர்களில் அங்கேயே தங்கி விட்டவர்கள் அந்நாட்டு குடிமகனாக மாறிவிட்டனர். ஆனால் சிங்கப்பூர், மொரிசியஸ்,கனேடா, ஐரோப்பிய நாடுகள் தவிர்த்து மற்ற தேசங்கள் வேற்று மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்துகிறது.
1979 வாக்கில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு நம் ஆட்கள் படை எடுக்க ஆரம்பித்தனர், நம் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் பாஸ்போர்ட் திருத்தங்களை செய்து அனைவரும் வெளிநாடு செல்லமுடிகிற வாய்ப்பை ஏற்படுத்தினார்.
அப்போது பெரும்பாலும் வளைகுடா நாடுகளை நோக்கிதான் வேலைக்கு சென்றார்கள் பெரும்பாலும் வட நாட்டவர்கள், கேரளா மற்றும் தென் தமிழக ஆட்களே அதிகம் சென்றனர். எல்லோரும் கட்டுமான வேலைக்குதான் சென்றார்கள், எண்பதுகளில் தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அவர்களும் வெளிநாடு செல்ல ஆரம்பித்தனர்.
எண்பதுகளில் சிங்கப்பூர் வளர்ச்சி காண ஆரம்பித்தது அப்போது அங்கு வேலைக்கு செல்லும் நம் ஆட்களை முன்னாள் சிங்கப்பூர் இந்திய குடிமகன்கள் ஒரு புழுவைப் போல் பார்ப்பார்கள். ரயிலிலோ, பஸ்ஸிலோ நம் ஆட்கள் அருகில் உட்கார கூட மாட்டார்கள், சீனர்களும் மலாய் காரர்களும் நம்மிடம் மிகுந்த சிநேகமாக இருப்பார்கள். ஊர்க்காரன் எனக் கிண்டல் அடிப்பார்கள். அப்போதெலாம் அங்கு வேலைபார்க்க யாருக்கும் பணம் எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை. 1996 க்குப் பின் இந்திய மென்பொருள் ஆட்கள் வந்தபின்தான் அவர்கள் மாறினார்கள். இப்போது மிக சகஜமாக பழகுகிறார்கள்.
ஆனால் மெல்ல மெல்ல நம்ம ஆட்களே ஏஜென்டாக மாறினார்கள் ஆட்களைக் கொண்டுவர பணம் பார்க்க ஆரம்பித்தனர். அது இப்போது தலைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வரை சிங்கபூருக்கும், ஐம்பது ஆயிரம் வரை மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் வாங்குகின்றனர். வட்டிக்கு கடன் வாங்கி செல்லும் நம் ஆட்கள் கடனை அடைக்கவே இரண்டு வருடங்கள் ஆகும், அதிலும் நாம் வேலை பார்க்க அந்ததந்த அரசாங்ககளுக்கு மாதா மாதம் செலுத்தப் படும் வரியை நம் சம்பளத்தில் இருந்தே எடுப்பார்கள். ஒரு நாளைக்கு குறைத்தது பனிரெண்டு மணிநேரம் உழைப்பார்கள். சரியான தங்குமிடம் இருக்காது.
பெரும்பாலும் நன்கு படித்தவர்களுக்கே சம்பளம் அதிகம், அதிலும் அவர்கள் குடும்பத்துடன் வந்து தங்கினால் எதுவும் மிஞ்சாது. இங்கு இந்தியாவின் வியாபார எல்லை மிகப் பெரியது. ஒரு ஊறுகாய் போட்டு விற்றாலே அது நன்றாக இருந்தால் நம்மால் கொடுக்கவே முடியாத அளவுக்கு விற்பனை இருக்கும். சமீபத்தில் ஒரு ஆய்வுக்காக சென்னையில் சாலை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்களிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
பெரும்பாலும் நான்கு மணி நேர வியாபாரம் மட்டும் செய்யும் சாலையோர இட்லி கடைக்காரர் நான்கு மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். பூ கட்டி விக்கும் அம்மா முந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறார். தள்ளு வண்டியில் இரவு குல்பி ஐஸ் விற்கும் நபர் ஐநூறு வரை சம்பாதிக்கிறார். தள்ளுவண்டியில் காய்கறி விக்கும் நபர் முந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறார். இரவில் ஆட்டுகால் சூப் விற்கும் நபர் இரண்டாயிரம் வரை சம்பாதிக்கிறார்.
