2 ஏப்., 2011

தமிழக தேர்தல் 2011 - ஒரு அலசல் ... பகுதி - 1


தேர்தல் நெருங்கிவருகிற வேளையில் பெரும்பாலான இடங்களில் இருந்து திரட்டிய தகவல்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால், இந்தத் தேர்தல் சர்வ நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இல்லை. பொதுவாகவே தலைநகரில் இருந்து இவர்கள் நகர்ந்துவிட்டாலும், தங்கள் கூட்டணிக்கு தங்களின் தேர்தல் அறிக்கையும், ஜெயித்தாக வேண்டிய கட்டயாத்தில் இருக்கும் பா.ம.க , வி.சி.க போன்ற கட்சிகளும் ஏழு இடங்கள் கிடைத்தால் உற்சாகமாக இயங்கும் கொ.மு.ச வும் துணை நிற்கும் என நம்புகின்றனர். ஆனால் மிக பெரும்பானமையான இடங்களில் போட்டியிடும் அ.தி.மு.க இம்முறை வெற்றிக்கனியை சுவைக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. 

தி.மு.க - சாதனைகளும், வேதனைகளும் 
தி.மு.க அரசின் சாதனைகளில் மிக முக்கியமானது ஒரு ரூபாய் அரிசி. இதனை கொஞ்சம் வசதி படைத்தவர்கள் சாதரணமாக நினைத்தாலும், ஏழைகள் அதிகம் வாழும் தமிழகத்தில் அவர்களுக்கு இது வரப்பிரசாதமே. அடுத்து 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை. இதுவும் மிக அதிக வரவேற்ப்பை பெற்ற திட்டம். 

ஆனால் மற்ற அனைத்துமே வேதனைகள்தான். தி.மு.க வின் சாதனையாக விளம்பரப்படுத்தபட்டு வரும் இலவச காப்பீட்டு திட்டம் ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதில் நிச்சயம் உள்நோக்கம் இருப்பதாக இந்தவார விகடனில் தலையங்கமே எழுதியுள்ளார்கள். ஆனந்த விகடன் இன்னும் நிறைய கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அடுத்து ஓட்டுமொத்தமாக அதிகாரத்தை பிரித்துக்கொண்டு மொத்தக்குடும்பமே அவர்களின் நாய்க்குட்டி உட்பட அதிகார மைய்யமாக மாறியது. சினிமா முதல் ரியல் எஸ்டேட் வரை பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்தது. ஈழப்பிரச்சினையில் ஆடிய அப்பட்டமான நாடகம். கூட்டணிக்கட்சியே தன் ஆளை கைது செய்தபோதும் சொரனைகெட்டு அவர்களின் காலில் விழுந்தது. ஏற்க்கனவே காங்கிரஸ் கட்சியின் மீது கோபமாக மக்கள் (குறிப்பாக தி.மு.க தொண்டர்கள்) இருப்பதை அறிந்தபின்னும் அவர்கள் கேட்ட அத்தனை சீட்டையும் கொடுத்தது. மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாதது. இப்படி கடந்த ஐந்து வருடமாக தமிழ்நாட்டு அரசியலை மிக கேவலமாக நடத்திய ஒரே கட்சி இது என்பதால் இந்த தேர்தல் தி.மு.க ஜெயிக்கும் சில தொகுதிகளும் இவர்களுக்கு மாற்றாக நிற்பவர்கள் மேலும் வெறுப்பில் இருக்கும் நடுநிலையாளர்கள் ஓட்டுப்போடாமல் அல்லது சுயேட்சைகளை ஆதரித்தால் கிடைக்கும் வெற்றியாக மட்டுமே இருக்கும். 

பா.ம.க 
ஒவ்வொரு முறையும் கூட்டணியை மாற்றிக்கொள்ளும் ராமதாஸ் இப்போது ஒரு சிறிய ஊடலுக்குப்பின் மீண்டும் தி,மு,க கூட்டணிக்கு வந்திருக்கிறார். தன் குடும்பத்தில் யாரேனும் கட்சிப்பதவிக்கு வந்தால் தன்னை நடுச் சாலையில் வைத்து சவுக்கால் அடிக்கச் சொன்னவர். இப்போது தன் மகனுக்காக கட்சியை நடத்துக்கிறார். தன் பேரப்பிள்ளைகளை தமிழிலேயே படிக்க வைக்காத தமிழ் குடிதாங்கி இவர். இப்போது மக்களிடம் சாயம் வெளுத்துப்போய் வந்திருக்கிறார். இந்தத்தேர்தல் இவரும் பெருத்த பின்னடைவை சந்திப்பார். அதுவும் வன்னியர்களாலேயே!!

வி.சி.க 
தலித்துகளுக்காக துவங்கப்பட்ட அமைப்பு இது. ஆனால் அவர்களின் பிரச்சினைகளை பேசாமல் அரசியல் சதுரங்கத்தில் சிக்கிவிட்டது. திருமாவளவனை பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிப்போனதும். ஈழப்பிரச்சினையில் இவரின் இரட்டைவேடமும் தமிழ் உணர்வாளர்களுக்கு இவர்மேல் இருந்த மரியாதையை தூரமாக்கியது. ஆனால் இந்தத் தேர்தலில் இவர்கள் பத்தில் ஐந்து வந்தாலே அது இவர்களுக்கு பெரிய சாதனையாக இருக்கும்.

கொ.மு.ச 
சாதிக்கு சங்கம் கண்டு கட்சியாக மாறிய வன்னிய அமைப்பைப்போல் மாறுவோம் எனும் பேராசைக்கனவில் சங்கம் கண்டபின் வரும் முதல் தேர்தலே இவர்களுக்கு எதிர்பார்க்காத அளவுக்கு சீட்டுகளை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இந்த செல்வந்தர்கள். ஆனால் பா.ம.க கட்டமைக்கப்பட்டபோது வன்னியர்களிடம் இருந்த ஒற்றுமையும், ராமதாசின் கடுமையான உழைப்பும் பணக்காரர்களாக இருக்கும் இவர்களிடம் எந்த அளவு எடுபடும் என தெரியவில்லை. அ.தி.மு.க வின் கோட்டையான இந்தப்பகுதிகளில் வந்தவரைக்கும் லாபம் என நினைத்தே கருணாநிதி இவர்களுக்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கியிருக்கக்கூடும். ஒன்றாவது ஜெயிப்பார்களா? பார்ப்போம்.

காங்கிரஸ் 
நேற்றுவரைக்கும் சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலுக்கு எதிராக வேட்டியை கிழித்துக்கொண்டு தங்கள் பெருமை குலையாமல் பார்த்துக்கொண்டவர்கள். அன்னையும், பிள்ளையும் 63 வாங்கிக்கொடுத்து தமிழகத்தில் மீண்டும் வேரூன்றும் கனவில் இருக்கிறார்கள். இவர்களை ஜெயிக்கவிடக்கூடாது என்பதில் சீமான் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்களோ, அவ்வளவு உறுதியாக தி.மு.க தொண்டர்களும் அதன் தலைமையும் இருக்கிறது!!!.

ஆனால் வெற்றி வாய்ப்பை பெறப்போகும் அ.தி.மு.க கூட்டணியின் காமெடியை நாளை பார்க்கலாம்... 

17 கருத்துகள்:

Chitra சொன்னது…

ஆனால் வெற்றி வாய்ப்பை பெறப்போகும் அ.தி.மு.க கூட்டணியின் காமெடியை நாளை பார்க்கலாம்..


.....ஆஹா.... சனி ஞாயிறு - பதிவுலக விரதம் இருப்பேனே.... அடுத்த வாரம் வந்து வாசிக்கிறேன். :-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, இது பற்றியெல்லாம் நல்லாப்புரிய வைச்சுப்புட்டீங்க!