சுமார் எட்டு வருடங்களுக்கு முன் ஜி.ஏ பப்ளிகேசன் அசோகன் தனக்கு ஒரு நபர் என்னால் இந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை, சம்பாதிக்க வழியில்லை, நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனக் கடிதம் எழுத. சென்னை மெரீனா கடற்கரை அருகே சாலை ஓரம் இரண்டு மணிநேரம் பச்சி மட்டும் போட்டு விற்க, அப்போதே அவருக்கு இரநூறு ரூபாய் லாபம் கிடைத்தது. அதன் பின் அந்த நபருக்கு நம்பிக்கையூட்டி கடிதம் எழுதினார்.
எனவே உங்கள் வெளிநாட்டு மோகத்தை மூட்டை கட்டுங்கள். இங்கேயே தொழில் செய்யுங்கள். மிகக் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய இலவச ஆலோசனைக்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
32 கருத்துகள்:
மிகவும் அருமையான மற்றும் தேவையான பதிவு பிரதர்.
//எனவே உங்கள் வெளிநாட்டு மோகத்தை மூட்டை கட்டுங்கள். இங்கேயே தொழில் செய்யுங்கள். மிகக் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய இலவச ஆலோசனைக்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.//
வாழ்த்துக்கள். கண்டிப்பாகா மற்றவர்களுக்கு உதவுங்கள். நானும் கூட உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன்.
அருமையான பதிவு.
இன்னும் கொஞ்சம் விரிவா யோசிக்க வேண்டிய விஷயம்...
thevayana pathivu
i am very very happy to read a constructive writing... please write more like that...
நான் தொடர இருந்த கருத்து. குறிப்பாக திருப்பூரில் தட்டு வண்டி மூலம், சாலையோர உணவு விடுதிகள் மூலம் இங்க சம்பாரிக்கும் அவர்களின் சம்பாத்யம் குறு நிறுவனங்கள் பார்க்க முடியாத பணம்.
சிறப்பாக எழுதுவதோடு, தேவையான கருத்துக்களையும் முன் வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
கருத்துக்களை கடத்தும் கடத்தியாகவும் பலருக்கும் உறுதுணையாக இருக்கீறீர்கள்.
எவ்வளவு சொன்னாலும் கேட்க கூடிய மனநிலையில் அவர்கள் இல்லை.
//பெரும்பாலும் நான்கு மணி நேர வியாபாரம் மட்டும் செய்யும் சாலையோர இட்லி கடைக்காரர் நான்கு மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். பூ கட்டி விக்கும் அம்மா முந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறார். தள்ளு வண்டியில் இரவு குல்பி ஐஸ் விற்கும் நபர் ஐநூறு வரை சம்பாதிக்கிறார். தள்ளுவண்டியில் காய்கறி விக்கும் நபர் முந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறார். இரவில் ஆட்டுகால் சூப் விற்கும் நபர் இரண்டாயிரம் வரை சம்பாதிக்கிறார். //
+1. எந்த சாலையோர உணவகத்தில் உண்ணும் போது நானும் நண்பர்களும் இந்தக் கணக்கைப் போட்டுப் பார்ப்போம்...
எனினும் ஒரு சில மணி நேரம் அவர்கள் விற்பனை செய்வதை மட்டும் தேவைப்படும் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. விற்கும் நேரத்துக்கு முன்னும் பின்னரும் நிறைய வேலை இருக்கும்.
ஆலோசித்தவர்களுக்கு நன்றி...
//வாழ்த்துக்கள். கண்டிப்பாகா மற்றவர்களுக்கு உதவுங்கள். நானும் கூட உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன்//
நன்றி ரமேஷ்.. உங்கள் உதவியை பயன்படுத்திக் கொள்வேன்..
//அருமையான பதிவு. //
நன்றி மன்னார்குடி..
//இன்னும் கொஞ்சம் விரிவா யோசிக்க வேண்டிய விஷயம்... //
நன்றி ராசராசசோழன்., விரிவாக அலசினால் படிக்க போரடிக்கும்..
//thevayana pathivu //
நன்றி கார்த்திக்
//i am very very happy to read a constructive writing... please write more like that... //
நன்றி பார்வையாளன்... நிச்சயம் எழுதுகிறேன்..
//சிறப்பாக எழுதுவதோடு, தேவையான கருத்துக்களையும் முன் வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
கருத்துக்களை கடத்தும் கடத்தியாகவும் பலருக்கும் உறுதுணையாக இருக்கீறீர்கள். //
நன்றி ஜோதிஜி உங்கள் பதிவையும் கட்டாயம் எழுதுங்கள் அப்போதுதான் ஆர்வம் பிறக்கும்.. உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்..
//எவ்வளவு சொன்னாலும் கேட்க கூடிய மனநிலையில் அவர்கள் இல்லை. //
நன்றி தமிழ் உதயம்.. அதுதான் வேதனையே..
//எனினும் ஒரு சில மணி நேரம் அவர்கள் விற்பனை செய்வதை மட்டும் தேவைப்படும் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. விற்கும் நேரத்துக்கு முன்னும் பின்னரும் நிறைய வேலை இருக்கும்.//
நன்றி ரவிசங்கர்.. உண்மைதான்.. எட்டுமணி நேர உழைப்பு தேவைப்படும்
எனவே உங்கள் வெளிநாட்டு மோகத்தை மூட்டை கட்டுங்கள். இங்கேயே தொழில் செய்யுங்கள்.
]]
இந்த ஐடி வேலை போரடித்துவிட்டது.. எனக்கும் தொழில் செய்ய ஆசையுண்டு..
நல்ல பதிவு செந்தில்
வளைகுடா நாடுகளுக்கும் இப்போது 2 லட்சத்திற்கு மேல் கொடுத்து சிலர் வருகின்றனர்.
கோவையில் 3 வருடங்களுக்கு முன்பு துபாயில் பொறியாளராக வேலை செய்யும் நண்பர் ஒருவருக்கு வீடு ஒன்று வாங்க விலை பேச சென்றிருந்தோம். வீட்டுக்காரர் 30 லட்சம் சொன்னார். நாங்கள் அது அதிகம் என சொல்லி கொஞ்சம் குறைக்க சொன்னோம். அவர்கள் மறுத்துவிட்டதால் பிறகு வருகிறோம் என சொல்லி திரும்பி விட்டோம். ஒரு வாரம்கழித்து மீண்டும் போய் கேட்டப்போது அவர்கள் அதை அதே விலைக்கு விற்று விட்டனர். யாருக்கு விற்றனர் என கேட்டப்பொழுது கடைதெருவில் மாலை நேரத்தில் வடை, போண்டா என வண்டியில் விற்றுக்கொண்டிருப்பவர் தான் வாங்கினார் என சொன்னார்கள். அசந்துவிட்டோம். ஒரு பழைய லுங்கி கட்டிக்கொண்டு வடைப்போட்டு விற்றுக்கொண்டிருக்கும் அவரை நினைத்து.
நல்ல கருத்து. இதை போன்ற தன்னம்பிக்கை பதிவுகளை மனமார வரவேற்கிறேன்!
வோட்டும் போட்டு விட்டேன்
வெளிநாடுகளில் வசிக்கும் அசௌகரியங்களை எவ்வளவுதான் சொன்னாலும் நாங்கள் ஏதோ அவர்கள் வரக்கூடாது என்கிற நோக்கத்தில் சொல்வதாகப் புரிந்துகொள்கிறார்களே !
நல்ல பதிவு.. நன்றி விந்தை மனிதன்.
அருமையான கருத்து.ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்
அருமையான பதிவு தோழரே, உங்கள் பதிவு மனதில் நிறைய சிந்தனைகளை விதைதுள்ளது...தொடருங்கள்...