அதுபற்றியெல்லாம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

vasu balaji சொன்னது…

அடலேறே. கழகத்தின் வெற்றிக் கனியைத் தட்டிபறித்து ஆரியருக்கு குற்றேவல் செய்யத் துடிக்கும் செந்திலுக்கு பகுத்தறிவின் பரிதியே, கடமை தவறா கண்மணியே நாளைய வரலாறு உன் புகழ பாடும், உனக்கான பாராட்டு விழாவில் எனக்கான பட்டமளிப்பு விழா மூலம் தக்க பதில் கூறு, என் தன்மான (ம்கெட்ட) சிங்கமே:))))

ராஜ நடராஜன் சொன்னது…

//தி.மு.க அரசின் சாதனைகளில் மிக முக்கியமானது ஒரு ரூபாய் அரிசி. இதனை கொஞ்சம் வசதி படைத்தவர்கள் சாதரணமாக நினைத்தாலும், ஏழைகள் அதிகம் வாழும் தமிழகத்தில் அவர்களுக்கு இது வரப்பிரசாதமே. //

அண்ணா காலத்து வாக்கு இப்பவாவது நனவானதில் தி.மு.கவுக்கு பெருமையே.

ந்ன்மைகளை தட்டிக்கொடுப்போம்!
தீயவைகளை தட்டியும் கேட்போம்!

Sivakumar சொன்னது…

டி.ஆர். அவர்கள் தேர்தலை புறக்கணித்தது குறித்து தனிப்பதிவு போடாவிடில்..கே.ஆர்.பி. அவர்கள் வலுக்கட்டாயமாக கேப்டன் கட்சியில் சேர்க்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ரெண்டு பேர்ல யாருக்கு அடி விழும் என்பதுதான் கிளைமாக்ஸ்.

Unknown சொன்னது…

தலைவரே இவனுங்கள நம்பி இருக்க தொண்டனுங்க நிலமைய நெனச்சேன்........... ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>இந்தத் தேர்தல் சர்வ நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இல்லை.

அண்ணே ,.. அப்படி சொல்லிட முடியாது.. நகரங்களில் அதிமுக வும், கிராமங்களில் தி மு கவு வர வாய்ப்பு அதிகம்.. சி எம் ஆகப்பாவது கலைஞர் தான் என்பது என் கணிப்பு... என்ன பண்ரது? தமிழனோட தலை எழுத்து

வெங்கட் சொன்னது…

C.B kanipu sollitaara.? appa sari. Bayapada venaam. athu kandeepa thappa thaan irukum

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்...

////
ஆனால் வெற்றி வாய்ப்பை பெறப்போகும் அ.தி.மு.க கூட்டணியின் காமெடியை நாளை
பார்க்கலாம்..////

இதில் விஜயகாந்த்தின் காமெடிதான் உச்சக்கட்டம்...
நாளை பார்க்கலாம்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

==//சர்வ நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இல்லை.//

:))

பாட்டு ரசிகன் சொன்னது…

நயவஞ்சக காங்கிரசஸ் மண்ணைக் கவ்வ வைப்போம்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்த காங்கிரஸ் கார நாய்களை(சாரி) ஒழித்து கட்டுவொம் அண்ணா...

சசிகுமார் சொன்னது…

படித்தவன் எவனும் இந்த நாதாரிகளுக்கு (அரசு அதிகாரிகளை தவிர) ஒட்டு போட மாட்டான். திமுகாவுக்கு முதல் ஆப்பு மதுரையில் தயாராகிக்கொண்டு இருக்கு.

ஹேமா சொன்னது…

கார்ட்டூன் சூப்பர் !

ttpian சொன்னது…

போர் என்றால் மக்கள்(தமிழர்கள்) சாகத்தான் செய்வார்கள்!
அரசாங்க காசில் பத்து பைசா கூட தொடாத நாயகி நான்!
எனக்கு ஒட்டு போட்டு மக்கள் அனைவரும் மாங்காய்
மடையர்களாக இருக்குமாறு புரட்சி தலைவர் மீது ஆணையிட்டு
அகம்பாவம் இல்லாமல்,ஆணவம் இல்லாமல்,....
அம்மாவின் ஆணைப்படி.காலில் விழுந்து கும்பிட தயாராக இருங்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விரிவாக விளக்கி இருக்கீங்க பார்ப்போம் மக்கள் என்ன செய்கிரார்கள்னு...