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
// நான்கு மணி நேர வியாபாரம் மட்டும் செய்யும் சாலையோர இட்லி கடைக்காரர் நான்கு மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். பூ கட்டி விக்கும் அம்மா முந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறார். தள்ளு வண்டியில் இரவு குல்பி ஐஸ் விற்கும் நபர் ஐநூறு வரை சம்பாதிக்கிறார். தள்ளுவண்டியில் காய்கறி விக்கும் நபர் முந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறார். இரவில் ஆட்டுகால் சூப் விற்கும் நபர் இரண்டாயிரம் வரை சம்பாதிக்கிறார்.
//
ஏங்க கொஞ்சம் யோசிங்க சார்,
இட்லி கடைக்காரர் நாலு மணி நேரத்தில் 2000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் நீங்களும் நானும் இந்த வேலையை செய்ய முடியுமா ?
Good Presentation....
ஆலோசித்தவர்களுக்கு நன்றி...
//இந்த ஐடி வேலை போரடித்துவிட்டது.. எனக்கும் தொழில் செய்ய ஆசையுண்டு..//
நன்றி சாந்தி.. இப்போதே துவங்குங்கள் ..
//நல்ல பதிவு செந்தில்//
நன்றி அத்திரி..
//வளைகுடா நாடுகளுக்கும் இப்போது 2 லட்சத்திற்கு மேல் கொடுத்து சிலர் வருகின்றனர்//
இரண்டு தகவலுக்கும் நன்றி மஞ்சூர் ராஜா ..
//நல்ல கருத்து. இதை போன்ற தன்னம்பிக்கை பதிவுகளை மனமார வரவேற்கிறேன்//
நன்றி எஞ்சினியர் ...
//வெளிநாடுகளில் வசிக்கும் அசௌகரியங்களை எவ்வளவுதான் சொன்னாலும் நாங்கள் ஏதோ அவர்கள் வரக்கூடாது என்கிற நோக்கத்தில் சொல்வதாகப் புரிந்துகொள்கிறார்களே !//
நன்றி ஹேமா.. எனக்கும் இத்தகைய அனுபவம் உண்டு..
//நல்ல பதிவு.. நன்றி விந்தை மனிதன்//
நன்றி கேபிள்.. விந்தை மனிதன் கவனிக்க..
//அருமையான கருத்து.ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்//
நன்றி கோமா ..
//அருமையான பதிவு தோழரே, உங்கள் பதிவு மனதில் நிறைய சிந்தனைகளை விதைதுள்ளது...தொடருங்கள்.//
நன்றி தோழர் மோகன் ..
//இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.//
நன்றி கே .கே.சாமி..நீங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள், நேரிடையாக காட்டுகிறேன் ..
//Good Presentation....//
நன்றி ஸ்பைஸ் ...
நீங்கள் சொல்ல வந்து வந்து இருப்பதை வரவேற்கிறேன்.. பணம் செலுத்தி வெளிநாட்டு வேலைக்கு வருவது தவறு.
தொழில் தொடங்கும் அனைவரும் எப்படி வெற்றி அடைவது இல்லையோ, அப்படித் தான் வெளிநாட்டுக்கு வரும் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை கிடைப்பது இல்லை..சிலரின் அனுபவம் மோசமாக ஆகி விடுகின்றது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க அவரவர் திறமையே பொறுத்ததே என எண்ணுகிறேன்..அது வெளிநாடாக இருந்தாலும் சரி, உள் நாடாக இருந்தாலும் சரி..
அருமையான பதிவுங்க.. சேரனின் வெற்றி கொடி கட்டு படமும் இந்தக்கருத்தையே சொல்கிறது..
உண்மைதான்....தோழரே...!!
நான் ஒரு Software Test Engineer. CTS போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து விட்டு இப்போது லோகன் கார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்கிறேன். இன்னும் பாஸ்போர்ட் கூட எடுக்கவில்லை. கம்பெனி செலவில் வெளிநாடு சென்று வேலை செய்யக்கூட மனமில்லாமல் பாஸ்போர்ட் எடுக்கவே கூடாது என்ற உறுதியான முடிவில் இருக்கிறேன்.
வெளிநாடு வேலைகளில், பணம் மட்டுமே கிடைக்கும். அனால் நாம் இழப்பவை என்னவெல்லாம் என்பதை கணக்குகூட போட்டு பார்க்க முடியாது.
உங்களின் இந்த பதிவு சிலரின் மனதிலாவது தன்னம்பிக்கை விதையை தூவும் என்று நம்புகிறேன்.
அன்பன்,
உதயகுமார்.
நானும் கூட உங்களுக்கு எழுதணும் ....
ஆலோசித்தவர்களுக்கு நன்றி...
//இதற்கு காரணம் முழுக்க முழுக்க அவரவர் திறமையே பொறுத்ததே என எண்ணுகிறேன்..அது வெளிநாடாக இருந்தாலும் சரி, உள் நாடாக இருந்தாலும் சரி..//
நன்றி செம்மலர்.. வெளிநாட்டில் காசு கொடுத்து வேலைக்குப் போகும் நண்பர்களுக்கான பதிவு மட்டுமே இது.. மற்றபடி அங்கு சென்று வியாபாரம் செய்து வெற்றியாளர்களாய் திகழும் நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு. அது தனிக் கட்டுரையாக வரும் ...
//அருமையான பதிவுங்க.. சேரனின் வெற்றி கொடி கட்டு படமும் இந்தக்கருத்தையே சொல்கிறது..//
நன்றி ரியாஸ்.. அவர் அப்பவே சொன்னார்.. நாம பட்டுதான் திருந்துவோம் ..
//வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்//
நன்றி சின்ஹசிட்டி .. உபயோகமாக இருக்கிறது ..பாராட்டுக்கள் ..
//உண்மைதான்....தோழரே...!!//
நன்றி ஜெய்லானி ..
//வெளிநாடு வேலைகளில், பணம் மட்டுமே கிடைக்கும். அனால் நாம் இழப்பவை என்னவெல்லாம் என்பதை கணக்குகூட போட்டு பார்க்க முடியாது.//
நன்றி உதயகுமார்.. பொதுவாக அங்கு நடக்கும் சங்கடங்களை வெளியில் சொல்வது கிடையாது .. உங்கள் முடிவு சரியானது ..
//நானும் கூட உங்களுக்கு எழுதணும் ....//
வணக்கம் தருமி ஐயா.. நீங்கள் சிங்கப்பூர் வந்த அன்று நான் அங்கிருந்து ஊருக்கு கிளம்பினேன்.. சந்திக்கும் வாய்ப்பை நெருங்குகிறேன் ...
தோழர் KRB...
அரிசி கடத்தல் தொடர்பான பதிவில் உங்களை சந்தித்தது ...
நிறைய பதிவுகளை மிஸ் பண்ணியது வருத்தமளிக்கிறது ...
ஊருக்கு பதினோரு நாட்களாக போயிருந்ததும் ஒரு காரணம் ...
உங்கள் அனைத்து பதிவுகளிலும் அந்த அர்ஜென்டினா காரனின் குரல் கேட்கிறது ...
எனது அன்பின் தழுவல்கள் உங்களுக்கு !
உங்கள் பதிவின் கருத்து மிகச்சரியே; ஆனால், இட்லி/சூப் விற்பவர் ஆயிரம், இரண்டாயிரம் ஒரே நாளில் சம்பாதிக்கிறார் என்பது சற்று மிகைப்படுத்தலாகத் தோன்றுகிறது. பின் ஏன் அவர்கள் தொழிலில்/வாழ்வில் அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல், ஏழையாகவே இருக்கிறார்கள்?
அல்லது இது போன்ற தொழில்கள் செய்பவர்கள் நல்ல வருமானம் கிடைத்தாலும் அதைச் சேமிக்க முடியாததன் காரணங்களான விலைவாசி, கமிஷன், மாமூல், தண்டல், கந்துவட்டி, டாஸ்மாக் etc...!! இவைதான் அவர்களை வெளிநாடு நோக்கித் துரத்துகிறதோ என்னவோ?!
மாப்ள..
அருமையான கட்டுரை.
உங்க மின்னஞ்சல் முகவரியை ஒரு லிங்க்-ஆ கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
கருத்துரையிடுக